(வீடியோ).,ஐந்தாவது தடவையாகவும் வெற்றிகரமாக KPL T20 யினை நடாத்தி முடித்த வாழைச்சேனை நியூஸ்டார் விளையாட்டு கழகம்.!!
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ-KPL T20 இறுதி நாள் நிகழ்வு:- கல்குடா பிரதேசத்தில் கிறிக்கட விளையாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தேசிய, சர்வதேச மட்டங்களை ஒத்த வகையிலே பெரும் தொகை பணம் செலவிடப்பட்டுஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கல்குடா பிரீமியர் லீக் (KPL T20) கிறிக்கட் சுற்று போட்டியினை இவ்வருடமும் ஐந்தாவது தடவையாக வாழைச்சேனை நியூஸ்டார் விலையாட்டு கழகம் வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.


17.08.2016 அன்று ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இறுதி போட்டியில் றேன்சர்ஸ் விளையாட்டு கழகமும் அல்-இஹ்சான் விளையாட்டு கழகமும் பலப்பரீட்ச்சை நடாத்தியதில் அல்-இஹ்சான் விளையாட்டு கழகம் ஐந்தாவது KPL T20 கிண்ணத்தினை சுவீகரித்து கொண்டது.

குறித்த இறுதி நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைமுன்னாள் உறுப்பினர் அஸ்மி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜனாப் தெளபீக் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்