Showing posts with label NDPHR. Show all posts
தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் சகல முஸ்லிம்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி விடுத்துள்ள ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரித்திருப்பதானது
பல கொடுமையான சம்பவங்களை கடந்தும் பல இன்னல்களை கடந்தும் இத்தாய் திருநாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லிங்கள் சற்று நிம்மதி பெருமூச்சி விட ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் மீண்டும் பல கசப்பான அனுபவங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை உருவாக்க சில தீய சக்திகள் முனைவதை மக்கள் புரிந்து கொண்டு புத்தியுடன் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும் சில அரசியல் தலைவர்கள் தமது சுக போகங்களுக்காகவும், பல சலுகைகளை பெரும் நோக்கிலும் முஸ்லிம்களை அடமானம் வைத்து முஸ்லிம்களை அநாதையாக்க முனைவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் பல தியாகங்களை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டவர்கள் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு இன்நல்லாட்சியில் முஸ்லிங்களின் தீராத பல பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வரவேண்டும் என்றும்,முஸ்லிம் தலைமைகள் இது விடயத்தில் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கிறேன் என  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அல்-மீஸான் அறக்கட்டளை தவிசாளருமான அல்-ஹாஜ் ஹுதா உமர் விடுத்துள்ள ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.ஆஸாத் (சட்டக்கல்லூரி)

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வேதாந்தி தனது வாழ்த்து அறிக்கையில், முஸ்லிம் சமுகத்தின் சமகால இயங்கு நிலையை சித்தரிக்கும் யதார்த்தபூர்வமான கவிதையொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

அகதிகளான நமது சமுகமும்
அடிமைகளான நமது தலைமயும்
இனத்தை தொலைத்த இளைஞர் கூட்டமும்
திகத்தின் சுகத்தை விரும்பும் மக்களும்
எம்மைச் சூழ்ந்த அறியாமைகளும்
எதற்கும் நடுங்கும் எமது மனங்களும்
நம்மோடு இருக்கும் நாட்கள் வரைக்கும்
நமக்கும் தியாகத் திருநாள் உண்டோ

– வேதாந்தி –


கடந்த சில நாட்களாக  இனையதளங்கள் மற்றும் முகநூல் போன்றவற்றில் மிகவும் பரபரப்பாக வெளி வந்த செய்தி தான் அன்மையில் மாவடிப்பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி  ஹக்கீமின் தம்பி தவம் ஐயா நடத்திய பத்திரிகையாளர் மகாநாடு பற்றிய செய்தி

தவம் ஐயா விறால் இல்லா குளத்துக்கு கோரட்டை மீன் அதிகாரி என்பது தன்னை நினைத்து கொண்டு வீர வசனம் பேசுகிறார் அவைகள் யாவும் தன்னை தானே திருப்திப்படுத்தி கொண்டு சிரித்து கொள்ள அவர் அடிக்கடி சிறு சிறு அறிக்கை விடுவது வழமையாகி விட்டது அதனால் தவம் ஐயாவின் அறிக்கையை நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை

தவம் ஐயாவின் அறிக்கையை சிலர் பெரிதாக நினைத்து அவரோடு சண்டை பிடிக்கின்றனர் அதில் அப்படி பலர் விசனம் தெரிவிக்கும் போது தவம் ஐயாவுக்கு கணவிலும் சிரிப்பு வரும் அதனால் மீண்டும் மீண்டும் ஹக்கீமின் ஆலோசனைப்படி அறிக்கை விட்டுக் கொண்டே இருப்பார் அவரின் கருத்துக்களை நாம் பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை

தவம் ஐயாவை பற்றி பலர் எழுதியுள்ளனர் அதனால் அவரின் அரசியல் வரலாற்றை நான் எழுத விரும்பவில்லை அவர் தூடிப்பானவர் படித்தவர் சமுதாய சிந்தனை கொண்டவர்  மக்களுக்கு சேவை செய்பவர் என்று தான் கடந்த மாகாண தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் அதிக வாங்கு அளித்து கௌரவாடுத்தினாகள் ஆனால் இப்போது அவர் முஸ்லிம் சமுதாயதை ஏமாற்றி  அரசியல் செய்பவரின் ஊது குழலாக இருப்பார் என்று மக்கள் நினைக்க வில்லை இன்று தவம் ஐயா ஆப்பு அடிப்பவரின் அரசியலை நிலை நிறுத்த போராடுகிறாரே தவிர எமது சமுதாயத்தை ஏமாற்றி அழிக்க நினைக்கும்  ஆசாமிக்கு எதிராக போராட வில்லை என்பது தவம் ஐயாவுக்கு வாக்களித்த மக்களுக்கு புரிந்து விட்டது அதில் நானும் ஒருவன் அதனால் தவம் ஐயாவுவின் அரசியல் இன்னும் நான்கு மாதத்துடன் முடிந்து விடும் என்பதில் சந்தேகமில்லை மக்கள் செய்யா விட்டாலும் தலையை தடாவி கண்களை பிடுங்கும் அவரது அண்னன் ஐயா றவூப்பு ஹக்கீம் செய்து விடுவார் அதை தப்பி தவம் ஐயா புறிந்து கொள்ள கொஞ்ச காலமெடுக்கும் அப்போது அதாவுல்லாஹ் .தேசிய தலைவர் றிசாத் ஆகியோரின் நற்பன்பை உணர்ந்து கொள்வார்

பொதுமக்களின் வாசிப்பு திறனை உக்குவிக்க  அமைச்சர் றிஷாட் உதவிய போது அதை அரசியல்  அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பது என்பது மனிதாபிமான செயல் அல்ல எமது முஸ்லிம் சமுதாயத்துக்கு ஏதாவது நல்ல காரியம் நடக்கும் போது அரசியல் வேறுபாடுயின்றி அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அப்படியானவர்களை தான் நமது சமுதாயம் இன்று எதிர்பார்க்கிறது

