Monday, January 23, 2017

thumbnail

‘2020க்கு முன்னர் நல்லாட்சியைக் கவிழ்ப்போம்’ – அநுரகுமார“2020ஆம் ஆண்டுக்கு முன்னர், சரியான வாய்ப்பொன்று கிடைக்குமாயின், தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குத் தயாராக உள்ளோம் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, நேற்றுத் தெரிவித்தார்.

மஹரகமையில், நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஊக்குவிப்புச் சங்கத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதித்துறை ஆகியன தண்டனை வழங்காவிடில், மக்களே தண்டனையை வழங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அலுவலகங்களிலிருந்து மோசடிகள் துடைத்தெரியப்படல் வேண்டும். இது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் செய்யப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், அதற்கு முன்னரும் இதைச் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இந்த ஆட்சி, விரைவில் செல்வாக்கற்றுப் போகவுள்ளது.

இது, மைத்திரிக்கோ ரணிலுக்கோ உள்ள பிரச்சினை கிடையாது. நாட்டின் சமூக முறைமை கீழிறங்கிப் போவதை, இது பிரதிபலிக்கின்றது.

இது, இலங்கை அரசியலின் விதிமுறையாகும். மக்கள், இந்த நிலைமைக்கு முகங்கொடுத்தேயாக வேண்டும்” என்று, அவர் மேலும் குறிப்பிட்டார். ™
Read More»

0 comments:

thumbnail

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு!


தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தன் மீதான விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் உத்தரவு மேலும் இரு வாரங்கள் நீடிக்கப்பட்ட நிலையில் 15 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரனைக்காக அழைக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் நீதி உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை மாவட்ட நீதிவானும் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான எம்.முகைடீன் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இக் கொலை தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா ( பிரதீப் மாஸ்டர் ) முன்னாள் உறுப்பினர்களான ரெங்கசாமி கனகநாயகம் ( கஜன் மாமா ) மற்றும் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய எம். கலீல் ஆகியோர் மீதான விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தனர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான சந்தேக நபருக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாத நிலையில் அம் மனு நிராகரிக்கப்பட்டதுடன் பிணை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையான் நீதிமன்றில் முன்னிலை!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் என்று அழைக்கப்படும் பிள்ளையான் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பிள்ளையான் உட்பட நான்கு சந்தேகநபர்கள் இன்றைய தினம் மட்டகளப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பில் பிள்ளையான் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Read More»

0 comments:

thumbnail

வீரவன்சவுக்கு இரத்த அழுத்தம்! சிறைக்குள் முடக்கம்! வைத்தியர்கள் ஆலோசனை


தேசிய சுதந்திர முன்னணி தலைவர், விமல் வீரவன்ச கடந்த 10ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அன்று மாலை முதலே அவரது நலம் விசாரிக்கும் நோக்கில் அரசியல்வாதிகள், கலைஞர்கள், நிபுணர்கள் பலர் சென்றிருந்தனர்.

விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாள் முதல் சிறைச்சாலைக்குள்ளேயே அவர் இருந்தார். அண்மையில் ஒரு நாள் வைத்திய பரிசோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்.

இதன் போது அவரது இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் விமலுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும் விமல் வீரவன்ச அதனை நிராகரித்துள்ள நிலையில் தனது நோய் நிலைமைக்கு சிகிச்சை மாத்திரம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய தற்போது மருந்து பெற்றுக் கொண்டு சிறைச்சாலை அறையினுள் காலத்தை கடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகயீனம் காரணமாக விமலை நலம் விசாரிக்க வரும் பலருக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் நீண்ட காலங்களின் பின்னர் தனக்கு கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றியுள்ளார். வீரவன்ச தற்போது புத்தகம் ஒன்றை எழுதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More»

0 comments:

thumbnail

எச்.ஐ.வீயினால் பாதிக்கப்பட்டவரை பணி நீக்கம் செய்ய முடியுமா? உச்ச நீதிமன்றில் மனு!


எச்.ஐ.வீ நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவரை பணி நீக்கம் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பி ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர் ஒருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட காரணத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவை பணியாளர் ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் கே.சிறிபவன் மற்றும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் எதிரில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

மனுதாரர் சார்பில் கமனி ஜினதாச என்ற சட்டத்தரணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், நிறுவனத்தின் வைத்திய அதிகாரி அனோமா ஜயசிங்க, போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சமரவீர, சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்த நபர் ஒருவர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளார்.

உரிய முறையில் நேர்முகத் தேர்வு நடத்தி கடந்த ஒக்டோபர் மாதம் 28ம் திகதி நியமனக் கடிதம் குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கு உட்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும், மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற முன்னதாக இவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த நவம்பர் மாதம் 8ம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம், குறித்த நபரை பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து பணி நீக்குவதாக அறிவித்துள்ளது.

மருத்துவ பரிசோதனையில் சித்தியடையாத காரணத்தினால் பணி நீக்குவதாக அறிவித்துள்ளது.

எச்.ஐ.வீ நோய்த் தொற்று தாக்கப்பட்ட ஒருவருக்கு பணி வழங்கக் கூடாது என எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை என்ற அடிப்படையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More»

0 comments:

thumbnail

சூடு பிடிக்கும் லசந்த கொலை: பொன்சேகாவை தொடர்ந்து கோத்தாவிடமும் விசாரணை?


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம், விரைவில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் இந்த தகவலை நேற்றைய தினம் தெரிவித்துள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலேயே கோத்தபாயவிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பில்,கடந்த வெள்ளிக் கிழமை முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதி சரத் பொன்சேகாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, கடந்த வருடம் லசந்த விக்ரமதுங்க கொலைக்கு உரிமை கோரி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More»

0 comments:

thumbnail

உள்ளூராட்சி தேர்தல் குறித்து இறுதி முடிவு!


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையே இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

எல்லை நிர்ணய மேன் முறையீட்டு அறிக்கை, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த அறிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்ப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடத்துவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More»

0 comments:

thumbnail

தலைவர்களை அடக்கி நாட்டை ஆட்சி செய்ய முடியாது – மஹிந்த ஆவேசம்!


