1:38:00 PM
A+ A-

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்பு விவகாரம் மீண்டும் பாராளுமன்றத்தில்!



அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபியா அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்ட   விவகாரம்” பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விக்கு மேல் கேள்வியாக எழுப்பும் பணி தொடர்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம் சல்மான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இவ் விடயமாக  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.
ஏற்கனவே அவர்  பாராளுமன்றத்தில் வீடமைப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது வீடமைப்பு அமைச்சுக்கு நுரைச்சோலை விவகாரம் தொடர்பில்லை எனவும் மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கண்காணிப்பில் தான் அவ்வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதாக அன்று பதிலளிக்கப்பட்டது.
அதனை தொடந்து சட்டத்தரணி சல்மான் எம்.பி அவர்கள் உள்நாட்டு விவகார அமைச்சரிடம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வீடுகளை பகிர்ந்தளிக்க அரசாங்க  அதிபருக்கு  உத்தரவிடும் வகையிலேயே கேள்வி எழுப்பவுள்ளார்.

நன்றி - SLMCவெளிச்சம் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்