Showing posts with label article. Show all posts
Showing posts with label article. Show all posts

Tuesday, September 13, 2016

thumbnail

பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலத்துக்கு அனுமதி கிட்டுமா? பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதன்பொருட்டு குறித்த சட்டமூலம் தற்போது நிதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பல சந்தர்ப்பங்களில் பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டது.

எனினும் இந்த சட்டமூலத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, அதனை மீண்டும் தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, இந்த புதிய பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்ட மூலத்தில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்கும் யோசனை அவ்வாறே செயற்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இன்று இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும் பட்சத்தில், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More»

Monday, September 12, 2016

thumbnail

ரஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கிய எனக்கு சிறைக்குப் போக அச்சமில்லை

நேற்றைய தினம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட விடயம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்னும் 6 மாத்திற்குள் உயிரிழந்து விடுவார் என்றும், அதற்கு பிறகுகோத்தபாய ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என பிரபல ஜோதிடரான விஜித் ரோஹனவிஜயமுனி ஆருடம் தெரிவித்த விடயமாகும்.

இவரது இந்த ஆருடத்தை அடுத்து இவர் விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்புலனாய்வுபிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைகளுக்கு வருமாறு தொலைபேசி மூலம்அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் கூறியது கணிப்பு மாத்திரமே எனவும், தான் எதற்கும் அஞ்சப் போவதில்லைஎன்றும் தெரிவித்துள்ள இவர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை துப்பாக்கியின்பின்புறத்தால் தாக்கியதால் பல மாதங்கள் சிறைச் சோறு சாப்பிட்டதால் மீண்டும்சிறை செல்ல அஞ்சவில்லை என்றும், உண்மையை சொல்ல பயப்படப் போவதில்லை என்றும்ஜோதிடர் விஜித் ரோஹன விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இவரது இந்த ஆருடத்தின் பின்னர் நுகேகொட பிரதேசத்தின் பிரபல அரசியல்வாதிஒருவரின் ஆதரவாளர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் இவர்குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மைத்திரி 6 மாத்தில் இறக்கமாட்டார் என மற்றுமொரு ஜோதிடரான இந்திகதொட்டவத்த தெரிவித்துள்ளார்.

விஜித் ரோஹன சாதாரண வானொலிக் கடை ஒன்றின் உரிமையாளர் என்றும், இவர் ஜோதிடர்இல்லை என்றும் இந்திக குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Read More»

thumbnail

Facebook Live Video-அவதானமாக இருங்கள்!


தற்போழுது  இணையதள வசதி படைத்த கையடக்க தொலைபேசிகளின்  பாவனையும் அதில் Facebook உபயோகிக்கப்படுவதும் நம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. அதில் புதிதாய் அறிமுக படுத்தப்பட்டுள்ள "Live Video Option" உள்ளது.  இதை பலவிதமானவர்கள் சிறந்த பயன் தரும் அடிப்படையில்ப யன்படுத்துகின்றார்கள். இருந்தாலும் நம்மை அறியாமல் எச்சந்தர்ப்பத்திலும் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு ஆபத்தில் முடிவடையலாம். குறிப்பாக நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை  எனக்கு நன்கு  தெரிந்த நபர் ஒருவரினால் வீட்டிலிருக்கும் போது 10 செக்கன்கள்  உள்ளடங்கிய  வீடியோ ஓன்று நேரடியாக செயல் படுத்தப்பட்டிருந்தது. நான் அவரிடம் வினவியபோது  தவறுதலாக இடம்பெற்றது மற்றும் மிகவும் ஆபத்தானது என்றும் கூறினார். ஆகவே நாம் மட்டும் அல்ல நம் குழந்தைகளிடமும் இவ்வாறானா தொலைபேசிகளை கொடுப்பதில்  சில தவறுகள் இடம்பெறலாம். இதை சிலர்கள் Facebook இல்  பதிவிறக்கம் செய்து தவறான முறையில் பயன்படுத்தவும் காத்திருக்கின்றார்கள். ஆகவே இதற்கு வழி வகுக்காமல் மிகவும் அவதானமாக இருங்கள்.

இது பற்றி தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

ஏ.முஹம்மட் ஷிஹாம்
Read More»

Sunday, September 11, 2016

thumbnail

பஷீர் பெசில் ஒப்பந்த கதை கூறும் ஹக்கீம்கடந்த முதலாம் திகதி பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மு.கா கட்சிப் போராளிகள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமினால் வழங்கப்பட்ட தொழில் விடயத்தினால் மு.கா மீது வெறுப்புற்று மு.கா தலைவரும் முரண்பட்ட போது அமைச்சர் ஹக்கீம் அவ் விடத்தில் பஷீருடைய கதையை கூறியிருந்தார்.குறித்த இடத்திற்கும் நிகழ்விற்கு பஷீரிற்கும் எதுவித சம்பந்தமுமில்லை.அவ் விடத்தில் பஷீரின் கதையை இழுத்துப் போட்டுக் கதைப்பது அமைச்சர் ஹக்கீம் பஷீரினால் உள ரீதியாக பாதிப்புற்றுள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.இதனை நோக்கும் போது அமைச்சர் ஹக்கீம் கனவிலும் பஷீரின் பெயரை உச்சரிக்கலாம்.

இதுவரை காலமும் அமைச்சர் ஹக்கீமுடன் மு.காவின் தவிசாளர் முரண்படும் போது அமைச்சர் ஹக்கீமின் அந்தரங்கள் தான் வெளிவருமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வை நோக்கும் போது அமைச்சர் ஹக்கீமினால் பஷீரின் அந்தரங்க ஒப்பந்தங்கள் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில் மு.காவின் தவிசாளர் பஸீர் பெசில் ராஜ பக்ஸவுடன் ஒப்பந்தம் செய்து மு.காவை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறியுள்ளார்.

எவ்வாறு தேசியப்பட்டியல் கிடைக்காமையால் பஷீர் அமைச்சர் ஹக்கீமின் விடயத்தில் ஞானம் பெற்றி கேள்வி கேட்கின்றாரோ அது போன்றே பஷீர் சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமிடம் அவர் மாட்டிக்கொள்ளும் வகையிலான வினாக்களை தொடுக்கும் போதே அமைச்சர் ஹக்கீம் கூட இவ் இரகசியத்தை கசிய விடுகிறார்.கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று அடுத்த தேர்தலும் வந்துவிட்டது.இதுவரை காலமும் அவருக்கு கட்சியின் தவிசாளர் பதவியை வழங்கி அழகு பார்த்த ஹக்கீம் தற்போது மாத்திரமேன் பஷீருக்கு எதிராக இவ்வாறு கதைக்கிறார்.அவர் அமைச்சர் ஹக்கீமிடம் கேள்விக் கணைகளை தொடுக்க முன்பு அவரைக் கண்டித்து கட்சியை விட்டு நீக்கிருக்கலாமே?

அமைச்சர் ஹக்கீம் அக் குறித்த நிகழ்வில் அச் சந்தர்ப்பத்தில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஐந்து மு.காவின் உச்ச பீட உறுப்பினர்களையும் தன் கைக்குள் வைத்திருந்ததாக குறிப்பிடுகிறார்.அவர்கள் யார்? அவர்களும் ஹக்கீமிற்கு எதிராக போர்க் கொடி தூக்கும் போது தான் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் தான் இவர்கள் என இணங்காட்டுவாரா? அல்லது அவ் ஐந்து உறுப்பினர்களையும் இதன் மூலம் அச்சுருத்தி அடிபணிய வைக்க முயல்கிறாரா? கட்சிக்கு எதிராக போராடிய போது மௌனியாக இருந்த ஹக்கீம் தனக்கெதிராக போராடும் போது இவற்றை வெளிப்படுத்தவது கட்சியின் நலனை கருத்திற் கொள்ளாத அவரது சுயநல அரசியல் போக்கை எடுத்து காட்டுகிறது.இப்படியானவர் இரத்ததில் முளைத்த மு.காவை வழி நடாத்த தகுதியானவரா?

அமைச்சர் ஹக்கீமிடம் பஷீர் தொடுக்கும் கேள்விகள் அனைத்தும் கடந்த காலத்தில் நடந்தவை பற்றியல்ல.சமகாலத்தில் நடப்பவை,நடந்தவை ஆகியவற்றையே.அமைச்சர் ஹக்கீம் கடந்த காலங்களில் நடந்தவை பற்றி கதைத்து பஷீரை வீழ்த்த முனைவது அமைச்சர் ஹக்கீமின் இயலாமையை காட்டுவதோடு பஷீரின் கேள்விகளின் கனத்தையும் மட்டிட்டுக் கொள்ளச் செய்கிறது.பஷீரின் கேள்விகளுக்கு அமைச்சர் ஹக்கீமிடம் பதில் இருந்தால் உடனுக்குடன் பதில் அளித்தால் அவ்விடத்திலேயே அந்த வினாக்களை புதைத்து விடலாம்.இருப்பினும் பஷீர் பெசிலுடன் ஒப்பந்தம் செய்ததாக அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளதற்கு பஷீர் பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது.இதுவரை பஷீர் சேகுதாவூத் இது பற்றி எதுவும் கதைக்கவில்லை.பஷீர் பதில் அளிப்பாரா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
Read More»

thumbnail

நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு - 200 பேர் காயம் தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடமேற்கு தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. விக்டோரியா ஏரி அமைந்து உள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக புகோபாவில் வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் பலியாகினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்த 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்போது அங்கு அமைதி நிலவுவதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலநடுக்கத்தினால் நாட்டின் தலைநகரில் எந்தஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலநடுக்கமானது ருவாண்டா, உகாண்டா மற்றும் கென்யாவிலும் உணரப்பட்டது என்று அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
Read More»

