Showing posts with label HOT NEWS. Show all posts


இலங்கை மக்கள் தொகையில் ஒரு லட்சத்துக்கு 65 பேர் காச நோயாளர்களாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய சர்வதேச அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் காச நோயாளர்கள் 13757 பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் கடந்த வருடத்தில் 8886 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் 4871 காச நோயாளர்கள் பொது மக்களில் அடையாளம் காணப்படாதுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த அடையாளம் காணப்படாதவர்களினால், சமூகத்துக்குள் காச நோய் அமைதியான முறையில் பரப்பப்பட்டு வருவதாகவும் தேசிய காச நோய் தடுப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.முருங்கைகீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்து சாப்பிட்டால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முருங்கக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்சனை, சுவாசப்பாதை, செரிமான மண்டலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
முருங்கைக் கீரை சாப்பிடுவதால், அது மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.
முருங்கைக்கீரையில் விட்டமின் A அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கூர்மையான கண் பார்வையை ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.
முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரித்து, தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.


ஸ்மார்ட் போன் அல்லது ஐபோன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் இதே ஸ்மார்ட் போன் அல்லது ஐபோன் நமது உயிரை பறிக்கும் அபாயமும் உள்ளது.

ஐபோன்களை உபயோகிக்கும்போது நாம் செய்யும் சில சிறிய தவறால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில் லண்டனில் குளிக்கச் சென்ற இடத்தில் ஐபோனை சார்ஜ் செய்தவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.

லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் புல் என்பவர் தனது ஐபோனை பாத்ரூமில் சார்ஜில் போட்டுவிட்டு குளித்துள்ளார்.

அப்போது மொபைல் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டது. சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் போது ஈரக்கையினால் அந்த ஐபோனை அவர் தொட்ட போது மின்சார ஷாக் அடித்து மயங்கி விழுந்தார்.

பாத்ரூமில் விழுந்ததால் அவரது நிலையை யாரும் அறிய முடியாததால் பரிதாபமாக அவர் ஒருசில மணித்துளிகளில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

இருப்பினும் இந்த மரணத்திற்கு பின்னால் வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்த நிகழ்வு நடைபெறவுள்ள இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சஞ்சரித்த யாழ்ப்பாணத்து இளைஞர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்கான முன் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தாமரைத் தடாகம் அமைந்துள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பெண்புலிப் போராளி ஒருவரின் சகோதரரான முருகய்யா சர்மலன் என்பவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க குறித்த நபரை எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரது தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக, அவரது சகோதரியின் அடையாள அட்டையையும் அவர் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.


கிழக்கு மாகாண அமைச்சர் தனது தொழில் நிமித்தம் இடமாற்றம் கோரிய போது தன்னை பங்களாவுக்கு வரச்சொல்லி தனது வாகனத்தை அனுப்பினார் என கண்ணீருடன் அழுது தன்னிடம் அந்தப் பெண் சொன்னார் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் பாலமுனையில் இன்று நடைபெற்ற மக்கள் விழிப்புக் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்தார்.

பாலமுனை பிரதான வீதியில் இன்று (12) இரவு நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்தும் பேசிய அன்சில் தமது பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்று மாகாண அதிகாரம் பெற்ற இந்த நபர்களுக்காக எமது பிரதேச மக்களிடம் வாக்கு கேட்டதனையிட்டு தாம் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


அளுத்கம பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியுள்ளது.

இவ்வாறு நோய்த் தொற்று பரவிய மாணவர்களை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த பாடசாலை மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய அழகுக் கலை நிபுணர் ஒருவரும் மற்றுமொரு நபரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவருவரும் களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் பாரதீ விஜேரட்ன உத்தரவிட்டுள்ளார்.

பெண்களின் உடல் அமைப்பினைக் கொண்ட அழகுக்கலை நிபுணர்கள் திருமணப் பெண்களை அழகுபடுத்துவதில் நிபுணராக கடமையாற்றியுள்ளார்.

குறித்த நபர் சிறைச்சாலையில் தனியான ஓர் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எச்.ஐ.வீ நோய்த் தொற்றுப் பரவிய மாணவர் ஒருவரின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகவும் பாட்டியுடன் மாணவர் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 மற்றும் 16 வயதான மாணவர்களே இவ்வாறு நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இவ்வாறு நோய்த் தொற்றுக்கு இலக்காவோர் தொடர்பில் கண்டறிவதற்காக பொலிஸ் விசேட குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறுவதனால் பிள்ளைகள் இவ்வாறான நோய்களினால் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் தெளிவுபடுத்தப்பட உள்ளனர்.