தலைவர்களை அடக்கி நாட்டை ஆட்சி செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு தலைவர்களை அடக்கி ஒடுக்கி நாட்டை ஆட்சி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் அரசாங்கத்தை விமர்சனம் செய்வோரை இலக்கு வைத்து அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More»

0 comments:

thumbnail

சாய்ந்தமருது பாஸ் அமைப்பின் புதிய காரியாலய திறப்பு


ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது சமூக சேவைக்கான மக்கள் அமைப்பின் (பாஸ்) புதிய காரியாலய திறப்பு விழா (21) சனிக்கிழமை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்பாக அமைந்துள்ள மேல்மாடியில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.சம்சுதீன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்காரியாலயத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, தொழிலதிபர் எம்.யஹியாகான், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, கே.எம்.தௌபீக், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அன்சார், பாஸ் அமைப்பின் தலைவர் இஸட்.ஏ.சாதிக், தவிசாளர் எம்.இஸ்ஸதீன், செயலாளர் எம்.ஏ.அல்-அமீன், பொருளாளர் எம்.ஏ.அன்வர் சதாத் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Read More»

0 comments:

thumbnail

நாட்டு நலனுக்காக ஒரு கருத்தோடு பயணிக்க ஒற்றுமைப்படவேண்டும் – அமைச்சர் றிஷாத்


M.S.M.ஸாகிர்

நாம் இருக்கின்ற இடங்களிலிருந்து கொண்டு எம் சமுதாய நலனுக்கும், ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து வாழும் ஒற்றுமைக்கும், நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு செயற்படலாம் என்பது தொடர்பாக ஒத்த கருத்தோடு பயணிக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டுமென சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளர் மர்ஹும் எச்.எம்.பாயிஸின் நினைவேந்தல் நிகழ்வும் பாத்திமா இஸ்ரா எழுதிய “ஹொந்தம மித்துர” சிங்கள நூல் வெளியீட்டிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு ஜம்மியத்துஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(20) நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், அலி ஸாஹிர் மௌலானா, அஷு மாரசிங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.
மர்ஹும் பாயிஸின் பிள்ளைகளது கல்வி மேம்பாட்டுக்காக அல் – கபாலா நிறுவனம், அஷ்ஷபாப் நிறுவனம், மர்ஹும் ஆதில் பாக்கிர் மாக்கார் சார்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் கோல் கேட்டர்ஸ் உரிமையாளர் எம்.எம். சப்ரி ஆகியோரால் புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் பேசிய அமைச்சர் கூறியதாவது,
ஊடகவியலாளர்களும், கலைஞர்களும் எமது சமுதாயத்தைப் பொறுத்தவரையில் நிறைய ஆற்றல்கள் இருந்தாலும் அந்த ஆற்றல்களை நூறு வீதம் விரும்பிய முறையில் சரியான முறையில் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இடைஞ்சல்களையும் தடைகளையும் தொடர்ந்தேர்ச்சியாக தந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.

அரச ஊடகங்கள் மாத்திரம் இருந்த ஒரு யுகம் இருந்தது. அந்தக் காலங்களிலே அரசியல் கட்சி அல்லது ஆட்சியில் இருக்கின்றவர்களுக்கு எதிராகப் பேசமுடியாத நிலை இருந்தாலும் சமுதாயம் சார்ந்த விடயங்கள் அல்லது சமுதாயத்திற்கு எதிராக அபாண்டமாகப் பேசப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்து வந்திருக்கின்றது.

இன்று தனியார் ஊடகங்களுடைய ஆதிக்கம் நிலை கொண்டிருப்பதனாலும் மக்கள் அதிகமாக தனியார் ஊடகங்களைப் பார்த்து ரசிப்பதனாலும் அதிலே தங்கியிருப்பதனாலும் அதனால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்களை அண்மைக்காலமாக நாங்கள் பார்த்து வருகின்றோம்.

சகோதரர் பாயிஸ் இளம்வயதிலே எங்களை விட்டுச் சென்று விட்டார். அது எமக்கு கவலையைத் தந்திருக்கின்றது. அவர் விட்டுச் சென்ற இந்தப் பிள்ளைச் செல்வங்களைப் பார்க்கும் போது நாம் எல்லோரும் அந்தப் பிள்ளைகளுக்காகவும் அவருக்காகவும் துஆச் செய்கிறோம். இதேபோல நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் ஊடகத்துக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, பல எதிர் பார்ப்புகளோடு வாழ்ந்து மரணித்த எத்தனையோ ஊடகவியலாளர்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் பல கஷ்டங்களை இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அரசியல்வாதிகள், தனவந்தர்கள் அதேபோல் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து சமுதாய நலன்களுடைய விடயங்களிலே ஒத்த கருத்தோடு, கட்டமைப்போடு செயல்படவேண்டிய தேவைப்பாடு இந்த சமுதாயத்திற்கு வந்திருக்கின்றது.

அந்த வகையிலே நம் நாட்டிலே அதிகமாகப் பேசப்படுகின்ற மொழி சிங்களம். சுதந்திரத்திற்கு முன்னைய காலத்திலிருந்தே இஸ்லாமிய சமூகம் பெரும்பான்மை சிங்கள சமுதாயத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறும் ஒத்த கருத்தோடு இந்த நாடு பிளவுபட்டுவிடக் கூடாது என்று எங்களுடைய முன்னாள் தலைவர்களெல்லாம் ஏனைய தலைவர்களோடு சேர்ந்து போராடியது போல சுதந்திரத்திற்கு பிறகு இருந்து மரணித்த பல தலைவர்களும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, ஒற்றுமைக்காக நாட்டின் நலனுக்காக உழைத்திருக்கிறார்களே ஒழிய, ஒரு போதும் இந்த நாட்டைப் பிளவுபடுத்தி, இந்த நாட்டின் பொருளாதார அழிவுக்கு, இட்டுச் செல்லுகின்ற எந்த ஒரு நடவடிக்கைக்கும் எங்கள் அரசியல், சமூகத் தலைவர்கள் ஒரு போதும் ஈடுபட்ட வரலாறு கிடையாது.

எனவே இன்று ஊடகத்தின் வெற்றிடமும் இந்த தனியார் ஊடகங்களினுடைய தாக்கமும் ஒற்றுமையாக இருந்து வருகின்ற இந்த சமுதாயம் பிரிந்து விடுமோ பிளவு ஏற்பட்டு விடுமோ இதன் மூலம் சிறுபான்மையாக பரந்து வாழுகின்ற நமக்கு எதிர்காலத்திலே ஆபத்து வந்துவிடுமோ என்ற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல பொதுவாக அதிகமானவர்கள் இந்த சிந்தனையோடு இருந்து வருவதை நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே ஏற்கனவே நான் சொன்னதைப் போல ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழவும் புத்தி சாதூர்யமான ஒரு சமூகமாகவும் கல்வியின் உச்சத்தை அடைகின்ற சமூகமாகவும், இறைவன் தந்திருக்கின்ற வளத்தை சமுதாயத்திற்காக தனவந்தர்கள் பயன்படுத்திக் கொள்கின்ற போன்றுதான் சமுதாயத்தில் நல்லதொரு மாற்றத்தை நாம் காணலாம். எனவே அதற்காக வேண்டி உழைக்க வேண்டிய பொறுப்பும் பிரார்த்திக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கின்றது.

சகோதரர் முஜிபுர்ரஹ்மான், அலி சாஹிர் மௌலானா கூறியது போன்று, அந்த ஆட்சி சரியில்லை என்று இந்த ஆட்சியைக் கொண்டு வந்தாலும் ஆட்சியாளர்களுடைய கதிரைகள் அதே கதிரைகளாக அந்தக் கதிரைகளில் உள்ளவர்கள் மாறி இருந்தாலும் கொள்கைளும் கோட்பாடுகளும் செயல்பாடுகளும் பெரிய மாற்றத்தை காணவில்லை ன்-ப-துதான் மனவேதனை அளிக்கக் கூடிய விடயம் என்பதை அவர்-க-ளும் சுட்-டிக்-காட்-டி-னார்-கள்.

