நமக்கும் தியகாத் திருநாள் உண்டோ ! – வேதாந்தியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஏ.எல்.ஆஸாத் (சட்டக்கல்லூரி)

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வேதாந்தி தனது வாழ்த்து அறிக்கையில், முஸ்லிம் சமுகத்தின் சமகால இயங்கு நிலையை சித்தரிக்கும் யதார்த்தபூர்வமான கவிதையொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

அகதிகளான நமது சமுகமும்
அடிமைகளான நமது தலைமயும்
இனத்தை தொலைத்த இளைஞர் கூட்டமும்
திகத்தின் சுகத்தை விரும்பும் மக்களும்
எம்மைச் சூழ்ந்த அறியாமைகளும்
எதற்கும் நடுங்கும் எமது மனங்களும்
நம்மோடு இருக்கும் நாட்கள் வரைக்கும்
நமக்கும் தியாகத் திருநாள் உண்டோ

– வேதாந்தி –
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்