அக்கரைப்பற்று, அம்பாரை வீதி 3ஆம் கட்டை வயல் பகுதிக்குள் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் காணப்படுகின்றது.. யாருடைய சடலம் என்று இனம் காணமுடியாதளவு சிதைவடைந்து காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்தலத்தில் பொலிசாரும் பொதுமக்களும்.
தகவல்: மொஹமட் ரிஸ்வான்


கைத்தொலைபேசி என்பது மிக எளிய முறையில் திருட்டு போகும் ஒரு பொருள். நமது உடைகளில் உள்ள பைகளில் இருந்தோ அல்லது கைப்பையில் இருந்தோ கைதேர்ந்த திருடர்களுக்கு கைத்தொலைபேசியை திருடுவது என்பது எளிதான விஷயமாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் திருட்டு போன கைத்தொலைபேசியை கண்டுபிடிப்பது என்பதும் சாதாரண விஷயம் இல்லை.


திருடப்பட்ட கைத்தொலைபேசி உடனடியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு பின்னர் அதன் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டால் அந்த கைத்தொலைபேசியை உரியவர் மறந்துவிட வேண்டியதுதான்.

ஆனால் சென்னை வாலிபர் ஒருவரின் தொலைந்த கைத்தொலைபேசியை ஒருசில மணி நேரங்களில் கண்டுபிடித்து சென்னை போலீஸ் சாதனை செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த சுனைஸ் ரெஹ்மான் என்ற 20வயது வாலிபர் ஒருவர் சமீபத்தில் தனது கைத்தொலைபேசியை தொலைத்து விட்டார். ஆனால் அதற்காக அவர் சிறிதுகூட கவலைப்படவில்லை.

அவருடைய மொபைல் போனில் McAfee security என்ற செயலியை அவர் இன்ஸ்டால் செய்திருந்தார். இந்த செயலி, போனை மூன்று முறைக்கு மேல் தவறான பேட்டர்ன் (pattern)ஐ பயன்படுத்தினால் உடனடியாக செல்பி எடுத்து போனுக்குரியவருக்கு இமெயில் அனுப்பிவிடும். அதுமட்டுமின்றி போன் இருக்கும் இடத்தையும் நேரத்தையும் தெரிவித்து விடும்.

இதுபோல் போனில் இருந்து வந்த இமெயிலை பிரிண்ட் எடுத்து வாலிபர் ரெஹ்மான் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இமெயிலில் வந்த புகைப்படம், அதில் இருந்த நேரம், இடம் ஆகியவற்றை வைத்து சைபர் க்ரைம் காவல்துறையின் உதவியால் போலீசார் ஒருசில மணி நேரத்தில் திருடனை பிடித்துவிட்டனர்.

இதுகுறித்து ரெஹ்மான் கூறியபோது McAfee security என்ற செக்யூரிட்டி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து கொண்டால் அனைவரும் இதேபோன்று தங்கள் மொபைல் திருட்டு போனால் எளிதில் மீட்டுவிடலாம் என்று தெரிவித்தார்.


பெரும்பாலான தேசிய ஊடகங்களின் பொய்ச் செய்திகள், பொய்ப் பிரச்சாரங்களின் காரணமாக இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என உலக பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஊடக நெறிமுறைகளையோ, சமூக பொறுப்போ இல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இந்திய ஊடகங்கள் செயல்பட்டு வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களின் எழுச்சி காரணமாக ஊடகங்களின் இந்த போலி தன்மை வெளிப்பட்டு விட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பத்திரிகையாளர்கள் என தங்களை கூறிக்கொண்டு, ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்களைப் போல் சில பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களில் இந்திய ஊடகத்துறை இரண்டாம் இடம் வகிக்கிறது என்ற தலைப்பில் உலக பொருளாதார மன்றம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம் இந்த சர்வேயில் ஈடுபட்டது. இந்த நிறுவனம் கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் கால்பதித்து வருவதோடு, 38 நாடுகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

ஊடகங்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் (என்.ஜி.ஓ) ஆகியவற்றின் நம்பகத் தன்மை பற்றியும் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. நம்பகத்தன்மையற்ற ஊடகங்கள் உள்ள நாடுகளில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 3வது இடத்தில் அயர்லாந்தும், 4வது இடத்தில் சிங்கப்பூரும், 5வது இடத்தில் துருக்கியும் உள்ளன. உலகின் 3ல் 2 பங்கு நாடுகளில் ஊடகங்கள் பற்றி மக்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவிக்கின்றனர்.


