Showing posts with label political. Show all postsநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பொலிஸார் கட்டுப்படவில்லை என்றால் அந்தபதவியில் அவர்கள் தொடர்ந்து இருக்க அருகதை அற்றவர்கள் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..

இப்தார் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சந்திரிக்கா உரையாற்றியதை காணக்கிடைத்தது. இந்த நாட்டில் உள்ள ஓட்டு மொத்த முஸ்லிம்களும் முட்டாள்கள் என்ற நினைப்பில் அவரது உரை இடம்பெற்றிருந்தது

தனது உரையில் மஹிந்த ராஜபக்‌ஷவை இலக்கு வைத்து விமர்சனம் செய்துள்ள சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது இடம்பெற்ற மாவனல்லை கலவரத்துக்கு எதிராக அவர் அப்போது நிலைநாட்டிய நீதி என்ன? என்பதை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இதே சந்திரிக்காவின் அரசாங்கத்தில் 1999ம் ஆண்டு களுத்துறை வெட்டுமங்கடை UC மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மோதல் முஸ்லிம் சிங்கள மக்களிடையே இனக்கலவரமாக வெடித்தது. அதன் போது முஸ்லிம்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன. அப்போது களுத்துறைத் தொகுதி UNP அமைப்பாளராக இருந்தவர் ராஜித சேனாரத்னவாகும். அன்று சந்திரிக்கா அம்மையாரின் அரசை கவிழ்க்க முஸ்லிம்களையே ஆயுதமாக பாவித்தனர்.அதற்கு சந்திரிக்கா அரசு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

ஞானசாரவை நாய் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அலுத்கமை கலவரத்துக்கு என்ன நீதியை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதை அவரது பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த முஸ்லிம்கள் அவரிடம்கேட்டிருந்தால் அவர் என்ன பதில் கூறியிருக்க முடியும்.

மைதிரியின் ரிமோட் கொன்றோலை தன்னிடம் வைத்துள்ள சந்திரிக்க இவ்வாறு நாடகமாடி மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை முட்டாள்களாக்க முயற்சிக்க கூடாது என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரது ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

இன்று பொது பல சேனா விவகாத்தில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களை பார்க்கின்ற போது ஞானசார தேரரின் பின்னால் ஜனாதிபதி மைத்திரி உள்ளார் என்ற அச்சமே  மேலோங்கி காணப்படுகிறது. அவ்வாறானதொரு மிகப் பெரும் சக்தியின் பின்னணி இல்லாமல் இந்தளவு ஞானசார தேரர் ஆட்டம் போடவும் முடியாது. இத்தனை எதிர்ப்புக்களை மீறி அவருக்கு சட்ட சலுகை கிடைக்கவும் முடியாது.

தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியில் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் பங்கு அளப்பரியதாக இருந்தது. அதன் தலைவர் வலப்பனே சுமங்கள தேரர் ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசகர் போன்றே செயற்படுகிறார். இவ்வாறானவர்களின் ஆலோசனை கேட்டே  ஜனாதிபதி மைத்திரி இயங்குவதான கதைகளும் உள்ளன. அவர் ஞானசார தேரர் நீதி மன்றில் ஆஜரான நேரம் முன்னின்று அவருடன் வந்திருந்தார். இவ் விடயமானது ஞானசார தேரரின் பின்னால் மைத்திரி இருக்கலாம் என்ற விடயத்தை புடம் போட்டுக் காட்டுகிறது.

ஞானசார தேரரை நான்கு குழுக்கள் அமைத்து  பல இடங்களில் பொலிசார் தேடி இருந்தனர். இவர் இருக்கலாமென சந்தேகப்பட்ட இடங்களில் சு.காவின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் வீடே பிரதானமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதனை முக்கிய அரசியல் வாதிகள் கூறியதாகவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த செய்தி தொடர்பில் இதுவரை எந்த விதமான மறுப்பும் வரவில்லை.

பொதுவாக பொது பல சேனாவை இயக்குபவர்கள் விடயத்தில் அமைச்சர் சம்பிக்க போன்ற சிலர்களின் நாமம் பயன்படுவது வழமை. இவ் விடயத்தில் சு.காவின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் நாமம் பயன்படுவது இதுவே முதற் தடவை எனலாம். நெருப்பில்லாமல் புகை வருமா? இது உண்மையான செய்தியாக இருக்க வேண்டும் என்பதே பலரது சந்தேகமாக இருந்தது.

