ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே வற் வரி அமுலில் இருக்கும் – ராஜித சேனாரட்ன
ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே வற் வரி அமுலில் இருக்கும் எனவும் ஒன்பது மாதங்களின் பின்னர் மக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாது எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 1.3 ட்ரில்லியன் ரூபா கடன் தொகையை செலுத்துவதற்காகவே இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் கடன்களை உரிய முறையில் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும் நாட்டை பாரிய கடன் பொறியில் சிக்க வைத்துள்ளதாகவும் அதிலிருந்து மீட்டு எடுக்கும் நோக்கில் வற் வரி விதிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக அடிப்படையில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒன்பது மாதங்களின் பின்னர் மக்களுக்கு சுமையற்ற வகையில் வெற் வரியில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருந்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண அந்த சந்தர்ப்பத்திலேயே நிதி அமைச்சருக்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்