ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் எம்.பி இல்லை!?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலிக்கு தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கப்­பட வேண்டும் என கட்­சியின் அர­சியல் உயர்­பீட கூட்­டத்தில் தீர்­மானம் எதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்­கீமே இணக்கம் தெரி­வித்­துள்ளார். தேசியப் பட்­டியல் உறுப்­பினர் பதவி வழங்­கப்­ப­டு­வது சில மாதங்­களால் தாம­த­மாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்பீட உறுப்பினர் ஒ­ருவர் தெரி­வித்தார்.

செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி திங்­கட்­கி­ழமை 9 ஆம் திகதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவிப் பிர­மாணம் செய்து கொள்வார் என செய்­திகள் பர­வி­யி­ருந்­தமை தொடர்பில் வின­விய போதே அவர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் சில வாரங்­க­ளுக்கு முன்பு கூடிய கட்­சியின் உயர்­பீடம் ஹசன் அலிக்கு தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கப்­பட வேண்­டு­மென தீர்­மானம் நிறை­வேற்­றி­ய­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தமை தவ­றாகும். அர­சியல் உயர்­பீடம் அவ்­வா­றா­ன­தொரு தீர்­மானத்தை மேற்­கொள்­ள­வில்லை.

ஹசன் அலிக்கு தேசியப் பட்­டியல் உறுப்­பினர் பதவி வழங்­கப்­பட வேண்­டு­மென்றால் தற்­போது உறுப்­பினர் பத­வியை வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி எம்.எச்.எம்.சல்மான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும்.

அவர் இது­வரை தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வில்லை. இரா­ஜி­னாமா செய்யும் திக­தியை அறி­விக்­க­வு­மில்லை. கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரும் போது அவர் தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வார் என்றார்.

(நன்றி விடிவெள்ளி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்