இது போன்று மஹியங்கனை சு.காவின்  அமைப்பாளராக பொது பல சேனா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இது ஜனாதிபதியின் அங்கீகாரம் இல்லாமல் நடக்க சிறிதும் சாத்தியமில்லை. இவ் விடயமானது ஜனாதிபதி மைத்திரி பொது பல சேனா அமைப்புடன் மிக நெருக்கமான தொடர்பில் உள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

இப்படி பல விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்ற போது பொது பல சேனாவின் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரி இருக்க வேண்டும் என்ற அச்சமே மேலோங்கி காணப்படுகிறது.

எமது ஆட்சியில் பொது பல சேனாவுக்கு சம்பிக்கவே ஆதரவு வழங்கி வந்தார். இப்போது அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தல் கனவில் இருப்பதால் இந்த விடயத்தில் நேரடியாக இறங்காமல் ஜனாதிக்கு கொந்தராத்து வழங்கி இருக்கலாம் என அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரமழான் மாதத்தின் உண்­மை­யான அர்த்தத்தை வெளிப்­ப­டுத்தும் வகை யில் தம் மீதான வன்­மு­றை­களின் போது முஸ் லிம் மக்கள் பொறுமை காத்­த­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நன்றி தெரிவித்தார்.

பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­ல­மான அலரி மாளி­கையில் நேற்று இடம்­பெற்ற இப்தார் தின நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ரமழான் மாதத்தை நாம் பக்தி, பொறுமை மற்றும் கரு­ணை­யுடன் கடக்­கின்றோம். குறிப்­பாக தற்­போ­தைய ரமழான் காலத்தில் தம்மை ஏசி­னாலும் தம்­மீது தாக்­குதல் நடத்­தி­னாலும் முஸ்லிம் மக்­களின் பொறு­மைக்காக நான் நன்றி கூறு­கின்றேன்.

விசே­ட­மாக ரமழான் பண்­டி­கையின் உண்­மை­யான அர்த்தம் இதனால் வெளிப்­ப­டு­கின்­றது. அத்­துடன் நாட்டில் ஏற்­பட்ட அனர்த்­தத்தின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இஸ்­லா­மி­யர்கள் தமது பண்­டி­கை­யி­னையும் கொண்­டா­டாமல் பணத்தை வழங்­கி­வைத்­தார்கள்.

இலங்­கை­யர்­க­ளுக்­கா­கவே அந்தப் பணத்தை வழங்­கி­னார்கள். பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­களில் அதி­க­மாக சிங்­கள மக்­களே வசித்­தார்கள். எனவே அதற்கும் இங்கு நான் நன்றி கூற வேண்டும். இவ்­வா­றி­ருக்­கின்ற போது ஒரு மதம் உரு­வா­கி­யுள்­ளதை அந்த மதத்­தைப் பின்­பற்­று­வர்கள் மட்­டு­மன்றி அதன் தோற்­றத்தை நம்­பு­கின்­ற­வர்­களும் ஏற்­றுக்­கொள்­வார்கள். அதனால் மதம் என்­பது நல்­லி­ணக்­கத்தின் ஒரு பகு­தி­யா­கின்­றது.

நாம் இஸ்லாம் மற்றும் புத்த தர்­மத்தால் மனி­தர்­களின் மனங்­களை சுகப்­ப­டுத்­தவே முனை­கின்றோம். அதனால் உலக மக்களை சுகப்­ப­டுத்­தவும் எதிர்­பார்­க்கின்றோம். அத­னையே நபிகள் மற்­று­மொ­ரு­வரை மன­த­ள­விலும் உடல் ரீதி­யிலும் துன்­பு­றுத்­தாமல் இருக்­கின்­ற­வ­ரையே அல்லாஹ் ஏற்­றுக்­கொள்வார் என்று கூறி­யுள்ளார்.

அதேபோல் புத்த மதத்­திலும்  மற்­ற­வ­ருக்கு நெருக்­கடி கொடுக்­கா­மலும் உயிரை பறிக்­கா­மலும் இருக்க வேண்டும் என்ற போதனைகள் உள்­ளன. அதனால் நாங்கள் எல்லா மதத்­தையும் மதிக்­கின்றோம்.

