Saturday, February 25, 2017

thumbnail

ரஸ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் ஜனாதிபதி!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு அவர் இவ்வாறு ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் ஜனாதிபதி ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கு நன்மை ஏற்படக்கூடிய சில முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் டொக்டர் சமன் வீரசிங்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.

அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கின்றது எனவும், ஏனைய சிறுபோக உற்பத்திகளும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தின் ஊடாக உச்ச அளவில் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் முனைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக தூதுவர் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Read More»

thumbnail

இந்தியா இஸ்ரேலிடையே 17 ஆயிரம் கோடியில் ஏவுகணை ஒப்பந்தம்!


இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அந்த நாட்டிடம் இருந்து ராணுவ தளவாடங்களை அதிகமாக கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய ஏவுகணை ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய ராணுவத்துக்கு தரையில் இருந்து வான் இலக்கை தாக்கவல்ல நடுத்தர ரக ஏவுகணைகள், கடற்படைக்கு நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்கப்படும்.

மொத்தம் 200 ஏவுகணைகள் மற்றும் 40 தாக்குதல் அலகுகள் தயாரிக்க ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டி.ஆர்.டி.ஓ.), இஸ்ரேலின் விமான நிறுவனமும் (ஐ.ஏ.ஐ) இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான மந்திரிசபை இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.
Read More»

thumbnail

தாயின் தலையை வெட்டி கடவுளுக்கு படைத்த மகன்!


கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சவித்ராம்மா. இவருக்கு திம்மப்பா என்ற மகன் உள்ளார்.

இவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும், ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இவரது மனைவி இவரை விவகாரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் திம்மப்பாவுக்கும் அவரது தாய்க்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு உண்ணும் போது,திம்மப்பாவுக்கும் சவித்ராம்மாவுக்கு எப்போதும் போல வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்,தனது தாயின் தலையை துண்டாக வெட்டியெடுத்து கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு தனது தாயின் தலையுடன், வீட்டை சுற்றி வந்து பூஜைகள் செய்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திம்மப்பாவை சரணடைந்துவிடுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அவர் நேற்றிரவு தனது கனவில் வந்த கடவுள், தாயை பலி கொடுக்க சொன்னதாகவும், தற்போது கடவுளின் கட்டளையை நிறைவேற்றிவிட்டதாகவும் போலீசில் கூறியுள்ளார்.

அதன் பின்னர் மறுநாள் காலை வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக உள்ளே சென்ற காவல்துறையினர், திம்மப்பாவை கைது செய்துள்ளனர்.
Read More»

thumbnail

குச்சவெளி இலந்தைக்குள வித்தியாலயத்தின் பரிதாப நிலைக்கு கிழக்கு முதலமைச்சரே காரணம்!


கிழ‌க்கு மாகாண‌ ச‌பைக்கு முஸ்லிம் காங்கிர‌சின் முத‌ல‌மைச்ச‌ர் இருந்தும்
 திருகோணமலை குச்சவெளி இலந்தைக்குள வித்தியாலயத்தின் பரிதாப நிலைக்கு இதுவரை தீர்வு வழங்கப்ப‌ட‌வில்லை என்ப‌த‌ன் மூல‌ம் முஸ்லிம் காங்கிர‌சின் முத‌ல‌மைச்ச‌ர் நிர்வாக‌ திற‌மை அற்ற‌வ‌ர் என்ப‌து நிரூப‌ண‌மாகியுள்ள‌து.

126 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையை திருமலை மாவட்ட அரசியல் அதிகாரம் கொண்டோர் ஏன் இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்க‌ள் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் உள்ள‌து.

ம‌த்தியிலும் மாகாண‌த்திலும் ஆட்சியில் இருக்கும் முஸ்லிம் காங்கிர‌சின் த‌லைவ‌ர் கெபின‌ட் அமைச்ச‌ராக‌ இருந்தும் இந்த‌ப்பாட‌சாலை விட‌ய‌த்தில் த‌லையிட்டு தீர்க்க‌ முடிய‌வில்லை என்ப‌த‌ன் மூல‌ம் இக்க‌ட்சியால் கிழ‌க்கு மிக‌ மோச‌மாக‌ ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌து தெரிகிற‌து.

ஆக‌வே மக்கள் பணிக்கு முதலிடம் என்றால் இப்பாடசாலைக்கு இவ்வருடமே கட்டடம் ஒன்றைக் கட்டிக்கொடுக்க‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் முய‌ற்சிக்க‌ வேண்டும்.

- உல‌மா க‌ட்சி
Read More»

thumbnail

சவுதிக்குள் அல்-குர்ஆன் பிரதிக்குள் வைத்து போதை மாத்திரை கடத்தல்!


சவுதி அரேபியாவுக்குள் பல்வேறு வழிகளில் போதைப் பொருட்களை கடத்தி வரும் கும்பல்கள் அண்மையில் அல்-குர்ஆன் பிரதிகளுக்குள் வைத்து போதை மாத்திரைகளைக் கடத்த முயன்ற சம்பவம் பற்றி அல்-அரேபியா தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பினர் தமது உறுப்பினர்களை விழிப்புடன் வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தும் மூளை மற்றும் உடல் பலத்தை மிகைப்படுத்தும் போதை தரும் மாத்திரைகளே இவ்வாறு கடத்தப்பட்டதாகவும் சவுதி அதிகாரிகளின் விழிப்புடன் செயற்பட்டு இக்கடத்தலை முறியடித்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

டென்மார்க்கில் குர்ஆன் பிரதியை எரித்தவருக்கு எதிராக வழக்கு!


