Wednesday, January 11, 2017

கந்தகார் குண்டுவெடிப்பு ; 5 ஐக்கிய அரபு இரச்சிய இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலி

Published by விடுதலை நியூஸ் on Wednesday, January 11, 2017  | No comments


ஆப்கானிஸ்தான், கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 ஐக்கிய அரபு இரச்சியத்தின் இராஜதந்திரிகள் உட்பட  11 பேர் பலியாகியுள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காயமடைந்துள்ளதாகவும்  இராஜதந்திரிகள் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் ஐக்கிய அரபு இரச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இக் குண்டுவெடிப்பு நேற்று ஆப்கானிஸ்தான், கந்தகார் நகரில் ஆளுநரின் வீட்டிற்கருகில் இடம்பெற்றுள்ளது.

 ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்ட குழுவினர் ஆளுநரின் வீட்டிற்கு சென்றபோது இக் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது


இதனை நண்பர்களுடன் பகிரவும்.

முக்கிய குறிப்பு: www.viduthalainews.com இணையதளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு viduthalainews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை viduthalainews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- இது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் விடுதலை குரல்.
நிர்வாகம்
விடுதலை நியூஸ்



0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

back to top