2வருட பூர்த்தியை கொண்டாடிய நல்லாட்சிக்கு சூழ்ச்சிக்காரர்களை கூண்டில் அடைக்க முடியவில்லை!


அரசாங்கமானது அன்று கூறியவற்றை நிறைவேற்றி இருந்தால் ஹம்பாந்தோட்டைக்கு சென்று அடிவாங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என அசாத் சாலி கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விமல் வீரவன்சவை நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க செல்வது குறித்து விசேட செய்தி ஒன்றில் பார்த்தேன். அங்கு 500ற்கும் அதிகமானவர்களை அழைத்து வந்திருந்தார்.

முன்னாள் அமைச்சர்களாக உள்ளபோது கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள், நாமல் ராஜபக்ஸ உட்பட பலர் அங்கு வருகை தந்திருந்தனர்.

மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ,கொலை புரிந்தவர்கள், வௌ்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கியவர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

ஜனவரி 8 ஆம் திகதி இரண்டு வருடப் பூர்த்தியைக் கொண்டாடியுள்ள அரசாங்கத்திற்கு, இவர்களை சிறையில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அன்று கூறியவற்றை அரசாங்கம் நிறைவேற்றி இருப்பின், ஹம்பாந்தோட்டைக்கு சென்று அடிவாங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்