எனவே அந்த வகையிலே நாங்கள் அந்த ஆசனங்களிலே அமர முடியாதவர்கள். இவ்வாறுதான் இந்த நாட்டின் வரலாறு அமைந்திருக்கின்றது. என்றாலும் இருக்கின்ற இடங்களிலே நாங்கள் இருந்து கொண்டு எங்களுடைய சமுதாயத்தினது நலனுக்காகவும் ஏனைய சமுதாயத்தினோடு சேர்ந்து வாழுகின்ற ஒற்றுமைக்காகவும் நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு செயற்படலாம் என்பது சம்பந்தமாக ஒத்த கருத்தோடு பயணிக்க நாங்கள் அனைவரும் ஒன்று படவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றேன்.

முஸ்லிம் மீடியா போரம் எடுக்கின்ற இப்படியான நல்ல நடவடிக்கைகளுக்கு நாட்டின் தனவந்தர்கள் வளமுள்ளவர்கள் நிச்சயமாக கைகொடுத்து உதவமுன் வரவேண்டும்
சிங்கள மொழியில் ஆற்றல் உள்ளவர்கள் எங்களைப் பொறுத்தவரையில் நிறைய உலமாக்கள், ஊடகவியலாளர்கள், பேச்சாளர்கள் கிடையாது. அண்மைக்காலச் சம்பவங்களைப் பார்க்கின்ற போது அத்தியாவசியமான மொழியாக சிங்களம் இருக்கின்றது. எனவே அதற்காக ஒரு தூரநோக்கோடு செயல்பட வேண்டிய தேவைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.

“ஹொந்தம மித்துர” என்ற சிறுவர் கதைகள் அடங்கிய இந்நுõலை மாணவி இஸ்ரா சிங்களத்தில் எழுதி இருக்கின்றார். அவருடைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அதற்காக வெளியிடுவதற்கு உதவி செய்த துசல் விதானகேயை அழைத்து கௌரவப்படுத்துவது பாராட்டக் கூடிய விடயம். எனவே அவராக முன்வந்து இந்த மாணவிக்கு உதவி செய்தததையிட்டு நாங்கள் பாராட்டுகின்றோம்- என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அலி ஸாஹிர் மௌலானா, பேராசிரியர் அஷு மாரசிங்க, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் சாதிக் சிஹான் ஆகியோரும் உரையாற்றினர். கலைவாதி கலீல், பாயிஸ் நினைவுக் கவிதையை பாடினார்.Read More»

0 comments:

thumbnail

கல்முனை பாலிஹா ஒழுங்கையின் அவலத்தை கண்டுகொள்வார்களா?


M.Y.அமீர்

கல்முனை பாலிஹா ஒழுங்ககை மஹ்முத் மகளிர் கல்லூரியின் அருகால் செல்லும் பிரதானமான ஒழுங்கை. இவ் ஒழுங்கையால் மாணவர்கள் பாதசாரிகள் வாகனங்கள் என அன்றாடம் நெரிசல் நிறைந்த ஒழுங்கை. ஆரம்பத்தில் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட குறித்த ஒழுங்கை அண்மையில் மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு செப்பனிடப்பட்டது.

இந்த ஒழுங்கை சரியான முகாமைத்துவத்துடன் செப்பனிடப்படாததன் காரணமாக முன்பு மழைகாலங்களில் நீர் தேங்குவதைவிட இப்போது அதிகமாக நீர் தேங்கி நிற்கின்றன. இவ் அவலத்தை கண்டுகொள்ள யாருமற்ற நிலையே இப்போது நிலவுவதாக குறித்த ஒழுங்கையில் வசிப்போரும் பாதசாரிகளும் ஆதங்கப்படுகின்றனர்.

மிகப்பிரபல்யமிக்க மஹ்முத் மகளிர் கல்லூரியின் அருகில் காணப்படும் இவ்வாறான குறைகள் இங்கு கல்விகற்கும் மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் டெங்குபோன்ற நோய்கள் இப்பிரதேசத்தில் பரவ வாய்ப்புகள் ஏற்படலாம் என்று குறித்த ஒழுங்கையில் வசிப்போர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை மாநகரசபையே! சுகாதாரத்துறை சார்ந்தோரே!! அரசியல்வாதிகளே!!! கல்முனை பாலிஹா ஒழுங்ககையின் அவலத்தை போக்க இனியாவது விரைந்து நடவடிக்கை எடுங்கள். வீதிகள் செப்பனிடுகிறோம் என்று கூறிக்கொண்டு மக்களின் வரிப்பணத்தை ஏப்பமிடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடு குறித்த ஒழுங்கையை மீண்டும் செப்பனிட நடவடிக்கை எடு என குறித்த ஒழுங்கையில் வசிப்போரும் பாதசாரிகளும் சம்மந்தப்பட்டோரை வேண்டி நிற்கின்றனர்.
Read More»

0 comments:

thumbnail

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிப்பணிய போவதில்லை - மஹிந்த ராஜபக்ச


எப்படியான பலமிக்க நாடுகள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்தாலும் தான் அரசியலில் இருந்து விலகவோ, ஒதுங்கவோ போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது அரசியலை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதியை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் நாட்டு மக்களுடனேயே அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய தான் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தாலும் எந்த இலாப நோக்கமும் இன்றி தன்னுடன் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் கோரிக்கைகளை எந்த வகையிலும் புறந்தள்ள போவதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பலமிக்க வெளிநாடு ஒன்றின் தூதரகமும், அயல் நாடு ஒன்றின் புலனாய்வுப் பிரிவும், முன்னாள் ஜனாதிபதியை செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More»

0 comments:

thumbnail

கொழும்பிலிருந்து சென்ற பஸ் விபத்து - இருவர் பலி - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!


கொழும்பு - கண்டி பிரதான பாதையில் பஸ்யால பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், 37 பேர் படு காயமடைந்து வத்துபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பெண்ணொருவரும், ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் நிட்டம்புவ திசையில் இருந்து பயணித்த பாரவூர்தியும் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பேருந்து குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விபத்தினால், பாதையில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
Read More»

0 comments:

thumbnail

புத்தர் சிலைகளை உடைத்தவர்களை கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழுக்கள்!


புத்தர் சிலைள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நோக்கில் எட்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில புத்தர் சிலைகள் மற்றும் விஹாரைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய திருகோணமலைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் பெரேராவின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
Read More»

0 comments:

thumbnail

மஹிந்த - மைத்திரி ஒன்றிணைவு..! ஐக்கிய தேசிய கட்சியின் நிலை என்னவாகும்..?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஒன்றிணைந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் நிலை குறித்து மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், குறித்து இருவரும் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை அதோ கதிதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மாகாண முதலமைச்சர்கள் சிலருக்கும் இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை நடாத்தினோம். மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சந்திப்பின் போது வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரு குழுக்களிடையேயும் அரசியல் ரீதியிலான போராட்டம் ஏற்பட்டுள்ளதை கண்டுள்ளோம். அத்துடன், நாம் சிறந்ததொரு ஆரம்பத்தை எடுத்தோம்.

