Wednesday, January 11, 2017

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் சு.கட்சியை பலப்படுத்த மஹிந்தவுக்கு அழைப்பு

Published by விடுதலை நியூஸ் on Wednesday, January 11, 2017  | No comments


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவேயாகும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
கட்சியின் மகளிர், இளைஞர் சங்கங்கங்கள் உள்ளிட்டனவும் தொழிற்சங்கங்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றே கோருகின்றன.

எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினரது கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

இதேவிதமாக பெரும்பான்மையினரின் கோரிக்கைக்கு அமைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிடுமாறு அவரிடம் நாம் அடிக்கடி கேட்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்திற்கு இன்னமும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது.

இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டதில் விருப்பமில்லாத தரப்பினரும் இரண்டு கட்சிகளிலும் இருக்கின்றார்கள்.

எனினும், இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டதனால் பல்வேறு வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன. கட்சியை பலப்படுத்த உதவுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட தரப்பினரிடம் நாம் கோருகின்றோம் என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.

முக்கிய குறிப்பு: www.viduthalainews.com இணையதளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு viduthalainews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை viduthalainews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
- இது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் விடுதலை குரல்.

நிர்வாகம்

விடுதலை நியூஸ்





0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2016 VIDUTHALAI NEWS All Rights Reserved.
back to top