Showing posts with label Business. Show all posts
Showing posts with label Business. Show all posts

Friday, September 2, 2016

thumbnail

இலங்கையர்களுக்கு கூகுள் வழங்கியுள்ள அதிரடிச் சலுகை




இலங்கை பாதை படம் (Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும்.

http://ift.tt/1WEkSbX

Read More»

Thursday, September 1, 2016

thumbnail

ரணில் நாளை சிங்கப்பூர் பயணம்



இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள் ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய மன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே பிரதமர் சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். 

இதன்பிரகாரம் சிங் கப்பூர் ஷென்கிலா ஹோட்டலில் நாளை நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட் டின் ஆரம்ப நிகழ்வில் அவர் விசேட உரையற்றவுள்ளார்.

இந்த மாநாட்டிற்கு இந்து சமுத்திர வல யகத்தின் பிரதான நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Read More»

thumbnail

கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர் குமார வெல்கமவுக்கு நடந்தது....





புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவில் இருந்து, குமார வெல்கமவை மஹிந்த ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் குமார வெல்கமவும் அதில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த மக்களின் எண்ணிகையை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என உறுதியாகியுள்ளதாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More»

thumbnail

முஸ்லிம்களை ரனில் நிராகரிக்கிறார். உலமா கட்சி கண்டனம்


ஐ நா செய‌லாள‌ர் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் த‌லைமைக‌ளை த‌னியாக‌ ச‌ந்திப்ப‌த‌ற்கு ஐ தே க அர‌சு ஏற்பாடு செய்யாத‌த‌ன் மூல‌ம் இந்த‌ ஆட்சி முஸ்லிம்க‌ளுக்கு துரோக‌மிழைத்துள்ள‌து.


இந்த‌ நாட்டில் ஆயுத‌ம் தாங்கி போராட‌ம‌லேயே பாரிய‌ உயிர், உட‌மை இழ‌ப்புக்க‌ளுக்கு முக‌ம் கொடுத்த‌ ஒரேயொரு இன‌ம் முஸ்லிம்க‌ளாகும். அவ‌ர்க‌ள் த‌னியாக‌ பிரித்துப்பார்த்து கொல்ல‌ப்ப‌ட்ட‌தோடு வ‌ட‌க்கிலிருந்து அனைத்தும் உறிஞ்ச‌ப்ப‌ட்ட‌த‌ன் பின் வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள். அப்ப‌டியிருந்தும் முஸ்லிம் அர‌சிய‌ல் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளின் த‌னித்த‌ர‌ப்பொன்றை பாங்கி மூனுட‌ன் த‌னியாக‌ ச‌ந்திக்க‌ வைக்க‌ முடியாம‌ல் இந்த‌ அர‌சு முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு முதுகில் குத்திய‌மைக்கு கார‌ண‌ம் அர‌சாங்க‌ம் த‌ தே கூட்ட‌மைப்பின் நிக‌ழ்ச்சி நிர‌லுக்கு அடிப‌ணிந்துள்ள‌தா என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி கேட்கிற‌து.

பாங்கிமூனை முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌னித்த‌ர‌ப்பு ச‌ந்தித்தால் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளுக்கு த‌ தே கூட்ட‌மைப்பின‌ர் செய்யும் துரோக‌ங்கள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும் என்ற‌ அச்ச‌த்தின் கார‌ண‌மாக‌ அர‌சாங்க‌ம் முஸ்லிம் த‌ர‌ப்பை ஓர‌ம் க‌ட்டியுள்ள‌தாக‌வே நாம் பார்க்கிறோம்.

ஆக‌வே உட‌ன‌டியாக‌ பிர‌த‌ம‌ர் இது விட‌ய‌த்தில் த‌லையிட்டு பாராளும‌ன்ற‌த்திலும் அத‌ற்கு வெளியிலும் அர‌சிய‌லில் செய‌ற்ப‌டும் முஸ்லிம் க‌ட்சிக‌ளைச்சேர்ந்த‌ "அனைத்து முஸ்லிம் கூட்ட‌மைப்பை" ஐ நா செய‌லாள‌ரை த‌னியாக‌ ச‌ந்தித்து முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ளையும் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்காத‌ அர‌சிய‌ல் தீர்வு குறித்தும் கூறுவ‌த‌ற்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி பிர‌த‌ம‌ர் ர‌ணிலை கேட்டுக்கொள்கிற‌து.
Read More»

Wednesday, August 31, 2016

thumbnail

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்பு விவகாரம் மீண்டும் பாராளுமன்றத்தில்!



அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபியா அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்ட   விவகாரம்” பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விக்கு மேல் கேள்வியாக எழுப்பும் பணி தொடர்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம் சல்மான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இவ் விடயமாக  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.
ஏற்கனவே அவர்  பாராளுமன்றத்தில் வீடமைப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது வீடமைப்பு அமைச்சுக்கு நுரைச்சோலை விவகாரம் தொடர்பில்லை எனவும் மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கண்காணிப்பில் தான் அவ்வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதாக அன்று பதிலளிக்கப்பட்டது.
அதனை தொடந்து சட்டத்தரணி சல்மான் எம்.பி அவர்கள் உள்நாட்டு விவகார அமைச்சரிடம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வீடுகளை பகிர்ந்தளிக்க அரசாங்க  அதிபருக்கு  உத்தரவிடும் வகையிலேயே கேள்வி எழுப்பவுள்ளார்.

நன்றி - SLMCவெளிச்சம் 
Read More»

thumbnail

260 பயணிகளின் உயிருடன், விளையாடிய இலங்கை விமானி..!



பலவந்தமான முறையில் 260 பயணிகளை அழைத்து செல்ல ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானி முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


கடந்த வாரம் ஜேர்மன் பிராங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக சென்றடைந்தது.


குறித்த விமானத்தை செலுத்த தயாராக இருந்த விமானி கடும் குடிபோதையில் இருந்தமையால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


குடிபோதையில் இருந்த விமானி 260 பயணிகளின் உயிரை பயணம் வைத்து விமானத்தை ஓட்டுவதறகு முயற்சித்துள்ளார். UL554 என்ற விமானம் அன்றையதினம் மதியம் 1 மணியளவில் இலங்கை நோக்கி பயணிக்க ஆயத்தமாகியிருந்தது.


அது வரையில் விமானத்தின் பிரதான விமானியாக இருந்த குறித்த விமானி விமானத்தை ஓட்டுவதற்கு முடியாத அளவு மது போதையில் இருந்தமையால், விமானத்தின் துணை விமானிகளும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.


சூழ்நிலையை புரிந்து கொண்ட துணை விமானிகள்? சுகயீன விடுமுறை என கூறி விமானம் ஒட்டுவதனை புறக்கணிக்குமாறு பிரதான விமானியிடம் கோரியுள்ளனர். எனினும் 260 பயணிகளுடன் விமானத்தை பலவந்தமான ஓட்டுவதற்கு பிரதான விமானி முயற்சித்துள்ளார்.


அதற்கமைய அவர் துணை விமானிகளின் கோரிக்கையை கண்டுக் கொள்ளாமல் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி சென்றுள்ளார்.


இதனையடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் கொழும்பு அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு இருவரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயற்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர் அதிகாரி, ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் உயிரை பாதுகாத்து விமானியை சோதனைக்குட்படுத்தினார்.


அங்கு அவர் சாதாரண அளவைவிடவும் அதிகமாக மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளதுடன் அவரால் விமானத்தை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.


எனினும் விமான சேவை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக குறித்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

குற்றசாட்டுக்கள் வைக்கப்படுவதின் பின்னனிகளை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கவேண்டும்...- அல்ஹாஜ் முஹம்மட் இப்றாஹிம் (கல்முனை)



ரிசாட்டுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு, சொப்பிங் பேக்கோடு வந்தவருக்கு இவ்வளவு பணமா? என்றல்லாம் அவருடை எதிரிகள் பேசுவதை கேட்கின்றோம்.

இதே போன்று இதைவிட வீரியம் கொண்ட பிரச்சினைகள் ஹக்கீமுக்கு எதிராக வந்த போதல்லாம் யாரும் அதை பெரிது படுத்துவதில்லை.
காரணம் அவருக்கு அரசியல் எதிரி என்று யாரையும் அவர் சம்பாதித்து கொள்வதில்லை.