எவ்வாறாயினும், அவர்களது தரப்பில் இருந்து பொறுப்பு மிக்கதான பதிலொன்றை நாம் எதிர்பார்க்கின்றோம் என இசுறு தேவபிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
Read More»

0 comments:

thumbnail

சரத் பொன்சேகாவிடம் நாளை மீண்டும் விசாரணை!


சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், மீண்டும் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தப் படுகொலையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விசாரணைகளின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் நேரடி உத்தரவுகளைப் பெற்று, நீதிக்குப் புறம்பான செயல்களை மேற்கொள்ளும் தனியான குழுவொன்று இராணுவத்தில் இயங்கியது என்பதை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்தினார்.

அதில் அவர், முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்புச் செயலருமே, லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டும். போர் தொடர்பாக எமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எனக்கும் இடையில் குரோதம் இருக்கவில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் நாளை மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக, தெரியவந்துள்ளது.
Read More»

0 comments:

thumbnail

மைத்திரியின் மற்றும் ஒரு அதிரடி நடவடிக்கை..! மாட்டப்போவது யார்..?


மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்கும் பொறுப்பும் இந்த ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆணைக்குழு இன்னும் ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகள் ஆகியோருக்கு குறித்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More»

0 comments:

thumbnail

ரத்தன தேரரின் வெற்றிடத்துக்கு ஐ.தே.கவில் கடும் போட்டி!


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப்போவதாகத் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது இடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலங்கள் சிலருக்கிடையில் பனிப்போரொன்று நடந்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

ரத்தன தேரர் சுயாதீனமாகச் செயற்பட முடிவெடுத்த பின் அவரது இடம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டுமென ஒருசாரார் பிடிவாதமாக இருப்பதாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும், கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read More»

0 comments:

thumbnail

ட்ரம்ப் பதவியேற்புற்கான சமய நிகழ்வில் அல்-குர்ஆன் ஒலி! (video)


அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ளதை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வமத நிகழ்வில் அல்-குர்ஆன் வசனங்கள் ஒலித்துள்ளது.

வொஷிங்டனின் பிரபல இமாமான மொஹமத் மஜீதே இந்நிகழ்வில் பங்கேற்று அல்குர்ஆனை ஓதி இறைவனின் படைப்பு மற்றும் இறையச்சத்தை வலியுறுத்தும் ஆயத்துகளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து எடுத்துரைத்துள்ளார்.

எனினும், குறித்த நிகழ்வில் அவர் பங்கேற்றது குறித்து வொஷிங்டன் வாழ் முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின் றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவ னாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49:13)

குறித்த காணொளி:

Read More»

0 comments:

thumbnail

எறும்பு பேசியதைக்கேட்ட சுலைமான் நபியும் , பிரேசிலின் விஞ்ஞானக் கண்டுபிடிப்பும்!இறைத்தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (கி.மு. 1032 - கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும்.

காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர். ஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் அணிவகுப்பு நடந்தது. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் புடைசூழ பவணி வந்தார்கள். வழியில் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்க வேண்டியிருந்தது  அதில் எறும்புகள் கூட்டமாக வாழ்ந்த ஓடை ஒன்றும் இருந்தது. அப்போது ஓர் எறும்பு பேசியதை நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டு முறுவலித்தார்கள்.

இதைத் திருக்குர்ஆன் இப்படிச் சொல்லும்.

அவர்கள் எறும்புகளின் ஓடைக்கருகே (வாதிந் நம்ல்) வந்தபோது ஓர் எறும்பு, “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் (மஸாகின்) நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் உங்களை மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது. அது கூறியதைக் கேட்டு சுலைமான் புன்னகைத்துச் சிரித்தார். (27:18,19)

இங்கு ‘எறும்பு ஓடை’ என்பதைக் குறிக்க ‘வாதிந் நம்ல்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. நம்லத்-எறும்பு; நம்ல்-எறும்புகள். ‘வாதீ’ என்பதற்கு பள்ளத்தாக்கு (Conyon), கணவாய் (Ravine), மலை இடுக்கு (Gully), இடுக்கு வழி (Gorge), ஓடை (Rivulet) ஆகிய பொருள்கள் உள்ளன. இந்தச் சொல்லாக்கத்தைப் பார்த்து கீழை அறிஞர்கள் சிலர் நகைத்ததுண்டு.

ஏனெனில், புற்றுகளில் எறும்பு இருக்கும்; மண் தரையில் வழியமைத்து சிறிய அளவில் வீடுகளை அமைத்து வாழும். எறும்புகளுக்குப் பெரிய அளவில் ஓடையோ சுரங்கமோ எங்கே உள்ளது என்று அவர்கள் குர்ஆன்மீது வினா தொடுத்தார்கள்; இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ நம்மில் சிலரும் ‘வாதிந் நம்ல்’ என்பதற்கு ‘எறும்புப் புற்று’ என்றே பொருள் செய்துவருகிறோம்.

உண்மையில் புற்றைக் குறிக்க இவ்வசனத்தில் வேறொரு சொல் (மஸாகின் - குடியிருப்புகள்) ஆளப்பெற்றிருப்பது கவனத்திற்குரியது. ஆக, எறும்புக்கு ஓடையோ சுரங்கமோ இல்லை என்றே உலகம் கருதிவந்த நிலையில் அண்மையில் அப்படி ஒன்று உண்டு என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுதான் வியப்பு.

பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியில் எறும்புகளின் ஒரு நகரமே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எறும்புகளுக்கான சாலைகள், தோட்டங்கள் என எல்லாம் உள்ளன. சீனாவின் பெருஞ்சுவரைப் போல மிகப்பெரும் அற்புதமாக இது காட்சியளிக்கிறது. பல மில்லியன் எறும்புகள் சேர்ந்து இச்சாதனையைப் புரிந்துள்ளன இந்த எறும்பு நகரத்தில், பொதுச்சாலைகள், கிளை நடைபாதைகள், பூங்காக்கள் உள்பட ஒரு நகரத்திற்கு வேண்டிய எல்லா கட்டமைப்புகளும் உள்ளன.

இதுதான் உலகிலேயே எறும்புகளின் பெரும்கூட்டம் வசிக்கும் இடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. காற்று வாங்குவதற்காகக் கால்வாய் போன்று எறும்புகள் தயாரித்துள்ள இடைவெளிகளில் 10 டன் வெள்ளை சிமிண்டை முதலில் நிபுணர்கள் கொட்டினார்கள். இதனால் அக்கால்வாய்கள் வலுவாகவும் உறுதியாகவும் மாறக்கூடும். பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே 8 மீட்டர் ஆழத்தில் 46.5 ச.மீட்டர் பரப்பை நிரப்புவதற்காக சிமிண்ட் கொட்டும் பணிக்கே 10 நாட்கள் பிடித்தது.

ஒரு மாதத்திற்குப்பின், பேராசிரியர் லூயிஸ் ஃபோர்ஜி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பூமியை அகழும் பணியைத் தொடங்கியது. அப்போதுதான் எறும்புகளின் இந்தப் பிரமாண்டமான நகரத்தைக் கண்டுபிடித்து, சீனப் பெருஞ்சுவர் போன்ற உலக அற்புதம் இது என்று வர்ணித்தனர். கட்டமைப்புகளை உருவாக்குவதில் வியத்தகு ஆற்றல் பெற்றது எறும்புக் கூட்டம்.