நல்லாட்சியை கொண்டுவருவதற்காக ஞானசார தேரர் என்ன தியாகம் செய்தாரோ அதே போன்றதொரு தியாகத்தை கிழக்கு  மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சி வெற்றி பெருவதற்காக செய்யப்போகின்றார்.

ஏன் என்றால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தினால், மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர் அணியே வெற்றிபெருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. அதனால்  ஜனாதிபதி மைத்திரி அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தலாக இத்தேர்தல் உள்ளதால் அதில் தோல்வியடைந்தால் மைத்திரி அரசாங்கம் பெருத்த அவமானத்தை சந்திக்க நேரிடும்.

அதற்காகவே உள்ளூராட்சி தேர்தலை பிற்படுத்தி கிழக்கு மாகாண சபை தேர்தலை முதலில் நல்லாட்சி சந்திக்கப் போகிறது.

கிழக்கு மாகாண தேர்தலை வெற்றி கொள்ள கிழக்கு முஸ்லிம்களின் உணர்ச்சிகளை தூண்டி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து ஞான சாரவின் சம்மதத்துடனேயே குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஞானசார தேரர் கைது செய்யப்படுவார்.

அதுவே போதும் கிழக்கு முஸ்லிம்கள் மைத்திரியை ஆதரிப்பதற்கு

கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி தனது முதலாவது தேர்தலில் மஹிந்தவை தோற்கடித்து விட்டேன் என்ற செய்தியை பெரும்பான்மை சிங்களவர்களுக்கு சொல்ல முஸ்லிம்களின் உணர்ச்சியை மீண்டும் ஒரு தடவை நல்லாட்சி பயன்படுத்தப் போகின்றது.

இது நிச்சயம்....

எம்.எச்.எம் இப்றாஹிம்
கல்முனை...


மருதாணை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர்  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருதாணை பொலிஸ் நிலைய பொலிஸ் சமூக நலப்பிரிவின் பொறுப்பதிகாரியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாப்பாட தம்பி காக்காட புள்ளைகளுக்கு சாச்சாவா இரிக்கலாம், புள்ளைகள்ட உம்மாக்கு புருஷனா இரிக்க ஏலா

-பஷீர் சேகுதாவூத்-

பெருந்தலைவர் நமது வாப்பா நம்மை சமூக விடுதலைக்காய் உணர்ச்சி வசப்படுத்தினார், வாப்பா மௌத்தான பின் சின்னாப்பா பிள்ளைகளைத் தத்ததெடுத்தார். இவர் நம்மை உணர்ச்சி விஷப்படுத்தினார், நமது கிழக்கு உம்மாவுக்கு இவர் புருஷன் வேஷம் போடணுமாம். வாப்பாட இடத்துல உன்ன வெக்கேலா, சின்னாப்பா அந்தஸ்து தந்தா உம்மாக்கு புருஷனாக முடியாது என கிழக்கு மு.கா போராளிகள் நிரூபிக்கும் காலம் இது.
சாலை விதிகளை மதிக்காத அரசியல் பிரமுகர்கள்  Abdul Rauff Hakeem
(Minister of Urban Development, Water Supply and Drainage)

Ahamed Nazeer Zainulabdeen (CM Eastern Province)

எவ்வாறு வேலையற்ற பட்டதாரிகளின் மனோநிலையினை மதிப்பார்கள்???....
இன்றைய தினம் (04.03.2017) நன்பகல் 01.30 மணியளவில், வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு தீர்வினை எவராவது பெற்றுதருவார்கள் என காத்திருந்த வேளையில் எமது சத்தியாக்கிரக போராட்டத்தை சிறிதும் பொருட்படுத்தாமல், எமது போராட்டம் இடம்பெறும் இடத்தின் முன்பாக உள்ள விபுலானந்த சதுக்க கட்டாய சுற்றுவட்டப்பாதை ஒழுங்கு விதியை மீறியும், பாதசாரி கடவையை மீறியும் போக்குவரத்து பொலிசார் கடமையில் இருந்தவேளை அனைத்து வாகனங்களும் முந்தி சென்றன. இதுதான் உண்மையான நல்லாட்சி.
   
MJM.சாஜித்
போடா வெளியே என யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தைத் திட்டிய சம்பவம் இன்று சனிக்கிழமை(04) யாழில் இடம்பெற்றுள்ளது.