thumbnail

புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியல்வாதிகள்


கடந்த காலங்களில் நாட்டின் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவங்களோ அன்றேல் அசம்பாவிதங்களோ இடம்பெற்றாலும் உடனடியாகப் புலிகள் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சர்வசாதாரணமான விடயமாக இருந்தது.
அதேபோன்று தமது எதிரிகளுக்கு புலி முத்திரை குத்தி பழி தீர்ப்பதும் உண்டு. இதனை அரசியல்வாதிகள் தொடக்கம் சகல தரப்பினரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
எந்தச்செயலை வேண்டுமானாலும் இலகுவாக மேற்கொண்டு விட்டு இறுதியில் புலிகளின் கணக்கில் போட்டுவிட்டால் அது தொடர்பில் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
புலிகள் மீது பெரும்பான்மைச் சிங்கள மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை சாதகமாக்கிக் கொண்டே அரசியல்வாதிகள் பலரும் இவ்வாறே தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்து வந்தனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் அரசியலில் வங்குரோத்து நிலைமைக்கு ஆளான அரசியல்வாதிகள் கூட தமது குறைந்தபட்ச இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும் அன்று புலிகளே தேவைப்பட்டனர்.
எனினும் புலிகளின் அஸ்மனத்திற்குப் பின்னரும் இன்றும் புலிகளின் வாலை விடாது பிடித்திருக்கும் நலைமையை பார்க்கும் பொழுது இந்த நாட்டில் பெரும்பான்மை சிங்கள மக்களை எந்தளவு தூரம் முட்டாளாக்க முனைகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றது.
யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தமக்கிடையில் மிகுந்த நல்லுறவைப் பேணி வருகின்றனர். வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் பல்லாயிரக் கணக்கான தமிழ் சிங்கள மக்கள் பயணித்து வருவதுடன் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டும் ஒரு சில அரசியல்வாதிகளைப் பார்க்கும் பொழுது மிகவும் பரிதாபகரமாகவே உள்ளதாகக் கூறும் தமிழ் மக்கள், எதற்காக அவர்களை நிராகரித்தார்கள் என்பதைக்கூட உணரும் திராணியற்றவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் கூறுகின்றனர்.
குறிப்பாக மலேஷியாவில் இலங்கைக்கான மலேஷியத் தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பலரின் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைப் பகிரங்கமாகவே கண்டித்திருந்தார். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு அவர்கள் இலங்கையர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
அதேவேளை மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்திய அடிப்படைவாத பிரிவினைவாதக் குழுவினையும் வடக்கு மக்களையும் ஒருபோதும் இணைத்து சிந்திக்கக்கூடாது என்று ஜேவிபியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க எம்.பி கடந்த செவ்வாய்க்கிழமை சபையில் வலியுறுத்தியிருந்தார்.
ஆகவே மேற்படி பிரிவினைவாதத் தாக்குதலானது இலங்கையின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கம் கொண்ட அடிப்படைவாதக் குழுக்களின் வேலையாகும். இதை இராஜதந்திர ரீதியில் கையாள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் உரையாற்றுகையில் மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் மலேஷியக் கிளையினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் என்றும் இலங்கைத் தமிழர்கள் எவரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
நிலைமை இவ்வாறிருக்க மலேஷியாவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இடம்பெயர் புலிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் வடக்கில் இன்னமும் விடுதலைப் புலிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வர் வடக்கில் இன்னமும் புலிகள் செயற்படுகின்றனர். வடமாகாண சபைக்குள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சிவாஜிலிங்கம் போன்றவர்களின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவையாகும்.
எவ்வாறாயினும் சர்வதேசத்தில் தஞ்சமடைந்துள்ள விடுதலைப் புலிகளை அழிக்க நடவடிக்கை அவசியம் என்றும் கூறியுள்ளார்.
மகிந்த சார்பு கூட்டு எதிர்க்கட்சியினர் அவர் சார்பு அரசியல்வாதிகள் தொடர்ந்தும் தமிழ் சிங்கள் மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலும் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் பொய்ப் பிரசாரங்களை முடுக்கி விடுவது புது விடயமல்ல.
யுத்தத்தின் பின்னணியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமுதாயம் இன்னுமே தலைநிமிர முடியாது தவிக்கும் நிலையில் எந்தவிதமான மனச்சாட்சியும் இல்லாமல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று புலிகளை சம்பந்தப்படுத்தும் போக்குகளை இந்த நாட்டு மக்கள் இனிமேலும் அங்கீகரிப்பார்கள் என்று எவரும் எண்ணுவார்களேயானால் அது மிகவும் மடைத்தனமான செயற்பாடகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.
புலிகளை வைத்தே அரசியல் ஆதாயம் தேடிய காலம் மெல்ல மலையேறி விட்டது என்பதை பேரினவாத சக்திகள் கடும்போக்காளர்கள் உணர்ந்து கொளவது அவசியமாகும்.
மாறாக வெறுமனே புலிப்பூச்சாண்டி காட்டும் ஒரு சில அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் அவர்களை மேலும் அரசியலின் சூனிய நிலைக்கே கொண்டு செல்வதாக இருக்கும்.
கடந்த காலங்களில் இனவாதத்தைக் கிளறிவிட்டு அதில் குளிர்காய்ந்த அரசியல்வாதிகளுக்கு அதிலிருந்தும் விடுபட முடியாதுள்ளமையை அவர்களின் செயற்பாடுகளிலிருந்து பகிரங்கமாகவே தெரிவதாக மக்கள் மிகுந்த விமர்சனம் தெரிவிக்கின்றனர்.
இன்றைய அரசு இனங்களினிடையே நல்லிணக்கத்தையும் கருத்தொருமைப்பாட்டையும் கட்டியெழுப்பத் தம்மாலான அனைத்துப் பங்களிப்பையும் மேற்கொண்டு வருகின்றது. அதனை நாட்டு மக்களும் சர்வதேசமும் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
இதனைச் சகிக்காத ஒரு சில அரசியல்வாதிகளும் கடும்போக்காளர்களுமே இவ்வாறு அனாவசிய பொயப்பிரசாரங்களை மேற்கொண்டு இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்க முனைகின்றனர்.
இந்த நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியல் ரீதியாக மிகவும் தெளிவான நிலையில் இருந்தாலும் கூட கடும்போக்காளர்களின் இத்தகைய செயற்பாடுகள் இனங்களுக்கிடையே ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடலாம். இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் சிறுபான்மை மக்களே கடும்போக்காளர்களின் ஒரே குறியாக உள்ளனர். குறைந்த பட்சம் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையென அவர்கள் நினைத்திருப்பார்களேயானால் இவ்வாறு இந்த நாட்டு சிறுபான்மை இனங்களைப் புறமொதுக்கும் வகையிலும் அவர்களின் மனிதாபிமான பிரச்சினைகளை மலினப்படுத்தும் வகையிலும் கருத்துக்களைக் கூறி அவர்களை நோகடிக்கும் செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.
தொடர்ந்தும் இதே வகையான தவறுகளை அவர்கள் மேற்கொள்வார்களேயானால் அவர்களின் அரசியல் எதிர்காலம் மறுபுறம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Read More»

thumbnail

1987ம் ஆண்டு வடகிழக்கு தேர்தலில் போட்டியிட மாற்றோம் என்று கூறிய முஸ்லிம் காங்கிரஸ், திடீர் என்றால் போல் அந்த தேர்தலில் போட்டியிட்டதன் காரணம் என்ன?
ஆக்கம்.....
எம்.எச்.எம்.இப்ராஹிம் 
கல்முனை.....

தற்போது வடகிழக்கு இணைப்பு, பிரிப்பு சம்பந்தமாக பேசப்படும் காலமாக இருப்பதனால். நமது  இளம் சமூகத்தினர் இதனைப்பற்றி ஒரளவு தெறிந்து கொள்ளவும்,புரிந்துகொள்ளவும் வேண்டும் என்பதனால் இக்கட்டுரையை எழுதுகின்றேன்....

டொனமூர் ஆணைக்குழு 1931ம் ஆண்டு ஏற்படுத்திய அரசியல் சீர்திருத்தத்தின் பின் தமிழர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது.
அதன் காரணமாக அன்று தொட்டு தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு தரவேண்டும் என்று தமிழ் தரப்பினர் போராடிவருகின்றனர்.

அதன் நிமித்தம் 1957ல் பண்டா செல்வா ஒப்பந்தம்.
1965ல் டட்லி செல்வா ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும்.சிங்கள கடும்போக்காளர்களின் அழுத்தம் காரணமாக அவ்வொப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டன.

அதன் பிற்பாடு தமிழ் தரப்பினால் பல போராட்டங்கள் முன்னடுக்கப்பட்டன.
அதேனோடு ஒட்டிய போராட்டமாக 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானமாக,தமிழ்ஈழமே எங்கள் இலக்கு என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அந்த கூட்டத்தில் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களும் இருந்தார்கள்.
அந்த கூட்டத்தில் அஸ்ரப் அவர்கள் கூறிய வார்த்தை, அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீலத்தை பெற்றுத்தறுவதற்கு நானும் பாடுபடுவேண் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு தமிழ் இளைஞர்கள் இந்த அரசியல் வாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை,நாம் கலத்தில் இரங்கவேண்டும் என்று நினைத்து ஆயுதம் ஏந்தினார்கள்.

அந்த போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது.
இந்தியா ஏன் ஆதரவு அளித்தது என்றால்.
தமிழர்கள் மீது கொண்ட அன்பினால் அல்ல.
மாறாக,
அன்றய இலங்கையின் ஆட்சியை அறுதிப்பெரும்பாண்மையோடு கைப்பற்றிய யூஎன்பியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அமெரிக்க சார்வு கொள்கையை கடைப்பிடித்தது மட்டுமல்ல,
கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தில் தொலைதொடர்வு நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருநூறு வருடங்களுக்கு ஒப்பந்தம் ஒன்றும் செய்தார்.

இந்த செயல்பாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது மட்டுமல்ல,அமெரிக்காவின் இலங்கை வருகை கிழக்காசியாவில் பதட்டத்தை கொண்டுவரும் என்றும்,
இந்த செயல்பாட்டை உடனே நிறுத்த வேண்டும் என்றும்,
அன்றய இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி,இலங்கை பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்ல அமெரிக்கா சார்வு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பையும் ஜே.ஆர். பேணிவந்தார்.