ஒவ்வோர் எறும்புக்கும், தன் எடையைப்போல் 50 மடங்கு எடையைச் சுமக்கும் ஆற்றல் உண்டு. அதைத் தூக்கிக்கொண்டு பல பத்து கி.மீ. தூரம் நடக்கவும் அதற்கு முடியும். இதைத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் செய்யும் திறன் படைத்தது. இந்த அடிப்படையில்தான், இந்தச் சுரங்கத்தைக் கட்ட சுமார் 40 டன் மண்ணை ஒரு பெரிய எறும்புக் கூட்டம் தோண்டி எடுத்துள்ளது.

இதன்மூலம் எறும்புகள் புதிய காற்றைச் சுவாசிக்கவும் சுருக்க வழியில் பயணிக்கவும் வழி பிறந்தது. இந்த எறும்பு நகரத்தில், அறைகளை இணைக்கும் முதன்மைச் சாலைகள் உண்டு. புற்றுகளுக்குச் செல்லும் குறுக்குச் சாலைகளும் உண்டு. அங்கு சிறு தானியங்களையும் சேமித்த உணவுகளையும் எறும்புகள் பாதுகாக்கின்றன. அவ்வாறே, எறும்புகள் கொண்டுவந்து சேர்த்த பச்சைப் புற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் உண்டு. இவை எறும்புகளின் முட்டைப் புழுக்களை (Larva) காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இப்போது சொல்லுங்கள்! அந்த வசனத்தில் எறும்பு ஓடை, அல்லது பள்ளத்தாக்கு (வாதிந் நம்ல்) என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தம்! எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! எத்துணை பெரும் உண்மை! சுப்ஹானல்லாஹு!

-அஹ்மத் கான் பாக்கவி
Read More»

0 comments:

Sunday, January 22, 2017

thumbnail

தகவல் அறிந்துகொள்ளும் சட்ட மூலத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு


தகவல் அறிந்துகொள்ளும் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பெப்ருவரி 03 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தகவல் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Read More»

0 comments:

thumbnail

இன்று முதல் 3 நாட்களுக்கு காலநிலையில் மாற்றம்!


இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்ப்பார்க்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு , வட மத்திய , கிழக்கு , மத்தி , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இந்த மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் அத்துடன் சில பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய கால நிலை நிலவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More»

0 comments:

thumbnail

மரணப்பொறிக்கு எதிராக இன்று மஹிந்த போராட்டம்!


தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளதாக முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பாரிய நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘பிரிவினைவாதத்தை வெற்றிபெறச் செய்யும் ரணிலின் மரணப்பொறிக்கு எதிராக போராடுவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணியின் இந்த விசேட மாநாட்டில் ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலரும் கட்சி அமைப்பாளர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொள்வார்கள் என தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.
Read More»

0 comments:

thumbnail

வார இறுதியில் அறிமுகமாகும் விசேட கடுகதி ரயில் சேவை!


வார இறுதி நாட்களில் கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தளை வரை அரை சொகுசு ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை நாட்களில் பிற்பகல 2.30ற்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரவு 7.13ற்கு மாத்தளையைச் சென்றடையும்.

அத்துடன் ரயில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை 6.30ற்கு மாத்தளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். காலை 11.15ற்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

கொழும்பிலிருந்து கண்டி வரையில் முக்கிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும். இந்த ரயில் கண்டியைக் கடந்த பின்னர் கட்டுகஸ்தோட்டை உடகந்தவின்ன மத்தேகம உக்குவல ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.
ரயிலில் இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு பெட்டிகள் நான்கைக் கொண்டதாக அமைந்திருக்கும். இந்த ரயிலில் 296பேர் பயணிக்க முடியும்.
Read More»

0 comments:

thumbnail

அரசியலில் இருந்து விலகுமாறு மஹிந்தவுக்கு அழுத்தம் கொடுக்கும் இரு நாடுகள்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து விலகுமாறு பலமிக்க நாடு ஒன்றின் தூதரகமும் அயல் நாடு ஒன்றின் புலனாய்வு பிரிவும் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் ஒருவரை இரண்டு தரப்பும் தனித்தனியாக சந்தித்து இது குறித்து தெரியப்படுத்தியிருப்பதாக பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி பிரபலம் குறைந்து வருவதால், அவரது கௌரவத்திற்காக இந்த கோரிக்கையை விடுப்பதாக மகிந்த ராஜபக்சவிடம் கூறுமாறும் கூட்டு எதிர்க்கட்சியின் அந்த தலைவரை சந்தித்த நபர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச தாமதமின்றி இந்த முடிவை எடுத்தால், அது அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்ல அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கும் சிறந்ததாக அமையும் என சம்பந்தப்பட்ட தூதரகமும் புலனாய்வு பிரிவும் சுட்டிக்காட்டியுள்ளன.
Read More»

0 comments:

thumbnail

மஹிந்த, கோதவாவிற்கு தெரிந்தே லசந்த கொலை செய்யப்பட்டார் - சரத் பொன்சேகா


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரக்கு தெரிந்தே சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என தாம் நம்புவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறித்த லசந்த கொலை தொடர்பில் நேற்றைய தினம் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகள் குறித்து ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த சம்பவம் தொடர்பில் எனக்குத் தெரிந்த எல்லா விடயங்களையும் கூறினேன்.

இவ்வாறு வாக்கு மூலமொன்றை பெற்றுக் கொள்ள என்னை அழைத்தமைக்காக புலனாய்வுப் பிரிவிற்கு நன்றி கூறுகின்றேன்.

அத்துடன், லசந்த கொலை தொடர்பில் எனக்கு தொடர்பு உண்டு சில தரப்பினர் காலத்திற்கு காலம் கூறி வருகின்றனர் இந்த கருத்துக்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு தேவையான வகையிலேயே கூறப்படுகின்றது.

மேலும், அப்போதைய இராணுவத் தளபதி என்ற ரீதியில் எனக்கு தெரிந்த விடயங்களை நான் கூறினேன் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
Read More»