16 வருடமாக கண்டி மண்னனை தலைமை தாங்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அம்பாறை மக்கள் ஆதரித்து கண்ட பலன் ஏதுவுமில்லை அம்பாறை மக்களை ஏமாற்றி சொத்து தேடி சொகுசாக கண்டி ராசாவின் கூட்டம் வாழ்ந்து வருகிறார்கள் அந்த கூட்டத்தை விரட்ட 16 வருடமாக மக்கள் தேடிய செயல் வீரன் சமுதாய சிந்தனைவாதி அமைச்சர் றிசாத் அவர்களால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த மக்கள் கடந்த தேர்தலில் அழைத்து வந்து தேசிய தலைவர் றிஷாட் என்பதை ஏற்றுக் கொண்டு இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் 85% வீத ஆதரவை பெற்று இருக்கின்றார் அது போல் அந்த மக்களின் பல வருடமாக இருந்த பிரச்சினைகளை தேசிய தலைவர் தீர்த்து வைத்துள்ளார் இதனால் அரசியல் வாழ்வை முடிக்க இருக்கும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் அறிக்கையை மக்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள் அவர்கள் அறிக்கையை தேசிய தலைவர் காதில் எடுக்கவும்மாட்டார் போலி பிரச்சாரம் புஸ்வானம் ஆகி விடும் என்பதை வங்குரோத்து அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்

எனவே இன்று நாட்டு மக்கள் ஏமாற்றுவாதிகளை புறந்தள்ளி முஸ்லிம்களின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் மட்டுமே என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் அது போல் அரசாங்கம் மற்றும்  உலக முஸ்லிம் அமைப்பு என்பனவற்றுக்கு கூட தெரியும் இலங்கையில் அதிக முஸ்லிம்களின் ஆதரவு அமைச்சர் றிசாத் அவர்களுக்கு உள்ளது என்று

எனவே இந்த பொய் பிரச்சாரம் மகாநாடுகளை நடத்தி மூக்கை உடைக்காமல் மக்கள் விரும்பும் தேசிய தாலைவர் றிசாத் அவர்களின் கரத்தை பலப்படுத்த சகல அரசியல்வாதிகளும் முன் வர வேண்டும்

ஜெமீல் அகமட்


கிழக்கு மாகாண மூவின மக்களும் கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைப்போன்று தனியாக சகல அதிகாரங்களும் பெற்று கிழக்கு மக்காளால் ஆட்சி செய்யப்பட்டு அபிவிருத்திகள் கண்டும் வருகிறது எனவே எமது கிழக்கு மாகாணத்தை நாம் சொந்தம் கொண்டாட நினைப்பது எவ்வாறு துரோகமாகும் ?

வடக்கிலே உள்ள மேல்சாதி இனம் என தம்மைத் தாமே பீத்திக் கொள்பவர்கள் கிழக்கு மக்களான எம்மை ஆழ நினைப்பது எந்தவகையில் நியாயம்? வடக்கு கிழக்கை இணைக்க துடிப்பவர்களுக்கு இது துரோகமாகப் படவில்லையா? இல்லை எங்களை தனியாக சுதந்திரமாக விடுங்கள் என்று நாங்கள் கூறுவது பிரதேசவாதமா? அல்லது துரோகமா?

கிழக்கில் உள்ள தன்மானம் உள்ள தமிழன் கிழக்கை வடக்கோடு இணைக்க ஒருபோதுமே சம்மதிக்கமாட்டான்.

இங்கே சிலர் மாகாணங்களை இணைப்பதற்குரிய சட்டம், பற்றி பேசுகிறார்கள், இந்த சட்டங்களை  அமுல்செய்தா 1987 இல் தற்காலிகமாக இணைத்தார்கள்?

இன்னும் சிலர் கேட்கிறார்கள் ஹக்கிமால் முடியுமா? இல்லை  மக்கள் வாக்களித்த கட்சியின் தலைவர், அவரால் பேச்சுவார்த்தை மேசையில் மக்கள் பிரதிநியாக அமர முடியுமா? அவரால் முடியும். நிச்சயமாக மக்களால் முடியாது. எனவே ஹக்கிமை நம்பி ஒருதடவை (2002 இல் அனுப்பி) அடிமை சாசனத்தில் கையொப்பமிட்ட பயம் இன்னும் எங்களுக்கு இருக்கிறது, எனவே நாளை ஏதாவது நடக்கக்கூடிய சாத்தியம் இருப்பின், ஹக்கிமை  நம்ப முடியாது.

எனவே கிழக்கான் யாராக இருந்தாலும் தனது மாகாணத்தின் சுயகெளரவத்தைப்பற்றி பேசுவது அல்லது  அதற்காக குரல் கொடுப்பது எந்த வகையில் கிழக்குவாதம் என்று விடயம், தெரிந்வர்கள் கூறுமாறு கேட்டுக்கொள்ளுவதோடு இது தொடர்பில் கிழக்கு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

YB முஸ்தபா (பொறியிலாளர்)
அக்கரைப்பற்று
பல காலமாக எவராலும் கவனிக்கப்படாதிருந்த அக்கரைப்பற்று 5 இல் அமைந்துள்ள மன்ப உல் ஹைராத் பெண்கள் அரபிக் கல்லூரி 20 லட்சம் ரூபா செலவில் புணர்நிர்மானம் செய்யப்படவுள்ளதுடன் மாணவிகளுக்கான தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளது.

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவாவின் திட்ட ஆலோசனைக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் மிக விரைவில் நடைபெறவுள்ளது.

ஊடகப்பிரிவு
Masihudeen Inamullah

முஸ்லிம் சமூகத்திற்குள் இயக்க வெறி பிளவுகளை பித்னாக்களை ஏற்படுத்துகின்ற அனாமதேய பிரசுரங்களை குறிப்பாக சமூக வலைதளங்களில் பகிரும் கோழைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் படல் வேண்டும்!