இந்த மனக்கசப்பு இந்திராகாந்திக்கு ஏற்பட்டதன் காரணமாக ஜே.ஆருக்கு ஒருபடிப்புக்காட்ட வேண்டும் என்ற என்னத்தினால்தான்,
தமிழர்களுக்கு இந்தியாவில் இடமும் கொடுத்து,ஆயுதபயிற்சியும் கொடுத்து,ஆயுதமும் கொடுத்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக தமிழர்களை போராடவைத்து,
இலங்கையை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளி,இந்தியாவிடம் இலங்கை சரணடையவேண்டும் என்ற என்னத்தில்தான்,இந்தியா தமிழர்களின் போராட்டத்துக்கு உதவி அளிப்பது போல் நாடகமாடியது.

இந்த விடயத்தை தமிழர்கள் அறிந்திருந்தாலும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் நமது தனிநாட்டு கோரிக்கையை வென்றுவிடலாம் என்று நினைத்துத்தான் கலத்தில் குதித்தார்கள்.

 இந்திரா காந்தியின் மறைவுக்கு பின் ராஜீப்காந்தி பிரதமரான போது,அதனை சாதகமாக நினைத்த ஜே.ஆர்.
அமெரிக்காவின் உதவியோடு,லலித் அத்துலத் முதலிக்கு பந்தோபஸ்த்து அமைச்சரை கொடுத்து, அவருடைய தலைமையில் பாரிய யுத்தம் ஒன்றை தமிழ் போராட்ட குழுக்களுக்கு எதிராக யாழ்பானத்தில் மேற்கொண்டார்.

அந்த யுத்தத்தின் காரணமாக தமிழ்குழுக்கள் பாரியபின்னடைவை சந்தித்து. யுத்தம் முடிவுக்கு வரும் நேரத்தில்,
யுத்தம் அடக்கப்பட்டால் இலங்கை நிச்சயமாக அமெரிக்காவின் பக்கம் சாய்ந்துவிடும்,இது இந்தியாவின் இறைமைக்கு பாதிப்பை கொண்டுவரும் இதனால்,இந்தியாவின் என்னம் ஈடேறும்வரை தமிழ் போராளிகள் தோற்கடிக்கப்படகூடாது என்ற என்னத்தில்தான்,
இன்னல் படும் மக்களுக்கு உணவு பொட்டலங்களை போடுவதாக கூறி,இந்திய யுத்த விமானமான மிராஜ் விமானத்தை இலங்கை நாட்டின் இறைமையை மீறி அனுப்பி ஜே.ஆருக்கு ஒரு அச்சுருத்தலை விடுத்தார், அன்றய இந்தியப் பிரதமர் ரஜீப்காந்தி.

அதோடு ஜே.ஆர் இந்தியாவிடம் சரணடைந்தார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோது அச்சுறுத்தலாக இருக்காது.
அது மட்டுமல்ல,இனிமேல் இந்தியாவின் அனுமதி இல்லாமல், எந்த பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நடவடிக்கையும் இலங்கை எடுக்காது,என்ற உத்தரவாதத்தை கொடுத்து,
இந்திய இலங்கை பனி போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இந்தியாவின் என்னம் நிறைவேறியதனால்,அதன்பின்
தமிழர்களுடைய தனிஈழ கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.
அதற்கு பதிலாக இணைந்த வடகிழக்கில்,பதிமூன்றாம் திருத்தத்தின் மூலம் மாகாணசபையை பெற்றுக்கொடுத்தது இந்தியா.

இந்தியாவை எதிர்த்து எதையும் சாதித்துவிட முடியாது என்று உணர்ந்த தமிழ்ஆயுத குழுக்கள் அந்த தீர்வை, கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டன.

ஆனால் தங்களுக்கு இந்த தீர்வில் பூரண திருப்தி ஏற்படவில்லை என்று கூறிய விடுதலை புலிகள்,இந்த தீர்வை நிராகரித்து மட்டுமல்ல இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராகவும் யுத்தமும் செய்தார்கள்.

இந்த நியைில் இந்தியாவுக்கு ஒரு கெட்ட பெயர் உலக அரங்கில் ஏற்பட்டது.
இந்திய படை அமைதிகாக்க சென்றதா? அல்லது
தமிழ் மக்களுடன் போர் புரிய சென்றதா?
என்று கேட்டபோது, இந்தியா கூறியது தமிழ் மக்கள் எங்களுடன் உள்ளார்கள்,
விடுதலைபுலிகள்தான் எங்கள் எதிரி என்று கூறியது, அதுமட்டுமல்ல,
மக்கள் வேறு,புலிகள் வேறு என்று காட்டுவதற்காக வடகிழக்கு தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு அன்று இந்தியா வந்தது.

அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஈபிஆர்எல்எப்,ஈஎன்டிஎல்எப் தவிர்ந்த யாருமே தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தவில்லை.

இன்னொறு கட்சி போட்டியிட்டால்தான் அது போட்டியாக அமையும் இல்லாது விட்டால் ஒருதலைபட்சமான தேர்தலாக அது கணிக்கப்படும்.
அப்படி ஒருநிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு அது ஒரு அவமானமாகவும்,புலிகளுக்கு வெற்றியாகவும் முடிந்து விடும்.
அதனால் எந்த கட்சியையாவது எதிர்த்து போட்டிஇட  வைக்கவேண்டும் என்று, அன்றய இலங்கையின் இந்திய உயர்ஸ்தானியர் "டிக்சித்" அவர்கள் பல கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

ஆனால் இலங்கையில் உள்ள எந்த கட்சியும் பல காரணங்களை முன்வைத்து எதிர்த்து போட்டியிட முன்வரவில்லை.

அன்று முஸ்லிம்களுக்காக குறல் கொடுத்துக்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரசும் அதனை நிராகரித்தது.
காரணம் எங்களிடம் ஒரு வார்த்தை கூட கேக்காமல் வடகிழக்ககை இணைத்தது எங்கள் தாயை விற்றதற்கு சமம்.
இரவோடு இரவாக நாங்கள் சிறுபாண்மையிலும், சிறுபாண்மையாக ஆக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
 அந்த கொள்கையில் உள்ள நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டால் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும்,
அது எங்கள் உறிமையை நாங்களே விலைபேசி விற்பதற்கு சமம் என்று கூறி மறுத்துவிட்டது.

இப்படி கூறிய முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு தேர்தலுக்கு கட்டுபணம் செலுத்துவதற்கு மூன்றே நாள் இருக்கும் போது.
அவசர அவசரமாக கொழும்பிலே உள்ள நபர்களின் பெயர் பட்டியலை போட்டு தேர்தலில் போட்டியிட்டது.
அதன் பிறகு வடகிழக்கு தேர்தலில் வெற்றியடைந்த கொழும்பு வேட்பாளர்கள் ராஜினாமா செய்விக்கப்பட்டு,
வடகிழக்கில் வசிப்பவர்களை அந்த இடத்துக்கு நியமித்து அழகு பார்த்தது.

இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை அந்த கட்சியினால் கூறப்படவில்லை.

இதனால் ஏற்பட்ட நண்மை என்ன.
தீமை என்ன என்று பிற்பாடு தொடர்ந்து வரும்....

Read More»

Saturday, September 10, 2016

thumbnail

தாருஸ்ஸலாம் மர்மக் கதைகள் " 04 (தொடர்ச்சி....)ஹக்கீமுக்கு வலது  கரமாக இருந்தவர் சேகு தாவூத்.சில சந்தர்ப்பங்களில் ஹக்கீம் சார்பில் அறிக்கைகள் விடும்  அளவிற்கு அவர் பெரிய புள்ளி.

தாருஸ்ஸலாம் பற்றி கேள்வி கேட்பதற்கு இவருக்கு 16 வருடங்கள் தாண்டியதே மொத்த மர்மமாகும்.

ஹக்கீம் ஹாபீஸ் நஸீரை உள்வாங்கி அவரை பலப்படுத்தி தன்னை வெளியே தூக்கி எறியவுள்ள ஹக்கீமின் சதித்திட்டத்தை தடுத்து நிறுத்தவே இவர் தாருஸ்ஸலாத்தின்   மர்மக் கொடியை தூக்கிப்பிடித்தார் என்பதே உண்மை.
கொள்ளையின் போது,கண்களை  மூடிக்கொண்டு - கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்தை இவரினால்  மறுக்க முடியாது. முஸ்லிம்களால் மறக்கமுடியாது.

ஹக்கீமுக்கு இடது கரமாக இருந்தவர் .ஹஸன் அலி.இவரின் முதுகை தடவிப்பார்த்தால் முதுகெலும்பு இருக்காது..இறைவன் முதுகெலும்பு இல்லாமலும் பல மனிதர்களை படைத்துள்ளான்.அதில் இவரும் ஒருவர்.

தாருஸ்ஸலாம் விவகாரத்தில் எனக்கு எதுவும் தெரியாதென குஞ்சி குழந்தையானார்.கொள்ளையின் போது காவலுக்கு வைக்கப்பட்டவர். இவர்கள் தான்  நாம் நாரே தக்பீர் சொன்ன எமது மூத்த  போராளிகள்- கிழக்கு முஸ்லீம்களின் எழுச்சி தலைவர்கள்-தலைவர் அஷ்ரப்பின் வழித்தோண்றல்கள்.

"தாருஸ்ஸலாம் பறிபோய் விட்டது அது  ஹக்கீமின் மனைவிக்கு சொந்தமாகி விட்டது, தாவூத்தும் ,ஹஸன் அலியும் தாருஸ்ஸலாத்தை கைவிட்டு என் அணியில் சேரட்டும்."

தாருஸ்ஸலாம் மக்கள் கண்முன்னே கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.மக்கள் விழித்துக் கொண்டார்கள்.அவர்களின் மீட்பு போராட்டத்தை குழிதோண்டி புதைக்கிறார் -தனது பழைய பங்காளிகளை பாதுகாக்க முயல்கிறார், கிழக்கின் தேசபிதா அதாபுல்லா.

தாருஸ்ஸலாத்தை மீட்டுக்கொள்ள வழிதெரியாதவர்கள் சுதந்திர கிழக்கிற்கு எப்படி வழிகாட்டப் போகிறார்கள்.

சேகு தாவூத் தாருஸ்ஸலாத்தை மீட்போம். என்ற புதிய போராட்டமொன்றிற்க்கு வித்திட்டுள்ளார் அதற்கு நீரூற்றி,உரமிட்டு வளர்ப்போம்!

மீண்டும் தாருஸ்ஸலாத்தை மீட்டுக்கொள்ளபோராடுவோம்!!