புனித குர்ஆனை பிரதியை எரித்த டென்மார்க் நாட்டவர் ஒருவருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் மதநிந்தனை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
42 வயதான நபர் ஒருவர், தனது வீட்டின் முற்றவெளியில் குர்ஆனை தீமூட்டி, அதனை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டிருப்பதாக தலைமை அரச வழக்கறிஞர் ஜான் ரெக்கன்டோப் குறிப்பிட்டார்.
டென்மார்க்கில் இதற்கு முன்னரும் பல தடவைகள் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மதநிந்தனை குற்றத்திற்கு டென்மார்க்கில் அதிகபட்ச சிறை தண்டனை நான்கு மாதங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் முஹம்மது நபியின் கேலிச் சித்திரத்தை டென்மார்க்கில் வெளிவரும் பத்திரிகையொன்று வெளியிட்டதன் மூலம், சர்வதேச முஸ்லிம் நாடுகளின் கண்டனத்துக்கு அந்நாடு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

அமைச்சர் ஹலீம் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!


த‌ம்புள்ளை‌ ப‌ள்ளியை இட‌ம் மாற்ற‌ ந‌ல்லாட்சி அர‌சிட‌ம் காணி கேட்டு கெஞ்சும் நிலைக்கு நல்லாட்சியின் முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ அமைச்ச‌ர் ஹ‌லீமின் நிலை வ‌ந்துள்ள‌மை ந‌ல்லாட்சிக்கு வாக்க‌ளித்த‌ முஸ்லிம்க‌ளுக்கு மிக‌ப்பெரிய வெட்கக் கேடாகும். என‌ உல‌மா க‌ட்சியின் உய‌ர் ச‌பை உறுப்பின‌ர் அஹ‌ம‌ட் புர்கான் தெரிவித்துள்ளார்.

இது ப‌ற்றி அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ ஆட்சியில் இன‌வாதிக‌ள் த‌ம்புள்ளை‌ ப‌ள்ளிவாய‌லை தாக்க‌ முன் வ‌ந்த‌ போது ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அவ‌ர்க‌ள் இராணுவ‌த்தை க‌ள‌த்தில் இற‌க்கி ப‌ள்ளியை பாதுகாத்தார். அத்துட‌ன் ப‌ள்ளியை த‌ம்புள்ளளை ந‌க‌ரில் மீள் க‌ட்டித்த‌ருவ‌தாக‌வும் கூறினார்.

பள்ளிவாய‌லை இட‌ம் மாற்றுவ‌து மேலும் ப‌ல‌ ப‌ள்ளிக‌ளை இட‌ம் மாற்றும் முய‌ற்சிக‌ளுக்கு எடு கோலாகி விடும் என‌ உல‌மா க‌ட்சி எச்ச‌ரித்த‌தால் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ப‌ள்ளியை இட‌ம் மாற்றும் முய‌ற்சியை த‌டுத்து நிறுத்தினார்.

அத‌ன்பின் ம‌ஹிந்த‌வை வீட்டுக்கு அனுப்ப‌ வேண்டும் என்ற‌ ஹெல‌ உறும‌ய‌ ச‌திக‌ளினால் ம‌ஹிந்த‌ அர‌சு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் த‌ப்பெண்ண‌ம் கொள்ளும‌ள‌வு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்தேறின‌.

ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது த‌ம்புள்ளை ப‌ள்ளி உடைக்க‌ப்பட‌வில்லை என‌ ம‌ஹிந்த‌ கூறிய‌ போதும், முஸ்லிம் ச‌மூக‌ம் ந‌ம்பாம‌ல் ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ருவ‌த‌ன் மூல‌ம் ப‌ள்ளிக‌ளை காப்பாற்ற‌லாம் என‌ எடை போட்ட‌து.  இன்று த‌ம்புள்ளை‌ என்ப‌து முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ இன‌வாதிக‌ளின் கோட்டையாக‌ மாறியுள்ள‌து. இத‌னை பின்னால் இருந்து முடுக்கி விட்டு ர‌சிக்கிறார்க‌ள் ந‌ல்லாட்சிக்கார‌ர்க‌ள்.

அன்று ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ த‌ம்புள்ளை காணிக்கு 80 பேச் த‌ருகிறேன் என்றார். இன்று அது ப‌ற்றி ஜ‌னாதிப‌தியோ பிர‌த‌ம‌ரோ மூச்சே விடாம‌ல் இருக்கிறார்க‌ள். இந்த‌ நிலையில் இன‌வாதி ச‌ம்பிக்க‌ இருப‌து பேச் காணி அதுவும் தூர‌த்தில் த‌ருவ‌தாக‌ கூறுகிறார். அதே வேளை சிங்க‌ள‌ தீவிர‌வாதிக‌ள் ஒரு காணியும் த‌ர‌மாட்டோம் என‌ பேசுகின்றார்க‌ள். அத்த‌கைய‌ இன‌வாதிக‌ளிட‌ம் காணி கேட்டு கெஞ்சும் நிலைக்கு ஐ.தே.க‌ அமைச்ச‌ர் ஹ‌லீமின் நிலை உள்ள‌து.
இது ந‌ல்லாட்சிக்கு அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு வாக்க‌ளித்து ம‌ஹிந்த‌வை வீழ்த்திய‌ முஸ்லிம்க‌ளுக்கு மிக‌ப்பெரிய‌ அவ‌மான‌மாகும். இவ்வாறு ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ந்த‌ அமைச்ச‌ர் ஹ‌லீம் போன்ற‌வ‌ர்க‌ள் முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்.

Read More»

Friday, February 24, 2017

thumbnail

அமைச்சர் ஹக்கீமுக்கு அவதூறு பரப்ப விசேட குழு நியமிப்பு!ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ஹக்கீமுக்கு எதிராக அவதூறுகளை கட்டவிழ்த்து விடும் நோக்கில் விசேட இளைஞர் குழுவொன்று நியமிக்கப் பட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

கொழும்பு வொக்சேல் வீதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்றிலிருந்தே இந்த விசேட குழு அவதூறு பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஹக்கீமுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை இல்லாதொழிப்பதே இந்தக் குழுவின் விசேட பணியாகும்.

