23ம் திகதிக்குப் பின்னர் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு!


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவு ஜனவரி 23ம் திகதிக்கு பின்னர் எடுக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்