ரவிராஜ் கொலை – தீர்ப்புக்கு எதிராக TNA மேன்முறையீடு!


படுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று மை காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜினுடைய மனைவியின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. எம். சுமந்திரனால் குறித்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணைத் திகதி இதுவரை குறிக்கப்படவில்லை. வழங்கிய தீர்ப்பிலுள்ள சட்டவிரோதமான தீர்வுகள் தொடர்பாக இந்த மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும்போது மீள்விசாரணையொன்றை ஏற்படுத்துமாறு இதில் கோரியுள்ளோம் என எம்.ஏ. எம். சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்