0 comments:

thumbnail

மைத்திரியை தாக்க வேண்டாம், ரணிலை தாக்குவோம்! மஹிந்தவுக்கு அழுத்தம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து அவரை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சியிடம் மஹிந்த விடுத்த கோரிக்கைக்கு வாசுதேவ நாணயக்கார கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் இடம்பெற்ற அந்த குழுவின் சந்திப்பில் மஹிந்த விடுத்த கோரிக்கைகளுக்கு எதிராக வாசுதேவ இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த தரப்பினரின் அவசியம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் மற்றும் ரணிலுக்கு எதிராக செயற்படுவது மாத்திரம் எனவும், மைத்திரி ஜனாதிபதி பொது வேட்பாளராக செயற்பட்டு ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்த்த போதிலும், அவர் ஒரு நாளும் கட்சியை விட்டு செல்லாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், தற்போதைய கட்சியின் தலைவராகவும் செயற்படுகின்றமையினால் அவருக்கு எதிராக எதிர்ப்பு வெளியிட சுதந்திர கட்சியினருக்கு விருப்பம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மைத்திரிக்கு எதிர்ப்பு வெளியிட்டுவதனால் கட்சியை பிளவுபடுத்துவதற்கு காரணமாகிவிடும் எனவும், அந்த தமது குழு தொடர்பில் பொதுவான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அதிருப்த்தியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தனிப்பட்ட பிரச்சினைக்கமைய எதிர்ப்பு வெளியிடுவதற்கு பதிலாக அரசியல் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என அவர் கூறிள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள போதிலும், அவர்கள் வெளியே ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்ப்பு வெளியிடும் கட்சியாக செயற்படுவதோடு தங்கள் கட்சி மக்களை பாதுகாப்பதற்கு செயற்படுகின்றார்கள் அவர்களை இங்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளுமாறு வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதியை மாத்திரம் இலக்கு வைத்து, ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் வேறு கொடுக்கல் வாங்கல் உள்ளமை தொடர்பில் கட்சியினர் விழிப்புணர்வு கொண்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது
Read More»

0 comments:

thumbnail

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது!


உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பது பற்றி உறுதிபட கூற முடியாது.

எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும் இதுவரையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

2012ம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மீளவும் அவை நாடாளுமன்றில் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More»

0 comments:

Saturday, January 21, 2017

thumbnail

எப்படியிருந்த மஹிந்த இப்படியாகிற்றாரே....! வசிய கோலாக மாறிய திறன்பேசி..!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய நிலை குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுக்கு புதிதாக வேலைவாய்பொன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அந்த தொழிலுக்கு சம்பளம் கிடைக்காது. அது தன்னார்வு தொண்டர் போன்ற தொழிலாகும். மஹிந்த ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் “என்ன இது எந்த நேரமும் போனை நோண்டிக் கொண்டிருக்கின்றீர்கள்”... “கேள்வி ஒன்று கேட்டால் பதில் வழங்குவதில்லை என மஹிந்த, தனது மூன்று மகன்களையும் கண்டித்திருந்தார். எனினும் தற்போது மஹிந்த அந்த நிலைமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

காலை 5 மணிக்கு எழும்பும் மஹிந்த கஞ்சி அல்லது கோப்பி ஒன்று கிடைக்கும் வரையில் முதல் வேலையாக பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். கோப்பி கிடைத்தவுடன் ஒரு கையில் கோப்பி கோப்பையை பிடித்துக் கொண்டு மற்ற கையில் கையடக்க தொலைப்பேசியை பிடித்துக் கொண்டு பேஸ்புக் பார்க்கப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் காலை நடை பயிற்சியில் ஈடுபடும் போதும் கையடக்க தொலைப்பேசியை பையில் எடுத்து செல்ல ஆரம்பித்துள்ளார். 10 நிமிடத்திற்கு ஒரு முறை நடைப்பயிற்சியை நிறுத்திவிட்டு கையடக்க தொலைப்பேசியில் பேஸ்புக் பார்த்து சிரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடை பயிற்சியின் பின்னர் காலை உணவின் போதே ஷிரந்தி மஹிந்தவை சந்திப்பார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கதைத்துக் கொள்ளாமல் கையடக்க தொலைப்பேசியை பார்த்தவாறு மஹிந்த உணவையும் பார்க்காமல் எதையாவது சாப்பிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏதாவது கதைக்க ஆரம்பித்தாலும் பேஸ்புக்கில் உள்ள விடயத்தை பற்றி தான் மஹிந்த கதைப்பார். தாய், தந்தையின் இந்த செயற்பாட்டினால் மூன்று மகன்களும் குழப்பமடைந்துள்ளனர். அவர்களின் கேள்விகளுக்கு கையடக்க தொலைப்பேசியை பார்த்தவாறே மஹிந்த பதிலளித்துள்ளார்.

“நான் இந்த பேஸ்புக்கில் இருந்து எப்படி வெளியே வருவதென ஆராய்ந்து வருகின்றேன்”.. என மஹிந்த அண்மையில் நாமலிடம் கூறிள்ளார். பெருமைக்குரிய தந்தையின் அந்த கருத்திற்கு நாமல் பதில் பேசாமல் சென்றுள்ளார். “வசிய பந்தை முன்னர் அழுத்திக் கொண்டிருந்ததனை பொன்று தற்போது இந்த போனை அழுத்திக் கொண்டிருந்தால் நாங்கள் முன்னேற்றமடைந்து விடலாம்”... என ஷிரந்தி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் பேஸ்புக் அடிமைத்தனத்தினால் அவரை பார்க்க வருபவர்களுக்கும் தற்போது பிரச்சினையாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமான பேச்சுவார்த்தைகளின் போதும் மஹிந்த பேஸ்புக் பார்க்க ஆரம்பித்துள்ளார். குறித்த கையடக்க தொலைப்பேசிக்கு வரும் அழைப்புகளுக்கும் நொடிப்பொழுதே பதில் வழங்கி வருகின்றார். தனியாக இருப்பதையே மஹிந்த தற்போது அதிக விரும்புகின்றார். ஒரு பக்கத்தில் ஷிரந்தி தனது வேலைகளை செய்து கொண்டு, மறுபக்கத்தில் பேஸ்புக் பார்ப்பதனையே நாள் முழுவதும் தொழிலாக மஹிந்த மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி முதலாம் திகதி மஹிந்தவிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வந்த மகன்களின் ஐ.போன் சிறியதாக உள்ளது. எனக்கு பெரிய திரையை கொண்ட நல்ல போன் ஒன்றை கொண்டு வந்து தாருங்கள்” என மஹிந்த கூறியுள்ளார். என்னை பேஸ்புக் ஊடாகவே வீழ்த்தினார்கள். நானும் பேஸ்புக் ஊடாகவே வீழ்த்தவுள்ளேன்.. என மஹிந்த தெரிவித்துள்ளார்.

இது நகைச்சுவை அல்ல. மஹிந்த என்பவர் வித்தியாசமான திறமையை கொண்ட ஒருவர். விரைவில் மஹிந்த ஆசிரியராக செயற்படும் இணையத்தளம் ஒன்றும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதாக மஹிந்த கூறுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Read More»

0 comments:

thumbnail

பலவீனத்தை மறைக்க கூ.எதிர்க்கட்சியினரை சிறையிலடைக்கிறார்கள்: மஹிந்த


அரசாங்கம் பலவீனப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து யாரையாவது சிறையிலடைக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையிலேயே அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் போலியான குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்டு கூட்டு எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ள மஹிந்த, தமக்கு நெருக்கமானவர்களுக்கு இவ்வாறு அநீதியிழைக்கப்படுவதனால் தாம் அடிக்கடி சிறைச்சாலை சென்று வரும் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More»

0 comments:

thumbnail

இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதுவருக்கு டெங்கு


இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் ( James Dauris ) டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் டெனியல் பெயின்டர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

டெங்கு நோய் பரவுவதல் இலங்கையின் சுற்றுலாத்துறையை மோசமாக பாதிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் நாட்டு பிரஜைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் பிரித்தானியா மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
Read More»

0 comments:

thumbnail

இலஞ்சம் பெற்று வசமாக சிக்கிக் கொண்ட PHI


 பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி - தென்னங்கும்புர பொதுச் சுகாதார பரிசோதகர் காரியாலயத்தில் பணியாற்றும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹந்தான பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக, ஹோட்டல் உரிமையாளரிடம் இந்த இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Read More»

0 comments:

thumbnail

விரைவில் மீண்டெழும் மகிந்த!! ஆதாரம் வெளியானது….!


அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனம், மகிந்த ராஜபக்ஷவை மீண்டெழ வழி ஏற்படுத்துவதாக சர்வதேச ஊடகமான த டிப்ளோமேற், தமது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

2 வருடங்களுக்கு முன்னர் பாரிய எதிர்பார்ப்புகளுடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

இந்த அரசாங்கத்துக்கு மேற்குலக நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பெருத்த ஆதரவினையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றன.

ஆனாலும் பெறுபேறுகளை வழங்குவதிலும், தீர்வுகளை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அடைவுமட்டத்தை இலங்கை கொண்டிருக்கவில்லை.

இது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அதேநேரம், மகிந்தவின் மீள் எழுச்சியையும் உறுதிப்படுத்துவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Read More»

0 comments:

thumbnail

திரையரங்கிற்குள் மைத்திரி! நெகிழ்ச்சியில் இயக்குநர்! மகிழ்ச்சியில் அமைச்சர்கள்!


இலங்கை திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படமான “சரிகம” என திரையிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் விசேட காட்சி நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.


தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி திரையரங்கில் இந்த திரைப்படம் காட்சியிடப்பட்டிருந்து.

திரைப்படத்தினை பார்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டா்.

இதன்போது ஜனாதிபதியுடன் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
Read More»

0 comments:

thumbnail

மின்சார தடை எப்போதும் இல்லை! பரிசு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!


இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலை ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீடித்தால் மின்சார விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மழை கிடைக்கவில்லை என்றாலும் மின்சாரம் தடைப்படாது என அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.

அத்துடன் மின்சார கட்டணம் உயர்த்தப்படாதென மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு விசேட பரிசு வழங்கப்படும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண மின்குமிழ்களுக்கு பதிலாக எல்.ஈ.டி மின்குமிழ்களை இலவசமாக வழங்குவதற்கான யோசனையை விரைவில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
Read More»

0 comments:

thumbnail

அளுத்கம பிக்கு மீதான தாக்குதல்: நீதிபதி சொன்ன தீர்ப்பு


மூன்று முஸ்லிம் இளை­ஞர்கள் அளுத்­க­மையில் பௌத்த தேரர் ஒரு­வரைத் தாக்­கி­ய­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்டு அவர்­க­ளுக்­கெ­தி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கை இணக்க சபை மூலம் தீர்த்துக் கொள்­ளு­மாறு நீதிவான் வேண்டிக் கொண்டார்.

அளுத்­க­மையில் மூன்று முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த தேரர் ஒரு­வரைத் தாக்­கி­ய­தாக அளுத்­கம பொலிஸார் இவ்­வ­ழக்­கினை களுத்­துறை நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­தி­ருந்­தனர். இவ்­வ­ழக்கு நேற்று முன்­தினம் களுத்­துறை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது இணக்க சபைக்கு இதனை பாரப்­ப­டுத்­தினார்.

முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த குருவைத் தாக்­கி­ய­தாக பிர­சாரம் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்தே அளுத்­க­மையில் நடை­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் கூட்­டத்­தி­னை­ தொடர்ந்து வன்­மு­றைகள் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இணக்க சபையில் இடம்பெறவுள்ள விசாரணைத் திகதியை அளுத்கம பொலிஸார் நிர்ணயிக்கவுள்ளனர்.

(நன்றி விடிவெள்ளி)
Read More»

0 comments:

thumbnail

அலரி மாளிகையை ஆடு,மாடுகளும் சுற்றிவளைக்கும் – ரோஹித எம்.பி.


எதிர்வரும் நாட்களில் ஆடு, மாடுகள் சேர்ந்து அலரி மாளிகையை சூற்றிவளைக்கும் நிலைமை உருவாகும் எனவும், இதன்போது அவற்றின் மீதும் தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனவும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. தெரிவித்தார்.
குரோட்டன் இலைகளும் மனித உணவுக்கு உகந்தது என நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்  குறித்து அவரிடம் வினவப்பட்டபோதே இவ்வாறு கூறினார்.
அரசாங்கம் போகின்ற போக்கில் காட்டிலுள்ள ஏனைய இலைகளையும் சாப்பிடுமாறு கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Read More»

0 comments:

thumbnail

அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கையை அங்கிருந்து ஆரம்பிக்கின்றோம் -மஹிந்த


நுகேகொடையில் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம், கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்படுவது. அதில் நான் தலை காட்டிச் செல்பவன் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்த அவர் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். நுகேகொடைக் கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.
நுகேகொடை ஒரு வெற்றிப் பிரதேசமாகும். இதனால் எமது அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கையை அங்கிருந்து ஆரம்பிக்கின்றோம். இக்கூட்டத்தை அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கையின் முதலாவது எத்தனம் இதுவென நான் கூறமாட்டேன்.
கூட்டு எதிர்க் கட்சியின் இந்த அரசாங்க எதிர்ப்பு செயற்பாடுகளை  குழப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.
Read More»

0 comments:

thumbnail

அமெரிக்காவை மீளக் கட்டியெழுப்புவேன்: ட்ரம்ப் சூளுரை!


வொஷிங்டன், நியுயோர்க் உட்பட்ட இடங்களில் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நேற்றைய தினம் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

வொஷிங்டனில் மாத்திரம் சுமார் 250,000 நேற்றைய தினம் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்காவை மீளக் கட்டியெழுப்பப் போவதாகவும் கல்வி முதல் பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களையும் முழுமையாக மறு சீரமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப.இதேவேளை, அவரது அமைச்சரவையில் சர்ச்சைக்குரிய பலர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து அரசியல் மட்டத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More»

0 comments:

thumbnail

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை வெளியிட்ட அமெரி்க்கா!


பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.

அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்தன. பதற்றத்தில் ஆழ்த்தின. இந்த தாக்குதல்களின்போது மூளையாக இருந்து செயல்பட்டவர், அந்த இயக்கத்தின் தலைவர் பின்லேடன் என அமெரிக்கா கண்டறிந்தது.

சரியாக 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2011-ம் ஆண்டு, மே மாதம் 2-ந் தேதி பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க ராணுவத்தின் ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் அதிரடி தாக்குதல்கள் நடத்தி பின்லேடனை கொன்றனர்.

அப்போது பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை அங்கிருந்து ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ. என்று அழைக்கப்படுகிற மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை பரிசீலித்து அவ்வப்போது சி.ஐ.ஏ. வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் நேற்று முன்தினமும் பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை சி.ஐ.ஏ. வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆவணங்களில் அவர் ஐ.எஸ். இயக்கத்தின் பொறுமை இழப்பு, வன்முறை தந்திர உத்திகள், அல்கொய்தா இயக்கம் மறைந்து வரும் நிலை ஆகியவை பற்றி, பின்லேடன் கவலைப்பட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதில் ஒரு ஆவணம், பின்லேடன் தனது மகன்களை எச்சரிப்பதாக அமைந்துள்ளது. அதில் அவர், தன் மகன்களின் உடலில் எலெக்டிரானிக் சிப் பொருத்தப்பட்டு, அவர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.

