எந்தவொரு அரசியல் கட்சி சர்பாகவும்செயற்படமாட்டேன்-அமைச்சர் நிமால்


இலங்கை போக்குவரத்து சபையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் ஒரு அசாதாரண அமைச்சராக மாறியதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்து ள்ளார்.

போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் எவரையும் தான் இணைத்து கொள்ளாததே இதற்கு காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நாரஹென்பிட்டி சாலிகா மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் செய்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையை எப்போதும் அதற்கான வளமாக பயன்படுத்த போவதில்லை.

எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாக செயற்பட போவதில்லை. எந்த அரசியல் கட்சிக்கு இ வச மாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை வழங்கவில்லை.

சபையின் முன்னேற்றத்திற்காக திரைக்கு பின்னால் இருந்து செயற்படுவேன் என நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்