குறிப்பாக POLICE – Cyber Crimes Division ஊடாக முறையீடு மேற்கொள்ளப் பட்டு, இயக்கவெறி காழ்ப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்ளும், வன்முறைகளைத் தூண்டுவோரை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த சம்பந்தப் பட்ட அமைப்புக்கள் கால தாமதமின்றி உரிய நகர்வுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்!

இந்தநாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சமாதான சகவாழ்வு, மத சகிப்புத்தன்மை போன்ற உன்னத இலக்குகளிற்கு வரலாறு நெடுகிலும் மதிப்பளித்து அவற்றிகாக பெரும் விலையையும் கொடுத்துவரும் முஸ்லிம் சமூகத்தின் அந்தஸ்திற்கும் அறிவு முதிர்சியிற்கும் பாரிய சேதம் விளைவிக்கின்ற..

அல்லது,

முஸ்லிம் சமூகத்தை வீணான சர்சைகளிற்குள் இழுத்துச் செல்கின்ற அதிகப் பிரசங்கித் தனமான ஆக்ரோஷமான கருத்து வெளியீடுகள், அறிக்கைகள், மாநாடுகள் குறித்து முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்வதோடு பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ளுதல் வேண்டும்.

விளம்பர விரும்பிகளான உசார் மடையர்களினதும் ஆத்திரக் காரணனினதும் முட்டாள் தனங்களிற்கு அரசியல் அல்லது சன்மார்க்க சாயங்கள் பூசப்படுகின்ற அவல நிலை தொடர்வது ஆரோக்கியமான வெளிப்பாடாக தெரியவில்லை.

சமூகத்தினதும், தேசத்தினதும் வரலாற்றில் மிகவும் தீர்க்கமான ஒரு காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கின்றோம், முஸ்லிம்கள் மிகவும் நிதானமாகவும், பொறுப்புணர்வுடனும், கட்டுக்கோப்பாகவும் களநிலவரங்களை கையாளவும் கருத்துக்களை வெளியிடவும் வேண்டும்.திகாமடுல்ல அக்பர்

வெகுண்டு எழுந்தார் பஸீர் சேகு தாவூத் ,மர்மக்கதையின் மறுபக்கத்தை புரட்டினார்.அதிஉயர் பீட உறுப்பினரின் கேள்விகளுக்கு 8 மாதங்கள் கடந்தும் பதில்  கிடைக்காமை குறித்து ஆத்திரம் கொண்டார்.

 அதிஉயர் பீட உறுப்பினரின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வற்புறுத்தி 2016. ஜுன் 3ல் ஹக்கீமுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பபினார்..

ஹக்கீம்  அதற்கும் அசையவில்லை.

மீண்டும் 2016. ஜுலை 11 ல் பஸீர் சேகு தாவூத் , மர்மக்கதை பற்றிய 12 கேள்விகளுடன் ஹக்கீமுக்கு  பகிரங்க கடிதமொன்றை அனுப்பினார்.

1) LOTUS அமைப்பின் பரிபாலன சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எங்கே?

2) LOTUS அமைப்பின் பரிபாலன சபையின் கீழுள்ள வேறு சொத்துக்களின்
விபரமும் அதன்  வருமானம் எங்கே? அதனை பரிபாலிப்பவர்கள் யார்?

3)தாருஸ்ஸலாமின் தற்போதைய சட்ட ரீதியான உருத்தாளிகள் யார்?

4) யுனிட்டி பில்டர்ஸ் பணிப்பாளர் சபையினர்களின்   பெயர் பட்டியல் எங்கே?

5)
* தாருஸ்ஸலாமின்  மாத வருமானம் எவ்வளவு?
*கடந்த 16 வருட  வருமானம்  எங்கே?
*இவை SLMC இன் கணக்கில் வைப்பிருக்கை செய்யப்பட்டதா?
*வங்கியின் கணக்கு இலக்கம் எங்கே?
*இந்த வருமானம் வருடாந்த வரவு செலவு அறிக்கையில்
  சேர்க்கப்பட்டதா?

6)
 *LOTUS அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா?
*எங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது?
* அதன் பதிவு இலக்கம் என்ன?
*கடந்த 16 வருடங்களாக பதிவு செய்யப்படாமைக்கான காரணம் என்ன?7
* "யுனிட்டி பில்டர்ஸ் பிரய்வட் லிமிட்டெட் " என்று அழைக்கப்படும் நிறுவனத்தை, கம்பனிகள் பதிவாளர்  திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட (1998) நாள்முதல் கொண்டு, இன்றுவரை அதில் பணிபுரிந்த பணிப்பாளர்களின்  விபரங்களை  பகிரங்க படுத்துக.

 * "யுனிட்டி பில்டர்ஸ் பிரய்வட் லிமிட்டெட் " என்று அழைக்கப்படும் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நாள்முதல் இன்றுவரை அதன் பணிப்பாளர் சபை கூட்டங்களின் போது் சம்மதிக்கப்பட்ட தீர்மானங்களின் (BOARD RESOLUTION) பதிவுகளின் பிரதிகளை பகிரங்கப் படுத்துக.

8
"யுனிட்டி பில்டர்ஸ்  பிரய்வட் லிமிட்டெட் " என்று அழைக்கப்படும் நிறுவனம்  மு.கா.வின் நலனுக்காக உருவாக்கப்பட்டது, அப்படியிருந்தும் 2015 ஜனவரி 29 ல் அதன் பணிப்பாளர் சபையில்  இடம்பெற்ற தீடீர் மாற்றங்கள்  கட்சியின் அதி உயர் பீட உறுப்பினர்களுக்கு மர்மாக மறைக்கப்பட்டது ஏன்?

9
தலைவர் அஷ்ரப் தன் மறைவுக்கு இரண்டு மூண்று மாதங்ளுக்கு முன்னராக  தாருஸ்ஸலாத்திற்கு  பொது எல்லையை கொண்ட 53,வொக் ஷால் லேன் வெற்றுநிலத்தை கார்சன்  அன்ட் கம்பர்வெட்ஜ் பப்லிக் லிமிட்டெட் என்ற நிறுவனத்திமிருந்து விலை கொடுத்து வாங்கினார்.

