"தாருஸ்ஸலாம் மர்மக் கதைகள் "அக்பர் திகாமடுல்ல

தாருஸ்ஸலாத்தை கட்டியவர் அதன் தலைவர் அஷ்ரப் அவர்கள்.
அவர் இதனை 1998 ஒக்டோபர் 23 ல் திறந்து வைத்தார்.

தாருஸ்ஸலாத்தை கட்டியது மட்டுல்லாது1999 ஜுலை 23 ல் தாருஸ்ஸலாத்திற்கு இரு பாரிய சிக்கல்களை தோற்றுவித்தார்.

1)  தாருஸ்ஸலாத்தை நிர்வகிப்பதற்காக LOTUS என்ற நம்பிக்கை நிலையத்தை  தோற்றுவித்து அதற்கான பரிபாலன சபை உறுப்பினர்களை நியமித்தார்.

2)  தாருஸ்ஸலாத்தை நிர்வகிப்பதற்காகவும்,அதன்  கட்டங்களை கண்காணிப்பதற்காகவும் யுனிட்டி பில்ட்டர்ஸ் பிரைவெட் லிமிட்டெட் எனும் தனியார் நிறுவனம்  ஒன்றை ஆரம்பித்து, அதற்கான பணிப்பாளர் சபையை நியமித்தார்.

இவ்விரண்டு சபைகளுக்கும் அவரே ஆயுள்கால தலைவர்.

2000 செப்டம்பர் 16 ல்  தலைவரின் மறைவுக்குப் பின்னர் ஹக்கீம் இவ்விரண்டு சபைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இவ்விரண்டு சபைக்கும்  தலைவரானார்.

தாருஸ்ஸலாம் பற்றிய  தகவல்கள், செயற்பாடுகள் மிக அந்தரங்கமாகவும்,கட்சியின் உறுப்பினர்கள்  பேச உரிமையில்லாத விடயமாகவும் பேணப்பட்டன.

அதி உயர்பீடம் 90 உறுப்பினர்களை கொண்டது ,அதில் 12 அதி உயர்பீட உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒரு மகஜர்  ஒன்றை செயளாளர் ஹஸன்  அலியிடம் 2015 ஒக்டோபர் 15ல் கையளித்தனர்.

மகஜர் உள்ளடக்கிய மர்மக்கதை என்ன?

அதி உயர்பீடம் 90 உறுப்பினர்களை கொண்டது ,அதில் 12 அதி உயர்பீட உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒரு மகஜர்  ஒன்றை செயளாளர் ஹஸன்  அலியிடம் 2015 ஒக்டோபர் 15ல் கையளித்தனர்.

அதில் பின்வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கோரினர்.

1) தாருஸ்ஸலாமின் உருத்தாளி யார்? அதன் வருமானம் எங்கே?
2) LOTUS அமைப்பின் பரிபாலன சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல்.
3) யுனிட்டி பில்டர்ஸ் பணிப்பாளர் சபையினர்களின்   பெயர் பட்டியல
4)கட்சியின் அசையும் அசையா சொத்துக்களின் விபரம்.

இக்கோரிக்கைக்கு ஹஸன் அலி ஒரு திடுக்கிடும் பதிலை வெளியிட்டார்.

"இது சம்பந்தமான எந்த ஒரு விபரமும் என்னிடத்தில் இல்லை.
எனக்குக்கூட இது பற்றி எதுவுமே இதுவரைக்கும்  தெரியாது.இது தலைவர் ஹக்கீம் மட்டுமே அறிந்த விடயம் ,அவரிடமே  கேட்டறிந்து கொள்ளுங்கள்"

இந்த மர்மமான பதிலை கேட்டு ஆத்திரப்படவேண்டிய அதி உயர் பீட உறுப்பினர்கள் பெட்டிப் பாம்பாக சுருண்டனர்.

இதன் மர்மம் என்ன?
பஸீர் சேகு தாவூத் மட்டுமே விளங்கிக் கொண்டார்.
வெகுண்டு எழுந்தார்,மர்மக்கதையின் மறுபக்கத்தை புரட்டினார்.......

(தொடரும்.....)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்