போலி நாணயத்தாள்களை அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு!!


மாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஐந்தாயிரம் போலி நாணயத் தாளுடன் கடை ஒன்றுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற போது, கடை உரிமையாளர் குறித்த நபர்களிடம் இருக்கும் பணம் போலியானது என அறிந்து பொலிஸாருக்கு இரகசியமாக அறிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய அனைத்து உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்