இக் காணி உறுதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரினால் 2000 ம் ஆண்டில் எழுதப்பட்டு 2012ம் ஆண்டில் 55 / 11 வொக் ஷால் லேன்  கொழும்பு 02. என பதிவுசெயய்யப்பட்டது.

இக் காணி உறுதி மறைக்கப்பட்டதன் மர்மம என்ன?
இக் காணி உறுதியை மு.கா.அதி உயர் பீடத்தினரின்  பார்வைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

(தொடரும்......) கடந்த வார பதிப்பு பாகம் 1-http://viduthalainews1st.blogspot.com/2016/09/blog-post_10.html?m=1

பிரிந்து நின்று தாக்­குதல் நடத்­துவோம். ஒன்­றாக வெற்­றியை கொண்­டா­டுவோம்.தேர்­தல்­களில் தனித்து போட்­டி­யி­டுவோம். ஒன்­றாக
ஆட்­சி­ய­மைப்போம். எவ்­வா­றெ­னினும் அடுத்த
நான்கு வரு­டங்­க­ளுக்கு எமது அர­சாங்கத்தை அசைக்க முடி­யாது. நாங்கள் ஒன்­றா­கவே பய­ணிப்போம் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.
அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற
வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்
கேள்வி:- ஐக்­கிய தேசி­யக்­கட்சி சுதந்­தி­ரக்­கட்­சியை விமர்­சிப்­ப­தை­விட சுதந்­தி­ரக்­கட்சி ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை விமர்­சிக்­கின்­றதே?
பதில்:- அவர்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தின் முக்­கி­யத்­துவம் தெரி­ய­வில்லை. அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் கைகோர்த்து ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தை நாங்கள் வீட்­டுக்கு அனுப்­பி­யி­ருந்தோம் எனவே எமக்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அர்ப்­ப­ணிப்பும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர்ப்­ப­ணிப்பும் நன்­றாகத் தெரியும், எனவே நாங்கள் மிகவும் கவ­ன­மா­கவே கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்றோம். எனினும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் இருந்­த­வர்­க­ளுக்கு அந்த முக்­கி­யத்­துவம் பாரிய அளவில் புரி­ய­வில்லை. அத­னால்தான் கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றனர்.
கேள்வி:- நீங்கள் ஏன் சுதந்­தி­ரக்­கட்­சியின் சம்­மே­ள­னத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை
பதில்:- எனக்கு அழைப்பு வர­வில்லை
கேள்வி:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சம்­மே­ள­னத்தில் கலந்­து­கொள்­வீர்­களா?
பதில்:- அதற்கு அழைப்பு வந்­தி­ருக்­கி­றது. நான் அதில் கலந்து கொள்வேன். எனக்கு எந்­தக்­கட்­சியும் உரித்­தில்லை. நான் ஜன­நா­ய­கத்­திற்­காக போரா­டு­கின்றேன்.
கேள்வி:- அடுத்த ஆட்சி எவ்­வாறு அமையும்?
பதில்:- அதனை 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் தீர்­மா­னிப்போம்
கேள்வி:- ஆனால் 2020 இல் தனித்து ஆட்சி அமைப்போம் என ஜனா­தி­பதி கூறு­கின்­றமை சரி­யா­னதா?
பதில்:- அதனை அந்த நேரம் பார்த்­துக்­கொள்வோம்
கேள்வி:- அப்­ப­டி­யாயின் அர­சாங்கம் எவ்­வாறு அமையும்?
பதில்:- பிரிந்து நின்று தாக்­குதல் நடத்­துவோம், ஒன்­றாக வெற்­றியை கொண்­டா­டுவோம். எவ்­வா­றெ­னினும் அடுத்த நான்கு வரு­டங்­க­ளுக்கு எமது அர­சாங்­கத்தை அசைக்க முடி­யாது. நாங்கள் ஒன்­றா­கவே பய­ணிப்போம்.
கேள்வி:- அர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்­தலை பிற்­போட முற்­ப­டு­வ­தாக கூட்டு எதி­ரணி கூறி­யுள்­ளதே?
பதில்:- நாங்கள் அதைப்­பற்றி இன்னும் சிந்­திக்­கவும் இல்லை தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடை­பெறும். அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு இன்னும் காலம் இருக்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தைப் பொறுத்­த­வ­ரையில் எங்­க­ளுக்கு ஐந்து வருட காலத்திற்கே மக்களின் ஆணை கிடைத்தது.
எவ்வாறெனினும் எங்களினால் ஐக்கிய தேசியக்கட்சி வழங்கிய பங்களிப்பையும் ஆதரவையும் ஒருபோதும் மறக்க முடியாது. சுதந்திரக்கட்சியினர் ஐ.தே.க. வை . விமர்ச்சிக்கின்றனர். அவர்கள் இன்னும் அரசியல் முதிர்ச்சி பெறாமல் இருக்கின்றனர்.பாரா­ளு­மன்­றத்தின் நிர்­வாகக் காலத்தை ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேல் அதி­க­ரிக்கும் நோக்கம் அர­சாங்­கத்­திற்கு இல்­லை­யென்றும் இவ்­வா­றான
யோச­னையை அரசோ அல்­லது அரசு சார்­பான (ஆத­ரிக்கும்) கட்­சி­களோ
அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு முன்­வைக்­க­வில்லை என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை கேள்­வி­க­ளுக்கு
பிர­தமர் பதி­ல­ளிக்கும் நேரத்­தின்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் எம்.பி.யான உதய கம்­மன்­பில எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
உதய கம்மன் பில எம்.பி. தனது கேள்­வியில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் அர­சாங்­கத்தின் நிர்­வாகக் கால எல்­லையை 5 வரு­டங்­க­ளுக்கு மேலாக அதி­க­ரிப்­ப­தற்­கான யோச­னை­களை அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­போ­கின்­றதா என்­பது தொடர்பில் கேள்­வியை எழுப்­பினார்.
இதற்கு தொடர்ந்தும் பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.
புதிய அர­சி­ய­ல­மைப்பில் அரசின் நிர்­வாகக் காலத்தை 5 வரு­டங்கள் அதி­க­ரிப்­பது தொடர்பில் எவ்­வி­த­மான யோச­னை­களும் முன்­வைக்­கப்­ட­வில்லை.
அவ்­வா­றான எந்­த­வொரு யோச­னை­யையும் அரசு முன்­வைக்­க­வில்லை. அரசு புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் தலை­யி­ட­வில்லை. அதனை அர­சி­ய­ல­மைப்பு சபையே முன்­னெ­டுக்­கின்­றது.
அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு பல்­வேறு கட்­சிகள் பல்­வேறு யோச­னை­களை முன்­வைத்­துள்­ளன. 19 ஆவது திருத்­த­சட்­டத்தை நிறை­வேற்றி ஜனா­தி­ப­திக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தை குறைத்து மீண்டும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.
நீங்கள் தான் ஜனா­தி­பதி 3 தடவை போட்­டி­யி­டலாம் என சட்­டத்தை திருத்­தி­னீர்கள் எனவே நீங்கள் தான் மக்­க­ளிடம் மன்­னிப்பு கேட்க வேண்டும்.
எமக்கு பாரா­ளு­மன்­றத்­தின் நிர்­வாகச் சபை எல்­லையை அதி­க­ரிக்கும் எண்ணம் இல்லை. என பிர­தமர் தெரி­வித்தார்.
இதன்­போது இடைக் கேள்­வியை தொடுத்த உதய கம்­மன்­பில எம்.பி. மாத்­த­றையில் இடம்­பெற்ற தேசிய அரசு ஒரு வருட பூர்த்தி அரசு ஒரு வருட பூர்த்தி விழாவின் போது ஆட்சி 5 வருடம் தொடரும் என ஜனா­தி­பதி தெரி­வித்தார் என்றார்.
இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர். இரண்டு வரு­டங்கள் தான் இணக்­கப்­பாடு அரசு உடன்­பாடு காணப்­பட்­டது. பின்னர் இது 5 வரு­ட­மாக தொடர தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் தேர்­த­லுக்கு பிறகும் 5 வருட இணக்­கப்­பாடு ஆட்சி தொடரும் இதனைத் ஜனா­தி­பதி தெரி­வித்தார் என்றார் பிர­தமர்.
இதன்­போது மீண்­டு­மொரு கேள்வி எழுப்­பிய உதய கம்­மன்­பில எம்.பி. இன்­றி­லி­ருந்து 3 வரு­டங்­களில் ஜனா­தி­ப­தியில் பதவிக் காலம் முடி­வ­டை­கின்­றதே என்றார்.
இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர், நீங்கள் இன்­னமும் பழைய காலத்­தி­லேயே உள்­ளீர்கள். இன்று நிறை­வேற்று அதி­காரம் குறைக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்றார்.
இறு­தி­யான இடைக் கேள்­வியை விமல் வீர­வன்ச பிர­த­ம­ரிடம் எழுப்­பினார். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அண்­மையில் வடக்­கிற்கு விஜயம் செய்த போது நவம்பர் மாதத்தில் வரவு செலவு திட்­டத்­திற்கு முன்­ப­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுக்­கப்­படும் எனத் தெரி­வித்­துள்ளார். இதன் உண்மைத் தன்மை என்ன என பிர­த­ம­ரிடம் கேள்வி எழுப்­பினார்.
இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இது தொடர்பில் நான் அமைச்சர் மக்கள் சம­ர­வீ­ர­விடம் விசா­ரித்தேன். அவர் தான் அவ்­வாறு கூற­வில்லை எனத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்விதத்திலும் தலையிடுவதில்லை.
அதனை அரசியலமைப்பு சபையே முன்னெடுக்கின்றது. அச் சபையின் பரிந்துரைகள் வரைபுகள் நவம்பருக்கு முன்பு கிடைத்தால் அதனை நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். இதில் அரசாங்கம் எவ்விதத்திலும் தலையிடாது என்றார்.

