Showing posts with label Education. Show all posts


தேசிய கல்வி கொள்கையை உருவாக்கும் போது பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சம்பந்தமாக விசேட கவனத்தை செலுத்துமாறு அரச கணக்கீட்டு தெரிவுக்குழு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை மற்றும் பாடசாலைக்கு வெளியில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் அவசியம் குறித்து தெரிவுக்குழு கவனம் செலுத்தி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் சம்பந்தமான விடயங்களை விளக்கும் மாற்று வழிகள் மாத்திரமல்லாது, பாடத்திட்டத்திலும் அதனை உள்ளடக்க வேண்டும்.

இது சம்பந்தமாக அரச கணக்கீட்டு தெரிவுக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழுவுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் விடயங்கள் சம்பந்தமாக தெளிவான அறிவு இல்லாத காரணத்தினால், மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டில் உள்ள 45 இலட்ச பாடசாலை மாணவர்களுக்கும் இந்த காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குடும்பத்தில் 5 பாடசாலை மாணவர்கள் இருந்தால், அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி கிடைக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த காப்புறுதியின் கீழ் பாடசாலை மாணவர் ஒருவர் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் 2 லட்சம் வரையில் வைத்தியசாலை கட்டணத்தை செலுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


கல்முனை ஸாஹிறா கல்லூரி என்பது கல்முனைவாழ் மக்களின் கல்விக் கண்ணைத்திறந்த கலங்கரை விளக்காகும்.

பல கல்விமான்களை உற்பத்தியாக்கிவிட்டு இன்றும் வயது சென்ற வயோதிபனைப்போல் காட்சியளித்துக் கொண்டிருக்கும் நிலையினைப் பார்த்தால் கல் நெஞ்சமும் கரைந்துவிடும்.

இந்த ஸாஹிறாக் கல்லூரியின் வரலாற்றையும், அது படும்பாட்டையும் என்னால் விலாவாரியாக  எழுதமுடியும், அப்படி நாங்கள் விலாவாரியாக எழுதத்துவங்கினால் பலபேருடைய மனதை அது பாதித்துவிடுவது மட்டுமல்ல, அந்த விடயம் பல வாதப்பிரதி வாதங்களையும் உண்டுபண்ணிவிடும் என்ற காரணத்தினாலும், கட்டுரையின் விரிவையும் அஞ்சி தவிர்த்துக் கொள்கின்றோம்.

பொதுமகன் என்ற முறையிலும், இந்த பாடசாலையின் பழய மாணவன் என்ற முறையிலும், இந்த பாடசாலையின் வளர்ச்சியில் ஆசை கொண்டவன் என்ற வகையிலும் சில விடயங்களை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

இந்த பாடசாலை கல்முனை பிராந்தியத்துக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களை கவர்ந்துவரும் ஒரு பாடசாலையாக இருந்தாலும், அபிவிருத்தி என்ற விடயத்தில் அது பின் தள்ளப்பட்டே வருகின்றது என்ற விடயம் கவலைக்குறியதுதான்.

அதற்கு முதல் காரணம் ஊர்ப்பாகுபாடு,...!

அடுத்தது அரசியல் வாதிகளின் சித்துவிளையாட்டு,...!

அடுத்தது ஆசிரியர்களின் என்னங்கள் எல்லாம் தனியார் வகுப்பு நடத்துவதிலே ஆர்வமாய் இருப்பது,...!

அடுத்தது அந்த பாடசாலையின் அதிபர்களாக வருவதற்கு தகுதியை மீரி ஆசைப்படுவது...!

அடுத்தது ஆசிரியர்கள் கட்சி ரீதியாக பிரிந்து நிற்பது..!

இப்படி பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த காரணங்கள் ஒவ்வொன்றையும் ஆதாரங்களோடு விலாவாரியாக எழுதலாம் அதனை தவிர்த்து மற்றவிடயங்களை பார்ப்போம்.