பல வருடங்களாக கட்சியையும் தலைமையையும் அழிக்கும்  நோக்கில் இடுபட்ட அனைவரும் வெளிநாட்டு சக்திகளின் ஒத்துழைப்புடன் இயங்குவதாக நம்பகமாக தெரியவருகின்றது

முழு நேரமாக செயற்படும் வகையில் இக்குழுவில் பல பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக நூல்களை உருவாக்குதல், வட்சப் குறூப்களில் போலித் தகவல்களை பரப்புதல், ஹக்கீம் தொடர்பாக இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு போலி முகநூல்களிலிருந்து தவறான பின்னூட்டலிடுதல், ஹக்கீமின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுவோரின் முகநூல் போன்று போலி முகநூல்களை உருவாக்கி ஹக்கீமின் ஆதரவாளர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேற்சொன்ன குழுவில் உள்ள அனைவருக்கும்  பேருக்கும் கொழுத்த சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. வெளியாட்கள் எவரும் அவர்களை கண்டு கொள்ளாத வகையில் பிரத்தியேக ஏசி அறை ஒதுக்கப்பட்டு அறையைச் சூழவுள்ள கண்ணாடிகள் கறுப்புத்தாள்களால் மறைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது.

24 மணிநேரமும் மாறி மாறி இந்தப் பணியை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.

பல இணைய இணைய ஊடகங்கள் இவர்களால் உருவாக்கப்பட்டும் நடுநிலையாக இயங்கிய பல ஊடகங்கள் இவர்களின் பணத்துக்கு சேரம் போய் உள்ளதை காணலாம்.

தற்போது கட்சியால் நடைபெறும் அபிவிருத்து பணிகளை சகித்து கொள்ள முடியாத இந்த கும்பல் இன்னும் பல சதி திட்டங்களை தீட்டு உள்ளனர்.

பாரிய நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனம் ஒன்றில் வேலை வழங்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இவர்கள் வீட்டில் இருந்து சமுக வலை தளங்களை இயககுமாறும் செயல்படுத்தபடுத்தப்பட்டுள்ளனர்.எனவே முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இந்தக் குழுவின் செயற்பாடு தொடர்பில் மிக அவதானமாகவும் அவர்களின் போலி முகநூல் தொடர்பில் விழிப்பாகவும் இருக்க வேண்டுமென கேட்கப்படுகின்றனர்.

பர்வீன் முஹம்மட்

Read More»

thumbnail

யார் எதிர்த்தாலும் சைட்டம் மூடப்படாது!


யார் எதிர்த்தாலும் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிட மாட்டோம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கல்லூரியின் தலைவர் டாக்டர் நெவில் பிரணாந்து இதனை அறிவித்துள்ளார்.

சைட்டம் நெருக்கடி தொடர்பில் முன்னெடுக்கவுள்ள தீர்வு என்னவென அவரிடம் நேற்று (23) வினவிய போதே இதனைக் கூறியுள்ளார்.

சைட்டமை எதிர்ப்பவர்களின் குழுவிலுள்ள சிலரின் பிள்ளைகளும் வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர். பாணந்துரை வைத்தியசாலையில் நான் கட்டிக்கொடுத்த கட்டிடத்திலேயே சைட்டமுக்கு எதிரான சுவரொட்டிகள், பெனர்களை காட்சிப்படுத்தப்படுகின்றன.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இந்த வைத்தியசாலையை புனரமைப்பு செய்தேன். அந்த வைத்தியசாலைக்கு எனது பெயரை வைக்குமாறு அப்போது எனது ஆதரவாளர்கள் கூறினார்கள். நான் அதற்கு விரும்பவில்லை. எப்போதாவது நானாகவே ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்து அதற்கு எனது பெயரை வைப்பதாக நான் எனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தேன் எனவும் டாக்டர் நெவில் பிரணாந்து கூறியுள்ளார்.
Read More»

thumbnail

ஏலத்திற்கு வருகின்றது ராஜபக்சர்களின் சொத்துக்கள்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணி சொத்து ஏலத்தில் விடப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு சந்தமானது என கூறப்படும் காணியே இவ்வாறு ஏலத்தில் விடப்படவுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி மார்ச் (29) இல் இக்காணி ஏலத்தில் விற்பனை செய்யப்படும்.

அத்துடன், குறித்த காணிக்காக மதிப்பீட்டுத் திணைக்களம் ஆகக்குறைந்தது 208 மில்லயன் ரூபாவை வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள உரிமையாளரும் இக்காணி தமது இல்லை என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த காணி ஏலத்தில் விடப்படவுள்ளது.

பூகொடை நீதவான் அண்மையில் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். குறித்த காணியானது 64 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்து, அதில் 125 மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளதாக பசில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரின் உறவினரான திருக்குமார் நடேசனும் முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இக்காணியும் அதிலுள்ள வீடும் பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் இக்காணி அவருக்குரியதல்ல என மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த விடயம் பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More»

thumbnail

யாத்ரா மடு எபா"என்ற தலைப்பில் களமிறங்கிய இனவாதிகள்!


தம்புள்ளை நகரில் அமைக்கப்பட்ட எமது பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்ற நோக்கில்  தம்புள்ளையில் இருக்கும்  ஓரு சில இனவாதக் குழுக்கள் "யாத்ரா மடு எபா"
என்ற தலைப்பில் களம் இறங்கியுள்ளனர்.

கடந்த நீதிமன்ற தீர்ப்பில் தம்புள்ளை நகரில் இருக்கும் 80 பேர்ச்சஸ் கொண்ட பள்ளிவாசல் காணியை அகற்ற வேண்டுமென்றால் 10 ஆயிரம் முஸ்லிம்களின் அடையாள அட்டை எண்ணுடனும் அவர்களின் கையெப்பம் கொண்டுவந்தால் நீதிமன்றத்தால் அந்தப் பள்ளிவாசல் கட்டுமானங்களை இடை நிறுத்தி அந்தப் பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மற்று முடியும் என்று அந்த பெளத்த இனவாதக் குழுக்கு நீதிமன்றம் கூறியது . இதற்கு அமை எமது இலங்கை முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு அந்த இனவாதக் கும்பல்கள் களம் இறங்கியுள்ளது .