முகம்மது தம்பி மரைக்கார்

'இலங்கை - இந்திய ஒப்பந்தமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசனம்' என்று, முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறுவார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தினால்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆயினும், அந்த ஒப்பந்தத்தினால் வடக்கு - கிழக்கு முஸ்லிம்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படவில்லை. மாறாக, முஸ்லிம்கள் அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்பதனாலேயே, அஷ்ரப் அவ்வாறு கூறியிருந்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடு காரணமாக, தமிழர் - சிங்களவர்களிடையே பகைமை ஏற்பட்டுள்ளதைப் போலவே, தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலும் ஒரு வகைக் குரோத மனப்பான்மை தோன்றியது என்பது கசப்பான உண்மையாகும். அந்தப் பகைமையும் குரோதங்களும்தான் ஏராளமான கெடுதிகளுக்குக் காரணமாகவும் அமைந்துள்ளன.

இன முரண்பாடுகளுக்கான தீர்வினைக் காண வேண்டுமென, அவ்வப்போது ஆட்சியாளர்கள் விரும்பியபோதும், இனங்களுக்குள் ஏற்பட்டுள்ள பகைமையும் குரோதமும் அதற்கு வழி விடுவதாக இல்லை. ஒற்றையாட்சி முறைமையில் இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண முடியாது என்கிறார்கள் தமிழர்கள். ஒற்றையாட்சிக்கு அப்பாலான தீர்வுகளுக்குச் சென்றால், நாடு பிரிந்து விடும் என்று சிங்களவர்கள் அச்சமூட்டுகின்றனர்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்து இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றினை வழங்கி விடக் கூடாது, அது கிழக்கு முஸ்லிம்களை மிக மோசமாகப் பாதித்து விடும் என்று முஸ்லிம்கள் கூறுகின்றார்கள். இந்தக் கோரிக்கைகளும் கோசங்களும் இன முரண்பாடுகளுக்கான தீர்வினைக் காண்பதிலுள்ள சிக்கல்களை மேலும் அதிகமாக்கிக் கொண்டே செல்கின்றன.

