விமல் வீரவங்ச சற்று முன் கைது!


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச,பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமல் வீரவங்சவை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,விமல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்