முஸ்லிம் மாணவியருக்கும் கட்டாய நீச்சல் பயிற்சி; நீதிமன்றம் தீர்ப்பு!


முஸ்லிம் பெண் குழந்தைகள் சமய ரீதியிலான காரணங்களுக்காக பொது (கலப்பு) நீச்சல் தடாகங்களில் பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது ஐரோப்பிய நீதிமன்றம்.

இதனடிப்படையில் சுவிட்சர்லாந்து பாடசாலைகளின் கல்வித் திட்டத்திற்கமைய முஸ்லிம் பெண் குழந்தைகளும் பொதுவான நீச்சல் பயிற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் இதற்கு விதிவிலக்கு எதுவும் அவசியமில்லையெனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கட்டாய நீச்சல் பயிற்சிக்குத் தமது பருவ வயதையடைந்த பெண்குழந்தைகளை அனுப்ப முடியாது என துருக்கி பூர்வீகத்தைக் கொண்ட பெற்றோர மறுப்புத் தெரிவித்ததையடுத்து கடந்தசில வருடங்களாக அங்கு நிலவி வந்த சர்ச்சை தற்போது ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றில் தீர்க்கப்பட்டுள்ளது. சமய காரணங்களுக்காக பருவ வயதையடைந்த முஸ்லிம் மாணவியர் சுவிஸில் வழக்கத்தில் இருக்கும் கட்டாய நீச்சல் பயிற்சியில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்த நிலையில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சுவிஸின் கல்வி மற்றும் சமூக ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்