நிஸாம் காரியப்பர் ஹக்கீமால் திட்டமிட்டே ஓரம்கட்டப்பட்டார்.

ஆக்கம்..
எம்.எச்.எம் இப்ராஹிம்
கல்முனை....

கல்முனையின் முன்னால் மேயராக இருந்த நிஸாம் காரியப்பர் அவர்களின் அரசியல் விடயத்தோடு ஒன்றிய சில கருத்துக்களை கூறுவதற்காக இந்த விடயத்தை எழுதுகின்றேன்.

நிசாம் காரியப்பர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் ஓரம்கட்டப்படுகின்றாரா?
அப்படி என்றால் எதனால் அவர் ஒரம்கட்டப்படுகின்றார்
என்பதைனையும், அதனை அறிந்தும் நிசாம் காரியப்பர் அவர்கள் அதற்கு பழியாகி கொண்டுள்ளாரா?,என்பதையும் நாம் நடுநிலைமையாக சிந்திக்கும் போது சில உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

அஸ்ரப்புடைய மரணத்துக்கு பிறகு தலைமை பதவியை பல போராட்டத்துக்கு மத்தியில் ஏற்றுக்கொண்டுள்ள ஹக்கிம்  அவர்கள். பல சவால்களை எதிர்கொண்டார்.

அந்த சவால்கள் எல்லாம் மூத்த போராளிகள் என்று கூறிக்கொள்பவர்களிடமிருந்துதான் வந்தது என்பதையும் நாம் அறிவோம்.

கட்சியை ஹக்கிம் ஏற்றுக்கொண்ட காலப்பகுதியில்  அதாவுல்லா, தொடக்கம் பல உறுப்பினர்கள் ஹக்கிமுக்கு எதிராக செயல்பட்ட விடயங்கள் நமக்கு தெரியும்.

அதில்  நிசாம், ஹரீஸ், அன்வர் இஸ்மாயில் போன்றவர்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதும் நமக்குத் தெரியும்.

அந்த பிரச்சினைகள் எல்லாம் ஹக்கிமின் ஆளுமையை உரசிப்பார்க்கும் விடயமாகவே பட்டது. அஸ்ரப் அவர்களிடம் பணிந்து பேசியவர்கள் எல்லாம் ஹக்கிமிடம் தலைநிமிர்ந்து கேள்விகேட்க தயங்காத ஒரு மனோநிலையும் காணப்பட்டது.

அதனால் ஹக்கிம்  பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வந்தது என்பதும் தெரிந்த விடயமே.

கட்சியை தொடர்ந்து வழிநடத்துவது என்றால், இப்படியான விடயங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். 

அதற்காக தலைவர் ஹக்கிம்  அவர்கள் எடுத்த முடிவுதான்,
கட்சியில்  தன்னை மீறி யாரும் நடக்கக்கூடாது என்ற என்னத்தில் கட்சியின் யாப்பை கூட மாற்றி தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டார்.

அதே நேரம் தன்னை தட்டிக்கேட்க்கும் எந்த நபரும் இந்த கட்சியில் இருக்கக்கூடாது என்றும், அதுமட்டுமல்ல தனக்கு சவால் விடும் அறிவாளிகளும் இந்த கட்சியில் இருக்கக்கூடாது என்ற என்னத்தையும்  உள்மனதில் வைத்துக்கொண்டுதான், அவர் காய்நகர்த்திக் கொண்டு வருகின்றார் என்பதையும், விடயத்தை உண்ணிப்பாக கவணிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.

அதே நேரம் முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில்  தேர்தல் கேட்டால்தான் நாம் எந்த தேர்தலிலும் வெற்றிபெறலாம் என்ற நினைப்பில் உள்ளவர்கள், ஹக்கிமின் என்னத்தை அறிந்து, ஹக்கிமுக்கு கூஜா தூக்கிகலாக மாறி,அவருடைய மனம் புண்படாத வண்ணம் நடந்து கொண்டு தனது பட்டம் பதவிகளை காப்பாத்திக் கொண்டிருப்பதையும் அறிந்த புத்திசாலிகளுக்கு புரிந்து கொள்ள நேரம் எடுக்காது என்று நினைக்கின்றேன்.