கருத்துக்கள்யாரிடமிருந்து வருகின்றது என்பது அல்ல எமக்கு முக்கியம்
அவை எங்கிருந்து வருகின்றது என்பதே முக்கியம்.

உலக முஸ்லீம்கள் ஜெருஸத்தை யூதர்களிடம் இழந்தனர்
இலங்கை முஸ்லீம்கள் தாருஸ்ஸலாத்தை முஸ்லீம் காபீர்களிடம் இழந்துள்ளனர்.

முற்றும்.

Read More»

thumbnail

சிலர் எவ்வளவு புகைப் பிடித்தாலும் புற்றுநோய் வராது? உங்கள் நண்பர், உறவினர் அல்லது உடன் பணிபுரியும் நபர்களில் சிலரது கைகளில் எப்போதும் ஆறாம் விரலாய் சிகரட் ஒன்று நின்றுக் கொண்டிருக்கும். பழைய ரயிலை போல எப்போதும் புகை ஊதிக் கொண்டே பயணிப்பார்கள் இவர்கள். (ஏன் நீங்கள் கூட இவ்வாறு புகைப்பவராக இருக்கலாம்.) ஆனால், இவர்களுக்கு புற்றுநோயோ அல்லது நுரையீரல், சுவாசம் சார்ந்த எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

ஆனால், சிலருக்கோ புகைப்பவர்கள் பக்கம் கொஞ்சம் நேரம் நின்றால் கூட, இருமல், தலைவலி, ஏன் இதனால் புற்றுநோய் பாதிப்பு அடைந்தவர்கள் கூட பலர் இருக்கிறார்கள். அது எப்படி புகைப்பவருக்கு புற்றுநோய் வராமல் இருக்கும் என்று கேட்கிறீர்களா? இதை ஆராய்ச்சியாளர்கள் மரபணு குறிப்புகள் / குறிப்பான்கள் தொடர்புடையவை என குறிப்பிடுகிறார்கள்....

கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மோர்கன் என்பவர் நடத்திய ஆய்வில், சில வகை மரபணு கொண்டவர்கள் சாதாரணமாகவே நீண்ட ஆயுள் பெற்றிருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

எஸ்.என்.பி (Single Nucleotide Polymorphisms)
இந்த ஆய்வில், ஒற்றை நியூக்ளியோடைட் பல்லுருத்தோற்றங்கள் (Single Nucleotide Polymorphisms) நெட்வொர்க், அதாவது டி.என்.ஏ வரிசையில் மாறுபட்டு இருக்கும் ஓர் வகை. இது மக்களில் பொதுவாக சிலருக்கு இருப்பது உண்டு. இவர்களுக்கு சுற்றுசூழல் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறதாம்.

ஆயுள் நீடிக்கிறது
இந்த மரபணுக்கள் உயிர்மங்களை அதிகரித்தும், சேதமடையாமல் பாதுகாத்தும் வாழ்நாளை நீட்டிகிறது என மோர்கன் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.

புகைத்தாலும் பாதிப்பு ஏற்படாது
இந்த மாறுபட்ட மரபணுக்கள் கொண்டவர் உயிரியல் அழுத்தங்களால் ஏற்படும் பாதிப்பு, புகைப்பிடித்தல் போன்றவற்றால் பெரிதாய் பாதிப்படைவதில்லை. ஏனெனில், மேல் கூறியவாறு இவர்களது உடல் செல்கள் உடனடியாக சேதத்தை சரிசெய்து விடுகிறதாம்.

புகை வயதை கொள்ளும் நோய்
புகையானது உங்கள் வயதை மெல்ல மெல்ல அரித்து இளமையிலேயே கொல்லும் நோயாகும். புகைப்பது மற்றும் புகைக்கும் இடங்களில் இருப்பது இரண்டுமே இவ்வாறான விளைவுகளை வெளிப்படுத்தும் என்று தான் நாம் அறிந்துள்ளோம். ஆனால் இந்த புதிய ஆய்வில், மாறுபட்ட மரபணு அதை தவிர்க்க செய்கிறது என்பது ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது.

மாறுபட்ட மரபணுவும் புற்றுநோயும்
இது ஏறத்தாழ புகையால் ஏற்படும் புற்றுநோயை 11% வரையிலும் குறைக்கிறது என மோர்கனின் புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தம் கூட குறைகிறதாம்.

மரபணு ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்
இன்றைய தினத்தில் ஆராய்ச்சியாளர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருப்பது மரபணு தான். இன்னும் முப்பது வருடங்களில் எனக்கு ஒரு சச்சின், ஒரு பில்கேட்ஸ், ஒரே செரீனா வில்லியம்ஸ் என கேட்டு குழந்தைகள் பெரும் நிலை கூட வரலாம். ஏனெனில், மரபணுவை பிரித்து மேய்ந்துவிட்டு அதன் மூலம் பெரும் லாபம் அடைய பெருநிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.
Read More»

Wednesday, September 7, 2016

thumbnail

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:1,நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.

2.அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான். போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும்.

3.அதை open செய்து அதில் ICE emergency contact-ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை save செய்து வைத்து கொள்ளுங்கள்.

4.உங்கள் போன் lock-ல் இருக்கும் போது lock-ன் கீழே emergency calls-ஐ click செய்தால் நீங்கள் save செய்து வைத்து இருக்கும் எண்கள் வரும்.

5.அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே call செய்ய முடியும்.

6.இதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள்.

அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்.
இது முற்றிலும் உண்மையான பதிவு.

உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் எவருக்கேனும் பயன்படும்.
🔰🔰அதிகமாக பகிரவும்
Read More»

Friday, September 2, 2016

thumbnail

துலைந்து போகும் சிரியா மக்களின் கனவுகள் ..!!

Hafeesul haq ( fathih)


சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தால் இதுவரைக்கும் மூன்றரை இலட்சம் பேர் கொல்லப்படுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் பல இலட்சம் பேர் #லபனான், ஜோர்தான் ,துருக்கி, ஜேர்மன் போன்ற நாடுகளில் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றாதாகவும் இன்னும் சில மத்திய தரைக் கடலில் தத்தளித்து கொண்டு இருப்பதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளது. இவை இப்படி இருக்க இன்னொரு புறத்தில் ஷீஆ கொடுங்கோலன் பஷாரின் கூட்டுப் படை மனித உயிர்களை குறிவைத்து அழித்து வருகின்றது
இதன் காரணமாக சிரியா தேசம் மனித நடமாட்டம் இல்லாத வறன்ட பாலைவனமாக காட்சியளிக்கின்றது தற்போது சிரியா பிரதேசத்தில் 10 % மானவர்களே கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில் வாழ்த்து வருகின்றார்கள். இவர்களுக்கும் உண்பதற்கு உணவு இல்லாமல் உடுப்பதற்கு நல்ல ஆடைகள் இல்லாமல் உறங்குவதற்கு உறையுள் இல்லாமல் உய்ரைகக் கையில் வைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.இன்னொரு புறம் அங்கு வாழ்கின்ற சிறுவர்களுக்கு #படிப்பதற்கு ஒழுங்கான வகுப்பறைகள் இல்லாமல் எழுதுவதற்கு கொப்பிகள் மற்றும் பேனைகள் இல்லாமல் தனது #எதிர்காலக் கனவுகளை கலைத்து கஷ்டத்தில் வாழ்கிறார்கள் எதிர்வரும் காலங்களில் இந்த சிறுவர்களின் நிலை எப்படி இருக்கப் போகின்றது என்று பார்த்தீர்களா ??இப்படிக் கொடூர வறுமையினால் சிரியா சிறுவர்களின் இலட்சியக் கனவுகள் அழிந்து வருகின்றது இதற்கு சரியான தீர்வு எமது முஸ்லிம் நாடுகளே எடுக்க வேண்டும்.முஸ்லிம்_உம்மத்தே_இது_உங்களின்_கவனத்திற்கு..

Read More»

thumbnail

ஹசன் அலிக்காக பசீர் ஆயுதமாக மாறுவது பகற் கனவா??
ஹசன் அலியிடம் ஆயுதங்கள் இல்லை.., ஆன போதும் தாக்கினாய்.,.. ஆனதினால் நான் ஆயுதமாகின்றேன். இவ்வாறு நான் சொல்லவில்லை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூதினை ஆறு மாதங்களுக்கு முன்னர் நான் சந்தித்த வேலையில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை கட்சிக்குள் எவ்வாறு இருக்க போகின்றது என்பது சம்பந்தமாக உரையாடிய வேலையில் தான் ஒரு போராட்ட வீரன் என்ற அடிப்படையில் தன்னிடம் கூறிய கருத்தே மேற்சொன்ன கருத்தாகும்.

ஆனால் இன்று 23.08.2016 செவ்வாய் கிழமை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை காரியாலையமான தாருஸ்ஸலாமில் இடம் பெற்ற கட்சியின் உயர் பீட கூட்டத்தில் தலைமையின் வேண்டுகோளினையும் உயர் பீட உறுப்பினர்கள் புறக்கணித்து தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினை பேச விடாது வாய்க்கட்டு போட்டமையினை பார்க்கும் பொழுது பாலகுமார் வளர்த்து உறுவாக்கிய போராட்ட வீரன் பசீர் சேகுதாவூத் எப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஆயுதமாக மாற போகின்றார் என்பது பகற்கனவாக மாறியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

உயர் பீட கூட்டத்தில் உள்ளூராட்சி மன்ற விடயங்கள் பாராளுமன்ற மறு சீரமைப்பு விடயங்கள், கட்சியின் யாப்பு மாற்றம், கட்சியின் கிளைகள் புணரமைப்பு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அதன் பின்னர் தலைவர் ஹக்கீம், நிசாம் காரியப்பர், சபீக் ரஜாப்டீன், ஹாபிஸ் நசீர் அஹமட், பாயிஸ் போன்றோர்களால் தாருஸ்ஸலாம் தொடர்பான கணக்கறிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையிலே கட்சியின் தலைவரினால் எவருக்கும் கணக்கறிக்கையில் ஏதாவது சந்தேகங்கள் இருக்கின்றதா என வினவப்பட்ட பொழுது கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தன்னால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு தலைவர் சரியான பதிலினை தரவில்லை என கூறிய வேலையில் அங்கிருந்த உயர் பீட உறுப்பினர்களான தவம், பழீல், மன்சூர், லாஹிர் உட்பட மற்றும் பலர் பசீரினை பேச விடாமல் தடுத்தனர். பசீர்சேகுதாவூத் எவ்வளவோ முயற்சித்தும் நபர்களின் கூக்குறலிற்கும் இடையூறுகளிற்கும் மத்தியில் பலன் கிடைக்காமலே போனது. அத்தோடு தவிசாளர் பசீரை கட்சியினை விட்டு வெளியேற்றுமாறும் கூக்குறலிட்டனர்.