இனப் பிரச்சினைக்கான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதில், அநேகமாக எல்லாத் தரப்பினரும் ஒன்றுபட்ட மனநிலையில் இருக்கின்றார்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஆனால், அதை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதில்தான் மாறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.
ஒரு காலகட்டத்தில் தமிழ் சமூகத்துடன், முஸ்லிம்கள் ஒன்றிப் பிணைந்திருந்தனர். தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து செயற்பட்டனர். 'தமிழ் பேசும் மக்கள்' என்கிற பொதுமையின் கீழ் - முஸ்லிம்களை தமிழ் சமூகம் அடையாளப்படுத்தியது. ஆனால், 'தமிழ் பேசும் மக்கள்' என்கிற அந்தப் பொதுமையான அடையாளத்தின் பின்னால், ஓர் அரசியல் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான இந்த நெருக்கமானது 1980களில் அகத்திலும், 1990களில் புறத்திலும் உடையத் தொடங்கியது. தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டமானது, தமிழர்களுக்கானதாக திசை மாறத் தொடங்கியது. ஏன் இப்படியானது என்பதற்கு, இரண்டு சமூகத்தவர்களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இந்த உடைவும் பிளவும், இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்துப் பேசப்படும்போது கூட, ஒவ்வொரு சமூகத்துக்கும், தனித் தனியான நிவாரணங்களைக் கோரி நிற்குமளவுக்கு நிலைமையினை தீவிரமடையச் செய்துள்ளது. இதுவெல்லாம் பழைய கதைகள் என்றாலும், மீள மீளப் பேசப்பட வேண்டியவையாகும்.
இப்போது, புதிய அரசியல் யாப்பொன்றினை அறிமுகப்படுத்துவதன் ஊடாக  இனப் பிரச்சினைக்கான தீர்வொன்று முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தீர்வுத் திட்டத்தினூடாக ஒவ்வொரு சமூகமூம் தமக்கு எதையெல்லாம் வழங்க வேண்டுமென, கோரிக்கை விடத் தொடங்கியுள்ளன. அத்தோடு, அடுத்த சமூகங்களுக்கு எதையெல்லாம் கொடுக்கக் கூடாது என்றும் கூற முற்படுகின்றன.

தீர்வுத் திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து, வடக்கு மாகாணசபையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டமை குறித்து அறிவோம். 'இலங்கையில் இரண்டு மாநிலங்கள் அமைய வேண்டும். அவை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமானதாக இருக்கும். வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதனை தமிழர்களுக்கான மாநிலமாக்க வேண்டும். ஏனைய ஏழு மாகாணங்களையும் இணைத்து சிங்களவர்களுக்கான மாநிலமாக்க முடியும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் சமமான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். தமிழர்களுக்கான வடக்கு - கிழக்கு இணைந்த மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனியானதொரு ஆட்சியலகு வழங்கப்படும். அதேபோன்று, மலையகத் தமிழர்களுக்கான ஓர் ஆட்சி அலகு, சிங்கள மாநிலத்தில் அமைய வேண்டும்' என்பதுதான் வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய பிரேரணையின் சாரம்சமாகும்.

வடக்கு மாகாணசபையின் இந்தப் பிரேரணையானது முஸ்லிம்களிடையே விசனத்தை ஏற்படுத்தியது. வடக்கு - கிழக்கினை இணைத்து, அதற்குள் தமக்கான ஒரு தீர்வு வழங்கப்படுவதை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று, கிழக்கு முஸ்லிம்கள் கோசமிடத் தொடங்கியுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், வடக்கு - கிழக்கினை இணைப்பது தொடர்பிலும், அதற்கான ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் - முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் அரங்கில் கதைகள் அடிபடத் தொடங்கியுள்ளன. வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்களாயின், இணைந்த வட - கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியினை முஸ்லிம்களுக்கு வழங்க, தாம் தயாராக இருக்கின்றோம் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பகிரங்கமாக அறிவிருத்திருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதனூடாக தீர்வுத் திட்டமொன்றினை முன்வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தலைமையில் 'சுதந்திர கிழக்கு' எனும் பெயரில், வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிரான வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, கடந்த வெள்ளிக்கிழமை - ஏறாவூரில் விழிப்புணர்வுக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் உரை, இங்கு அதிகம் கவனிப்புக்குள்ளானது.
'கிழக்கு மாகாணம் தொடர்பாக தமிழ்த் தலைமைகள் பேசுவதாக இருந்தால், கிழக்கிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளுடனும், புத்திஜீவிகளுடனும்தான் பேசவேண்டும். கிழக்கு தொடர்பில் கிழக்குக்கு வெளியேயுள்ள தலைமைகளுடன் பேச முடியாது' என்கிற கோசத்தினை அதாவுல்லா அங்கு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், 'வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென்று தமிழ்த் தலைமைகள் வேண்டி நிற்கின்றன. அதற்கு முஸ்லிம் சமூகம் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கோருகின்றார்கள்.

