23 நாடுகளில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகைஇலங்கை மற்றும் இந்தியா உட்பட சர்வ தேச ரீதியாக 23 நாடுகளில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றுள்ளன.

இலங்கையில் கடலோர பகுதிகளிலுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரம்
இலங்கையில் வடக்கு - கிழக்கு உட்பட 14 கரையோர மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கடலோர கிராமம் என 14 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
சுனாமி எச்சரிக்கை கோபுரத்திலிருந்து எச்சரிக்கை அலாரம் ஒலித்தவுடன் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒத்திகை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைமையகத்திலிருந்து செய்மதி ஊடாகவே இந்த முன் எச்சரிக்கை அறிவிப்பு செயல்படுத்தப்படுகின்றது.
அனர்த்த முன் எச்சரிக்கை கோபுரத்திலிருந்து முதலாவதாக அலாரம் ஒலித்தவுடன் மக்களும் உள்ளுர் தொண்டர்களுக்கும் விழிப்புடன் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
இரண்டாவதாக சில நிமிடங்களால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிப்பு வெளியானதையடுத்து இருப்பிடங்களை மக்கள் வெளியேறுகின்றார்கள்.
மூன்றவதாக அபாயம் நீங்கிவிட்டது என்ற அறிவிப்பு வெளியாகும் போது மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றார்கள் என மூன்று கட்டங்களை கொண்டதாக இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது
இந் நிகழ்வுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உட்பட தன்னார்வ தொண்டர் அமைப்புகள், போலிஸ் மற்றும் முப் படையின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்