நான்கு வரு­டங்­க­ளுக்கு அரசை அசைக்க முடி­யாது பிரிந்து நின்று தாக்­குதல் நடத்தி ஒன்­றாக வெற்­றி­பெ­றுவோம் என்­கிறார் ராஜித

பிரிந்து நின்று தாக்­குதல் நடத்­துவோம். ஒன்­றாக வெற்­றியை கொண்­டா­டுவோம்.தேர்­தல்­களில் தனித்து போட்­டி­யி­டுவோம். ஒன்­றாக
ஆட்­சி­ய­மைப்போம். எவ்­வா­றெ­னினும் அடுத்த
நான்கு வரு­டங்­க­ளுக்கு எமது அர­சாங்கத்தை அசைக்க முடி­யாது. நாங்கள் ஒன்­றா­கவே பய­ணிப்போம் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.
அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற
வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்
கேள்வி:- ஐக்­கிய தேசி­யக்­கட்சி சுதந்­தி­ரக்­கட்­சியை விமர்­சிப்­ப­தை­விட சுதந்­தி­ரக்­கட்சி ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை விமர்­சிக்­கின்­றதே?
பதில்:- அவர்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தின் முக்­கி­யத்­துவம் தெரி­ய­வில்லை. அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் கைகோர்த்து ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தை நாங்கள் வீட்­டுக்கு அனுப்­பி­யி­ருந்தோம் எனவே எமக்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அர்ப்­ப­ணிப்பும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர்ப்­ப­ணிப்பும் நன்­றாகத் தெரியும், எனவே நாங்கள் மிகவும் கவ­ன­மா­கவே கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்றோம். எனினும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் இருந்­த­வர்­க­ளுக்கு அந்த முக்­கி­யத்­துவம் பாரிய அளவில் புரி­ய­வில்லை. அத­னால்தான் கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றனர்.
கேள்வி:- நீங்கள் ஏன் சுதந்­தி­ரக்­கட்­சியின் சம்­மே­ள­னத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை
பதில்:- எனக்கு அழைப்பு வர­வில்லை
கேள்வி:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சம்­மே­ள­னத்தில் கலந்­து­கொள்­வீர்­களா?
பதில்:- அதற்கு அழைப்பு வந்­தி­ருக்­கி­றது. நான் அதில் கலந்து கொள்வேன். எனக்கு எந்­தக்­கட்­சியும் உரித்­தில்லை. நான் ஜன­நா­ய­கத்­திற்­காக போரா­டு­கின்றேன்.
கேள்வி:- அடுத்த ஆட்சி எவ்­வாறு அமையும்?
பதில்:- அதனை 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் தீர்­மா­னிப்போம்
கேள்வி:- ஆனால் 2020 இல் தனித்து ஆட்சி அமைப்போம் என ஜனா­தி­பதி கூறு­கின்­றமை சரி­யா­னதா?
பதில்:- அதனை அந்த நேரம் பார்த்­துக்­கொள்வோம்
கேள்வி:- அப்­ப­டி­யாயின் அர­சாங்கம் எவ்­வாறு அமையும்?
பதில்:- பிரிந்து நின்று தாக்­குதல் நடத்­துவோம், ஒன்­றாக வெற்­றியை கொண்­டா­டுவோம். எவ்­வா­றெ­னினும் அடுத்த நான்கு வரு­டங்­க­ளுக்கு எமது அர­சாங்­கத்தை அசைக்க முடி­யாது. நாங்கள் ஒன்­றா­கவே பய­ணிப்போம்.
கேள்வி:- அர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்­தலை பிற்­போட முற்­ப­டு­வ­தாக கூட்டு எதி­ரணி கூறி­யுள்­ளதே?
பதில்:- நாங்கள் அதைப்­பற்றி இன்னும் சிந்­திக்­கவும் இல்லை தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடை­பெறும். அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு இன்னும் காலம் இருக்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தைப் பொறுத்­த­வ­ரையில் எங்­க­ளுக்கு ஐந்து வருட காலத்திற்கே மக்களின் ஆணை கிடைத்தது.
எவ்வாறெனினும் எங்களினால் ஐக்கிய தேசியக்கட்சி வழங்கிய பங்களிப்பையும் ஆதரவையும் ஒருபோதும் மறக்க முடியாது. சுதந்திரக்கட்சியினர் ஐ.தே.க. வை . விமர்ச்சிக்கின்றனர். அவர்கள் இன்னும் அரசியல் முதிர்ச்சி பெறாமல் இருக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்