இந்த பாடசாலை சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பாடசாலையாகும். சுனாமியால் பாதிக்கப்பட்ட வேறு பாடசாலைகளை பல நிறுவனங்கள் நவீன முறையில் புணர் நிர்மானம் செய்து கொடுத்திருக்கும் போது இந்த பாடசாலை மட்டும் புணர்நிர்மானம் செய்யப்படாமல் இருந்தற்கு காரணம் யார்..? என்று கேள்வி கேட்பதற்கும், அதற்கு பதில் சொல்வதற்கும் இங்கே யாரும் தயார் இல்லாத நிலைதான் காணப்படுகின்றது.

அதுவொரு புறமிருக்க, அண்மைக்காலமாக அதிபர் சம்பந்தமான பிரச்சினையொன்று இந்த பாடசாலையில் பெரியதொரு பிரச்சினையாக இருந்து வருவதை நாம் அறிவோம்.

அதிபர்களாக வருபவர்கள் அந்த பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு சில கட்டுப்பாடுகளையும், கண்டிப்புக்களையும் கடைப்பிடிப்பவராக இருந்தால், அவருக்கு ஆசிரியர் மட்டத்திலும், மாணவர்கள் மத்தியிலும் எதிர்ப்பை சம்பாதித்தவராக கடமையாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்.

அதனை ஈடு செய்து தனது கடமையை கொண்டுசெல்வதற்கு அந்த அதிபருக்கு, குடும்ப செல்வாக்கோ, அல்லது அரசியல் செல்வாக்கோ, அல்லது கல்வி அதிகாரிகளின் செல்வாக்கோ தேவைபடுகின்றது, அப்படி எந்த செல்வாக்கும் இல்லாத அதிபர் கண்டிப்பாக நடக்க முற்படுவாரேயானால் அவர் எல்லோராலும் பந்தாடப்படுவார் என்பதே இங்கே எழுதப்படாத சட்டமாக இருந்து வருகின்றது.

அதே நேரம் இதற்கு மாற்றமாக பாடசாலை எப்படி போனாலும் பரவாயில்லை பத்தோடு பதினொன்றாக நாமும் இருந்துவிட்டு, எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காமல் இருந்துவிட்டு போவோம் என்கின்ற அதிபருக்குத்தான் ஆசிரியர்களின் ஆதரவும், மாணவர்களின் ஆதரவும் இருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்த வகையில் பல பிரச்சினைகளை இந்த பாடசாலை சந்தித்து வருகின்றது, தங்களுடைய செயல்பாட்டுக்கு ஒத்துப்போகாத அதிபரை எதிர்ப்பதும், தங்களுடைய செயல்பாட்டுக்கு ஒத்துப்போகின்ற அதிபரை ஆதரிப்பதும், அதே நேரம் ஆதரவு எந்தப்பக்கம் கூடுதலாக இருக்கின்றதோ அந்தப்பக்கம் அரசியல்வாதி பக்கவாத்தியம் இசைப்பதையும் நாம் காண்கின்றோம்.

இந்த பாடசாலைக்குள் பல பிரச்சினைகள் இருப்பதை நாம் அறிந்தாலும் அதையெல்லாம் நாம் விமர்சிப்பதற்கு விரும்பவில்லை, காரணம் அது எமது பாடசாலை மட்டுமல்ல அதனுடைய நண்மை தீமைகள் எம்மையும் எமது சமூகத்தையும் பாதிக்கும் என்ற காரணத்தினாலாகும்.

இருந்தாலும், இந்த பாடசாலையின் விடயங்களில் மற்றவர்களும் கவணமாக இருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டவே இந்த பதிவை நாங்கள் எழுதுகின்றோம்.
யாரும் இந்த பாடசாலையின் விடயங்களில் கவணம் செலுத்தாமல் இருக்கின்றார்கள் என்று என்னிக்கொண்டு எடுத்தேன் கவுத்தேன் என்று இதில் சம்பந்தப்பட்டவர்கள் நடந்துகொள்ளவும் கூடாது.