இன்று கதுருவெல பிரதேசத்தில் அந்த  பெளத்த இனவாதக்  குழுக்கள் அப்பிரதேச முஸ்லிம்கள் மற்றும் அங்கே பயணம் செய்யும் முஸ்லிம் பயணிகளிடம் கையெப்பம் வாங்கி வருவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. நாளை அவர்கள் எங்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது .  கவலை என்னவென்றால் கையெப்பம் இடும் எமது முஸ்லிம் சகோதரர்களுக்குக் கூடத் தெரியாது அவர்கள் எதற்கு எங்களிடம் கையெப்பம் கேட்கின்றார்கள் என்று ☺

இதற்கு பல பெளத்த இனவாத கும்பல்களும் , அரசியல் சக்திகளும் களம் இறங்கியுள்ளது.

எனவே யாரும் உங்களிம் உங்களின் கையெப்பத்தைக் கேட்டால் நீங்கள் அவர்களை நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள் . அவர்கள் என்று உங்களுக்குத் தெரியவந்தால் எக்காரணத்தைக் கொண்டும் கையெப்பம் வைக்காதீர்கள்

☞ இதை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எத்தி வைத்து எமது கிராமங்களை விழிப்படையச் செய்யுங்கள் .

தாருஸ்ஸபா
Read More»

thumbnail

போலி விமானச் சீட்டு தயாரித்து வந்து அலுவலகம் மருதானையில் சுற்றிவளைப்பு!


சட்டவிரோதமான முறையில் விமான பயணச்சீட்டுகள் வழங்கி வந்த அலுவலகமொன்று நேற்று சுற்றிவளைக்கப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த பெண்ணொருவரிடம் போலி கடவுச்சீட்டு மற்றும் போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே மேற்படி சட்டவிரோத முகவர் நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி கடவுச் சீட்டைவைத்திருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மருதானையில் இயங்கிவந்த மேற்படி போலி முகவர் நிலையத்திலிருந்து 30 போலி கடவுச்சீட்டுகளும் பல போலி ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பின் போது போலி விமான பயணச் சீட்டு விநியோகித்த நிறுவனத்தின் உரிமையாளர் பதுர்தீன் சுஸான் முஹமாட் உஸ்தீ உசேன் கைதுச்செய்யப்படவிருந்த நிலையில் தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Read More»

thumbnail

தனிக்கட்சியாக இயங்க வீரவன்சவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது!


தாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகித் தனிக் கட்சியாக இயங்க அனுமதி கோரி விமல் வீரவன்ச மேற்கொண்ட மன்றாட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேண்டுமானால் அக்கட்சியின் பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினர்களாக இயங்கலாம் என அறிவுரை வழங்கியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எனினும், இதற்கு முன்னரும் இவ்வாறு பாராளுமன்றில் இடம்பெற்றிருப்பதாகவும் அதனடிப்படையில் தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளமையும் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டால் பதில் தருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதிலளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Read More»

Thursday, February 23, 2017

thumbnail

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த காரணம் என்ன..? சம்பந்தன் விளக்கம்


தமிழ் மக்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமது சுய உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது இவ்வாறு இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசியல் ரீதியில் தீர்வு திட்டம் ஒன்று முன்வைக்கு வரையிலும், தமிழ் மக்கள் மீது இவ்வாறு இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக இவ்வாறான ஒரு நிலை நீடித்தமையின் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இனப்பிரச்சினையானது தற்போது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More»

thumbnail

மஹிந்த அணி மாகாண சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்குத் தீர்மானம்!


மத்திய அரசைப் போலவே மாகாண சபைகளிலும் நடந்து வரும் முறைகேடுகளால் அதிருப்தியடைந்திருக்கும் மஹிந்த அணியான பொது எதிரணியின் மாகாண சபை உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்திருகின்றனர் என மாகாண சபைகளின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென் மற்றும் மேல் மாகாண சபைகளில் இந்த நிலை உக்கிரமடைந்திருப்பதாகவும், தென் மாகாண சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலில் சுயாதீனமாகப் போவதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளது.

மேலும், மேல் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் சுமார் 45 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானம் எடுத்திருப்பதாகவும், அதற்கு முன் தங்கள் தீர்மானம் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Read More»

thumbnail

ஜேர்மனியின் Bavarian யாவில், பர்தா அணிந்து முகத்தைமூட அணிய தடை!


ஜேர்மனியின் Bavarian மாநிலத்தில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுவதும் மூட குறிப்பிட்ட இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் Bavarian மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள், மழலையர் பள்ளி நிலையங்கள், பொது பாதுகாப்பு சம்மந்தமான இடங்கள், வாக்கு செலுத்தும் இடங்கள் போன்ற பகுதிகளில் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை பர்தாவால் மூட கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து Bavarian உள்துறை அமைச்சர் Joachim Herrmann கூறுகையில், இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை மூடுவது உள்ளூர் கலாச்சாரத்தை மீறுவதாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும், இந்த விடயத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சமூதாயத்தின் அடிப்படையும் அடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஜேர்மனியிலேயே மிகவும் பழமைவாதத்தை கடைப்பிடிக்கும் மாநிலமாக பார்க்கப்படும் Bavarian மாநிலத்தில் கடந்த 2016 ஜூலையில் நடந்த இரண்டு தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பர்த்தாவுக்கு மாநிலம் முழுவதும் அப்போதே தடை என முன்மொழியப்பட்டது.

