"தாருஸ்ஸலாம் மர்மக் கதைகள் தொடர்ச்சி.......திகாமடுல்ல அக்பர்

வெகுண்டு எழுந்தார் பஸீர் சேகு தாவூத் ,மர்மக்கதையின் மறுபக்கத்தை புரட்டினார்.அதிஉயர் பீட உறுப்பினரின் கேள்விகளுக்கு 8 மாதங்கள் கடந்தும் பதில்  கிடைக்காமை குறித்து ஆத்திரம் கொண்டார்.

 அதிஉயர் பீட உறுப்பினரின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வற்புறுத்தி 2016. ஜுன் 3ல் ஹக்கீமுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பபினார்..

ஹக்கீம்  அதற்கும் அசையவில்லை.

மீண்டும் 2016. ஜுலை 11 ல் பஸீர் சேகு தாவூத் , மர்மக்கதை பற்றிய 12 கேள்விகளுடன் ஹக்கீமுக்கு  பகிரங்க கடிதமொன்றை அனுப்பினார்.

1) LOTUS அமைப்பின் பரிபாலன சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எங்கே?

2) LOTUS அமைப்பின் பரிபாலன சபையின் கீழுள்ள வேறு சொத்துக்களின்
விபரமும் அதன்  வருமானம் எங்கே? அதனை பரிபாலிப்பவர்கள் யார்?

3)தாருஸ்ஸலாமின் தற்போதைய சட்ட ரீதியான உருத்தாளிகள் யார்?

4) யுனிட்டி பில்டர்ஸ் பணிப்பாளர் சபையினர்களின்   பெயர் பட்டியல் எங்கே?

5)
* தாருஸ்ஸலாமின்  மாத வருமானம் எவ்வளவு?
*கடந்த 16 வருட  வருமானம்  எங்கே?
*இவை SLMC இன் கணக்கில் வைப்பிருக்கை செய்யப்பட்டதா?
*வங்கியின் கணக்கு இலக்கம் எங்கே?
*இந்த வருமானம் வருடாந்த வரவு செலவு அறிக்கையில்
  சேர்க்கப்பட்டதா?

6)
 *LOTUS அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா?
*எங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது?
* அதன் பதிவு இலக்கம் என்ன?
*கடந்த 16 வருடங்களாக பதிவு செய்யப்படாமைக்கான காரணம் என்ன?7
* "யுனிட்டி பில்டர்ஸ் பிரய்வட் லிமிட்டெட் " என்று அழைக்கப்படும் நிறுவனத்தை, கம்பனிகள் பதிவாளர்  திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட (1998) நாள்முதல் கொண்டு, இன்றுவரை அதில் பணிபுரிந்த பணிப்பாளர்களின்  விபரங்களை  பகிரங்க படுத்துக.

 * "யுனிட்டி பில்டர்ஸ் பிரய்வட் லிமிட்டெட் " என்று அழைக்கப்படும் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நாள்முதல் இன்றுவரை அதன் பணிப்பாளர் சபை கூட்டங்களின் போது் சம்மதிக்கப்பட்ட தீர்மானங்களின் (BOARD RESOLUTION) பதிவுகளின் பிரதிகளை பகிரங்கப் படுத்துக.

8
"யுனிட்டி பில்டர்ஸ்  பிரய்வட் லிமிட்டெட் " என்று அழைக்கப்படும் நிறுவனம்  மு.கா.வின் நலனுக்காக உருவாக்கப்பட்டது, அப்படியிருந்தும் 2015 ஜனவரி 29 ல் அதன் பணிப்பாளர் சபையில்  இடம்பெற்ற தீடீர் மாற்றங்கள்  கட்சியின் அதி உயர் பீட உறுப்பினர்களுக்கு மர்மாக மறைக்கப்பட்டது ஏன்?

9
தலைவர் அஷ்ரப் தன் மறைவுக்கு இரண்டு மூண்று மாதங்ளுக்கு முன்னராக  தாருஸ்ஸலாத்திற்கு  பொது எல்லையை கொண்ட 53,வொக் ஷால் லேன் வெற்றுநிலத்தை கார்சன்  அன்ட் கம்பர்வெட்ஜ் பப்லிக் லிமிட்டெட் என்ற நிறுவனத்திமிருந்து விலை கொடுத்து வாங்கினார்.

இக் காணி உறுதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரினால் 2000 ம் ஆண்டில் எழுதப்பட்டு 2012ம் ஆண்டில் 55 / 11 வொக் ஷால் லேன்  கொழும்பு 02. என பதிவுசெயய்யப்பட்டது.

இக் காணி உறுதி மறைக்கப்பட்டதன் மர்மம என்ன?
இக் காணி உறுதியை மு.கா.அதி உயர் பீடத்தினரின்  பார்வைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

(தொடரும்......) கடந்த வார பதிப்பு பாகம் 1-http://viduthalainews1st.blogspot.com/2016/09/blog-post_10.html?m=1
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்