அரசியல்வாதிகளின் தான்தோற்றித்தனமான செயல்பாடுகளும், தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் தங்களுடைய டியூட்டரிகளுக்கு ஆள்பிடிக்கும் இடமாகவும், இதனை பயன்படுத்துவதை நிறுத்தாதவரை இந்த பாடசாலைக்கு விடிவு கிடைக்காது என்பதே எங்கள் கருத்தாகும்.

ஆகவே தயவு செய்து இப்பாடசாலையின் விடயத்தில் இதில் சம்பந்தபட்டவர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.

தற்போதைக்கு அங்கே அதிபர் பிரச்சினையொன்று நடந்து கொண்டிருப்பதையும் நாங்கள் அவதானித்து வருகின்றோம், அதில் உள்ள சகல விடயங்களையும் நாங்களும் அறிந்துதான் வைத்துள்ளோம், அதில் யார் யார் என்ன நோக்கத்துக்காக செயல்படுகின்றார்கள் என்பதையும் அறிந்துதான் வைத்துள்ளோம்.
அந்த விடயம் நீதி மன்றம் வரையும் சென்றுள்ளதையும் நாம் அறிவோம்.

இதன் நீதி நியாயங்களைப் பற்றி நாங்கள் இவ்விடத்தில் விமர்சிக்க விரும்பவில்லை, அதனால் இந்த விடயத்தில் எங்கள் தொகுதி எம்பி என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என்பதும், கல்வி அமைச்சி என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதும், நீதி மன்றம் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்ற நிலைப்பாட்டையும் பொறுத்து மேலதிக தகவல்களை ஆதாரத்தோடு நீதி தவறாமல் எழுத  உள்ளோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

ஆகவே,...அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்..!

கல்வியை வியாபாரமாக்காமலும், அரசியலாக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள், உங்கள் பக்கம் நாங்கள் இருப்போம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...


க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமையினால், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விண்ணப்பிப்பதற்கான கால எல்லையை நீடிக்குமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் இந்த மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல பரீட்சை சான்றிதழ்களையும் இலவசமாக மீள வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனையில் 279 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மீள் பரிசீலனை செய்வதற்காக 58504 பேர் விண்ணப்பத்திருந்தனர்.

இவ்வாறு மீள் பரிசீலனைக்காக விண்ணபபம் செய்தவர்களில் 279 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மீள்பரிசீலனையின் பின்னரான பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk, www.results.exams.gov.lk என்ற இணைய முகவரிகளின் ஊடாக பார்வையிட முடியும்.

மேலும் பாடசாலை பரீட்சார்த்திகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தபால் மூலம் அவர்களது முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 011-2785230 மற்றும் 1911 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களில் 7 மாணவர்கள் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பவர்களாகும்.

அந்த 10 பேரும் நகர பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.

அதற்கமைய கொழும்பு விஷாக்கா பெண்கள் பாடசாலை மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கண்டி மஹாமாயா பெண்கள் பாடசாலை மாணவி எஸ்.எம்.முனசிங்க இராண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் ஆர்.எம்.சுகத் ரவிது மற்றும் மாத்தரை ராஹுல வித்தியாலயத்தின் திமுத் என்ற மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

கம்பாஹா ரன்னாவலி பெண்கள் வித்தியாலயத்தின் மாணவி எச்.பீ.பபசரா மலிதி குமாரி நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.

கொழும்பு தேவி மகளீர் பாடசாலையின் டீ.எம்.ரனும் திஸரணி நாணயக்கார, காலி சங்கமித்த மகளீர் பாடசாலையின் ஏ.தம்ஸரா மேதாவி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர் ஏ.அபினந்தன் ஆகியோர் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளனர்.

காலி சவுத்லேன்ட் வித்தியாலயத்தின் ரன்தினி டி சில்வா மற்றும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ஈ.ஏ.யசாரா உமாஷி ஆகிய மாணவர்கள் ஆறாம் இடத்தை பிடித்துள்ளனர்.