இதற்கு ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும் அப்போது ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

டெஸ்ட் டியூப் குழந்தைகளை பெற்றுகொள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய கோர்ட் அனுமதி


பாகிஸ்தான் நாட்டில் டெஸ்ட் டியூப் எனப்படும் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்ள இஸ்லாமிய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்லாமாபாத்:

கருத்தரிக்க வாய்ப்பில்லாத தம்பதியரில் கணவரது விந்தணுக்களையும், மனைவியின் கருமுட்டையையும் சோதனை குழாய் மூலம் இணைத்து, கருத்தரிக்க வைத்து, பின்னர், ஓரளவுக்கு வளர்ச்சிபெற்ற கருவினை அந்தப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, குழந்தைப்பேற்றை சாத்தியமாக்கும் டெஸ்ட் டியூப் எனப்படும் சோதனை குழாய் குழந்தை மகப்பேறு முறை உலகின் வளர்ந்த நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமாகி விட்டது.

உலகின் முதல் சோதனை குழாய் குழந்தை 25-7-1978 அன்று பிறந்தது. டாக்டர் இந்திரா இந்துஜா என்பவரின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதல் சோதனை குழாய் குழந்தை 4-1-1988 அன்று பிறந்தது. ஆனால், இஸ்லாமிய மத கோட்பாடுகளை சட்டமாக பின்பற்றும் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் இதுபோன்ற சோதனை குழாய் குழந்தைகளை பெற்றுகொள்ளும் செயல் மதத்திற்கு எத்ராகவும்  சட்டவிரோதமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம், டெஸ்ட் டியூப் எனப்படும் சோதனை குழாய் குழந்தை பெற்றுகொள்வது சட்டமீறல் மற்றும் சட்டவிரோதம் ஆகாது என தற்போது தீர்ப்பளித்துள்ளது.

தந்தையின் விந்தணுவையும், தாயின் கருமுட்டையையும் ஒன்றுசேர வைத்து, கருத்தரிக்கச் செய்து, முறையான மருத்துவர்களின் மூலம் அதை மீண்டும் தாயின் கருப்பைக்குள் செலுத்துவது சட்டத்துக்கு உட்பட்டதுதான். குரான் மற்றும் இஸ்லாமிய நன்முறைகளுக்கு (சுன்னா) எதிரானது அல்ல. அதே வேளையில், வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுகொள்வது உள்ளிட்ட வேறு வகையில் இதுபோன்ற குழந்தைகளை உருவாக்குவது சட்டவிரோதம் ஆகும் என்று  பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம் தனது 22 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக, 1872-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பாகிஸ்தான் தண்டனை சட்டத்தில் வரும் 15-8-2017-க்குள் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் பாகிஸ்தான் அரசை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Read More»

thumbnail

IPL போட்டிக்கு 2.6 கோடி ரூபாய் ஏலத்தில்- ஏழை ஆட்டோ சாரதியின் மகன் முஹம்மட் சிறாஜ்!


இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை தேர்வு செய்ய நடந்த ஏலத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ஏழை ஆட்டோ ஓட்டுநர் முஹம்மது கவுஸ் அவர்களின் மகன் முஹம்மது சிராஜ் (வயது 22) அவர்களை சன் ரைசர்ஸ் அணி 2.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது...

இந்திய அணியில் விளையாடிய பிரபல வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்க விரும்பாத சூழலில் இந்த இளம் வீரர் முஹம்மது சிராஜ் தேர்வு பெற்றது பலருக்கும் வியப்பாக உள்ளது.

20 லட்சம் ஆரம்ப கட்டணமாக நிர்ணயித்து நடைபெற்ற ஏலம் 13 முறை உயர்த்தி கேட்கப்பட்டு இறுதியில் 2.6 கோடிக்கு எடுத்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி சார்பில் விளையாடவுள்ளார்..

ஒரே நாளில் மகன் தலைப்பு செய்தியாக வலம் வருவதை அறிந்த பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குளச்சல் அஜீம்


Read More»

thumbnail

இனவெறியன் டிரம்பை வரவேற்க மாட்டேன் - லண்டன் மேயர் சித்தீக்கான்!


இன வெறியனும் மனித குல விரோதியுமான டிரம் பிரிட்டனில் சுற்று பயணம் செய்ய திட்டமிட்டுள்ளான்

அண்மையில் ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு விசாக்களை தடை செய்து அமெரிக்க நீதிமன்றங்களில் அவமான பட்ட டிரம் பிரிட்டன் வந்தால் அதை கடுமையாக எதிர்க்க போவதாக பிரிட்டனின் பல தரபட்ட மக்களும் கூறி வரும் நிலையில்,

லண்டன் நகர மேயர் சித்தீக் கானும் டிரம்பின் வருகைக்கு எதிராக வீதியில் இறங்கி போரட போவதாகவும் டிரம்பின் வருகையின் போது லண்டன் நகரத்தின் சார்பில் அவனுக்கு எந்த வரவேற்ப்பும் கொடுக்க பட மாட்டாது என்றும் அறிவித்தார்
Read More»

thumbnail

காத்தான்குடி படுகொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- கருணா!


பிரபாகரன் கொல்லப்பட்டார் அதனை நானே உறுதிப்படுத்தினேன். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பது பொய்யான தகவல்களாகும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார்.

குறித்த நேர்காணலின் போது விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு,

நீங்கள் எப்போது புலிகளுடன் இணைந்தீர்கள்? விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தகர்களுக்கு சாதி பாகுபாடு இருப்பதாக கூறப்படுகின்றது உண்மையா?

1983 களில் இலங்கையில் ஜே.வி.பி பிரச்சினைகள் நடைபெற்றபோதே தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருப்பதை அறிந்து கொண்டேன். அதன் காரணமாகவே நான் புலிகளுடன் இணைந்தேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு சாதி பிரச்சினை இருக்கின்றது. ஆனால் எமக்கு இல்லை.

அரந்தலாவை, ஸ்ரீ மஹா போதி, காத்தான் குடி போன்ற எந்த தாக்குதலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.

அரந்தலாவை தாக்குதலுக்கு குமரப்பா என்பவரே காரணம். ஆனால் அந்த தாக்குதல் தொடர்பில் பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. தாக்குதலின் பின்னர் தாக்குதல் மேற்கொண்டவர்களை அவர் தண்டித்தார். பொட்டுஅம்மன் போன்றவர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.

