தொகுதிவாரி தேர்தல் முறைக்கு ஹக்கீம் ரிஷாத் இணைந்து எதிர்ப்பு!


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதற்கு,பிரதான இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள  போதும் புதிய தேர்தல் முறையை 60 % - 40 % கலப்பு முறையில் இடம்பெறுவதாக இருந்தால் தான் அதற்கு சம்மதிப்பதாக  சிறு மற்றும் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் வலியிருத்தியுள்ளதாக இலங்கை அரசியல் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றபோது தொகுதி முறையிலேயே  உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் பிரதான கட்சிகள் கோரிக்கை முன்வைத்த  போதும் மக்கள் விடுதலை முன்னணி ,ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் தொகுதி வாரி  தேர்தல் முறை யோசனை முன்வைக்கப்பட்ட போது அதில் 80 %  தொகுதிவாரியாகவும் 20 % விகிதாசார ரீதியில் உறுப்பினர்களை தேர்வு செய்யும் யோசனைக்கு தாங்கள் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் அமைச்சர்கள் ரிஷாத் மற்றும் ஹக்கீம் ஆகியோர் அங்கு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி எல்லை நிர்ணயத்தின் ஊடாக சிறுபான்மைக் கட்சிகளுக்கு அசாதாரணம்
இழைக்கப்பட்டுள்ளதாகவும் இது சிறுபான்மையினத்தினருக்கு அசாதாரணத்தை இழைக்கும் செயலென்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய முறைமையில் குளறுபடிகள் காணப்படுவதாகவும் தற்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே தேர்தலை நடத்தினால் உசித்தமானது என்று ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்தவேண்டாம் என்றும் புதிய முறையில் தேர்தலை நடத்துமாறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஸ் குணவர்தனவும் சுதந்திரக் கட்சியின் சார்பில் பங்கேற்றிருந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அக்கூட்டத்தில் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்றும், எனினும், இரண்டு பிரதானக் கட்சிகளும் புதிய முறைமையின் கீழ் தேர்தலை மேற்சொன்ன 60 க்கு 40 என்ற முறையில் நடத்துவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், ஏனையக் கட்சிகளும் அத்தீர்மானத்துக்கு இணங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

அதேவேளை எல்லைநிர்ணய குழுவின் அறிக்கையை எதிர்வரும் 17ம்  திகதியன்று அமைச்சர் பைஸர் கையேற்கவுள்ளமை குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்