இஸ்­லாமில் ஒரு கூற்று உள்­ளது. (உங்கள் மதம் உங்­க­ளுக்கு. எமது மதம் எமக்கு என்பர்) அதற்­க­மை­யவே இன்று நாங்கள் செயற்­ப­டு­கின்றோம். அத­னையே அசோக மன்­னனும் நாம் சகல மதங்­க­ளையும் மதிக்க வேண்டும் என்று கூறி­யுள்ளார்.

அதனால் மனதில் குரோ­தங்­களை கொண் ­ட­வர்கள் புத்த மதத்தின் போர்வையில் மறைந்து பாது­காப்பு பெற முடி­யாது. அவ்­வா­றா­னவர்­க­ளுக்கு பாது­காப்புக் கொடுக்க வும் முடி­யாது. இன்று சகல மக்­களும் இணைந்து சக­வாழ்வை உரு­வாக்க  முனை­கின்­றார்கள்.

அதற்­கா­கவே சட்­டத்தின் ஆட்­சியை வலுப்­ப­டுத்­து­கின்றோம். அதனால் எந்த ஒரு நபரும் சட்­டத்­திற்கு அப்பால் சென்று செயற்­பட முடி­யாது. எனவே சகலரும் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டியது அவசியமாகும். இன்று நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் சமாதானத்தை உண்டுபண்ண மேற் கொண்ட முனைப்புக்களுக்கும் நன்றி கூற வேண்டும் என்றார்.


இலங்கையில் நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் திருமணச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பிடம் முஸ்லிம் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அதன் வரலாற்றில் முதற்தடவையாக கடந்த வாரம் இப்தார் நிகழ்வொன்றை நடத்தியிருந்தது.

குறித்த இப்தார் நிகழ்வு கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி மட்டக்களப்பில் நடைபெற்றிருந்தது.

இதன்போது இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் பிரமுகர்கள் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் திருமணச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 1951ம் ஆண்டு தொடக்கம் நடைமுறையில் இருக்கும் குறித்த திருமணச் சட்டம் காரணமாக தாம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் முஸ்லிம் பிரமுகர்கள் அமெரிக்கத் தூதர் அதுல் கெசாப்பிடம் சுட்டிக்காட்டியதாகவும் அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை மத்திய ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக கடுமையாக செயற்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த முக்கியமான குழுவில் நியமிக்கப்படவில்லை

ரவி கருணாநாயக்க, மஹிந்த சமரசிங்க, சாகல ரத்னாயக்க, விஜயதாச ராஜபக்ச, திலக் மாரப்பன, ருவன் விஜேவர்தன மற்றும் ஹர்ஷா டி சில்வா ஆகியோரை, பிரதமர் தனது தலைமையின் கீழ் அந்த குழுவிற்கு நியமித்துள்ளார்.

இந்த பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இது பிழையாக உள்ளது இதில் மங்கள சமரவீரவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

நியமிப்பில் சிக்கல் இருந்தால் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் சேர்த்து இன்னும் ஒரு சுதந்திர கட்சி அமைச்சரை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய சுசில் பிரேமஜயந்தவின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நிதி அமைச்சில் அதிகளவில் வேலைகள் இருப்பதாகக் கூறிய மங்கள சமரவீர, இந்த குழுவில் ஒரு பகுதியாக இருக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் தொடர்பில் விவாதத்தின் போது மங்கள சமரவீரவிற்கு உரையாற்ற அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


நாகம் தீண்டும் போதும் மனித உரிமைகளை மீறியேனும் உயிர்களை பாதுகாக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , ஜனநாயகத்தின் பரம எதிரி பயங்கரவாதம் என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ''சமாதானத்திற்கான இலங்கையின் போராட்டமும் கற்றுக்கொண்ட பாடங்களும் " என்ற தொனிப்பொருளிலான மாநாட்டின் சிறப்பு அதிதியாக முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டார்.

இங்கு அவர் உரையாற்றியதுடன் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

போரின் பின்னர் 14 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தினோம். அதே போன்று போர் முடிவடைந்து ஓரு மாதத்திற்குள் 595 சிறுவர் போராளிகளை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தேன்.  இவை அச்சுறுத்தலான விடயங்கள் என்றாலும் கூட முக்கியமான விடயமென கருதி செய்தோம்.

