வீரவன்சவுக்கு பின்னால் சிறை செல்லவிருக்கும் கூ.எ.கட்சியின் 7 உறுப்பினர்கள்.!


கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  கூட்டு எதிரணியினர் குறிப்பிட்டுள்ளனர்.

சற்றுமுன் நெலும் மாவத்தை மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் காரியாளயத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது.

அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி

அரசாங்கம் ஹம்பாந்தோட்டையில் மக்கள் எதிர்ப்பையும் மீறி நாட்டு நிலங்களை சீனாவுக்கு தாரைவார்க்கவுள்ளது.அதற்க்கு எதிராக நாம் குரல்கொடுக்கும் போது எம்மை இலக்கு வைத்து எப் சீ ஐ டி ஏவி வீடுகிறார்கள். இன்ய நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் மோசடியான மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் எதுவித விசாரனைகளும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் 27 ம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திரட்டும் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை 27ம் திகதி நுகேகொடையில் நடாத்தவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைந்து பின்னர்  தேர்தலை  நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  கூட்டு எதிரணியினர் குறிப்பிட்டுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்