பல பரபரப்பான உண்மைகளை வெளியிட ஆயத்தமாகும் டில்ஷான்!சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் டில்ஷான் தனது இறுதிப் போட்டியில் பல்வேறு உண்மைத் தகவல்களை வெளியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.


இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது.

இந்தப் போட்டியோடு இலங்கை அணியின் சீனியர் வீரரான டில்ஷான் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெறுகிறார்.

இந்த நிலையில் அவர் ஓய்வு பெறும் போது தனக்கு நடந்த அவலங்களைப் பற்றி வெளிப்படையாக கூற இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதில் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியா பற்றிய தகவலும் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் பிரச்சனையை தவிர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டது.

கடைசி டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரிதாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர, டில்ஷான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இதனால் அவர் தனது பல அனுபவங்களை பற்றி வெளிப்படையாக பேசலாம். இது அவருடைய விருப்பம். அவருடைய தனிப்பட்ட பிரச்சனையில் நான் தலையிட மாட்டேன்.

அதேபோல் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. டில்ஷானாக இருந்தாலும் சரி, சனத் ஜெயசூரியாவாக இருந்தாலும் சரி எனக்கு ஒன்று தான் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்