ஆனால் கட்சியின் தலைவர் ஹக்கீம் பலமுறைகள் கட்சியின் தவிசாளரை பேச விடுமாறு உயர்பீட உறுப்பினர்களை கேட்டுக்கொண்டும் உயர் பீட உறுப்பினர்களின் தொடர்ந்தேர்ச்சியான இடையூறுகளினால் பசீர் சேகுதாவூத்தினால் தான் பேச முற்பட்ட விடயங்களை இறுதி வரைக்கும் பேச முடியாத விடயமாகவே காணப்பட இறுதியில் உயர் பீட கூட்டம் முடிவிற்கு கொண்டுவருவதாக கூறி கட்சியின் தலைமை வெளி நடப்பு செய்தது.

சில வாரங்களாக நான் ஹசன் அலிக்காக ஆயுதமாக மாற போகின்றேன் என்றும், தாருஸ்ஸலாமின் அணைத்து கணக்கறிக்கைகளையும் மிகச் சரியான முறையில் முஸ்லிம் காங்கிரசின் தலைமை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனவும், தலைமையின் இரகசியங்கள் தன்கைவசம் எனவும், எனது தலைவன் ஒருவனே அவனே போராட்ட வீரன் பாலகுமார் என்றும், அதற்கு பின்னர்தான் பெரும் தலைவர் அஸ்ரஃப், ஹக்கீம் எனவும், சொத்து விபரங்கள் கேட்டு ஹக்கீமிற்கு பகிரங்க கடிதம் எழுதுதல் போன்ற பகிரங்க அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்த கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் கர்ச்சிக்கும் அரசியல் குரல் இன்றைய முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டத்தோடு புஸ்வானமாகி விட்டதா என்பதுதான் எல்லோருடைய கேள்வியாக இருக்கின்றது.

நன்றி-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

Read More»

thumbnail

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள, வர்த்தகரின் படுகொலைவிடிவெள்ளி பத்திரிகை

கொழும்பு , பம்­ப­லப்­பிட்டி - பகு­தியில் சில தினங்­க­ளுக்கு முன்னர் கடத்­தப்­பட்ட இளம் முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலை­மான மாவ­னெல்ல பகு­தியில் நேற்று முன்­தினம் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.


கடத்­தப்­பட்ட வர்த்­த­கரை விடு­விக்க இரண்டு கோடி ரூபா கப்பம் கடத்­தல்­கா­ரர்­களால் கோரப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. கடத்­தப்­பட்ட வர்த்­த­கரின் தந்­தைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தொலை­பே­சியில் அழைத்த மர்ம நபர் ஒருவர் இந்த கப்பத் தொகையை கோரி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.


இந்­நி­லையில் வர்த்­தகர் சகீப் சுலை­மானை மீட்­கவும், கடத்தல்காரர்­களை அடை­யாளம் காணவும் பொலிஸார் பொது மக்­களின் உத­வியை நாடி­யி­ருந்­தனர். குறிப்­பாக ஏழு விசேட பொலிஸ் குழுக்கள் இந்த கடத்தல் சம்­பவம் தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது அவ­ரது சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் இதே பம்­ப­லப்­பிட்­டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்­த­க­ரான முஹமட் ஷியாம் கடத்­தப்­பட்டு இவ்­வாறே படு­கொலை செய்­யப்­பட்டார்.

வர்த்­தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவ­ரது நெருங்­கிய நண்­ப­ரா­லேயே இக் கொலை அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. இக் கொலையை குத்­தகை அடிப்­ப­டையில் செய்த குற்­றச்­சாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரும் அவ­ரது மகனும் மேலும் பலரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.


இன்று இதே­ போன்று மற்­றொரு இளம் முஸ்லிம் வர்த்­தகர் கடத்திக் கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இக் கொலைக்கும் பணக் கொடுக்கல் வாங்கல் விவ­கா­ரமே கார­ண­மாக இருக்­கலாம் என பொலிசார் சந்­தே­கிக்­கின்­றனர்.


முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான கொலைகள் இடம்பெறுவது கவலைக்கும் கண்டனத்துக்குமுரியதாகும். இஸ்லாம் வியாபாரத்தை ஹலாலாக்கியிருப்பினும் கொடுக்கல் வாங்கல்களை உரிய நிபந்தனைக ளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றே பணிக்கிறது. ஒருவரது ஒரு சதத்தைக் கூட மற்றவர் அநியாயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே வலியுறுத்துகிறது. துரதிஷ்டவசமாக பணத்திற்காகவும் பேராசைக்காகவும் இவ்வாறு அநியாயமாகவும் கொடூரமாகவும் வர்த்தகர்கள் கொலை செய்யப்படுவது மிக மோசமான பாவ காரியமாகும்.

வர்த்­த­கர்கள் மத்­தியில் கொடுக்கல் வாங்­கல்கள் மற்றும் ஏனைய விவ­கா­ரங்கள் தொடர்பில் பல்­வேறு முரண்­பா­டுகள் தகராறுகள் இருக்கலாம். அவை உரிய முறைமைகளை பின்பற்றி தீர்க்கப்படவேண்டும்.


அதற்கு மாறாக எவ்வாறான வகையிலும் சட்டத்தையும் மீறும் ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த கடத்தல் மற்றும் படு­கொலை சம்­பவம் தொடர்பில் சட்டம் ஒழுங்கை அமுல்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள் விரை­வா­கவும் உரிய முறை­யிலும் விசா­ரணை நடத்தி உண்­மையை கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­த­வேண்டும்.


எந்­த­வ­கை­யிலும் இது­போன்­ற­தொரு சம்­பவம் இனி­வரும் காலங்­களில் இடம்­பெ­றாமல் இருக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்டும்.

இன்று விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்..!

Read More»

Thursday, September 1, 2016

thumbnail

சர்வதேசத்தின் உதவியுடன் சாதிக்க துடிக்கும் தமிழர்கள்இலங்கை தமிழர்களின் அரசியல் போராட்டத்தை போன்ற உறுதியான போராட்டங்களை இலங்கையின் வரலாற்றில் யாருமே முன்னெடுக்கவில்லை.மிகவும் சிக்கலான தீர்வுகளை நோக்கிய பாதையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக அழகாக நீந்திச் சென்று கொண்டிருக்கின்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போராட்டத்தை சர்வதேசத்தின் அழுத்தத்துடனான தீர்வு,இலங்கை அரசின் தீர்வு என இரண்டாகப் பிரிக்கலாம்.தமிழ் மக்கள் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்,பேரின அரசின் அத்துமீறலான செயற்பாடுகள் போன்றவற்றை சர்வதேசத்தின் உதவியுடன் தீர்த்துக்கொள்ளலாம்.இலங்கை அரசு சர்வதேசத்தின் நிபந்தனைகளுக்கு மறுக்கும் பட்சத்தில் இலங்கை அரசின் மீது சர்வதேசம் பல் கோண அழுத்தங்களை வழங்கி நிலை குலையச் செய்ய முடியும்.இதனை தாக்குப் பிடிக்கும் வலிமை இலங்கை அரசிடமில்லை என்பதே உண்மை.கதை இவ்வாறு சென்றாலும் இவ் விடயத்தில் சர்வதேசம் இதய சுத்தியுடன் செயற்படுகிறதா என்பதே இதனைத் தொடர்ந்தெழும் வினாவாகும்.

தமிழ் மக்கள் இலங்கையின் அதிகாரப்பரவலாக்கம் சம்பந்தமான விடயங்களில் சமஷ்டி அதிகாரத்துடனான இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணத்தை எதிர்பார்க்கின்றனர்.சர்வதேசம் ஒரு நாட்டின் இறைமையை பாதிக்கும் விடயங்களில் அந் நாட்டிற்கு ஆலோசனை வழங்கலாமே தவிர அந் நாட்டின் மீது நேரடியாக அழுத்தம் பிரயோகிக்க முடியாது.சர்வதேசத்தின் தலையீடுகள் கூட அந் நாட்டின் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டதாகவே அமையும்.அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளரிடம் தமிழ் கைதிகளின் விடுதலை பற்றி முறையிட்ட போது இலங்கையின் சட்ட விதிகளுக்கு உட்பட்ட விதத்திலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டமை இவ் விடயத்தை தெளிவாக அறிந்துகொள்ளச் செய்கிறது.
தமிழ் மக்களின் சமஷ்டி அதிகாரத்துடனான இணைந்த வடக்கு,கிழக்கு எனும் கோரிக்கை இலங்கை அரசியலமைப்புடன் தொடர்புற்றிருப்பதால் அத் தீர்வை இலங்கை அரசாலேயே வழங்க முடியும்.இலங்கை அரசு தமிழ் மக்கள் தங்களுக்குத் தேவையான தீர்வுகளைக் கேட்ட மறு கணம் மனமுவர்ந்து அள்ளிக் கொடுக்கப்போவதில்லை.அவ்வாறுஅள்ளிக் கொடுத்திருந்தால் இலங்கையில் இனவாதம் இப்படி கோரவடிவம் எடுத்திருக்காது.சில அழுத்தங்களை வழங்குவதன் மூலமே தமிழ் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும்.தமிழ் மக்கள் மாத்திரமல்ல இலங்கையின் சிறு பான்மையினர் அனைவரும் இவ்வாறே தங்களுக்குத் தேவையான தீர்வுகளை சுவைக்க முடியும்.

