பிரதமரால் தப்பினார் வீரவன்ச?


ஜனாதிபதி செயலகத்தில் நடந்த முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால்  இன்று அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச அங்கு செல்லும் முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு சந்தித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க நேற்றிரவு முதல் கடும் முயற்சிகளை மேற்கொண்ட வீரவங்ச இன்று காலை அவரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய விமல் வீரவன்சவை இன்று கைது செய்யாது, வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க செல்வது என்பது திரும்பி வர முடியாத இடத்திற்கு செல்வது போன்றது என வீரவன்ச  இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு செல்வோர் எவரும் கைது செய்யப்படாமல் வெளியில் திரும்புவதில்லை என்ற அர்த்தத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அரச வாகனத்தை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக சென்ற வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச , தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு வீரவன்ச  இன்று கைதுசெய்யப்படுவதை தடுத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்