ஆசியாவில் எம்மை போன்ற நாடுகளுக்கு மேற்குலக நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக கற்பிக்க வருகின்றனர். நாகம் தீண்டும் போதும் மனித உரிமைகளை மீறியேனும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பின்வாங்க போவதில்லை. ஆனால் நாட்டை பாதுகாத்த படையினருக்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் மற்றும் மேற்குலக சக்திகளின்  நோக்கங்களுக்கு அமைவாக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.

பயங்கரவாதிகளுக்கு அவர்களின் மொழியிலேயே பதில் கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்தில் நல்லது கெட்டது என்று வேறுப்பாடில்லை. ஜனநாயகத்தின் பரம எதிரி பயங்கரவாதம் என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக் காலத்தில் ஞானசார தேரரை முன்னாள் ஜனாதிபதி இயக்குவதான மிகப் பெரும் குற்றச் சாட்டு நிலவியது. இந்த குற்றச் சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவுடைய அணியினர் எப்படியெல்லாம் மறுக்க முடியுமோ அப்படி எல்லாம் மறுத்து பார்த்தார்கள். இருந்தாலும் அதனை அன்று முஸ்லிம் சமூகம் செவிமடுக்க தயாராக இருக்கவில்லை.

நாய்க்கூண்டு கதையோடு ஆட்சிக்கு வந்த இவ்வரசினது ஆட்சிக் காலத்தில்  முன்னாள் ஜனாதிபதி காலத்தில் இருந்ததை விட பொது பல சேனாவின் கை ஓங்கி காணப்படுகிறது. இது பல்வேறு விடயங்கள் மூலம் நிரூபணமாகி வருகிறது. அண்மைக் காலமாக பொது பல சேனா அமைப்பின் செயலாளரை நான்கு போலீஸ் குழுக்கள் அமைத்து பொலிசார் தேடி வந்தனர். இப்படியானவருக்கு மிகவும் எளிதாக பிணை வழங்கப்பட்டுள்ளது. இப்படி இலகுவாக அவருக்கு பிணை வழங்கப்படும் என்றிருந்தால் அவர் எப்போதே நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருப்பார். அவர் தனது பிணை கிடைக்கும் என்ற உறுதி மொழியின் பின்பே வந்துள்ளார் என்பது தெளிவானது.

அவருக்கு பிணை வழங்கிய வேகம், அதற்காக பொலிசார் செயற்பட்ட விதம் ஆகியன யாவரும் அறிந்ததே. பொலிசார் அறிக்கையில், நீதி மன்ற தீர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலையிட்டு செல்வாக்கு செலுத்துமளவு எந்த அதிகாரமும் அவருக்கில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது மகனுக்கு பிணை வழங்கப்படாமல் மறுக்கப்பட்ட விடயம் நடந்தேறியுள்ள நிலையில் இதுவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் செயல் தான் என ஒருவர் நம்புவாராக இருந்தால் அவரை விட அறிவிலி யாராகவும் இருக்க முடியாது.

அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர் ஞானசார தேரரை கண்டிக்காமையை வைத்து அரசியல் செய்தார்கள். அதே ஆட்சி அதிகாரம் அவர்களிடம் சென்றுள்ள  போது மாட்டிக்கொண்டு முளிக்கின்றார்கள். அவர்களால் மெல்லவும் முடியாது வெளியே துப்பிவிடவும் முடியாது. இன்னும் இன்றைய ஆட்சியாளர்கள் சிலர் இது விடயத்தில் மகிந்தவை குற்றம் சுமத்தி கொண்டிருக்கின்றனர். அப்படி என்றால் முன்னாள் ஜனாதிபதிக்கு அடங்கி ஒடுங்கி ஆட்சி செய்வதை விட அவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகுவது சிறந்தது. அதிகாரம் அற்ற பொம்மை ஆட்சி எதற்கு?