எப்போது விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டார்களோ அதன் பிறகு தமிழ் மக்கள் தங்களது உரிமை கோசங்களை அரசியல் ரீதியாக சாதிக்க புறப்பட்டனர்.யுத்தத்தின் பிற்பாடு இடம்பெறும் தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் வலிமைக்கு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேசம் இலங்கைக்குள் நுழைந்தமை பிரதான காரணமாகும்.இலங்கை அரசு சர்வதேசத்தின் கோரப்பிடிக்குள்ளிருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுகளை முன் வைக்க வேண்டும் அல்லது சர்வதேசம் முன் வைக்கும் பரிந்துரைகளை ஏற்க வேண்டும்.சர்வதேசத்தின் பரிந்துரைகள் யுத்தக் குற்றச் சாட்டுக்களை மையப்படுத்தியிருப்பதால் அது இலங்கைக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லது,.இதில் படைத் தளபதிகள்,அரசின் முக்கிய புள்ளிகள்,உயர் அதிகாரிகள் அகப்பட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது.

இலங்கை அரசு தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுகளை முன் வைத்தால் இலங்கைக்குள் சர்வதேசத்தின் தலையீட்டை நிறுத்தி விடலாம்.இன்றுள்ள கள நிலைமைகளின் படி முதன் முதலில் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டு வந்த அமெரிக்க இலங்கைக்கு சார்பு போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.சர்வதேசத்தின் நகர்வுகளனைத்தும் அமெரிக்காவில் தங்கிருக்கும் என்பது வரலாறு.இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு சிறிது ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வுகளை வழங்கினால் கூட இலங்கை அரசின் மீதுள்ள சர்வதேசத்தின் கழுகுப் பார்வையை மாற்றிவிடலாம்.ஜனாதிபதி மைத்திரி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தால் தான் சிங்களவர்கள் நிம்மதியாக வாழலாமென கிளிநொச்சியில் இலங்கை-ஜெர்மன் தொழில்நுட்பக் கல்லூரியை திறந்து வைக்கும் போது கூறியிருந்தமை மேலுள்ள எனது வாதங்களை நியாயப்படுத்திச் செல்கிறது.

இவ்வரசு சர்வதேசத்தை தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ள தங்களுக்கு இயலுமான வழிகளில் முயற்சித்து வருகிறது.அந்த வரிசையில் இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவி த.தே.கூவிற்கு வழங்கப்பட்டமை,பாராளுமன்ற குழுக்களின் தலைவராக தமிழர் ஒருவர் உள்ளமை,இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தேசியக் கீதம் தமிழில் ஒலிக்கப்பட்டமை,பிரதம நீதியரசராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை,வட மாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை,மத்திய வங்கி ஆளுநராக தமிழர் ஒருவரை நியமித்திருந்தமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.இவைகள் சர்வதேசத்திலும் சிறந்த பெறுமானத்தைப் பெற்றிருந்தது.தற்போது அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவுப் போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.அமெரிக்காவின் முக்கிய புள்ளிகள் இலங்கை நோக்கி படை எடுத்த வண்ணமுமுள்ளனர்.இலங்கை சர்வதேசத்தின் பல புகளாரங்களையும் பெற்றுள்ளது.இவைகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை திசை திருப்பி விடுமா என்று சிந்திக்க வைக்கின்றது.இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்ல என்பதை யாவரும் அறிவர்.

தற்போது இடம் பெற்றுக்கொண்டிருக்கும் விச ஊசி விவகாரம்,காணாமலாக்கப்பட்டோரை கண்டு பிடிக்கும் அலுவலகம் திறப்பு ஆகியன தமிழர்களின் போராட்டத்தை வேறு திசை நோக்கி திருப்பிக்கொண்டிருப்பதாகவேஉணர்கிறேன்.தமிழர்களின் உள்ளங்களில் இவ்வரசு புனர்வார்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது செய்திருப்பார்களா என்ற அச்சம் காணப்பட்டது.பரஸ்பரம் இரு இனங்களுக்குமிடையில் காணப்படுகின்ற புரிந்துணர்வின்மை இதற்கான காரணமாகவுமிருக்கலாம்.நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் தொடர்ச்சியாக மரணிக்கும் போது இவ்வாறான சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதவொன்று.சந்தேகங்கள் எழுவது ஒரு போதும் தவறல்ல.மிகவும் புண்பட்டுக் கிடக்கும் தமிழர்களுக்கு இதன் பிற்பாடு சிறிதேனும் மனம் புண் படும் வகையான எதுவும் அரங்கேறிவிடக்கூடாது என்பதால் இவ்வாறான சந்தேகங்கள் எழுவது மிகவும் பொருத்தமானதும் கூட.

தமிழ் மக்களால் இவ் விச ஊசி விடயமானது மிகக் கவனமாக கையாளப்பட்டிருக்க வேண்டும்.இதன் போது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பலர் மேற்கொண்ட பிரச்சாரங்கள் விச ஊசி விவகாரம் உண்மை என்ற பாணியிலேயே காணப்பட்டது.அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இவ்விடயத்தை சர்வதேசத்திடம் கொண்டு சென்று சாதிக்கவே விரும்பினர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையில் சர்வதேசத்தின் உதவியுடனான விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டு ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டிருந்தது.இவ்விடயத்தை சர்வதேசத்திடம் கொண்டு சென்று பொய்த்துப் போனால் தமிழர்களின் இத்தனை நாள் போராட்டங்களும் பொய்த்துப் போக வாய்ப்புள்ளது.கடலின் பயணிக்கும் கப்பல் நீரில் மூழ்க ஒரு சிறு துவாரம் போதுமாகும்.

மஹிந்த ராஜபக்ஸ மிகவும் திடகாத்திரமாக நின்று யுத்தத்தை வெற்றி கொண்டிருந்தார்.அவர் யுத்தத்தின் பிற்பாடான சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாது போனாலும் அதன் தாக்கங்களை மிகவும் அதிகமாக உணர்ந்திருந்தார்.யுத்தம் ஓய்ந்து சில நாட்களிலேயே சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கலானார்.இவ்வாறான நிலையில் விச ஊசி போன்ற விடயங்களுக்குள் நிச்சயம் கை வைத்திருக்க மாட்டார்.தமிழர்கள் அனைத்தையும் சர்வதேசம் கொண்டு தீர்க்க முயல்வதை சரியான அனுகுமுறையாகக் கூற முடியாது.இது தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சுக்கள் நடாத்தி விச ஊசி தொடர்பான நம்பகரமான விசாரணை பொறி முறைகளை மேற்கொள்ள முயற்சித்திருக்க வேண்டும்.இவ் விசாரணை பொறிமுறையில் அதிகமான தமிழ் வைத்தியர்களை உள் வாங்குவதன் மூலம் இதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதில் திருப்தியில்லை என்றால் திருப்தியற்றமைக்கான காரணங்களை எடுத்துரைத்து சர்வதேசத்தின் உதவியை நாடியிருக்கலாம்.தமிழர்கள் எடுத்த எடுப்பில் எல்லாவற்றிற்கும் சர்வதேசம் செல்வது இலங்கை நாட்டின் கெளரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.இலங்கை நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பது ஒவ்வொரு இலங்கை பிரஜையினதும் கடமையும் கூட.இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன முதலில் இலங்கையில் விசாரணைகளை முன்னெடுப்போம்.அதற்கு இயலாத போது சர்வதேசம் செல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முன்னாள் போராளிகளில் பலர் புற்று நோயினாலேயே மரணமடைந்துள்ளனர்.இவ்வாறு மரணமடைந்த போராளிகளில் தமிழினி,சிவரதி ஆகியோரை முக்கியமானவர்களாக கூறலாம்.இவர்கள் இருவருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே புற்று நோய் பீடித்திருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான தமிழ்கவி தெரிவித்திருந்தார்.நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிவமோகன் இவ்விடயத்தில் எந்த உண்மையும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் குழு நிலை விவாதமொன்றில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு பலர் இவ்விடயம் உண்மைத் தன்மை குறைவானதென கூறிவருகின்றமையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டியதொரு விடயமாகும்.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளில் சிலர் உறுதி செய்யப்படாத இவ் விடயத்திற்கு சர்வதேசம் செல்ல முனையும் போக்கானது எதற்கும் இலங்கை அரசிடமிருந்து தீர்வு கிடைக்காது என்ற மனோ நிலையை வெளிப்படுத்தி நிற்கின்றது.தமிழர்கள் தங்களது இம் மனோ நிலையை மாற்ற வேண்டிய அதே கனம் இலங்கை அரசு அதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.தமிழர்கள் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளமையை இதற்கான காரணமாகக் கூறலாம்.இவ் விடயம் சர்வதேச விசாரணை மூலம் உண்மையென அறியப்பட்டால் இலங்கை அரசு சர்வதேசத்தின் முன் கை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது.இதில் மஹிந்த அரசு மாட்டிக் கொண்டாலும் அதன் தலையிடியை எதிர்கொள்ளுமளவு தற்போதைய இலங்கை அரசிடமும் பலம் இருப்பதாகக் கூற முடியாது.இவ் விடயம் உண்மையாகவிருந்து அதனை இலங்கை அரசு சர்வதேச அழுத்தமின்றி விசாரித்து உண்மையை வெளிப்படுத்தினால் இவ்வரசின் மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கை பிறந்து இதற்கான நீதிப் பொறிமுறைகளையும் இவ்வரசிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.இவ்விடயம் உண்மையாக இருந்தால் அதனை அவ்வளவு இலகுவில் மூடி மறைத்துவிடவும் முடியாது.மேலுள்ளவைகளிலிருந்து தமிழர்கள் இதனை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரும் போது அதனை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நெடுங்காலமாக முரண்பாட்டு அரசியல் கொள்கையை கடைப்பிடித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வரசை பல விடயங்களில் பாராட்டியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராட்டு தமிழர்கள் விடயத்தில் இவ்வரசின் கரிசனையை மட்டிட்டுக் கொள்ளச் செய்கிறது.இப்படி இருக்கையில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரின் இவ்வாறான செயற்பாடுகள் அரசின் தலைவர்களை சலிப்பூட்டச் செய்யலாம்.இவ்விடயம் உண்மை இல்லை என்றால் இலங்கை அரசு ஏன் சர்வதேசம் செல்ல பயப்பட வேண்டுமென்ற வினா உள்ளது.இவ் விடயத்திற்கு மாத்திரம் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டு யுத்தக் குற்றச் சாட்டு உட்பட பல விடயங்களுக்கு சர்வதேச விசாரணையை மறுக்கும் போது இலங்கை மீது ஏதோ ஒரு பிழை இருப்பதாகவு பொருள் கொள்ளச் செய்யும்.