ஆசிரியர் சேவையில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற 238 பேருக்கு புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


ஆசிரியர் சேவையில் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியன ஒழுங்கு விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றது.

ஆசிரியர் பயிற்சிக்காக வரவுசெலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை பயிற்றுவிப்பாளர்களாக 3 ஆயிரத்து 850 பேரை பயிற்றுவித்து சேவையில் இணைத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற எண்ணக்கருவிற்கு உட்பட்ட திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதற்காக 700 பாடசாலைகளில் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை பாடசாலைக்கு உட்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


தலைமைத்துவம் என்பது நல்ல ஒழுக்க விழுமியங்களோடும் சுயகட்டுப்பாடோடும் வளைந்து கொடுத்து மற்றவர்களுக்கு ஏணியாக இருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டையும் நாட்டையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனவே மாணவ தலைவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.எம்.ஏ. அப்துல் றஸாக் தெரிவித்தார்.

மருதமுனை அல் ஹம்றா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கும், வகுப்புத் தலைவர்களுக்கும் சின்னம் சூட்டிய நிகழ்வு திங்கட்கிழமை அதிபர் ஏ.குணுக்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...

 மாணவத்தலைவர்கள் சக மாணவர்களோடு அண்பாகவும் பண்பாகவும் பழக வேண்டும். எந்த மாணவரையும் தண்டனைக்குட்படுத்துவதும் குற்றம் சுமத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். பாடசாலைக்காலம் பொன்னான காலமாகும். அக்காலம் ஒருபோதும் மீண்டும் வராது.

தற்போது மாணவர்கள் ஆசான்களை மதித்து நடக்கின்ற தன்மை குறைந்து கொண்டு போகின்றது. ஆசான்களை மதிக்காதவர்கள் ஒருபோதும் நல்ல மாணவர்களாக இருக்க முடியாது. ஆகவே மாணவத்தலைவர்கள் சக மாணவர்களோடு அன்பையும், பண்பையும் நல்ல நட்பையும் பேணிக் கொள்வதோடு ஆசான்களையும் மதித்து நடக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கல்முனை முஸ்லிம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல் சக்காப், அதிதிகளாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம் முஸ்தபா, ஆசிய மண்றத்தின் நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம் வலீத் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு 42 மாணவத்தலைவர்களுக்கு நியமன கடிதம் வழங்கி 28 வகுப்புத்தலைவர்களுக்கும் சின்னம் சூட்டப்பட்டது.


மாலபே தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டம் நிறுவனம் தொடர்பிலான பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த விவாதம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி இந்த விவாதம் தொடர்பிலான பிரேரணையை முன்வைத்துள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 11.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இது இடம்பெறவுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

மட்டக்களப்பு நகரில் உள்ள வெள்ளைப்பாலத்தில் இருந்து காந்திபூங்கா வரையில் இந்த மனித சங்கிலி அமைக்கப்பட்டு பட்டதாரிகளினால் போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், தங்களை பயங்கரவாதிகள் போல் பொலிஸார் பார்ப்பதாகவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 மார்ச் 31க்கு பின்னர் பட்டம் பெற்றவர்களுக்கு இதுவரையில் எந்த நியமனங்களையும் வழங்க மத்திய மற்றும் மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லையென பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

காலம்காலமாக பொய் வாக்குறுதிகளையே மத்திய, மாகாண அரசாங்கங்கள் வழங்கி வருவதாகவும், தமது நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் பட்டதாரிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தமது ஆதரவு தொடரும் என தெரிவித்துள்ளனர்.பிரித்தானிய 'எடின்பரோ கோமகன்' சர்வதேச தங்க விருதுக்கு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிசான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (06) அலரி மாளிகையில் நடைபெறவுள்ள 'எடின்பரோ கோமகன்' சர்வதேச விருது வழங்கும் விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.

