வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக்கொலை - மனுதாரரிடம் வாக்குமூலம்


2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவிற்கு அமைய இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது.

மனுவை தாக்கல் செய்த ஊடகவியலாளர் ஒருவரிடமே இன்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

27 கைதிகளின் கொலை தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைச்சாலை கைதிகளுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்