கும்பிளேயின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்கும்பிளேயின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 16 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

34-வது டெஸ்டில் விளையாடும் அஸ்வின் ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 18-வது முறையாகும். இன்னும் 12 விக்கெட்டுகள் எடுத்தால் அவர் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் தொடர்ச்சியாக 4 டெஸ்டுகளில் ஒரு இன்னிங்சில் ஐந்தோ அல்லது அதற்கு மேலோ விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த சாதனையை செய்த 3-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார். ஏற்கனவே பி.சந்திரசேகர், அனில் கும்பிளே ஆகியோர் இச்சாதனையை செய்திருக்கிறார்கள். அதை அஸ்வின் சமன் செய்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்