அண்மையில் அமெரிக்க மருத்துவ குழுவொன்று வைத்திய முகாம்களை நடாத்தும் நோக்கில் யாழ்பாணம் சென்றிருந்தது.இவ் விச ஊசிச் சர்ச்சை தோன்றியுள்ள,தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பலர் இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டை எதிர்பார்க்கும் சந்தர்ப்பத்தில் இக் குழுவின் விஜயம் சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.அமெரிக்க வைத்தியக் குழுவினர் நடாத்திய வைத்திய முகாமில் முன்னாள் போராளிகள் சிலரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைக்கபெற்றுள்ளதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தின் தலைவர் மருத்துவக் காலாநிதி சன்ன ஜெயசூரிய குற்றம் சாட்டியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.வடக்கில் வைத்திய முகாம்களை நடாத்தும் நோக்கில் வந்திருந்ததாக கூறப்பட்ட அமெரிக்க வைத்திய குழுவிடம் சில போராளிகளை சோதனைக்கு உட்படுத்த தயார் என்ற அறிவிப்பை வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் விடுத்திருந்தார்.மத்திய சுகாதார அமைச்சர் சர்வதேச விசாரணையை அனுமதிக்கக் கூடாது எனக் கூறி வரும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் இவாறான கருத்தை கூறியிருப்பது வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனின் விதண்டாவாதப் போக்கை எடுத்துக்காட்டுகிறது.இதற்குப் பிறகு மத்திய அரசு இவ்வாறான மருத்துவக் குழுக்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்.பிறகு பேரினவாதம் தடுக்கிறதென கூப்பாடு போடுவார்கள்.தற்போது வடக்கு முதலமைச்சர் இவ்விடயத்தில் சற்று நழுவல் போக்கை கையாளுகிறார்.இவ்விடயம் சர்வதேச மட்டத்திற்கு சென்று விட்டதால் இதற்குப் பிறகு இவ்விடயத்தில் உறுதியாக நில்லாது தமிழ் தலைமைகள் சளைத்துப் போனால் அவர்களாகவே தங்களது போலிப் பிரச்சாரங்களை ஏற்றுக்கொள்வதாக பொருள் கொடுக்கும்.இது சர்வதேசத்தில் அவர்களது மதிப்பெண்களை குறைத்துவிடும்.

தற்போது கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் அலுவலகத்திற்கு பாராளுமன்றம் விவாதமின்றி அனுமதியளித்துள்ளது.அத் தீர்மானத்திற்கு சபா நாயகர் தனது அனுமதியையும் வழங்கியுள்ளார்.எந்த விடயத்தையும் விவாதம் நடாத்தி பாராளுமன்ற அனுமதியைக் கோருவது சிறப்பானது.அப்போது தான் சபையில் அமர்ந்துள்ள அனைவருக்கும் அவ் விடயத்தில் தெளிவு பிறக்கும்.சபாநாயகர் அனுமதி வழங்கினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.இதற்கு ஒப்புதலளித்த சபாநாயகர் தான் தனது கடமையை செய்ததாகவும் கூறியிருந்தார்.சபாநாயகர் சட்டத்திற்கு முரணான வகையில் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தால் அதனை நீதி மன்றம் செல்வதன் மூலம் தடுக்க முடியும்.வரி அமுலுக்கு வந்த முறைமை பிழை என நீதி மன்றத் தீர்ப்பால் நடை முறைக்கு வராது தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பாராளுமன்ற தீர்மானமொன்றிற்கு சபாநாயகர் கையொப்பமிடாமல் நிராகரிப்பதன் மூலம் அத் தீர்மானம் அமுலுக்கு வராமல் தடுக்க முடியும்.பாராளுமன்ற தீர்மானத்திற்கு சபாநாயகர் கையொப்பமிடுவது அவரது கடமை.அதனைக் கொண்டு பாராளுமன்ற எடுத்த தீர்மானமொன்றை தடுக்க விளைவது மிகத் தவறான வழி காட்டலாகும்.மக்கள் விடுதலை முன்னணி தன்னால் இத் தீர்மானத்திற்கு முன் வைக்கப்பட்ட பரிந்துரைகள் மூன்றை உட்புகுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.திருத்தங்களைஉட்புகுத்தாத தீர்மானத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்துள்ளமை அவர்களின் நகைச் சுவை அரசியல் போக்கை எடுத்துக் காட்டுகிறது.பாராளுமன்ற தீர்மானத்தை அதனை கொண்டு வருபவர்களால் தான் நினைத்த போது மாற்ற முடியாது.திருத்தச் சட்ட மூலங்களை கொண்டுவருவதன் மூலமே மாற்ற முடியும்.இப் பதில் ஜே.வி.பியினருக்கு பிரதமரிடமிருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டு பிடிக்கும் அலுவலகத்தின் மூலம் வெள்ளை வேன் கடத்தல் போன்றவற்றையும் கிளறலாம்.இதன் மூலம் மஹிந்த அணியினரை அடக்கவும் வாய்ப்புள்ளது.இதனால் தான் என்னவோ கூட்டு எதிர்க்கட்சியினர் இதனை எதிர்க்கின்றார்களோ தெரியவில்லைஇலங்கையில் விடுதலைப் புலிகள் மூலமும் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலரும் அகப்பட்டுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.இது தமிழ் மக்களை இன்னும் அதிகம் பாதிப்பிற்குட்படுத்தும்.தமிழ் மக்கள் சர்வதேச தலையீட்டையே விரும்பி வருகின்றனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனை தனது கோரிக்கைகளில் பிரதானமாகக் கொண்டுள்ளது.இப்படி இருக்கையில் இச் செயற்பாடு சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கும் செயற்பாடு என்பதை மறுப்பதற்கில்லை.இவ்விசாரணைபொறிமுறை நியாயமாக இருந்தால் சர்வதேசத்தின் நம்பிக்கையை இலங்கை அரசு வென்றுவிடும்.பாராளுமன்றத்தின் இத் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன் வைக்கப்பட்ட சீர் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.இதன் மூலம் இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வர வேற்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையில் இருந்து விலகிச் செல்கிறதா என்ற அச்சத்தை தோற்றுவிக்கின்றது.

இவ் அலுவலகத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.இது நீதிக்கான பொறிமுறையல்லவென இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.காணாமல் போனோரிற்கு என்ன நடந்துள்ளது என அறிந்தால் நிச்சயம் அவ்விடத்தில் நீதிக்கான பொறி முறையின் அவசியம் உணரப்படும்.இலங்கை வாழ் மக்கள் பலர் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றி அறியாமலேயே உள்ளனர்.இது சரியோ பிழையோ காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகள் உயிரோடு இருப்பதாக நம்புவோரிற்கு அவர்கள் மீள வருவார்களா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக அமையும்.

_______________________________________________

குறிப்பு: இக் கட்டுரை நேற்று 30-08-2016ம் திகதி செவ்வாய் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Read More»

thumbnail

முஸ்லிம்களை ரனில் நிராகரிக்கிறார். உலமா கட்சி கண்டனம்


ஐ நா செய‌லாள‌ர் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் த‌லைமைக‌ளை த‌னியாக‌ ச‌ந்திப்ப‌த‌ற்கு ஐ தே க அர‌சு ஏற்பாடு செய்யாத‌த‌ன் மூல‌ம் இந்த‌ ஆட்சி முஸ்லிம்க‌ளுக்கு துரோக‌மிழைத்துள்ள‌து.


இந்த‌ நாட்டில் ஆயுத‌ம் தாங்கி போராட‌ம‌லேயே பாரிய‌ உயிர், உட‌மை இழ‌ப்புக்க‌ளுக்கு முக‌ம் கொடுத்த‌ ஒரேயொரு இன‌ம் முஸ்லிம்க‌ளாகும். அவ‌ர்க‌ள் த‌னியாக‌ பிரித்துப்பார்த்து கொல்ல‌ப்ப‌ட்ட‌தோடு வ‌ட‌க்கிலிருந்து அனைத்தும் உறிஞ்ச‌ப்ப‌ட்ட‌த‌ன் பின் வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள். அப்ப‌டியிருந்தும் முஸ்லிம் அர‌சிய‌ல் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளின் த‌னித்த‌ர‌ப்பொன்றை பாங்கி மூனுட‌ன் த‌னியாக‌ ச‌ந்திக்க‌ வைக்க‌ முடியாம‌ல் இந்த‌ அர‌சு முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு முதுகில் குத்திய‌மைக்கு கார‌ண‌ம் அர‌சாங்க‌ம் த‌ தே கூட்ட‌மைப்பின் நிக‌ழ்ச்சி நிர‌லுக்கு அடிப‌ணிந்துள்ள‌தா என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி கேட்கிற‌து.

பாங்கிமூனை முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌னித்த‌ர‌ப்பு ச‌ந்தித்தால் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளுக்கு த‌ தே கூட்ட‌மைப்பின‌ர் செய்யும் துரோக‌ங்கள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும் என்ற‌ அச்ச‌த்தின் கார‌ண‌மாக‌ அர‌சாங்க‌ம் முஸ்லிம் த‌ர‌ப்பை ஓர‌ம் க‌ட்டியுள்ள‌தாக‌வே நாம் பார்க்கிறோம்.

ஆக‌வே உட‌ன‌டியாக‌ பிர‌த‌ம‌ர் இது விட‌ய‌த்தில் த‌லையிட்டு பாராளும‌ன்ற‌த்திலும் அத‌ற்கு வெளியிலும் அர‌சிய‌லில் செய‌ற்ப‌டும் முஸ்லிம் க‌ட்சிக‌ளைச்சேர்ந்த‌ "அனைத்து முஸ்லிம் கூட்ட‌மைப்பை" ஐ நா செய‌லாள‌ரை த‌னியாக‌ ச‌ந்தித்து முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ளையும் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்காத‌ அர‌சிய‌ல் தீர்வு குறித்தும் கூறுவ‌த‌ற்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி பிர‌த‌ம‌ர் ர‌ணிலை கேட்டுக்கொள்கிற‌து.
Read More»

Wednesday, August 31, 2016

thumbnail

குற்றசாட்டுக்கள் வைக்கப்படுவதின் பின்னனிகளை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கவேண்டும்...- அல்ஹாஜ் முஹம்மட் இப்றாஹிம் (கல்முனை)ரிசாட்டுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு, சொப்பிங் பேக்கோடு வந்தவருக்கு இவ்வளவு பணமா? என்றல்லாம் அவருடை எதிரிகள் பேசுவதை கேட்கின்றோம்.

