பிலிப்பைன்ஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்!


பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

சுமார் 617 கிலோ மீற்றர் தொலைவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்கிழக்கு பகுதியில் ஜோலோ என்ற இடத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸில் பல்வேறு பகுதிகள் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சுனாமி பேரலை ஏற்படும் அபாய நிலை குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்