6 மாதங்கள் வரையில் இருட்டறையில் அடைப்பது போன்ற பல தண்டனைகள் கொடுக்கப்பட்டது.

அந்த தாக்குதலை மேற்கொண்டதற்கு பிரபாகரன் ஆணையிடவில்லை. ஸ்ரீ மஹா போதி தாக்குதல் தொடர்பில் எனக்கு தெரியாது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், சூசை போன்றவர்களுக்கு விருப்பம் இல்லை. அதுவே புலிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

தொடர்ச்சியாக மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரபாகரன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? ஆரம்பத்தில் தண்டித்தவர் தானே அவர் பின்னர் நடந்த தாக்குதல்களை அவர் எதிர்க்க வில்லையா?

ஆரம்பத்தில் பிரபாகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்தார். பின்னர் அவரது போக்கை மாற்றிக் கொண்டு விட்டார். விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பிரபாகரனே காரணம். அவருடைய நடவடிக்கைகள் காரணமாகவே புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இராணுவத்தினரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில்?

இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தினை செய்யவில்லை. பாலியல் குற்றங்களை புரிந்தது இந்திய இராணுவமே.

இந்திய இராணுவமே கேவலமான செயல்களை செய்தது. இலங்கை இராணுவம் அல்ல இதனை நான் உறுதியாக கூறுகின்றேன்.

ஒரு காலத்தில் புலிகளின் அமைப்பில் நான் இருந்தேன் என்பது தொடர்பில் இப்போது நான் வெட்கம் கொள்கின்றேன்.

நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதை யார் தெரியப்படுத்தியது?

மகிந்த ராஜபக்சவே அப்போது என்னை தொடர்பு கொண்டு பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுமாறு அனுப்பி வைத்தார். மே 18 அல்லது 19ஆம் திகதி காலை சரியாக நினைவில்லை.

அது பிரபாகரனின் உடல் என்று நிச்சயமாக கூறுகின்றீர்களா?

நான் 28 வருடங்கள் பிரபாகரனுடன் இருந்தேன். அதனால் எனக்கு தெரியும். அப்படியே பிரபாகரன் இருந்தால் 10 வருடங்களாக இன்னும் வராமல் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்? எங்கே இருக்கின்றார்.

அதனாலேயே அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதியாக கூறுகின்றேன். அங்கு இருந்தது பிரபாகரனின் உடலே எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
Read More»

thumbnail

பூமியை போன்ற 7 கோள்கள் கண்டுபிடிப்பு நாசா


புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் என்று நாசா கூறியுள்ளது.

நியூயார்க்,

ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை நாசா கண்டுபிடித்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியை போலவே உயிர்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் பல நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. வேற்றுகிரகத்தில் மனிதர்கள் வசிக்கிறார்களா என்பதை அறியும் ஆராய்ச்சியும் நடக்கிறது. இந்நிலையில், பூமியில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் 7 கோள்கள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை நாசா கண்டுபிடித்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான காற்று, நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், பூமியை போன்றே மேற்பரப்பும் அடர்த்தியும் காணப் படுகிறது. மிகுந்த வெளிச்சத்துடன் உள்ள இந்த கிரகங்களை இரவில் வெறும் கண்களாலேயே காண முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 கோள்களில் நீர் ஆதாரம் இருப்பதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Read More»

thumbnail

ரத்தன தேரருக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி பறிக்கப்படும்?


அத்துரலியே ரத்தன தேரர் சுயாதீனமாக செயற்படப்போவதாகத் தெரிவித்துக்கொண்டு தனது தீர்மானத்துக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்த போதிலும் அவர் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகங்கொடுத்தேயாகவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி விடாப்பிடியாக இருக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கு முன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தங்களது கட்சி செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியலில் ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என கூறப்படுகின்றது.

அவர் சுயாதீனமாகச் செயற்பட்டாலும் கூட கட்சியின் உறுப்புரிமை அவருக்கு உள்ளது. எனவே, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பூரண அதிகாரம் கட்சிக்கு உள்ளது என ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் அநுருத்த பிரதீப் தெரிவித்துள்ளார்.

ரத்தன தேரர் இப்போது பிரதமரினதும், ஜனாதிபதியினதும் அனுதாபங்களைச் சம்பாதித்துக்கொண்டுள்ள போதிலும் அவர் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்தது முற்றுமுழுதாக கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமானதே என்பதை அவரால் மறுக்க முடியாது.

மேலும், ரத்தன தேரர் அண்மையில் பிரதமரைச் சந்தித்து தனது விளக்கத்தை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள போதிலும் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அந்தச் சந்திப்பு விதிவிலக்காக அமையாது எனவும் அநுருத்த பிரதீப் சுட்டிக்காட்டினார்.
Read More»

thumbnail

கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! கல்வி அதிகாரிகள் மீது பலத்த கண்டனம்!


கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.அஹுவர் தலைமையில் இன்று (22) பிற்பகல் 3.00 மணியளவில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த ஆசிரியர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

அத்துடன், ஆசிரியர்கள் பலர் ஒலிபெருக்கி மூலம் கல்வித் திணைக்கள அதிகாரிகளை வன்மையாக கண்டித்து, மிகவும் காட்டமான கருத்துக்களை வெளியிட்டு உரையாற்றினர்.