அ.அஹமட்


வடக்கு கிழக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை கெடுப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இதை கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும், 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் தோல்வியடைந்து எதிர்வரும் தேர்தலிலும் தோல்வியடையப் போகும் சில தரப்பினர் இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகின்றனர் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் நாம் சகல மக்களும் ஒன்றாக சம அந்தஸ்துடன் வாழ வேண்டும் என விரும்புகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முற்போக்கான கட்சி என்பதை பெருமையாக கூறுவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

அவர்கள் அரசியலில் நிலைத்திருப்பதற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தீவிரமாக சில செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இதனால் அரசாங்கம் இனியும் காலம் தாமதிக்காமல் தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

166 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இது பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.

போலியான தகவல்களை வாபஸ் பெற்றுக் கொண்டு 24 மணித்தியாலங்களில் மன்னிப்பு கோரத் தவறினால் சட்டத்தரணி பதவி பறிக்கப்படும் எனவும் அண்மையில் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் குறித்த சட்டத்தரணிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட மாஅதிபரிடமும் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கார்தினலுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ முறைப்பாடு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணி மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச உரிமை அமைப்புக்களும் உள்நாட்டு நிறுவனங்களும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நீதிமன்றில் ஆஜராகி ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகள் இரண்டின் சந்தேக நபரான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இரண்டு முறை பிடியாணை பிறபிக்கப்பட்டது.

இவ்வாறு நீதிமன்றத்தை தவிர்த்த நபர் ஒருவர் எவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட முடியும் என சட்டத்தரணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஞானசார தேரர் மறைந்திருந்த போது அவரை பாதுகாப்பதாக பல்வேறு தரப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக பிரபல அமைச்சர்கள் சிலரின் மீது விரல் நீட்டப்பட்டது.

அதற்கமைய அவ்வாறான அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இரண்டு முறை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவரை பொலிஸார் கைது செய்யவில்லை.

அரசாங்கத்தின் பிரபல அமைச்சரின் பாதுகாப்பின் கீழ் ஞானசார தேரர் உள்ளமையினால் அவரை கைது செய்ய முடியவில்லை என அரசாங்கத்தின் பிரபல அமைச்சரிடம் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அ அஹமட்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராகபக்‌ஷ நீதியமைச்சரை பயன்படுத்தி  ஞானசாரரை பாதுகாப்பதாக அரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்திவரும்  நிலையில் இதன் பின்னணியில் அரசாங்க தரப்பின்  அனுசரனைகளே இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல விடயங்கள் அம்பலமாகி வருவதை எம்மால்  அவதானிக்க முடிகிறது.

அறையில் ஆடியவர்கள் இன்று அம்பலத்தில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நல்லாட்சி முக்கியஸ்தர்களின் முகத்திரைகள் தற்போது கிழிந்தவண்ணம் உள்ளன.

அந்த வகையில் இன்று ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க ஜனாதிபதிக்கு ஆலோசகர் போன்று செயற்படுபவரும் ஜனாதிபதிக்கு மிக மிக நெருக்கமாக இருப்பவரும் அவரின் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டவருமான ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் வலப்பனே சுமங்கள தேரர் களமிறங்கியிருந்தார்.

மத்திய வங்கி ஊழல், கல்குடா மதுபான உற்பத்தி சாலை ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த விடயங்களிலும் முன்னாள் ஜானாதிபதி காலத்து ஊழல் தொடர்பிலும் அதிக அக்கறை எடுத்து கொண்டு செயற்பட்டுவந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியில் தலைவர் உலப்பனை சுமங்கள தேரர் கடந்த இரு வாரங்களாக ஞானசார தேரரை காப்பாற்ற கடும் பிரயத்தங்களை மேற்கொண்டிருந்ததோடு இன்று நீதிமன்றம் வரை வந்து அவருக்கு ஆதரவாக களமிறங்கி அவரை பிணையில் எடுக்க முடி மூச்சுடன் செயற்பட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக செயற்படும் சுமங்கள தேரர் போன்றவர்கள் ஞானசார தேரர் விடயத்தில் களமிறங்கியதும் ஞானசார தேரருக்கு வரலாற்றில் இல்லாத முறையில் இன்று மிக மிக வேகமாக  பிணை வழங்கப்பட்டிருந்த விடயமும் ஞானசார தேரரை பாதுகாப்பது ஜனாதிபதி தரப்பு என்ற சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் மேலும் வழுவடைய செய்துள்ளது.மஸ்ஜிதுல் அக்ஸா இமாமுக்கு பெடிசையும் கஞ்சிக்கோப்பையையும் கொடுத்து பலஸ்தீன் மக்களையும் இலங்கைமுஸ்லீம்களையும் நல்லாட்சி அரசு ஏமாற்ற மேற்கொண்டுள்ள மியற்சியானது மிகவும் வெட்கக்கேடான செயல் எனபானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டார்.