இளைஞர் ஆளுமை, ஆற்றல், சிறந்த தலைமைத்துவம், சர்வதேச தொடர்புகள் மற்றும் வெளிக்கள ஆய்வுகள் போன்ற துறைகளில் அதிதேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது திட்டத்தில் கிழக்கு மாகாண வரலாற்றில் முதன் முறையாக தங்க விருது பெறும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார்.

'எடின்பரோ கோமகன்' சர்வதேச வெண்கல விருதை 2008ஆம் ஆண்டிலும் வெள்ளி விருதை 2014ஆம் ஆண்டிலும் பெற்றுக்கொண்ட இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பு பீடத்தில் மனித உரிமைத்துறையில் உயர்கல்வி கற்று வருவதுடன் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது சகோதர மொழியான சிங்கள மொழியை கற்றுக்கொள்ள முதலாவதாக இலகுவான சில சிங்கள வார்த்தைகளை தெரிந்துக்கொண்டு முயற்சி செய்யலாம்…..

මම- (மம) நான்
මාච- (மாவ) என்னை
මගේ- (மகே) எனது
මට (மட) எனக்கு
ඔයා- (ஒயா) நீங்கள்,நீ
ඔයාට- (ஒயாட்ட) உங்களுக்கு
ඔයාව- (ஒயாவே) உன்னை
එයාට (எயாட்ட) அவருக்கு
අපේ (அபே) எங்களது
අපි (அபி) நாங்கள்
ඔයාලාගේ (ஒயாலாவே) உங்களுடைய
ඹයාලා (ஒயாலா) நீங்கள்
ඇයලා (எயாலா) அவர்கள்
මෙයාලා (மேயாலா) இவர்கள்ආයුබෝවන් (ஆயுபோவன்) – வணக்கம்

නමුත් (நமுத்) – ஆனால்

පාර (பார) – பாதை

මිල (மில) – விலை

සිංහල (சிங்கள) – சிங்களம்

විනාඩිය ඉන්න (வினாடியக் இன்ன) – ஒரு நிமிடம் நில்லுங்கள்

දරුවා (தருவா) – பிள்ளை

ජලය (ஜலய) – தண்ணீர்

රට (ரட) – நாடு

සල්ලි (சல்லி) காசு

ටික ටික (டிக டிக) – கொஞ்சம் கொஞ்சம்

ගෙදර (கெதர) – வீடு

රැකියාව (ரகியாவ) – வேலைஇடங்களின் பெயர்கள்

வைத்தியசாலை (றோகல) – රෝහල

நகர சபை (நகர சபா) – නගර සභා

பல்கலைக்கழகம் (விஸ்வவித்யாலய) – විශ්වවිද්‍යාලය

பாடசாலை (பாசல) – පාසල

கோவில் (கோவில) – කෝවිල

கிராமம் (கம) – ගම

நகரம் (நகரைய) – නගරය

மாகாணம் (பலாத) – පළාත

மாவட்டம் (டிசாவ) – දිස්ත්රික්කය

விகாரை (பன்சல) – පන්සල

பள்ளிவாசல் (பல்லிய) – පල්ලිය

ஆறு (கங்காவ) – ගංගාව

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.


2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்
கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம்
அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,
அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!
* நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

* சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

* பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

* நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

* மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

* மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

* பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

* உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

* ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

* பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

* பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

* நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

* நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

* ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
* முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

* தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாதுஇந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள் ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய மன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே பிரதமர் சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். 

இதன்பிரகாரம் சிங் கப்பூர் ஷென்கிலா ஹோட்டலில் நாளை நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட் டின் ஆரம்ப நிகழ்வில் அவர் விசேட உரையற்றவுள்ளார்.

இந்த மாநாட்டிற்கு இந்து சமுத்திர வல யகத்தின் பிரதான நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவில் இருந்து, குமார வெல்கமவை மஹிந்த ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் குமார வெல்கமவும் அதில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த மக்களின் எண்ணிகையை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என உறுதியாகியுள்ளதாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஐ நா செய‌லாள‌ர் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் த‌லைமைக‌ளை த‌னியாக‌ ச‌ந்திப்ப‌த‌ற்கு ஐ தே க அர‌சு ஏற்பாடு செய்யாத‌த‌ன் மூல‌ம் இந்த‌ ஆட்சி முஸ்லிம்க‌ளுக்கு துரோக‌மிழைத்துள்ள‌து.


