முஸ்லிம் சமூகத்திற்குள் இயக்க பிளவுகளை ஏற்படுத்துகிறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Masihudeen Inamullah

முஸ்லிம் சமூகத்திற்குள் இயக்க வெறி பிளவுகளை பித்னாக்களை ஏற்படுத்துகின்ற அனாமதேய பிரசுரங்களை குறிப்பாக சமூக வலைதளங்களில் பகிரும் கோழைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் படல் வேண்டும்!

குறிப்பாக POLICE – Cyber Crimes Division ஊடாக முறையீடு மேற்கொள்ளப் பட்டு, இயக்கவெறி காழ்ப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்ளும், வன்முறைகளைத் தூண்டுவோரை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த சம்பந்தப் பட்ட அமைப்புக்கள் கால தாமதமின்றி உரிய நகர்வுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்!

இந்தநாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சமாதான சகவாழ்வு, மத சகிப்புத்தன்மை போன்ற உன்னத இலக்குகளிற்கு வரலாறு நெடுகிலும் மதிப்பளித்து அவற்றிகாக பெரும் விலையையும் கொடுத்துவரும் முஸ்லிம் சமூகத்தின் அந்தஸ்திற்கும் அறிவு முதிர்சியிற்கும் பாரிய சேதம் விளைவிக்கின்ற..

அல்லது,

முஸ்லிம் சமூகத்தை வீணான சர்சைகளிற்குள் இழுத்துச் செல்கின்ற அதிகப் பிரசங்கித் தனமான ஆக்ரோஷமான கருத்து வெளியீடுகள், அறிக்கைகள், மாநாடுகள் குறித்து முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்வதோடு பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ளுதல் வேண்டும்.

விளம்பர விரும்பிகளான உசார் மடையர்களினதும் ஆத்திரக் காரணனினதும் முட்டாள் தனங்களிற்கு அரசியல் அல்லது சன்மார்க்க சாயங்கள் பூசப்படுகின்ற அவல நிலை தொடர்வது ஆரோக்கியமான வெளிப்பாடாக தெரியவில்லை.

சமூகத்தினதும், தேசத்தினதும் வரலாற்றில் மிகவும் தீர்க்கமான ஒரு காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கின்றோம், முஸ்லிம்கள் மிகவும் நிதானமாகவும், பொறுப்புணர்வுடனும், கட்டுக்கோப்பாகவும் களநிலவரங்களை கையாளவும் கருத்துக்களை வெளியிடவும் வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்