அவ்வாறு ஆதரவு வழங்கினால், இணைக்கப்பட்ட வட - கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியினை முஸ்லிம்களுக்கு வழங்குவோம் என்று தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றார்கள். இது போக்கணங்கெட்ட பேச்சாகும்' என்று, தனது உரையில் அதாவுல்லா விசனம் தெரிவித்தார். பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் முஸ்லிம்கள் சோரம்போய் விடுவார்கள் என்கிற மனப்பதிவின் வெளிபாடாகவே, தமிழ்த் தலைவர்களின் மேற்படி கூற்றினைப் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதாவுல்லா கூறினார்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில், தமிழர் தரப்பு - முஸ்லிம் காங்கிரஸுடன் பேசியதாக, இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்பதையும் அந்தக் கட்சி இதுவரை அதிகாரபூர்வமாகக் கூறவில்லை. இருந்தபோதும், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அரசியல் கட்சி என்கிற அந்தஸ்து முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளது. எனவே,  வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில், கிழக்கு முஸ்லிம்களின் ஆதரவினைப் பெறும் பொருட்டு தமிழர் தரப்பு பேசுவதாக இருந்தால், முஸ்லிம் காங்கிரஸுடன்தான் முதலில் பேசும் என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதில், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது ஓர் இணக்கமான மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு சாதகமானதொரு நிலைப்பாட்டிலேயே, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளார் என்று, அந்தக் கட்சிக்குள்ளிருப்பவர்களில் கணிசமானோர் நம்புகின்றனர். ஆனால், வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில், மு.கா தலைமை சாதகமானதொரு நிலைப்பாட்டினை எடுப்பதில், அந்தக் கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்களில் பலருக்கு உடன்பாடு கிடையாது. இதனைக் கடந்த வியாழக்கிழமையன்று அம்பாறை மாவட்டம், பாலமுனையில் நடந்த நிகழ்வொன்றில் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில், கடந்த வியாழக்கிழமை பாலமுனையில் நிகழ்வொன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அங்கு மு.கா தலைவர் முன்னிலையில் நிகழ்வுக்குத் தலைமை வகித்த சட்டத்தரணி அன்சில் உணர்வுபூர்வமானதொரு உரையினை ஆற்றினார். அவரின் உரையில் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு மு.காங்கிரஸ் ஆதரவளித்து விடக்கூடாது என்றும், அதில் மு.கா தலைமை உறுதியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 'வடக்கும் - கிழக்கும் இணைந்திருந்தபோது இங்கு எந்தவித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை. வடக்கிலிருந்து கிழக்குப் பிரிந்து, எமக்கான அதிகாரம் கிடைத்தபோதுதான் அபிவிருத்திகள் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின. எமக்குக் கிடைத்துள்ள அதிகாரங்களை இல்லாமலாக்கும் நிலைமை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எமது கட்சி கவனம் செலுத்த வேண்டும். வடக்கு - கிழக்கு இணைந்திருந்த காலத்தில், அதன் செயலாளரின் ஆட்சி நடந்தபோது, அபிவிருத்தியின் பொருட்டு முஸ்லிம் பிரதேசங்களுக்கு நிதிகள் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது கிழக்கில் எமது முதலமைச்சரும், எமது அமைச்சர்களும் இருக்கின்றமையினால்தான் எமக்கு நிதிகள் கிடைக்கின்றன' என்று அங்கு அன்சில் கூறினார்.

இந்நிகழ்வில், மு.கா தலைவர் இறுதியாக உரையாற்றினார். ஆனாலும், சட்டத்தரணி அன்சில் சுட்டிக்காட்டிய, வடக்கு - கிழக்கு விவகாரம் தொடர்பில், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே அரசியல் ரீதியாக நிறையப் பிளவுகளும் பிரிவுகளும் உள்ளன. ஆனால், வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டில், இவர்களிடையே பாரியதொரு ஒற்றுமை காணப்படுகிறது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் 'சுதந்திர கிழக்கு' தொடர்பிலான விழிப்புணர்வுக் கூட்டம் ஏறாவூரில் நடைபெற்றபோது, முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளிருந்தும் அதாவுல்லாவுக்கு ஆதரவுகள் கிடைத்தன.
வடக்கிலிருந்து கிழக்கு பிரிய வேண்டும் என்பதில், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தீவிரமாக இருந்தார். 'கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று ஜே.வி.பியினர் வழக்குத் தாக்கல் செய்தபோதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்கிற உணர்வினை கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியவர், தான்தான் என்று, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, 'சுதந்திர கிழக்கு' ஏறாவூர் கூட்டத்தில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், அதாவுல்லா தனது அரசியல் மீள் எழுச்சிக்கானதொரு மந்திரமாகவே 'சுதந்திர கிழக்கு' எனும் கோசத்தினைக் கையில் எடுத்துள்ளார் என்பதையும் மறைக்க முடியாது. இருந்தாலும், இந்த மந்திரம் பலிப்பதற்கான சாத்தியங்கள் அதிகபட்சமுள்ளது. 'சுதந்திர கிழக்கு' எனும் தலைப்பில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிரான விழிப்பூட்டும் கூட்டங்களை, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நடத்துவற்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா திட்டமிட்டு வருகின்றார்.
'சுதந்திர கிழக்கு' எனும் அதாவுல்லாவின் மந்திரத்தின் பின்னால், முஸ்லிம்கள் அணி திரளத் தொடங்குவது, மு.காவுக்கு அரசியல் ரீதியாக ஆரோக்கியமாக அமையாது. எனவே, அதாவுல்லாவின் மந்திரத்தை முறிக்கும் வகையிலானதொரு மாற்று மந்திரத்தை மு.காவும் கையில் எடுக்க வேண்டியதொரு தேவை எழும்.இலங்கை மற்றும் இந்தியா உட்பட சர்வ தேச ரீதியாக 23 நாடுகளில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றுள்ளன.

இலங்கையில் கடலோர பகுதிகளிலுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரம்
இலங்கையில் வடக்கு - கிழக்கு உட்பட 14 கரையோர மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கடலோர கிராமம் என 14 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
சுனாமி எச்சரிக்கை கோபுரத்திலிருந்து எச்சரிக்கை அலாரம் ஒலித்தவுடன் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒத்திகை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைமையகத்திலிருந்து செய்மதி ஊடாகவே இந்த முன் எச்சரிக்கை அறிவிப்பு செயல்படுத்தப்படுகின்றது.
அனர்த்த முன் எச்சரிக்கை கோபுரத்திலிருந்து முதலாவதாக அலாரம் ஒலித்தவுடன் மக்களும் உள்ளுர் தொண்டர்களுக்கும் விழிப்புடன் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
இரண்டாவதாக சில நிமிடங்களால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிப்பு வெளியானதையடுத்து இருப்பிடங்களை மக்கள் வெளியேறுகின்றார்கள்.
மூன்றவதாக அபாயம் நீங்கிவிட்டது என்ற அறிவிப்பு வெளியாகும் போது மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றார்கள் என மூன்று கட்டங்களை கொண்டதாக இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது
இந் நிகழ்வுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உட்பட தன்னார்வ தொண்டர் அமைப்புகள், போலிஸ் மற்றும் முப் படையின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது.இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள் ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய மன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே பிரதமர் சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். 

