Thursday, September 15, 2016

இனவாதத்தை தூண்டி நாட்டை கூறுபோட நினைப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்

Published by விடுதலை நியூஸ் on Thursday, September 15, 2016  | No comments
மாகாநாயக்க பீடத்து பிக்குகள் கூட்டு எதிரணிக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளது போல இனவாதத்தை தூண்டி அல்லது நாட்டை கூறுபோட நினைப்பவர்களுக்கு நாமும் சாட்டையடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் குறித்த விடயம் தொடர்பில் மாநாயக்க தேரர்கள் தங்களது கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.மேலும் விமல் வீரவன்ச புதிய அரசியலமைப்பு பற்றி குறைக்கூற வேண்டுமானால் அல்லது அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமானால் முதலில் கூட்டு எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மீதே எடுக்க வேண்டும். ஏனெனில் அரசியலமைப்பு உருவாக்க குழுவில் அவரும் இருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சகத்தில் இன்று இடபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கூட்டு எதிரணியில் உள்ளவர்கள் புதிய அரசியலமைப்பு அமைக்கப்படுவதற்கு முன்னரே எதற்காக இனவாத்தை தூண்டி வேடிக்கை பார்க்க நினைக்கின்றார்கள் என தெரியவில்லை. இந்த அரசியலமைப்பு பௌத்த சமயத்துக்கு எதிரானதெனவும் நீதிமுறைமைகளுக்கு உட்படவில்லை எனவும் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி மக்கள் மத்தியில் மோசமானவர்களாக சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமலுள்ளது வேடிக்கையாகவுள்ளது.

பாராளுமன்றத்தில் எந்தவொரு சட்டமூலம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்துக்கொண்டு கூச்சலிட மட்டுமே தெரிந்தவர்கள் இவர்கள் அவர்களின் கருத்துக்களை புரிந்தக்கொண்டு தக்க பதிலடி மாநாயக்க தேரர்கள் கொடுத்தள்ளனர். எனவே அவர்களுக்கு புரிந்தது இவ்வாறான இனவாதிகளுக்கு புரிய வேண்டும்.

இவர்களே முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியை கவிழ்த்தவர்கள். ஆமைச்சரவையை புரக்கணித்து மூன்று பேர் கொண்ட குடும்ப ஆட்சியென வீதியில் இறங்கி கோசமிட்டவர்களே ஆட்சியை கவிழ்க்க காரணமானவர்கள். ஊடகங்கள் மத்தியில் இன்றும் இனவாதத்தை தூண்டி ஐக்கிய தேசிய கட்சியை வளர்த்து விட்டவர்களே இவர்கள். ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தேர்தல் வெற்றிக்காக செயற்படுபவர்களே இவர்கள். ஏனவே நாட்டின் ஒருமைப்பாட்டுடன் கட்சியின் கொள்கைத் திட்டங்களுடன் ஒன்றுபட்டு செயற்படக்கூடியவர்கள் இன்று எம்முடன் உள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் தனிப்பட்ட வகையில் கட்சி அமைப்பதற்கு எதிர்ப்பையே கொண்டுள்ளோம். தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக அல்லது ஐக்கிய தேசிய கட்சயுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்பவர்கள் செய்வதை நாம் ஒரு பொருட்டாக கொள்ள முடியாது. தங்களது பிரச்சினைகளை தீர்த்தக்கொள்ள அவர்கள் அரங்கேற்றும் நாடகம் வியப்பாகவுள்ளது. இனவாதத்தைத தூண்டும் வகையில் செயற்படுபவர்கள் எம்முடன் என்றும் இணைந்திருக்க முடியாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நாம் அவர்களுடன் எத்தனையோ தடவை பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அவர்களின் சுய இலாபத்திற்காக கட்சியை காட்டிக்கொடுத்து ஐக்கிய தேசிய கட்சியை வளர்த்து வருகின்றனர். ஏனவே எமது நிலைப்பாடு என்றும் உறுதியானது ஏன்றார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.

முக்கிய குறிப்பு: www.viduthalainews.com இணையதளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு viduthalainews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை viduthalainews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- இது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் விடுதலை குரல்.
நிர்வாகம்
விடுதலை நியூஸ்0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

back to top