தமக்குரிய சம்பள நிலுவையை இழுத்தடித்து, காலம் தாழ்த்தாமல் அதனை வழங்குவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் நீடித்ததுடன் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்பாட்டம் தொடர்பில் இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களில் சுமார் 1200 ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை நீண்ட காலமாக இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதனால் ஏமாற்றமும், விரக்தியுமடைந்துள்ள ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உரிய வேளையில் தரவுகளை அனுப்பாமல் இருந்த வலயக் கல்வி அதிகாரிகளின் அசமந்தப்போக்கே உரிய காலப்பகுதிக்குள் சம்பள நிலுவைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமைக்கு காரணம் என மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இது விடயமாக வலயக் கல்விப் பணிப்பாளர் தொடக்கம் மாகாண ஆளுநர் வரை பல்வேறு உயர் அதிகாரிகளிடம் எமது கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு முயற்சிகளை எமது சங்கம் மேற்கொண்டுள்ள போதிலும் இன்னும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

கிழக்கு மாகாணத்தில் கல்முனை வலயத்தில் மாத்திரம் சமபள நிலுவை இழுத்தடிக்கப்படுவதன் மர்மம் என்ன? இங்கு கடமையாற்றிய கணக்காளரை இடமாற்றியது எமது சமபள நிலுவைக்கு ஆப்பு வைப்பதற்குத்தானா? இந்த வலயக் கல்விப் பணிமனையின் செயற்பாடுகள் நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் எமக்கு அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அம்பாறை கல்வி வலயத்தில் 100வீதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் நிலுவைகள் வழங்கப்பட்டு அங்குள்ள கணக்காளர் பாராட்டு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவையினை எதிர்வரும் இரண்டு வராங்களுக்குள் வழங்காவிட்டால் ஏனைய வலயங்களில் ஆசிரியர்கள் எந்தக் காலப்பகுதியில் சம்பள நிலுவையை பெற்றார்களோ அந்தக்காலப்பகுதியில் இருந்து தற்போது வரைக்கும் நிலுவையுடன் சேர்த்து அனைத்து கொடுப்பனவையும் வழங்கவேண்டும்.

இந்தப் பணத்தினை யார் தவறிழைத்தார்களோ அவர்களது பணத்தில் இருந்து பெற்றுத்தருவதற்கு ஆவன செய்யவேண்டும்.

எமது கோரிக்கை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம். இது ஆரம்பம் மாத்திரமே.

எமது ஆசிரியர்களை தொடர்ந்தும் ஏமாற்ற முற்பட்டால், எமது இந்த போராட்டம் பல்வேறு வடிவங்களாக மாற்றமடையும் என்பதை அதிகாரிகளுக்கு சொல்லி வைக்கின்றோம் என இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More»

Tuesday, February 21, 2017

thumbnail

குமாரியை பாராளுமன்றத்தில் கண்டதும் ஹக்கீம் வெலவெலத்துப்போனார்.!


ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.

அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)

‘’நான் எதற்காக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும்?’’ குமாரி வினவினார்.
‘’இன்றிரவு(2004.04.21) துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர உன்னைத் தொடர்பு கொள்வார்.நீ அவரோடு விபரமாகப் பேசிக்கொள்ளலாம்’’ என்று விளக்கினார் ரிஷாட். மங்கள சமரவீர தொடர்பு கொண்டபோது இந்த அரசியலில் சுழியில் தானும்,தான் ஒருவர் மேல் வைத்த காதலும் பாவிக்கப்படுகிறது என்று தெரியாத அந்த அப்பாவிப்பெண் ‘நான் ஏன் நாளை பாராளுமன்றத்திற்கு வரவேண்டும்’ என்று மங்களவை வினவினாள்.
‘நீ என்ன செய்ய வேண்டும் என்று நாளை பாராளுமன்றம் செல்லும் வழியில் சொல்கிறேன்.நாளை காலை 6.30 மணிக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சிறிபதி சூரியாராச்சியின் வாகனம் உன்னை ஏற்ற வரும்.சாறி அணிந்து கொண்டு தயாராக இரு’’ மங்கள கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.

குமாரியை வைத்து மறுநாள் பாராளுமன்றத்தில் நடாத்தப்படவிருந்த நாடகம் என்ன?
மறுநாள் அதாவது 2004.04.22ம் திகதி சபாநாயகருக்கான தெரிவு நடைபெறவிருந்தது.ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் சுதந்திரக்கூட்டணியின் வேட்பாளரான டி.ஈ.டபுள்யூ குனசேகரவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற வெறியில் இருந்தார் என நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.குமாரி கூரேயை வைத்து குமாரிக்கும் ஹக்கீமுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் பற்றி எழுதிய கடிதத்தை ஹக்கீம் அவர்களிடம் கொடுத்து அவரை சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதுதான் அந்தத் திட்டம்.குமாரியைப் பாராளுமன்றத்தில் காணும் வரைக்கும் ஹக்கீம் இவை எதனையும் அறிந்திருக்கவில்லை.

அடுத்த நாள் காலை கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ வாகனத்தில் கோட்டேயில் இருக்கும் மங்கள சமரவீரவின் வீட்டிற்கு குமாரி அழைத்துச் செல்லப்பட்டார். கடிதத்தைக் கொண்டுவந்திருக்கிறீர்களா என மங்கள வினவியதற்கு குமாரி தலையசைத்தார்.எல்லோரும் பாராளுமன்றத்திற்கு செல்ல தயாரானார்கள்.

பாராளுமன்றத்தில் சக்தி மற்றும் ஆற்றல் வளப் பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,சிறிபதி சூரியாராச்சி, மங்கள் சமரவீரவின் உதவியாளரான றுவன் பேர்டினாண்டஸிடம் குமாரி ஒப்படைக்கப்பட்டார்.


‘இவரை அழைத்துச் சென்று ‘லிப்டுக்கு’’அருகில் காத்துக்கொண்டிருங்கள்.வேலை முடிந்ததும் என்னிடம் ஒப்படையுங்கள்’’என்று கூறிவிட்டுச் சென்றார் சிறிபதி சூரியாராச்சி.
பெர்னாண்டஸும்,அளுத்கமகேயும் குமாரியை பாராளுமன்றக் கட்டிடத்தின் அடித்தளத்திற்கு கூட்டிக்கொண்டு சென்று லிப்டின் அருகில் காத்திருக்குமாறு வைத்தனர்.
‘’ஹக்கீம் லிப்டிலிருந்து வரும்போது இந்தக் கடிதத்தைக் கொடுத்து ஜனாதிபதியின் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிடு. நான் கதவருகில் சென்று ஹக்கீம் வந்தால் சைகை காட்டுகிறேன்’’ என்று கூறிவிட்டு அளுத்கமகே சென்றுவிட்டார்.


