விமல் கைது செய்யப்படுவதற்கு முன்னரே தெரியவந்தது எவ்வாறு?


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கு முன்னைய தினமே கைது தொடர்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்படுவதற்கு முந்தைய தினம் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதனூடாக அரச நிறுவனங்களின் உள்ளக தகவல்களின் இரகசியத் தன்மை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

காலி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்