எல்லா அரசியல் வாதிகளும் அவருக்கு பிரியானி கொடுத்து ஆதரிப்பார்கள்.
அதே நேரம் எந்த அரசாங்கம் வந்தாலும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்,
காரணம் அவர் எந்த அரசியல் வாதிகளிடமும் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் முட்டி மோதுவது இல்லை அதனால் அவர் எல்லோருக்கும் நல்லவர்.

மறைந்த தலைவர் எல்லா அரசியல் வாதிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார்.

அதனால் அவர் பல இன்னல்களை சந்தித்தார்.

கல்முனையிலிருந்து வெரும் கையோடு வந்த அஸ்ரப்புக்கு இவ்வளவு பணமும் அந்தஸ்த்தும் எப்படி கிடைத்தது என்று கேட்டு கூத்தடித்தார்கள்...
பிறகு காலி டென்டர் விடயத்தில் கொள்ளையடித்து விட்டாய் என்று கூக்குரல் இட்டார்கள்,அனுரா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் அஸ்ரப்பின் கையை இஸ்லாமிய சட்டப்படி வெட்டவேண்டும் என்றார்.
அந்த அளவுக்கு அரசாங்க பணத்தை கொள்ளை அடித்துள்ளார். என்று ரிச்சட் பத்திரன கூறியது மட்டுமல்ல செருப்பால் பாரளமன்றத்துக்குள் அஸ்ரப் அவர்களுக்கு எறிந்தார்.

சந்திரிக்கா பௌசி அவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர் மூலமாக அஸ்ரப்பை ஆட்டிபடைத்தார் என்பதல்லாம் வரலாறு...
மறுபக்கம் தமிழ் தரப்பினர் சொல்லொன்னா துயரங்களை செய்தது மற்றுமன்றி அவரை கொலையும் செய்தனர்.

அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் கடைசிவரையும் அழைத்திருக்கமாட்டார்.

அஷ்ரப் வழிந்து சென்று பிரியாணி சாப்பிட்டு இருக்கவும் மாட்டார்.
ஏனன்றால் பிரபாகரன் எப்படி நானயமானவர் என்று அஸ்ரப்புக்கு தெறியும்.

இப்போது விடயத்துக்கு வருவோம்.ஹக்கிமை போல் அஸரப்பும் அரசியல் செய்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காது.
அதே போன்றுதான் ரிசாட்டுக்கும் பல எதிர்ப்புக்கள் வந்த வன்னம் உள்ளது.

ஒன்று அரசியலை விட்டு ரிசாட் ஒதுங்க வேண்டும்.
அல்லது கொல்லப்படவேண்டும்.

அல்லது ஹக்கீமைபோல் அரசியல் செய்ய வேண்டும்.
இதுதான் தீர்வாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்....
தங்கம் தான் கஸ்டப்படும்..
மண்னு மன்றியிட்டு கிடக்கும்..
இந்த விடயங்களை புரிந்து கொண்டால் சரிதான்....
Read More»

thumbnail

மும்மன்ன பிரச்சினைக்கு வெகு விரைவில் நல்லதீர்வு மும்மானையில் ரிஷாத்..!!




கைத்தொழில் வர்த்தக அமைச்சர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவருமான கௌரவ றிசாத் பதுர்தீன் அவர்கள் மற்றும் பாராளுமன்ற உருப்பினர் கௌரவ நவவி ,குருநாகல் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் டொக்டர் சாபி ஷிஹாப்தீன்,முன்னால் மாகான சபை உருப்பினர் மற்றும் சதோச பிரதித்தலைவர் எம்.என்.நஸீர்,முன்னால் குளியாப்பிடிய பிரதேச சபை உருப்பினர் எம்.சி.இர்பான் STC இணைப்பாளர் அஸார்தீன் இன்னும் முக்கிய பிரமுகர்கள் நேற்றைய தினம் மும்மன்ன பாடசாலை அதிபர் மற்றும் மும்மன்ன பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று மும்மன்ன பள்ளிவாயலில் இடம்பெற்றது.











இச்சந்திப்பின் போது மும்மன்ன பாடசாலை மைதான பிரச்சினை சம்மந்தமாக  வெகு விரைவில் நல்லதீர்வு மும்மானை மக்களுக்குக் கிடைக்கும் என்று கூரியதுடன் மேலும் பல விடையங்கள்    பேசப்பட்டு அமைச்சரினால் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


Read More»

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

back to top