85 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றி.அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 85 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இது இருபதுக்கு இருபது போட்டிகளில் அணியொன்று பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும்.

இதற்கு முன்னர் இலங்கை அணி 260 ஓட்டங்களை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

இதில் , அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிக பட்ச ஓட்டங்களாக கிளேன் மெக்ஸ்வெல் 65 பந்துகளுக்கு முகங்கொடுத்து 14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 145 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

அவர் 49 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் , டேவிட் வோர்னர் 28 ஓட்டங்களையும் , கவாஜா 36 ஓட்டங்களையும் , ட்ரவிஸ் ஹெட் 45 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக தினேஸ் சந்திமால் 57 ஓட்டங்களையும் சாமர கபுகெதர 43 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணியின் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கட்டுக்களையும் ஸ்கொட் பொலன்ட் 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது தொடரில் அவுஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்