இப்போது நிசாம் காரியப்பரின் விடயத்துக்கு வருவோம்.

நிசாம் காரியப்பர் அவர்கள் இந்த விடயங்களுக்காகத்தான், தலைவரின் என்னம் அறிந்து தலைகுனிந்து நடந்தாலும், தலைவர் ஹக்கிம்  இதனை நம்புவதாக தெரியவில்லை.
அவர் பலருடை விடயத்தில். (சூடு கண்ட பூனையின் நிலைக்கு) தள்ளப்பட்டதே,
இதற்கு காரணம் எனலாம்.

நிசாம் காரியப்பரை பொருத்தவரையில் அவர் ஒரு படித்தவர், பிரபல சட்டத்தரணி, அஸ்ரப்பின் சொந்தக்காரர், அது மட்டுமல்ல, கல்முனையை பிறப்பிடமாக கொண்டவர்.

 இவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து அழகு பார்த்தால், தனக்கு இது பேராபத்தாக வந்து முடியும் என்பது தலைவர் கக்கீமின் என்னமாக இருக்கலாம்.
இதனால் நிசாம் காரியப்பர்  விடயத்தில் ஹக்கிம்  மிகக் கவனமாக காய் நகர்த்துகின்றார் என்பதே உண்மையாகும்.

நிசாம் காரியப்பர் அவர்களுக்கு மேயர் பதவியை விட, பாராளுமன்றம் செல்லக்கூடிய சகல தகுதியும் கொண்டவர் என்பது மட்டுமல்ல, மாகாணசபைக்கும்  செல்வதற்கும் தகுதியானவர். 

அப்படி பட்டவரை இந்த மேயர் தேர்தலில் போட்டியிட வைத்து கழுத்தருத்த விடயங்களும் நடந்ததை எல்லோரும் அறிவர்.

இந்த நிலை ஏற்பட காரணம் என்ன?
நிசாம் காரியப்பர் மேல் கொண்ட பொறாமையா? 

என்பதை விட அவர்மீது
தலைவர் ஹக்கிம் கொண்ட பயமே இதற்கு  காரணமாகும்.

இதனால்தான்
சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிசாமை மக்கள் மத்தியில்  செல்லாக்காசாக மாற்றவும், கல்முனையில் உள்ள அவரின் அரசியல் எதிரிகளைக் கொண்டே அவரின் செல்வாக்கை உடைக்கவும், 
காலநேரம் பார்த்திருந்தார் என்பதே யதார்த்தமாகும்.

 நிசாம் காரியப்பர் அவர்கள் இவ்வளவு விடயங்களையும் அறிந்து கொண்டே, அவருடைய திட்டத்துக்கு பழியாகி கொண்டு வருகின்றார், என்பதை பின் வரும் விடயங்கள் உறுதிப்படுத்தும்.

உதாரணமாக ஒரு விடயம்.

சென்ற மாநகர சபை தேர்தலில் நிசாம் காரியப்பரை முதன்மை வேட்பாளராக அறிவித்து, அவருக்கு எல்லோரும் வாக்களியுங்கள் என்று மு.காங் கூறியிருந்தால், நிச்சயமாக சாய்ந்தமருது மக்கள் உள்ளடங்களாக எல்லா ஊர்மக்களும் வாக்களித்து அவரை மேயராக தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.

ஆனால் அதனை மு.காங் கடைசிவரையும் செய்யவில்லை. காரணம் கட்சிக்கு புதிதாக சேர்ந்த சிராஸ் மீராசாஹிபு அவர்களை இவருக்கு போட்டியாக ஆக்கி, அதன் மூலம் நிசாம் காரியப்பரை பந்தாடினார்கள் என்பதை நிசாமும் அறியாதவரல்ல,

இதில் ஒரு கல்லில் இரு மாங்காய்களை தலைவர் ஹக்கிம்  பெற்றுக்கொண்டார்.