அவரது ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

நேற்று அலறி மாளிகையில் இடம்பெற ஜனாதிபதியின் இப்தாரில் கலந்துகொள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இமாம் என்றுஒருவரை பலஸ்தீனத்துக்கான  இலங்கை தூதுவர் பவ்சான் அன்வர் அழைத்து வந்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்திலும் சரி அதற்கு முன்னரும் சரி இஸ்ரேலுக்கு மூடப்பட்டிருந்த இலங்கை கதவைதிறந்து விட்ட இந்த நல்லாட்சி அரசு அண்மையில் இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான ஐ நா வாக்கெடுப்பில்கலாந்துகொள்ளாமல் முதுகெழும்பு இல்லாமல் ஒழிந்துகொண்டு பலஸ்தீன அப்பாவி மக்களுக்கு மாத்திரம் அன்றிஇலங்கை முஸ்லிம்களுக்கும் பாரிய துரோகம் இழைத்துவிட்டது.

அது மாத்திரம் அல்லாமல் இஸ்ரேல் சிறையில் வாடும் பலஸ்தீனர்களின் விடுதலைக்காக இலங்கையில் உள்ளபலஸ்தீன் தூதரகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த றாஜபச்க்‌ஷ முந்தியடித்து சென்று கையெப்பம் இட நல்லாட்சிஜனாதிபதிக்கும்  பிரதமருக்கும் அதற்காக நேரம் இருக்கவில்லை.

இப்படியாக எல்லா விடயங்களிலும் பலஸ்தீன மக்களை ஏமாற்றி வரும் நல்லாட்சி அரசு இலங்கை முஸ்லிம்களைபலஸ்தீன இமாமை அழைத்து வந்து ஏமாற்ற முனைந்துள்ளது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.

இலங்கை முஸ்லிம் விவகாரத்தை சர்வதேசம் வரை எடுத்து செல்லப்படுவதின் ஊடாகவே எமக்கு தீர்வைபெற்றுக்குகொள்ள முடியும் கூறுபவர்கள் இந்த நிகழ்வு மூலம் இலங்கை முஸ்லிம்  பிரச்சினை சர்தேசமயப்படுத்தப்படவில்லை என்பதை சான்றுபகர்கிறது.

முஸ்லிம் நாடுகளில் இலங்கை முஸ்லிம் பிரச்சினைகளை கொண்டுபோய் அரசுக்கு அழுத்த கொடுக்க வேண்டியபவ்சான் அன்வர் போன்றவர்கள் சமூகத்தை மறந்து நல்லாட்சிக்கு தரகர் வேலை பார்த்துள்ளது கவலையளிக்கிறது.

பலஸ்தீன மக்களுக்காக வாக்களிக்காமல் ஓடி ஒழிந்து விட்டு பலஸ்தீன் ஆதரவு கொடியை தோழில் சுமக்கஜனாதிபதிக்கு வெட்கம் இல்லையா என தான் கேட்க விரும்புவதாக இபாஸ் நபுஹான் அவர்களின் ஊடக பிரிவுஅனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கிறிஸ்­தவ மதத்­த­லங்­களும் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் நிலையில் அவ­ருக்கு எதி­ராக எவ­ரா­வது முறைப்­பாடு தெரி­விக்கும் பட்­சத்தில் அவரை கைது செய்­யவும் அர­சாங்கம் தயங்­காது எனவும் நீர்ப்­பா­சன இரா­ஜாங்க அமைச்சர் பாலித்­த­ரங்கே பண்­டார
தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று
செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து
தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
அண்மைக்­கா­ல­மாக நாட்டில் இன­வாதம் தலைதூக்க ஆரம்­பித்­துள்­ளது. இன­வாதம் நாட்டில் எவ்­வா­றான தாக்­கத்தை
ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை எமது நாட்டின் வர­லாற்றை நோக்கும்போது தெளி­வாகப் புரியும்.