இதன்பிரகாரம் சிங் கப்பூர் ஷென்கிலா ஹோட்டலில் நாளை நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட் டின் ஆரம்ப நிகழ்வில் அவர் விசேட உரையற்றவுள்ளார்.

இந்த மாநாட்டிற்கு இந்து சமுத்திர வல யகத்தின் பிரதான நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவில் இருந்து, குமார வெல்கமவை மஹிந்த ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் குமார வெல்கமவும் அதில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த மக்களின் எண்ணிகையை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என உறுதியாகியுள்ளதாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுரிசாட்டுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு, சொப்பிங் பேக்கோடு வந்தவருக்கு இவ்வளவு பணமா? என்றல்லாம் அவருடை எதிரிகள் பேசுவதை கேட்கின்றோம்.

இதே போன்று இதைவிட வீரியம் கொண்ட பிரச்சினைகள் ஹக்கீமுக்கு எதிராக வந்த போதல்லாம் யாரும் அதை பெரிது படுத்துவதில்லை.
காரணம் அவருக்கு அரசியல் எதிரி என்று யாரையும் அவர் சம்பாதித்து கொள்வதில்லை.

எல்லா அரசியல் வாதிகளும் அவருக்கு பிரியானி கொடுத்து ஆதரிப்பார்கள்.
அதே நேரம் எந்த அரசாங்கம் வந்தாலும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்,
காரணம் அவர் எந்த அரசியல் வாதிகளிடமும் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் முட்டி மோதுவது இல்லை அதனால் அவர் எல்லோருக்கும் நல்லவர்.

மறைந்த தலைவர் எல்லா அரசியல் வாதிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார்.

அதனால் அவர் பல இன்னல்களை சந்தித்தார்.

கல்முனையிலிருந்து வெரும் கையோடு வந்த அஸ்ரப்புக்கு இவ்வளவு பணமும் அந்தஸ்த்தும் எப்படி கிடைத்தது என்று கேட்டு கூத்தடித்தார்கள்...
பிறகு காலி டென்டர் விடயத்தில் கொள்ளையடித்து விட்டாய் என்று கூக்குரல் இட்டார்கள்,அனுரா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் அஸ்ரப்பின் கையை இஸ்லாமிய சட்டப்படி வெட்டவேண்டும் என்றார்.
அந்த அளவுக்கு அரசாங்க பணத்தை கொள்ளை அடித்துள்ளார். என்று ரிச்சட் பத்திரன கூறியது மட்டுமல்ல செருப்பால் பாரளமன்றத்துக்குள் அஸ்ரப் அவர்களுக்கு எறிந்தார்.

சந்திரிக்கா பௌசி அவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர் மூலமாக அஸ்ரப்பை ஆட்டிபடைத்தார் என்பதல்லாம் வரலாறு...
மறுபக்கம் தமிழ் தரப்பினர் சொல்லொன்னா துயரங்களை செய்தது மற்றுமன்றி அவரை கொலையும் செய்தனர்.

அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் கடைசிவரையும் அழைத்திருக்கமாட்டார்.

அஷ்ரப் வழிந்து சென்று பிரியாணி சாப்பிட்டு இருக்கவும் மாட்டார்.
ஏனன்றால் பிரபாகரன் எப்படி நானயமானவர் என்று அஸ்ரப்புக்கு தெறியும்.

இப்போது விடயத்துக்கு வருவோம்.ஹக்கிமை போல் அஸரப்பும் அரசியல் செய்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காது.
அதே போன்றுதான் ரிசாட்டுக்கும் பல எதிர்ப்புக்கள் வந்த வன்னம் உள்ளது.

ஒன்று அரசியலை விட்டு ரிசாட் ஒதுங்க வேண்டும்.
அல்லது கொல்லப்படவேண்டும்.

அல்லது ஹக்கீமைபோல் அரசியல் செய்ய வேண்டும்.
இதுதான் தீர்வாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்....
தங்கம் தான் கஸ்டப்படும்..
மண்னு மன்றியிட்டு கிடக்கும்..
இந்த விடயங்களை புரிந்து கொண்டால் சரிதான்....
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவருமான கௌரவ றிசாத் பதுர்தீன் அவர்கள் மற்றும் பாராளுமன்ற உருப்பினர் கௌரவ நவவி ,குருநாகல் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் டொக்டர் சாபி ஷிஹாப்தீன்,முன்னால் மாகான சபை உருப்பினர் மற்றும் சதோச பிரதித்தலைவர் எம்.என்.நஸீர்,முன்னால் குளியாப்பிடிய பிரதேச சபை உருப்பினர் எம்.சி.இர்பான் STC இணைப்பாளர் அஸார்தீன் இன்னும் முக்கிய பிரமுகர்கள் நேற்றைய தினம் மும்மன்ன பாடசாலை அதிபர் மற்றும் மும்மன்ன பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று மும்மன்ன பள்ளிவாயலில் இடம்பெற்றது.இச்சந்திப்பின் போது மும்மன்ன பாடசாலை மைதான பிரச்சினை சம்மந்தமாக  வெகு விரைவில் நல்லதீர்வு மும்மானை மக்களுக்குக் கிடைக்கும் என்று கூரியதுடன் மேலும் பல விடையங்கள்    பேசப்பட்டு அமைச்சரினால் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


MARI themes

Powered by Blogger.