எதிர்வரும் 24ம் திகதிவரை விமல் வீரவன்ச கம்பிக்கூண்டுக்குள் !


பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.


கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்த வேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இன்றையதினம் அவர் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற அவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்