இன்று சனிக்கிழமை(04) யாழ்.விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன "ஜனாதிபதிக்குத் தெரிவியுங்கள்" எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் போனவர்கள் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வலி.வடக்கு மக்களின் காணி விடுவிப்பு என்பவற்றை வலியுறுத்தியும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகஏ-9 வீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்.

பலத்த பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் பாதுகாப்பையும் மீறி வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மக்கள் ஏ - 9 வீதியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தனர்.
இதன் போது மக்கள் "காணாமற் போனவர்கள் எங்கே", "பதில் சொல் பதில் சொல் ஜனாதிபதியே பதில் சொல்" உள்ளிட்ட பல்வேறு கோஷங்களையும் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணி ஆரம்பித்து சற்று நேரத்தில் அவ்விடத்திற்கு வருகை தந்த யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பட்டதாரிகள் இங்கு அமைதி வழியில் போராடி வருகின்றனர் . எனவே, பேரணி நடாத்துவது ஏற்கக் கூடிய விடயமல்ல எனத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சிவாஜிலிங்கம் 'அது வேற பிரச்சினை....இது வேறு பிரச்சினை'எனத் தெரிவித்துள்ளார். பின்னர் பேரணி நடாத்த வேண்டாம். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த போதும் பேரணி தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஏ -09 வீதியில் வீதியின் நடுவே சிவாஜிலிங்கம்உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்து வீதி மறியலிலும் ஈடுபட்டனர். வீதிமறியலில் ஈடுபட்ட போது மீண்டும் அங்கு வருகை தந்த யாழ். மாவட்ட சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் சிவாஜிலிங்கத்துடன் முரண்பட்டுள்ளார்.

சிவாஜிலிங்கத்தை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். 'அதற்கு நீ யார் என்னை இங்கிருந்து வெளியேறச் சொல்வதற்கு... நான் இங்கே தானிருப்பேன்....' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்க அதற்கு யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் 'நீ யார் ரோட்டில நிற்கிறதுக்குப் போடா வெளியே! என யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடும் கைகாட்டியவாறு மிரட்டும் தொனியில் கூறினார்.

நன்றி
தமிழ்வின்


நேற்று நடைபெற்ற நிந்தவூர் மக்கள் எழுச்சியின் வெற்றியின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் ஹஸன் அலியுடன் இணையத்தொடங்கியுள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன.

சாய்ந்தமருதில் சிலகாலத்துக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் மு.கா. தலைவர் ஹகீம், பி.தலைவர்கள் முழக்கம் மஜீத், ஹரீஸ் உட்பட பலர் இருந்த மேடையில் உரையாற்றும் போது உங்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல என் மனம் நாடுகிறது என பகிரங்கமாய் பேசியவரே மாகாண சபை உறுப்பினர் ஜவாத்.

பல சந்தர்ப்பங்களில் ஜவாதை புறந்தள்ளும் காரியங்களை ஹகீம்  செய்திருக்கின்றார் என்பது ஜவாத் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டாகும்

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக சிரமப்பட்டவர்களில் ஜவாதும் ஒருவர் என்பதுடன் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்திலிருக்கும்  ஆரம்ப போராளிகள் சிலரில் இவரும் ஒருவராவார்.

ஹஸன் அலியின் விடயத்தில் சமரசம் செய்வதற்கென அமைக்கப்பட்ட நால்வர் கொண்ட குழுவில் இவரும் ஒருவராய் இருந்தார்.

கட்சியின் உயர்பீட கூட்டங்களில் ஹஸன் அலிக்கு சார்பாக உரத்துப்பேசுபவர்களில் ஜவாதும் அன்ஸிலும் குறிப்பிடத்தக்கவர்கள்.

நேற்று நிந்தவூரில்  நடைபெற்ற மக்கள் எழுச்சி கூட்டத்தில் அன்ஸில் மேடையேறி உரையாற்றி தன்னை ஹஸன் அலியுடன் அடையாளம் காட்டிக்கொண்டார்.

ஹஸன் அலி மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள ஜவாத் நேற்றைய நிந்தவூர் எழுச்சிக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் மிகவிரைவில் பகிரங்கமாய் ஹஸன் அலியுடன் இணைவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள்  ஊர்ஜிதம் செய்கின்றனர்.

அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த பல உயர்பீட உறுப்பினர்கள் ஹஸன் அலிக்கு ஆதரவளிக்கும் அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட மு.கா. மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கும் ஹஸன் அலி அணியுடன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


துபாயிலிருந்து நாடு திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்கள் அடங்கிய பயணப் பொதிகளுக்கு துபாய் விமான நிலைய நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை மார்ச் 8 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி பிரயாணிகள் தங்கள் பயண உடைமைகளைக் கொண்டு செல்லும் முறையில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன்படி,

1. ஒழுங்கற்ற வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்பட மாட்டாது

2. அதிக எடை கொண்ட பயண உடைமைகள் அனுமதிக்கப்பட மாட்டாது

3. வட்ட வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்பட மாட்டாது

4. அனைத்து பயண உடைமைகளும் தட்டையானதாக இருக்க வேண்டும்

பொதிகளைப் பராமரிக்க‌ உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கருவியை துபாய் விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது.

இதனால் வட்ட வடிவம், ஒழுங்கற்ற மற்றும் அதிக எடை கொண்ட பெட்டிகளால் ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்யவே இந்த விதிமுறைகள் பயன்பாட்டிற்கு வருகின்றன.


சிரேஸ்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான விஜயகுமாரதுங்கவை ஜே.வி.பி. யினரே படுகொலை செய்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சியினர் தமக்கு எதிராக கூக்குரல் எழுப்பி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்திற்கான உரிமையை கைவசப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஜே.வி.பி.யினர் இவ்வாறான இழிசெயலில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியினரும் நானும் இந்தப் போராட்டத்தை வழிநடத்தி வருகின்றோம். இந்தப் போராட்டங்களின் போது ஜே.வி.பி.யின் சிறு குழுக்கள் எமது போராட்டங்களுக்கு எதிராக கூக்குரல் எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

ஜே.வி.பி.யினர் எந்தவொருக் காலத்திலும் காட்டிக் கொடுப்புக்களை செய்யாமல் இருந்ததில்லை. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்த போது ஜே.வி.பி.யினர் அதற்கு தடை போடுகின்றனர்.

இந்தப் போராட்டத்தை தாமே நடத்துவதாக மக்கள் மத்தியில் நற்பெயரை எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். கடந்த காலங்களில் ஜே.வி.பியினர் என்ன செய்தார்கள் என்பது எமக்குத் தெரியாமலில்லை.

விஜயகுமாரதுங்கவை ஜே.வி.பி.யினரே படுகொலை செய்தனர், அரசியல் கட்சிகளின் தலைவர்களை கொலை செய்தனர். அப்பாவி பொதுமக்களை கொலை செய்தனர். அவர்கள் என்ன செய்யவில்லை?

அவற்றை எல்லாம் மறந்து விட்டு இன்று எங்களுக்கு தடை ஏற்படுத்துகின்றனர் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


பாதாள உலக பேர்வழிகளைக் குறி வைத்து தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய கைதிகளுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் குற்றவாளிகள் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களையும் கண்காணிக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சிறைப் பாதுகாப்பு மற்றும் பொலிசாரை நொந்து கொள்வதை விடுத்து முன்னேற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொலிஸ் சிந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


'தம்புள்ளை பள்ளிவாசலைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளின்கீழ் நாடு பூராகவும் கையெழுத்துத் திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கொழும்பு , மருதானை சாஹிரா பள்ளி வாசல் முன் கையெழுத்துத் திரட்டப்பட்டது. இன்று முதல் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்தப் பணி முன்னெடுக்கப்படும்.

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இனவாதிகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர். நல்லாட்சியும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

எனவே, பள்ளிவாசல் பாதுகாக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தியே இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது" என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லார் தெரிவித்தார்.


குவைத்தில் இலங்கை பெண் ஒருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பெண் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர் மாடி கட்டடம் ஒன்றிலேயே இரு இலங்கையரும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த கட்டடத் தொகுதியில் தீ பிடித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் பொலிஸாரின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.

இதன் பின்னரே குறித்த அறையில் எரிந்த நிலையில் இலங்கைப் பெண் மீட்கப்பட்டு பெப்டைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதித்தை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி குறித்த இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரியிடம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இலங்கைப் பெண் அதே நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடனேயே தங்கி வந்துள்ளார் என்று பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

இருப்பினும் சம்பவம் தொடர்பில் இலங்கைப் பிரஜையிடம் விசாரணை மேற்கொண்ட போது, பெண் தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்தார். எனவே அவரை காப்பாற்ற முயற்சித்த போதே தன் கை மற்றும் கால்களில்

தீக்காயம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அவரது சாட்சியத்தில் நம்பிக்கை இல்லை என்பதால் குறித்த நபரை அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

MARI themes

Powered by Blogger.