தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைவு?

Viduthalai news


எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் அறிகுறி தென்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமையில் கூட்டாக போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

இதில் எதிர்பார்க்கப்படாத பல கட்சிகள் அங்கம் வகிக்கவுள்ளன.

இதன் ஒரு கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதுடன், இணைந்து செயற்பட தமது விருப்பத்தையும் வெளியிட்டதாக, இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது ஒரு முன்னேற்றக்கரமானதும், நடைபெற வேண்டியதுமான செயற்பாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்