அது மட்­டு­மல்­லாமல் கடந்த 30 வரு­ட­கா­ல­மாக ஏற்­பட்ட யுத்­தமும் இன­வாத ரீதி­யி­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதனால்
மக்­களின் வாழ்­வி­யலில் பாரிய பாதிப்பு ஏற்­பட்­ட­துடன் நாட்டின் அபி­வி­ருத்­தி­யிலும், பொரு­ளா­தா­ரத்­திலும் நாம் பாரி­ய­தொரு பின்­ன­டைவை எதிர்­நோக்க வழி­வ­குத்­தது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் 160 கிறிஸ்தவ மதத்தலங்கள் தாக்கப் பட்டுள்ளதாக அன்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன.
இது குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.


பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த ஒரு மாதகாலமாக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடப்பட்டு வந்ததும், ஞானசார தேரர் இன்று காலை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஓரிரு மணி நேரத்தின் பின்னர் பிணையில் விடுதலையாகி சென்றதும், குறித்த நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை ரத்து செய்யவா? அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக நடந்த வன்முறைக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டிற்காகவா? என்பதை முஸ்லிம் சமூகம் ஆராய வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் அலுவலத்திற்கு நேரில் சென்று செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் அவரை கைது செய்வதற்காக நான்கு தனி பொலிஸ் குழுக்களை அமைத்து தேடுவதாகவும், அவர் தொடர்ந்து தலைமறைவாகி இருக்கிறார். என்பதாகவும், முஸ்லிம் சமூகத்தை அரசாங்கம் இன்றுவரை ஏமாற்றி இருக்கிறது என்பது இன்றைய செய்திகளின் அடிப்படையில் வெளிச்சமாகிறது.

அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் பங்காளிகளால் ஞானசார தேரர்
மறைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றார். என பல தரப்பினரிடமும் இருந்து எழுந்த விமர்சனங்கள் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கவே, இன்று ஞானசார தேரரை நீதிமன்றத்தில் சரணடையுமாறு மறைத்து வைத்து பாதுகாப்பு வழங்கியவர்கள் பணித்திருக்கிறார்கள்.

அதன் காரணமாகவே இன்று காலை ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் முன் வழியால் சென்று பின்வழியால் பிணையில் விடுதலையானது. அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல்பாடும் நிகழ்வாகவுமே பலராலும் பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் அண்மைக்காலமாக நடந்துவருகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களை கண்டு கொள்ளவில்லை என்பதும் கரிசணை கொள்ளவில்லை என்பதும், இரவு பகலாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்காகத்தான் தேடப்பட்டு வந்திருக்கிறார் அது தொடப்பில்தான் அவருக்கு பிணைவழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஞானசார தேரரின் முஸ்லிம்கள் மீதான கடும்போக்கு நடவடிக்கைகளை கண்டித்து ஜனாதிபதி,பிரதமர் தயவு தாட்சனை இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வாயலவில் சொன்னவிடயமும், பொலிசாரை பணித்ததாக கூறப்படும் விடயமும், தலைமறைவாகியிருந்த ஞானசார தேரரை இதுவரையில் பொலிசாரால் கண்டுபிடிக்க முடியாமையும், இன்று அவர் நீதிமன்றத்தின் முன்னிலையில் சரணடைந்ததும், பொலிசார் விசேட குழு அமைத்து தேடப்பட்டவர், என்று தெரிந்தும் பிணையில் விடுதலையானது. அண்மைக்காலமாக ஞானசார தேரரை அரசாங்கமே பாதுகாத்து பதுக்கி வைத்திருந்தது, அரசாங்கமே ஞானசார தேரரை தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களுக்களுக்காக பயன்படுத்துகின்றது. அதனால்தான் கைதுசெய்வதை தாமதப்படுத்துகின்றது என்ற முஸ்லிம்களின் நீண்ட நாள் சந்தேகத்திற்கு இன்று பதில் கிடைத்திருக்கிறது.

