முஸ்லிம்களை அடமானம் வைத்து முஸ்லிம்களை அநாதையாக்க முனைவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் : NDPHR ஹுதா உமர்
தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் சகல முஸ்லிம்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி விடுத்துள்ள ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரித்திருப்பதானது
பல கொடுமையான சம்பவங்களை கடந்தும் பல இன்னல்களை கடந்தும் இத்தாய் திருநாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லிங்கள் சற்று நிம்மதி பெருமூச்சி விட ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் மீண்டும் பல கசப்பான அனுபவங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை உருவாக்க சில தீய சக்திகள் முனைவதை மக்கள் புரிந்து கொண்டு புத்தியுடன் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும் சில அரசியல் தலைவர்கள் தமது சுக போகங்களுக்காகவும், பல சலுகைகளை பெரும் நோக்கிலும் முஸ்லிம்களை அடமானம் வைத்து முஸ்லிம்களை அநாதையாக்க முனைவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் பல தியாகங்களை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டவர்கள் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு இன்நல்லாட்சியில் முஸ்லிங்களின் தீராத பல பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வரவேண்டும் என்றும்,முஸ்லிம் தலைமைகள் இது விடயத்தில் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கிறேன் என  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அல்-மீஸான் அறக்கட்டளை தவிசாளருமான அல்-ஹாஜ் ஹுதா உமர் விடுத்துள்ள ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்