தவம் ஐயாதான் விறால் இல்லா குளத்துக்கு கோரட்டை மீன் அதிகாரி பழமொழிக்கு சொந்தக்காரர்


கடந்த சில நாட்களாக  இனையதளங்கள் மற்றும் முகநூல் போன்றவற்றில் மிகவும் பரபரப்பாக வெளி வந்த செய்தி தான் அன்மையில் மாவடிப்பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி  ஹக்கீமின் தம்பி தவம் ஐயா நடத்திய பத்திரிகையாளர் மகாநாடு பற்றிய செய்தி

தவம் ஐயா விறால் இல்லா குளத்துக்கு கோரட்டை மீன் அதிகாரி என்பது தன்னை நினைத்து கொண்டு வீர வசனம் பேசுகிறார் அவைகள் யாவும் தன்னை தானே திருப்திப்படுத்தி கொண்டு சிரித்து கொள்ள அவர் அடிக்கடி சிறு சிறு அறிக்கை விடுவது வழமையாகி விட்டது அதனால் தவம் ஐயாவின் அறிக்கையை நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை

தவம் ஐயாவின் அறிக்கையை சிலர் பெரிதாக நினைத்து அவரோடு சண்டை பிடிக்கின்றனர் அதில் அப்படி பலர் விசனம் தெரிவிக்கும் போது தவம் ஐயாவுக்கு கணவிலும் சிரிப்பு வரும் அதனால் மீண்டும் மீண்டும் ஹக்கீமின் ஆலோசனைப்படி அறிக்கை விட்டுக் கொண்டே இருப்பார் அவரின் கருத்துக்களை நாம் பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை

தவம் ஐயாவை பற்றி பலர் எழுதியுள்ளனர் அதனால் அவரின் அரசியல் வரலாற்றை நான் எழுத விரும்பவில்லை அவர் தூடிப்பானவர் படித்தவர் சமுதாய சிந்தனை கொண்டவர்  மக்களுக்கு சேவை செய்பவர் என்று தான் கடந்த மாகாண தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் அதிக வாங்கு அளித்து கௌரவாடுத்தினாகள் ஆனால் இப்போது அவர் முஸ்லிம் சமுதாயதை ஏமாற்றி  அரசியல் செய்பவரின் ஊது குழலாக இருப்பார் என்று மக்கள் நினைக்க வில்லை இன்று தவம் ஐயா ஆப்பு அடிப்பவரின் அரசியலை நிலை நிறுத்த போராடுகிறாரே தவிர எமது சமுதாயத்தை ஏமாற்றி அழிக்க நினைக்கும்  ஆசாமிக்கு எதிராக போராட வில்லை என்பது தவம் ஐயாவுக்கு வாக்களித்த மக்களுக்கு புரிந்து விட்டது அதில் நானும் ஒருவன் அதனால் தவம் ஐயாவுவின் அரசியல் இன்னும் நான்கு மாதத்துடன் முடிந்து விடும் என்பதில் சந்தேகமில்லை மக்கள் செய்யா விட்டாலும் தலையை தடாவி கண்களை பிடுங்கும் அவரது அண்னன் ஐயா றவூப்பு ஹக்கீம் செய்து விடுவார் அதை தப்பி தவம் ஐயா புறிந்து கொள்ள கொஞ்ச காலமெடுக்கும் அப்போது அதாவுல்லாஹ் .தேசிய தலைவர் றிசாத் ஆகியோரின் நற்பன்பை உணர்ந்து கொள்வார்

பொதுமக்களின் வாசிப்பு திறனை உக்குவிக்க  அமைச்சர் றிஷாட் உதவிய போது அதை அரசியல்  அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பது என்பது மனிதாபிமான செயல் அல்ல எமது முஸ்லிம் சமுதாயத்துக்கு ஏதாவது நல்ல காரியம் நடக்கும் போது அரசியல் வேறுபாடுயின்றி அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அப்படியானவர்களை தான் நமது சமுதாயம் இன்று எதிர்பார்க்கிறது

16 வருடமாக கண்டி மண்னனை தலைமை தாங்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அம்பாறை மக்கள் ஆதரித்து கண்ட பலன் ஏதுவுமில்லை அம்பாறை மக்களை ஏமாற்றி சொத்து தேடி சொகுசாக கண்டி ராசாவின் கூட்டம் வாழ்ந்து வருகிறார்கள் அந்த கூட்டத்தை விரட்ட 16 வருடமாக மக்கள் தேடிய செயல் வீரன் சமுதாய சிந்தனைவாதி அமைச்சர் றிசாத் அவர்களால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த மக்கள் கடந்த தேர்தலில் அழைத்து வந்து தேசிய தலைவர் றிஷாட் என்பதை ஏற்றுக் கொண்டு இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் 85% வீத ஆதரவை பெற்று இருக்கின்றார் அது போல் அந்த மக்களின் பல வருடமாக இருந்த பிரச்சினைகளை தேசிய தலைவர் தீர்த்து வைத்துள்ளார் இதனால் அரசியல் வாழ்வை முடிக்க இருக்கும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் அறிக்கையை மக்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள் அவர்கள் அறிக்கையை தேசிய தலைவர் காதில் எடுக்கவும்மாட்டார் போலி பிரச்சாரம் புஸ்வானம் ஆகி விடும் என்பதை வங்குரோத்து அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்

எனவே இன்று நாட்டு மக்கள் ஏமாற்றுவாதிகளை புறந்தள்ளி முஸ்லிம்களின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் மட்டுமே என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் அது போல் அரசாங்கம் மற்றும்  உலக முஸ்லிம் அமைப்பு என்பனவற்றுக்கு கூட தெரியும் இலங்கையில் அதிக முஸ்லிம்களின் ஆதரவு அமைச்சர் றிசாத் அவர்களுக்கு உள்ளது என்று

எனவே இந்த பொய் பிரச்சாரம் மகாநாடுகளை நடத்தி மூக்கை உடைக்காமல் மக்கள் விரும்பும் தேசிய தாலைவர் றிசாத் அவர்களின் கரத்தை பலப்படுத்த சகல அரசியல்வாதிகளும் முன் வர வேண்டும்

ஜெமீல் அகமட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்