இதே போன்று இதைவிட வீரியம் கொண்ட பிரச்சினைகள் ஹக்கீமுக்கு எதிராக வந்த போதல்லாம் யாரும் அதை பெரிது படுத்துவதில்லை.
காரணம் அவருக்கு அரசியல் எதிரி என்று யாரையும் அவர் சம்பாதித்து கொள்வதில்லை.

எல்லா அரசியல் வாதிகளும் அவருக்கு பிரியானி கொடுத்து ஆதரிப்பார்கள்.
அதே நேரம் எந்த அரசாங்கம் வந்தாலும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்,
காரணம் அவர் எந்த அரசியல் வாதிகளிடமும் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் முட்டி மோதுவது இல்லை அதனால் அவர் எல்லோருக்கும் நல்லவர்.

மறைந்த தலைவர் எல்லா அரசியல் வாதிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார்.

அதனால் அவர் பல இன்னல்களை சந்தித்தார்.

கல்முனையிலிருந்து வெரும் கையோடு வந்த அஸ்ரப்புக்கு இவ்வளவு பணமும் அந்தஸ்த்தும் எப்படி கிடைத்தது என்று கேட்டு கூத்தடித்தார்கள்...
பிறகு காலி டென்டர் விடயத்தில் கொள்ளையடித்து விட்டாய் என்று கூக்குரல் இட்டார்கள்,அனுரா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் அஸ்ரப்பின் கையை இஸ்லாமிய சட்டப்படி வெட்டவேண்டும் என்றார்.
அந்த அளவுக்கு அரசாங்க பணத்தை கொள்ளை அடித்துள்ளார். என்று ரிச்சட் பத்திரன கூறியது மட்டுமல்ல செருப்பால் பாரளமன்றத்துக்குள் அஸ்ரப் அவர்களுக்கு எறிந்தார்.

சந்திரிக்கா பௌசி அவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர் மூலமாக அஸ்ரப்பை ஆட்டிபடைத்தார் என்பதல்லாம் வரலாறு...
மறுபக்கம் தமிழ் தரப்பினர் சொல்லொன்னா துயரங்களை செய்தது மற்றுமன்றி அவரை கொலையும் செய்தனர்.

அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் கடைசிவரையும் அழைத்திருக்கமாட்டார்.

அஷ்ரப் வழிந்து சென்று பிரியாணி சாப்பிட்டு இருக்கவும் மாட்டார்.
ஏனன்றால் பிரபாகரன் எப்படி நானயமானவர் என்று அஸ்ரப்புக்கு தெறியும்.

இப்போது விடயத்துக்கு வருவோம்.ஹக்கிமை போல் அஸரப்பும் அரசியல் செய்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காது.
அதே போன்றுதான் ரிசாட்டுக்கும் பல எதிர்ப்புக்கள் வந்த வன்னம் உள்ளது.

ஒன்று அரசியலை விட்டு ரிசாட் ஒதுங்க வேண்டும்.
அல்லது கொல்லப்படவேண்டும்.

அல்லது ஹக்கீமைபோல் அரசியல் செய்ய வேண்டும்.
இதுதான் தீர்வாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்....
தங்கம் தான் கஸ்டப்படும்..
மண்னு மன்றியிட்டு கிடக்கும்..
இந்த விடயங்களை புரிந்து கொண்டால் சரிதான்....
Read More»

thumbnail

இலங்கையில் இஸ்ரேலுடைய ஊடுருவல் முஸ்லிங்களுக்கு பாதகம்
இஸ்ரேல் –இலங்கைக்கு இடையிலான நற்புறவு என்பது தற்போது ஆரம்பிக்கப்பட்டதல்ல 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் இஸ்ரேல் - இலங்கைக்கு இடையிலான உறவு ஆரம்பித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவரும் நியமிக்கப்பட்டதுடன் இலங்கையிலும் இஸ்ரேலிய தூதுவராலயமும் ஆரம்பிக்கப்பட்டது.ஆனாலும் அந்த உறவு 1970ம் ஆண்டு சிறிமா அம்மையாரின் ஆட்சிக்காலம் தொடங்கியவுடன் இஸ்ரேலிய தூதுவராலயத்தையும் மூடி இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவரும் திருப்பி அழைக்கப்பட்டு உறவும் இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் வெடித்தபோது அதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மீண்டும் இஸ்ரேல் இலங்கைக்குள் ஜே.ஆர். இன் அழைப்பின் பேரில் கால்பதிக்கத் தொடங்கியதுடன் அரசுக்கு யுத்த உதவிகளையும் செய்து நட்புறவை வளர்த்துக்கொண்டது. .அதன் பின் 1989ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறிய பிரேமதாஸ 1990 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கையிலுள்ள இஸ்ரேலிய தூதரகத்தை மூடியதுடன் இலங்கை இஸ்ரேலுக்கு இடையிலான தொடர்புகள் முடக்கப்பட்டன..
அதை தொடர்ந்து 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சந்திரிக்கா அரசாங்கத்தில் மீண்டும் இரு நாட்டிற்குமான உறவு துளிர் விட ஆரம்பித்தது. அதன் விளைவாக இலங்கை - இஸ்ரேலுக்கிைடயிலான இராஜதந்திர உறவுகள் 2000 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டதுடன்
2013 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இஸ்ரேலிய தூதரகம் அமைப்பதற்குரிய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இது இவ்வாறு இன்று இருக்க நல்லாட்சி அரசாங்கத்தினுடான உறவை இஸ்ரேல் பலப்படுத்தி வருகின்றது அதன் ஒரு கட்டமாக கடந்த வருட செப்டெம்பர் மாத இறுதியில் உலக முன்னணி யூத நிறுவனமாக கருதப்படும் அமெரிக்க யூத கவுன்சிலின் தூதுக் குழுவினர் இலங்கைக்கு வந்து நல்லாட்சி அரசின் முக்கிய சில அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தொரிவித்ததுடன் அமெரிக்க யூத கவுன்சிளின் உறவு நமது அமைப்பின் பிரதிநிதிகள் மூலமாக நெருக்கமாக தொடரும் என்றும் பேசப்பட்டது. அன்று இந்த யூத கவுன்சிலின் தூதுக் குழு­வினரின் வருகையானது நாட்டு முஸ்லிம்களிடத்திலே பெரும் அச்சத்தையும் இந்த நல்லாட்சி அரசின் மீதுள்ள நம்பிக்கையீனத்தையும் கேள்விக்குரியக்கியதுடன் யூத கவுன்சிளின் விஜயம் சம்மந்தமாக இஸ்ரேல் எதிர்ப்பு சிந்தனையாளர்களாளும் ஏனையவர்களாலும் எதிர்ப்புகளும் அறிக்கைகளும் வெளியிடப்பட்ட நேரத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இலங்கை – இஸ்ரேல் யூத சியோனிஸ்ட்களுடனும் நட்புறவை வளர்த்து வருவதாக சுமத்துப்பட்டுவரும் குற்றசாட்டுகளில் எந்த உண்மை இல்லையொன்றும் அமெரிக்க யூத சங்கத்தினர் இலங்கைக்கு விஜயம் அது ஒரு இராஜதந்திர விஜயமில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் என்னிடம் தெரிவித்ததுடன் .இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறானதொரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டிருப்பவர்களும் சில பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர் என்றும் அறிக்கை விட்டார்.

இந்த முஜிபுர் ரஹ்மான் கடந்த 2013 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இஸ்ரேலிய தூதரகம் அமைப்பதற்குரிய முனைப்புகளில் மஹிந்த அரசு முயற்சிகளை மேற்கொண்ட போது பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அன்று மாகாண சபை உறுப்பினராக இருந்த போது சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில முஸ்லிம் சிவில் அமைப்புகளும் அதற்கு எதிராக கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை செய்து எதிர்பபை வெளியிட்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே கடந்த வருட இறுதியில் நடைபெற்ற யூத கவுன்சிலின் ஒப்பந்தப்படி இஸ்ரேல் –இலங்கை அரசுக்கான உறவுகள் வலுப்பெற்றுக் கொண்டிருப்பதையும் அன்று மறுத்த நல்லாட்சி அரசு இன்று இஸ்ரேலின் உறவை ஒப்புக்கொண்டிருப்பதையும் நாம் காணலாம். முஸ்லிம் சமூகத்தை எதிரியாகவே பார்த்து பழக்கப்பட்ட யூதசமூகத்தின் வரவானது நமது நாட்டு முஸ்லிம்களை பொறுத்தவரை பாதிப்புக்களை ஏற்படுத்தாது என்று அரசு கூறினாலும் நேரடியாக எந்த பாதிப்புக்களை ஏற்படுத்தா விட்டாலும் மறைமுகமாக பாதிப்புக்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நாம் கண்ட வரலாற்று உண்மையாகும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு
பெரும் பங்காற்றியுள்ள நமது சமூகம் இன்று இஸ்ரேலுடன் இலங்கை அரசு  மீண்டும் உறவை வலுப்படுத்துகின்றமையானது முஸ்லிம்களையும் இஸ்ரேல் எதிர்ப்பு சிந்தனையாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் எமது மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட எமது பிரதிநிதிகள் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற பதவிகளில் வகித்துக்கொண்டு தமது பதவிகளை பாதுகாத்துக்கொள்வதிள்ளே கவணமாக இருக்கின்றார்களே தவிர தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகளை பற்றி எந்த கவலையும் அவர்களுக்கு இல்லை. சமுகத்தின் பாதுகாப்பை விட அவர்களுக்கு பதவி பட்டம் தந்த அரசின் இருப்புத்தான் முக்கியம்.என்பது மட்டும் உண்மை.

காத்தான்குடி முகம்மட் அன்சார்

Read More»

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

back to top