(நிசாமையும் தோற்கடித்தார்,அதேநேரம் கட்சிக்கு எந்த அற்சுறுத்தலையும் செய்யதுணியாத புதிய வரவான,சிராஸையும் மேயர் ஆக்கிவிட்டார்)

அதன் பிற்பாடு மேயராக வந்த சிராஸ் மீராசாய்வுக்கு,
தலைவர், நிசாம் காரியப்பர் மேல் கொண்ட பயத்தின் காரணமாகத்தான் இந்த விளையாட்டு நடந்தது..அதனால்தான் தான் மேயராவதற்கு தலைமை ஒத்துழைத்தது, என்று கூட தெறியாமல்.
கல்முனையில் தான் பேசும்பொருளாக மாறவேண்டும் என்ற நினைப்பில் ஓடி,ஓடி சில சேவைகளை செய்தார்.
இந்த சேவைகளையும்,அதனூடாக தனக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கையும் தலைவர் ஹக்கிம் அவர்கள் ரசிப்பார் என்று, அரசியலை ஆழமாக அறியாத சிராஸ் மீராசாஹிப் அவர்கள்  இந்த இடத்தில் தவறிழைத்து விட்டார்.

இதுதான் அவருக்கு பிற்காலத்தில் ஆப்பாக அமையும் என்று, அன்று தெறியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சிராஸ் மீராசாய்வுவின் இந்த செயல்பாடு, தூண்டிலை போட்டுவிட்டு மப்பிலில் கண்ணாய் இருந்த ஹக்கிமுக்கு பிடிக்கவில்லை, 
காரணம், குளிக்கப் போய் சேற்றை அள்ளி பூசிக்கொண்ட கதையாக மாறிவிடுமோ! 
என்று தலைவர் பயந்ததன் காரணமாகவும், மேயர் சிராஸின் நடவடிக்கை தனக்கு எதிராக வந்துவிடுமோ!
என்ற பயத்தின் காரணமாகவும் இவருடை பதவியை பறிப்பதற்கான சந்தர்ப்பத்தை பார்த்து கொண்டிருந்தார் தலைவர் ஹக்கிம்  அவர்கள்.

உண்மையிலேயே சிராஸ் இங்கே ஒரு வேலையும் செய்யாமல்,அபிவிருத்தியும் செய்யாமல் (ஹரீஸ்,பைசால் காசிம் போல) பத்தோடு பதினொன்றாக இருந்திருப்பாரேயானால், இரண்டு வருடத்தால் அவருடைய பதவியை தலைவர் பறித்திருக்க மாட்டார்.
மாறாக அவைரேயே தொடர்ந்தும் மேயராக இருக்க விட்டிருப்பார்.

சிராஸின் நடவடிக்கை கல்முனையில் நமக்கு சவாலாக வந்துவிடும் என்ற காரணத்தினால்,எந்த விடயத்திலும் சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றாத தலைவர் ஹக்கிம், இந்த விடயத்தில் சொல்வாக்குபடி நடப்பவன் நான் என்று காட்டிக்கொண்டது மட்டுமல்ல,அதனை பறித்து நிசாம் காரியப்பருக்கு கொடுத்தார்.

இந்த இடத்திலும் ஒரு கல்லில் இரு மாங்காய்களை பறித்துக்கொண்டார் தலைவர்.

ஒன்று, சிராஸின் மேயர் பதவியை துடிக்க,துடிக்க, பதவியை பறித்தது.
மற்றது,
சாய்ந்தமருது மக்களின் அரசியல் எதிரியாக நிசாம் காரியப்பரை மாற்றியது.

