தன்மானம் உள்ள தமிழன் கிழக்கை வடக்கோடு இணைக்க ஒருபோதுமே சம்மதிக்கமாட்டான்.


கிழக்கு மாகாண மூவின மக்களும் கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைப்போன்று தனியாக சகல அதிகாரங்களும் பெற்று கிழக்கு மக்காளால் ஆட்சி செய்யப்பட்டு அபிவிருத்திகள் கண்டும் வருகிறது எனவே எமது கிழக்கு மாகாணத்தை நாம் சொந்தம் கொண்டாட நினைப்பது எவ்வாறு துரோகமாகும் ?

வடக்கிலே உள்ள மேல்சாதி இனம் என தம்மைத் தாமே பீத்திக் கொள்பவர்கள் கிழக்கு மக்களான எம்மை ஆழ நினைப்பது எந்தவகையில் நியாயம்? வடக்கு கிழக்கை இணைக்க துடிப்பவர்களுக்கு இது துரோகமாகப் படவில்லையா? இல்லை எங்களை தனியாக சுதந்திரமாக விடுங்கள் என்று நாங்கள் கூறுவது பிரதேசவாதமா? அல்லது துரோகமா?

கிழக்கில் உள்ள தன்மானம் உள்ள தமிழன் கிழக்கை வடக்கோடு இணைக்க ஒருபோதுமே சம்மதிக்கமாட்டான்.

இங்கே சிலர் மாகாணங்களை இணைப்பதற்குரிய சட்டம், பற்றி பேசுகிறார்கள், இந்த சட்டங்களை  அமுல்செய்தா 1987 இல் தற்காலிகமாக இணைத்தார்கள்?

இன்னும் சிலர் கேட்கிறார்கள் ஹக்கிமால் முடியுமா? இல்லை  மக்கள் வாக்களித்த கட்சியின் தலைவர், அவரால் பேச்சுவார்த்தை மேசையில் மக்கள் பிரதிநியாக அமர முடியுமா? அவரால் முடியும். நிச்சயமாக மக்களால் முடியாது. எனவே ஹக்கிமை நம்பி ஒருதடவை (2002 இல் அனுப்பி) அடிமை சாசனத்தில் கையொப்பமிட்ட பயம் இன்னும் எங்களுக்கு இருக்கிறது, எனவே நாளை ஏதாவது நடக்கக்கூடிய சாத்தியம் இருப்பின், ஹக்கிமை  நம்ப முடியாது.

எனவே கிழக்கான் யாராக இருந்தாலும் தனது மாகாணத்தின் சுயகெளரவத்தைப்பற்றி பேசுவது அல்லது  அதற்காக குரல் கொடுப்பது எந்த வகையில் கிழக்குவாதம் என்று விடயம், தெரிந்வர்கள் கூறுமாறு கேட்டுக்கொள்ளுவதோடு இது தொடர்பில் கிழக்கு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

YB முஸ்தபா (பொறியிலாளர்)
அக்கரைப்பற்று

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்