அரேபிய தீபகற்ப பகுதியை சேர்ந்த அல்கொய்தா இயக்கத்தின் நிறுவனர் நாசர் அல் உஹாய்ஷிக்கு பின்லேடன் எழுதிய கடிதமும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் பின்லேடன், மத அடிப்படையிலான ஒரு ராஜ்யத்தை அமைப்பதற்கான சூழல்கள் சரிவர அமையவில்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக மிக வேகமாக செயல்படக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு ராஜ்யத்தை அமைப்பதில் வெற்றி கிடைக்கும் என்பது ஆதாரபூர்வமாக காட்டப்படுகிற வரையில், ஒன்றுக்கும் பலனற்ற விதத்தில் ரத்தம் சிந்தக் கூடாது எனவும் பின்லேடன் எச்சரித்துள்ளார்.

2010-ம் ஆண்டுக்கு முன் பின்லேடன் பல தரப்பினருக்கும் எழுதிய கடிதங்களில், தனது குழுவினர் அமெரிக்காவை தொடர்ந்து எதிரியாக கருதி வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More»

0 comments:

thumbnail

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று போராட்டம்!


தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு வெள்ளவத்தை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய LAUGFS super market க்கு முன்பாக இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Read More»

0 comments:

thumbnail

சரத் பொன்சேகாவிடம் பல மணிநேரம் விசாரணை!


சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவியில் இருந்த போதே, 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கொலையுடன் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

பல மணிநேரம் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More»

0 comments:

Friday, January 20, 2017

thumbnail

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்…


நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விஷேடமாக நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழைத்தூறல் ஒரு சில முறை காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நாட்டில் சில பிரதேசங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.

இதனுடன் நாட்டின் ஊடாக இடைக்கிடையில் வீசும் காற்று, மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Read More»

0 comments:

thumbnail

ஓரளவுக்கு எமது மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்!


 தமிழ் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை, அவர்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ள எதிக்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தீர்வு விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவினை எடுக்கமுடியாது என்றும் இதனை தமிழ் மக்கள் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என பகிரங்கமாக கூறியுள்ளார். இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் இந்த நாட்டின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என அவர் பகிரங்கமாக கூறுகின்றார்.

காணிகள் ஓரளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. காணாமல்போனவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதற்கான அலுவலகம் திறக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.அது இன்னும் அமுல்படுத்தப்படவில்லை.

அதேசமயம் ஓரளவுக்கு எமது மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். காணாமல் போவோம் என்ற அச்சம் எங்களிடம் இல்லை. வெள்ளை வேன் அச்சம் தற்போது இல்லை. பழைய நிலைமை மாறியுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எங்கள் மீது திணிக்கப்படும் அநீதி, புறக்கணிப்பு மாற வேண்டுமானால் ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளுக்கு வரவேண்டும். எங்கள் இறமையின் அடிப்படையில் அந்த அதிகாரங்களை பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாகவேண்டும். அந்தந்த பகுதி மக்கள் அவர்களின் இறமைகளின் அடிப்படையில் அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை மக்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
Read More»

0 comments:

thumbnail

ஸ்ரீ லங்கன் விமான சேவை இரகசியங்கள் விரைவில் வெளியாகும்!


ஸ்ரீ லங்கன் விமான சேவையை நட்டமடையச் செய்தவர்களை இன்னும் ஓரிரு தினங்களில் வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானமொன்றைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையொன்றை அமைச்சரவை அனுமதியில்லாமல் ரத்து செய்ததன் மூலம், அரசாங்கத்துக்கு 150 மில்லியன் ரூபாவை நஷ்டம் ஏற்படுத்தினார் என கூட்டு எதிர்க் கட்சி அமைச்சருக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை நாஷமாக்கியவர்கள் யார் என்பதை நான் கூற ஆசைப்படுகின்றேன். மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரை இந்நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நியமித்தனர். இதன் மூலம் இந்த நிறுவனத்தை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தது யார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

கண்ணாடி வீட்டில் உள்ளவர்கள் மீது கல் எறிய வேண்டாம் என நாம் ஒவ்வொரு முறையும் கூறுகின்றோம். இது கூட்டு எதிர்கட்சி வாங்கிக் கட்டிக் கொள்ளும் நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Read More»

0 comments:

thumbnail

ஓராண்டுக்கு முன்பிருந்தே சுயாதீனமாக இயங்கி வருகின்றேன் - ரதன தேரர்


ஓராண்டிற்கு முன்பிருந்தே சுயாதீனமாக இயங்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தாம் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டு செய்தி அறிக்கையிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஓராண்டு காலமாகவே நான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இயங்கி வருகின்றேன்.

சுயாதீனமாக இயங்கி வருகின்ற போதிலும் அரசாங்கத்தை விட்டு விலகத் தீர்மானிக்கவில்லை.

கடந்த 16ம் திகதி நான் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகங்கள் ஒரு விடயத்தை மட்டுமே செய்தி அறிக்கையிட்டுள்ளன.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் கொள்கைகள் தொடர்பில் எனக்கு விமர்சனங்கள் உண்டு.

அரசாங்கத்தை நிறுவுவதற்கு முக்கிய பங்காற்றிய ஒருவர் என்ற ரீதியில் இந்தக் கருத்து அரசாங்கத்தை பாதிக்கும் என்பதனை நான் அறிவேன்.

எவ்வாறெனினும் இந்த அரசாங்கத்தை நிறுவுவதற்கு முக்கிய பங்காற்றிய காரணத்தினால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளிலிருந்து விலகிச் செல்ல முடியாது என ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
Read More»

0 comments:

thumbnail

இலங்கை மக்களின் இருப்பு குறித்து சவால் எழும் - ஜனாதிபதி எச்சரிக்கை!


இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறினால், இலங்கை மக்களின் இருப்புக் குறித்த சவால் எழும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்

அபிவிருத்திப் பணிகளுக்காக வளிமண்டலத்தில் தீய வாயுக்களைச் சேர்த்து உலக வெப்பநிலையை அதிகரித்து மனித குலத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திய வல்லரசுகள் இலங்கைக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை ஒருபோதும் பிற்போட முடியாது. இந்த நாடுகள் இயற்கை பெறுமானங்களை புறக்கணித்து செயற்படுகின்றன.

இதன் காரணமாக மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் உயிர் வாழ்வது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இலங்கையை இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நாடாக மாற்ற வேண்டுமாயின், வன வள அடர்த்தியை 50 சதவீதம் வரையிலாவது உயர்த்த வேண்டும்.

இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறும் பட்சத்தில், இலங்கை மக்களின் இருப்புக் குறித்த சவால் எழும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
Read More»

0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2016 VIDUTHALAI NEWS All Rights Reserved.
back to top