நிசாம் காரியப்பர் இந்த இடத்தில்.
இப்படி பறித்துத்தறும் பதவி எனக்கு வேண்டாம், இதனால் சாய்ந்தமருது மக்கள் என்னைத்தான் பிழையாக நினைப்பார்கள், அதனால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று மறுத்திருந்தால்,இன்று கல்முனை மக்களின் மனதில் ஒரு ஜென்டில் மேன் என்ற பட்டத்தை பெற்றிருப்பார்.

எதிர்காலத்தில் அவரின் தனிப்பட்ட அரசியலுக்கும் அது பயன் பட்டிருக்கும். 
ஆனால் அவர் அந்த இடத்தில் ஹக்கிமின் திட்டத்துக்கு பழியானார் என்பதே உண்மையாகும்.

அந்த மேயர் பதவியை பாரமெடுத்தவர், அதையாவது அவருடை இரண்டுவருட காலத்துக்குள் ஒழுங்காக சேவைகள் செய்து பேர்வாங்கினாரா என்றால் அதுவும் இல்லை என்றே கூறவேண்டும்.

*குறிப்பு:(அப்படி இவரும் ஓடி ஓடி சேவை செய்தால் சிராஸிக்கு நடந்ததுதான் நமக்கும் நடக்கும் என்று நினைத்தாரோ என்னவோ.)

கல்முனை மக்கள் சிராசோடு இவரை ஒப்பிட்டு பார்த்தது மட்டுமல்ல, இவர் அரசியலுக்கு லாயக்கற்றவர் என்றும் மக்கள் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதைத்தான் தலைவர் ஹக்கிம்  எதிர்பார்த்தார்.
இப்போது கல்முனையில் இருந்த, அவருக்கு எதிரான சவால் ஒன்று இல்லாமல் போய்விட்டது.

மற்றது,அவரை கட்சியையும் விட்டு ஓரம் கட்டிவிட்டால்,பல்லு கலட்டிய பாம்பாக நிசாம் காரியப்பர் ஒதுங்கவேண்டியதுதான் மிச்சம்.

இதே நிலைமை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்றுதான் கல்முனை அரசியல் வாதிகள் எந்த சேவையும் செய்யாமல் தூங்கிகொண்டு உள்ளார்கள் என்பது.
இதைபற்றி அறிந்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

ஆக மொத்தத்துக்கு கல்முனையின் அரசியல், ஒருவறின் தனிப்பட்ட பயத்துக்கு பழியாகிக்கொண்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஒரு காலத்தில் சுதந்திரமான நேரடி ஏஜண்டுகளின் கைகளிலே இருந்த கல்முனை தொகுதி, இப்போது சப் ஏஜண்டுகளின் கைகளுக்கு மாறியுள்ளது.
கல்முனையில் எது செய்ய நினைத்தாலும் ஹக்கிம்  நினைத்தால்தான் முடியும்..

அதனால் ஹக்கிமுக்கு தெறியாமல் இ்ங்கே யாரும் அபிவிருத்தி செய்து மக்கள் மத்தியில் கதாநாயகன் ஆகுவதை தலைவருக்கு பிடிக்காது. 
பிடிக்காத ஒன்றை செய்து தலைவரிடம் சீட்டு கிழிக்கப்படுவதை விட பேசாமல் இருப்பதே மேல் என்று, கல்முனை அரசியல் வாதிகளை போல் அம்பாரை மாவட்ட மு.காங்.அரசியல் வாதிகளும் நடந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

தாம் சேவை செய்யாது விட்டாலும்,மரச்சின்னத்தில் வந்தால் நாம் வெற்றியடைந்து விடலாம் என்ற என்னமே அவர்களுக்கு மேலோங்கி நிற்கின்றது.
அதற்கு மு.காங் ஆதரவாளர்கள் தயார் நிலையில் இருப்பதும் ரஹுப் ஹக்கிம்  அவர்களுக்கு கூடுதல் அனுகூலமே!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்