பாராளுமன்ற நிர்வாக காலத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிக்கமாட்டோம் எந்த யோசனையும் இல்லை என்கிறார் பிரதமர்பாரா­ளு­மன்­றத்தின் நிர்­வாகக் காலத்தை ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேல் அதி­க­ரிக்கும் நோக்கம் அர­சாங்­கத்­திற்கு இல்­லை­யென்றும் இவ்­வா­றான
யோச­னையை அரசோ அல்­லது அரசு சார்­பான (ஆத­ரிக்கும்) கட்­சி­களோ
அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு முன்­வைக்­க­வில்லை என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை கேள்­வி­க­ளுக்கு
பிர­தமர் பதி­ல­ளிக்கும் நேரத்­தின்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் எம்.பி.யான உதய கம்­மன்­பில எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
உதய கம்மன் பில எம்.பி. தனது கேள்­வியில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் அர­சாங்­கத்தின் நிர்­வாகக் கால எல்­லையை 5 வரு­டங்­க­ளுக்கு மேலாக அதி­க­ரிப்­ப­தற்­கான யோச­னை­களை அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­போ­கின்­றதா என்­பது தொடர்பில் கேள்­வியை எழுப்­பினார்.
இதற்கு தொடர்ந்தும் பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.
புதிய அர­சி­ய­ல­மைப்பில் அரசின் நிர்­வாகக் காலத்தை 5 வரு­டங்கள் அதி­க­ரிப்­பது தொடர்பில் எவ்­வி­த­மான யோச­னை­களும் முன்­வைக்­கப்­ட­வில்லை.
அவ்­வா­றான எந்­த­வொரு யோச­னை­யையும் அரசு முன்­வைக்­க­வில்லை. அரசு புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் தலை­யி­ட­வில்லை. அதனை அர­சி­ய­ல­மைப்பு சபையே முன்­னெ­டுக்­கின்­றது.
அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு பல்­வேறு கட்­சிகள் பல்­வேறு யோச­னை­களை முன்­வைத்­துள்­ளன. 19 ஆவது திருத்­த­சட்­டத்தை நிறை­வேற்றி ஜனா­தி­ப­திக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தை குறைத்து மீண்டும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.
நீங்கள் தான் ஜனா­தி­பதி 3 தடவை போட்­டி­யி­டலாம் என சட்­டத்தை திருத்­தி­னீர்கள் எனவே நீங்கள் தான் மக்­க­ளிடம் மன்­னிப்பு கேட்க வேண்டும்.
எமக்கு பாரா­ளு­மன்­றத்­தின் நிர்­வாகச் சபை எல்­லையை அதி­க­ரிக்கும் எண்ணம் இல்லை. என பிர­தமர் தெரி­வித்தார்.
இதன்­போது இடைக் கேள்­வியை தொடுத்த உதய கம்­மன்­பில எம்.பி. மாத்­த­றையில் இடம்­பெற்ற தேசிய அரசு ஒரு வருட பூர்த்தி அரசு ஒரு வருட பூர்த்தி விழாவின் போது ஆட்சி 5 வருடம் தொடரும் என ஜனா­தி­பதி தெரி­வித்தார் என்றார்.
இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர். இரண்டு வரு­டங்கள் தான் இணக்­கப்­பாடு அரசு உடன்­பாடு காணப்­பட்­டது. பின்னர் இது 5 வரு­ட­மாக தொடர தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் தேர்­த­லுக்கு பிறகும் 5 வருட இணக்­கப்­பாடு ஆட்சி தொடரும் இதனைத் ஜனா­தி­பதி தெரி­வித்தார் என்றார் பிர­தமர்.
இதன்­போது மீண்­டு­மொரு கேள்வி எழுப்­பிய உதய கம்­மன்­பில எம்.பி. இன்­றி­லி­ருந்து 3 வரு­டங்­களில் ஜனா­தி­ப­தியில் பதவிக் காலம் முடி­வ­டை­கின்­றதே என்றார்.
இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர், நீங்கள் இன்­னமும் பழைய காலத்­தி­லேயே உள்­ளீர்கள். இன்று நிறை­வேற்று அதி­காரம் குறைக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்றார்.
இறு­தி­யான இடைக் கேள்­வியை விமல் வீர­வன்ச பிர­த­ம­ரிடம் எழுப்­பினார். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அண்­மையில் வடக்­கிற்கு விஜயம் செய்த போது நவம்பர் மாதத்தில் வரவு செலவு திட்­டத்­திற்கு முன்­ப­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுக்­கப்­படும் எனத் தெரி­வித்­துள்ளார். இதன் உண்மைத் தன்மை என்ன என பிர­த­ம­ரிடம் கேள்வி எழுப்­பினார்.
இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இது தொடர்பில் நான் அமைச்சர் மக்கள் சம­ர­வீ­ர­விடம் விசா­ரித்தேன். அவர் தான் அவ்­வாறு கூற­வில்லை எனத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்விதத்திலும் தலையிடுவதில்லை.
அதனை அரசியலமைப்பு சபையே முன்னெடுக்கின்றது. அச் சபையின் பரிந்துரைகள் வரைபுகள் நவம்பருக்கு முன்பு கிடைத்தால் அதனை நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். இதில் அரசாங்கம் எவ்விதத்திலும் தலையிடாது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்