கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை - கல்வி அமைச்சர்


எதிர்வரும் 13 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

வழங்கப்படும் இந்த விடுமுறைக்கான பாடசாலை நாள் பிரிதொரு தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணியை தொடர்பு கொண்ட கோவிந்தன் கருணாகரம் இந்த கோரிக்கையினை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த கல்வி அமைச்சு எதிர்வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அறிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்