Wednesday, January 11, 2017

"வெற்றிகளைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுகின்ற பலர் அந்த வெற்றிக்கான உழைப்பில் பங்காளிகளாவதற்கு முன்வருவதில்லை"

Published by விடுதலை நியூஸ் on Wednesday, January 11, 2017  | No comments


(NFGG ஊடகப்பிரிவு)

"வெற்றிகளும், சாதனைகளும் சந்தோசத்தைத் தருகின்றன. ஆனால் அதனை அடைவதற்கு அவசியமான பங்களிப்புகள் சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் வழங்கப்பட வேண்டும். ஆனால், வெற்றிகளைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுகின்ற பலர் அந்த வெற்றிக்குப் பின்னணியில் நின்று உதவுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவதிலும் ஆர்வம் காட்டுவதாக இல்லை. இது மிகவும் துரதிஸ்டமானது.' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

NFGGயின் மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு கடந்த 9.01.2917 அன்று ஓட்டமாவடி பாலிகா தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

AM.உவைஸ் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
'தற்போது உயர்தரப் பரீட்சைகளின் முடிவு வெளியாகியிருக்கின்றன. பல பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்கள் நமது மாவட்டத்தில் முன்னணி நிலைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தேசிய மட்டத்தில் பாராட்டுக்குரிய பெறுபேறுகளையும் பெற்றிருக்கிறார்கள். இவர்களைப் பாராட்டுவதிலும் வாழ்த்துத் தெரிவிப்பதிலும் பலரும் போட்டி போடுவதனை காண முடிகிறது.

சாதனையாளர்களைப் பாராட்ட வேண்டும்; வாழ்த்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்தப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் காட்டப்படும் ஆர்வத்தை பார்கும் போது ஒரு கேள்வி எழுகின்றது.

அதாவது, இப்படியான சாதனைக்குரிய வெற்றிகளை பாராட்டுவதில் போட்டி போடுகின்றவர்களில் எத்தனை பேர் இந்த சாதனையாளர்களின் வெற்றிக்குப் பின்னால் நின்று உழைப்பதற்கும் உதவி செய்வதற்கும் ஆர்வம் காட்டினார்கள்? எதிர் காலத்தில் இது போன்ற சாதனையாளர்களை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்வதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்.?

இந்த உயர்தரப் பெறுபேறுகளில் சாதனை படைத்த மாணவர்களின் வீடுகளுக்கு நான் சென்றிருந்த போது அவர்களின் குடும்பங்களின் வறுமையினையும் எவ்வாறான கஸ்ட நிலையில் இருந்து இந்த மாணவர்கள் இவ்வாறான சாதனைகளை புரிந்திருக்கின்றார்கள் என்பதனையும் உணர முடிந்தது.
இதற்காக இவர்களின் பெற்றோர்கள் செய்த தியாகங்கள் எத்தனை; இந்த மாணவ மாணவிகள் சந்தித்த நடை முறைப்பிரச்சினைகள் எத்தனை என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த இடத்தில்தான் நாம் ஒரு விடயத்தை தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. தமது கஸ்ட நிலைகளையும் தாண்டி இது போன்ற ஒரு சில மாணவர்களே சாதனைகளைப் புரிகின்றார்கள். ஆனால் இது போன்ற சாதனைகளைப் புரியக்கூடிய அதிகமான மாணவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் சாதனைக்குப் பிந்திய பாராட்டுக்கள் அல்ல. அந்த சாதனைகளுக்கு முந்திய ஊக்குவிப்புக்களும் வழிகாட்டல்களுமே அவர்களுக்குத் தேவைப்படுகின்றன.
நம்மில் எத்தனை பேர் இதனை செய்வதற்க தயாராக இருக்கிறோம்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நாம் எமது நடைமுறை அனுபவத்தில் பார்க்கும் போது, இவ்வாறான சாதனைகளை உருவாக்கக்கூடிய பங்களிப்புக்களை செய்வதற்கு பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது புரிகிறது. இது மிகவும் துரதிஸ்டமானது

வெற்றிகளும், சாதனைகளும் சந்தோசத்தைத் தருகின்றன. அனால் அதனை அடைவதற்கு தொடர்ச்சியான உழைப்பும் பல்வேறு வகையான தியாகங்களும் வழிகாட்டல்களும் தேவைப்படுகின்றன. அது சமூகத்தின் சகல மட்டங்களிலும் வழங்கப்பட வேண்டும்.

எனவே, சாதனையாளர்களுக்கான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மாத்திரம் எமது சமூகக் கடமை முடிந்து விட்டதாக யாரும் நினைத்து விடக்கூடாது. மாறாக அது போன்ற பல வெற்றிகளையும் சாதனைகளையும் உருவாக்க்ககூடிய உழைப்பிலும் தியாகத்திலும் நாமும் பங்காளிகளாக மாற வேண்டும். அப்போதுதான் வெற்றியைக் கொண்டாடுவதற்கான தார்மீக உரிமை நமக்கும் கிடைக்கும்."


இதனை நண்பர்களுடன் பகிரவும்.

முக்கிய குறிப்பு: www.viduthalainews.com இணையதளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு viduthalainews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை viduthalainews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- இது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் விடுதலை குரல்.
நிர்வாகம்
விடுதலை நியூஸ்



0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

back to top