Wednesday, January 11, 2017

மஹிந்த, பஷில், கோத்தா ஆகி­யோரின் பிரஜாவுரி­மையை பறிக்க திட்டம்!

Published by விடுதலை நியூஸ் on Wednesday, January 11, 2017  | No comments


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  ஆகி­யோரின் அர­சியல் பய­ணத்தை தடுப்­ப­தனை இலக்­காகக் கொண்டு அர­சாங்கம் குற்­றங்­க­ளுக்­கான விசேட நீதி ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கி­றது எனவே அவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு  கூட்டு எதிர்க்­கட்சி வன்­மை­யான எதிர்ப்பைத் தெரி­விப்­ப­தாக பாராளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்தன தெரி­வித்தார்.

அந்த ஆணைக்­குழு  மூலம் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்­ட­வர்­களின் பிர­ஜா­வு­ரி­மையை இல்­லா­ம­லாக்­கவும் எதிர்ப்­பார்க்­கின்­றனர் எனவும்  அவர் குறிப்­பிட்டார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீ வஜிர ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.



அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அம்­பாந்­தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணியை வழங்க முடி­யா­விட்டால்  பொலன்­னறு­வையில் அதற்­கான காணி ­யை வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். அக்­க­ருத்து ஆரோக்­கி­ய­மான ஒன்­றல்ல.

எனவே, ஜனா­தி­ப­தியை, பிர­தமர் அவ்­வா­றான நெருக்­க­டி­யான நிலைக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளார். ஜனா­தி­பதி எதை­யா­வது மேற்­கொள்­வ­தாயின் பிர­த­மரின் தயவை வேண்­டியே நிற்­கின்றார். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அவ்­வாறு முன்னாள் பிர­த­மரின் தயவை வேண்டி நிற்­க­வில்லை. மேலும் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நட­வ­டிக்­கையில் தலை­யிட முடி­யாத நிலையும் உள்­ளது.

அத்­துடன் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­யினால் நாடு பொரு­ளா­தார ரீதியில் மிகவும் நெருக்­க­டிக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் காலத்தில் நாட்டின் பொரு­ளா­தாரம் உயர் நிலையில் இருந்­தது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் பொரு­ளா­தாரம் மேலும் இக்­கட்­டான நிலை க்குத் தள்­ளப்­படும் அபாயம் உள்­ளது.

எனினும் அது தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­தாமல் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக குரல் கொடுப்­ப­வர்­க­ளுக்கு எதி­ரா­கவே நட­வ­டிக்கை எடுக்­கி­றது. அத்­துடன் பிர­தமர் வெளி­நாடு செல்லும் முன்னர் எவரைக் கைது செய்­ய­வேண்டும்? எவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பது தொடர்­பி­லான ஏற்பாடுகளை மேற்கொண்டு விட்டே செல்கின்றார்.

முன்னாள் அமைச்சர்களின் வாகனம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களை கைது செய்கின்றனர். இருந்தபோதிலும் பாரியளவான நிதி மோசடியில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது  என்றார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.

முக்கிய குறிப்பு: www.viduthalainews.com இணையதளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு viduthalainews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை viduthalainews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- இது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் விடுதலை குரல்.
நிர்வாகம்
விடுதலை நியூஸ்



0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

back to top