அனைத்துக் கெமராக்களும் தன்னை நோக்கியே இருக்கின்றன என்பதை அந்த அப்பாவிப்பெண் அறியவில்லை.சிறிது நேரத்தின் பின்னர் ஹக்கீம் பாராளுமன்றக்கட்டிடத்தின் கீழ்தட்டில் இருந்து வெளியே வந்தபோது அவரை நெருங்கி கடிதத்தைக் கையளித்து ஜனாதிபதியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டினார்.நான் இங்கே இணைத்திருக்கும் புகைப்படங்கள் அந்தக் காட்சியைத்தான் குறிக்கின்றன.


குமாரியை பாராளுமன்றத்தில் கண்ட ஹக்கீம் வெலவெலத்துப்போனார்.அவர் இதனை எதிர்பார்க்கவே இல்லை.பின்னர் பாராளுமன்றப் பார்வையாளர் கூடத்தில் ஹக்கீம் அவர்களின் இருக்கைக்கு நேரே குமாரி உட்காரவைக்கப்பட்டார்.


அன்றைய(2004.04.22) நிகழ்வுகள் அனைத்தும் ஐ.டீ.என் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஹக்கீம் வந்தவுடன் பேர்டினாண்டஸ் குமாரியை முன்னுக்குத் தள்ளுவது,குமாரி ஹக்கீமிடம் கடிதத்தைக் கையளிப்பது,பின்னர் பெர்டினாண்டசுடன் குமாரி செல்வது அனைத்தும் பதிவாகியிருந்தன.நான் இங்கே இணைத்திருக்கும் புகைப்படங்கள் அந்த வீடியோவில் இருந்து பெற்றவைகள்தான்.இங்கு சில விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இதுவரை காலமும் பேசப்பட்டு,எம் மக்களுக்கு நம்பவைக்கப்பட்டு வந்ததைப் போல குமாரி கூரேயின் அத்தியாயம் ஒரு வெற்றுக்கட்டுக்கதையாக இருப்பின்,அரசாங்கத்தினராலும் ரிஷாடின் கூட்டத்தினராலும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு கதையாக இருப்பின் இவ்வளவு தூரம் ஒரு பெண்ணை நாட்டின் ஜனாதிபதி தனியாகச் சந்திப்பதும்,ஒரு அமைச்சர் கூட்டம் இப்பெண்ணை இயக்குவதும்,பாராளுமன்றம் வரைக்கு கூட்டிச்செல்வதும் சாத்தியமா என்பதை சற்று சிந்திக்கவேண்டும்.

அத்தோடு ஒரு அரசியல் தலைவர் விட்ட தனிப்பட்ட தவறு எவ்வாறு அவரின் அரசியலைக் கட்டுப்படுத்த வருகிறது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அவதானிக்கலாம்.குமாரி கூரே ஹக்கீம் இருவருக்குமிடையிலான தனிப்பட்ட தொடர்பு தனிப்பட்ட தொடர்பாகவே இருந்துவிடுமானால் அது வேறு கதை.ஆனால் அது அவரின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முனைகிறது.அதாவது ஹக்கீம் அவர்களின் கட்டில் விவகாரம் எமது முஸ்லீம் அரசியலைத் தீர்மானிக்க முனைகிறத்.இது அவரின் தனிப்பட்ட விடயம் என்று எவ்வாறு நாம் ஒதுங்கிக்கொள்வது. இதனைப் போல பல முக்கிய அரசியல் நிகழ்வுகளில் ஹக்கீம் எடுத்த தீர்மானங்களுக்கு அவரின் இப்படிப்பட்ட கேவலமான விடயங்கள்தான் காரணமாக இருந்திருக்கிறது என்பதை நான் பின்னர் விபரிப்பேன்.

தனக்கும் குமாரிக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகள் அரசாங்கத்திற்கு தெரிய வந்துவிட்டது,அது பாராளுமன்றம் வரை வந்துவிட்டது என்பதை அன்றுதான் ஹக்கீம் புரிந்து கொண்டார்.அந்த நான்கு எம்பிகளால்தான் இந்த விவகாரம் வெளியே வந்திருக்க வேண்டும் என்று கணித்துக்கொண்டார்.

இப்போது என்ன செய்வது?

ஒரு முஸ்லிம் சமூகத்தின் தலைவர், அல்குர்ஆனையும்,சுன்னாவையும் யாப்பாகக்கொண்ட கட்சியின் தலைவர்,பிஸ்மில் சொல்லி கூட்டத்தை ஆரம்பிக்கும் தலைவர்,அல்லாஹு அக்பர் என்று உயர்பீட உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தலைவர்,நாரே தக்பீர் சொல்லி மக்களை உணர்ச்சிப்படுத்தும் தலைவர், இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான தலைவர் இன்னொரு பெண்ணோடு இருந்தது வெளியே தெரிந்தால் கட்சி அழிந்துவிடும்,கட்சியின் மானம் கப்பலேறிவிடும், விடயம் வெளியே சென்றால் தனது அரசியல்,குடும்ப வாழ்க்கை அனைத்தும் வீதிக்கு வந்துவிடும்.

என்ன செய்வது?எத்தனை கோடி கொடுத்தாலும், என்னையாவது செய்து இதனை மூடிமறைத்துவிட வேண்டும்.இல்லாவிட்டால் ஹக்கீம் என்றொரு அத்தியாயம் இலங்கை அரசியலில் அன்றே முடிந்திருக்கும்.யாரிடம் போய் சொல்வது?யாரிடம் உதவி கேட்பது.
இதை முறியடிக்கவல்ல ஒருவரின் முகம் ஹக்கீமுக்கு ஞாபகம் வந்தது.
தலைவர் தொலைபேசியை எடுத்து,தளபதியின் இலக்கத்தை டயல்செய்தார்.
தொடரும்…..

றாஷி முகம்மது

Read More»

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

back to top