இந்த‌ நாட்டில் ஆயுத‌ம் தாங்கி போராட‌ம‌லேயே பாரிய‌ உயிர், உட‌மை இழ‌ப்புக்க‌ளுக்கு முக‌ம் கொடுத்த‌ ஒரேயொரு இன‌ம் முஸ்லிம்க‌ளாகும். அவ‌ர்க‌ள் த‌னியாக‌ பிரித்துப்பார்த்து கொல்ல‌ப்ப‌ட்ட‌தோடு வ‌ட‌க்கிலிருந்து அனைத்தும் உறிஞ்ச‌ப்ப‌ட்ட‌த‌ன் பின் வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள். அப்ப‌டியிருந்தும் முஸ்லிம் அர‌சிய‌ல் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளின் த‌னித்த‌ர‌ப்பொன்றை பாங்கி மூனுட‌ன் த‌னியாக‌ ச‌ந்திக்க‌ வைக்க‌ முடியாம‌ல் இந்த‌ அர‌சு முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு முதுகில் குத்திய‌மைக்கு கார‌ண‌ம் அர‌சாங்க‌ம் த‌ தே கூட்ட‌மைப்பின் நிக‌ழ்ச்சி நிர‌லுக்கு அடிப‌ணிந்துள்ள‌தா என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி கேட்கிற‌து.

பாங்கிமூனை முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌னித்த‌ர‌ப்பு ச‌ந்தித்தால் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளுக்கு த‌ தே கூட்ட‌மைப்பின‌ர் செய்யும் துரோக‌ங்கள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும் என்ற‌ அச்ச‌த்தின் கார‌ண‌மாக‌ அர‌சாங்க‌ம் முஸ்லிம் த‌ர‌ப்பை ஓர‌ம் க‌ட்டியுள்ள‌தாக‌வே நாம் பார்க்கிறோம்.

ஆக‌வே உட‌ன‌டியாக‌ பிர‌த‌ம‌ர் இது விட‌ய‌த்தில் த‌லையிட்டு பாராளும‌ன்ற‌த்திலும் அத‌ற்கு வெளியிலும் அர‌சிய‌லில் செய‌ற்ப‌டும் முஸ்லிம் க‌ட்சிக‌ளைச்சேர்ந்த‌ "அனைத்து முஸ்லிம் கூட்ட‌மைப்பை" ஐ நா செய‌லாள‌ரை த‌னியாக‌ ச‌ந்தித்து முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ளையும் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்காத‌ அர‌சிய‌ல் தீர்வு குறித்தும் கூறுவ‌த‌ற்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி பிர‌த‌ம‌ர் ர‌ணிலை கேட்டுக்கொள்கிற‌து.அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபியா அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்ட   விவகாரம்” பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விக்கு மேல் கேள்வியாக எழுப்பும் பணி தொடர்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம் சல்மான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இவ் விடயமாக  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.
ஏற்கனவே அவர்  பாராளுமன்றத்தில் வீடமைப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது வீடமைப்பு அமைச்சுக்கு நுரைச்சோலை விவகாரம் தொடர்பில்லை எனவும் மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கண்காணிப்பில் தான் அவ்வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதாக அன்று பதிலளிக்கப்பட்டது.
அதனை தொடந்து சட்டத்தரணி சல்மான் எம்.பி அவர்கள் உள்நாட்டு விவகார அமைச்சரிடம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வீடுகளை பகிர்ந்தளிக்க அரசாங்க  அதிபருக்கு  உத்தரவிடும் வகையிலேயே கேள்வி எழுப்பவுள்ளார்.

நன்றி - SLMCவெளிச்சம் 

MARI themes

Powered by Blogger.