அஹமட் புர்க்கான்
கல்முனை...
முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியான சதி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,

அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் பேதங்களை ஏற்படுத்தவதற்கு அரசியல் சதியில் ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காகவே 2015 ஜனவரி 08 திகதிய ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களித்ததாகவும், அந்த பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு தான் அனைத்து முஸ்லிம்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரவி கருணாநாயக்கா, ரிஷாட் பதியுதீன், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு தாம் அடைக்கலம் வழங்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீதிமன்றில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாக சிலர் என் மீது குற்றம் சுமத்தியமை வருத்தமளிக்கின்றது.

கடந்த சில தினங்களில் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிரிவிணையை ஏற்படுத்த சில தரப்பினர் மேற்கொண்டு வந்த முயற்சிகள் குறித்து கவலையடைகின்றேன்.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது மோதல்களை தவிர்க்க நானும் அர்ப்பணிப்புடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்புடன் செயற்பட்டிருக்கின்றேன்.

எனினும் நான் சில வாரங்கள் நாட்டில் இல்லாத போது ஞானசார தேரருக்கு நான் அடைக்கலம் வழங்கியிருந்தேன் என சில முஸ்லிம் கடும்போக்காளர்கள் ஊடக சந்திப்புக்களை நடத்தி குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறு குற்றம் சுமத்தியமை குறித்து வேதனைப்படுகின்றேன். நீதி அமைச்சர் என்ற பதவியை பயன்படுத்தி அதனை துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.

எனினும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே மிகவும் மோசமான முறையில் கடுமையான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த காலப் பகுதியில் அலுத்கம தர்கா நகர் போன்ற சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமையாற்றியிருந்தார்.

குறித்த காலப் பகுதியிலும் ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை, ஞானசார தேரரை அமைச்சர் ஹக்கீம் காப்பாற்றினார் என கேள்வி எழுப்ப முடியுமா? நாட்டில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்யும் பொறுப்பு நீதி அமைச்சருக்கு அன்றி பொலிஸாருக்கே உண்டு.

இதேவேளை, இதுவரையில் இன மத முரண்பாடுகளை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


வடமாகாணத்தை தமிழ் மக்கள் உரிமை கோர முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடமாகாணமானது தமிழ் மக்களின் பூர்வீக நிலம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜாதிக்க ஹெல உறுமைய கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுப்படுத்த முன்னர், வடக்கில் தமிழர்களின் இனவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

வடமாகாணம் தனித்த மாகாணம் அல்ல. நாட்டின் ஏனைய பகுதியை போன்றே வடக்கும் அனைத்து தரப்பினர்களும் வாழ்ந்த பகுதியாகும்.

இவ்வாறான நிலையில் தமிழர்கள் மாத்திரம் வடபகுதியை உரிமை கோர முடியாது. யுத்தம் காரணமாகவே வடக்கில் இருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வெளியேறிருந்தனர்.

எனவே, வடமாகாணம் தமிழர்களின் பூர்வீக நிலம் அல்ல எனவும், தமிர்கள் வடமாகாணத்தை உரிமை கோர முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சில நாட்கள் முன்பு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் மிக நெருங்கிய சகாவாக தன்னை அறிமுகப்படுத்திய மலித் விஜயநாயக்க என்ற நபர் பொதுபல சேனா அமைப்பை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ வழி நடாத்திச் செல்வதற்கு தானே ஆதாரம் என்ற காணொளியை வெளியிட்டுள்ளார்.

நீதி அமைச்சர் என்ற உயரிய அந்தஸ்தில் உள்ளவரை யாரோ ஒருவர் சொல்வதற்காக விசாரணை செய்ய முடியாது. இருந்தாலும் குறித்த நபர் முன்வைக்கும் குற்றச் சாட்டும் அவர் தன்னை அறிமுகம் செய்யும் முறைமையும் அக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படல் வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பொதுபலசேனா மீது இலங்கை அரசு நீதியை நிலைநாட்ட தவறியுள்ளது என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டு உள்ள நிலையில் நீதி அமைச்சர் தான் பொதுபல சேனாவை இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதானது அவ்வளவு சிறிய விடயமுமல்ல. இது இலங்கை நீதித் துறையின் செயற்பாட்டையே கேள்விக்குட்படுத்துகிறது. இப்படி பாரதூரமான செய்தியை வெளியிட்ட குறித்த நபர் உடனடியாக விசாரணை செய்யப்படல் வேண்டும்.

அவர் இதுவரை காலமும் விசாரணை செய்யப்படாமையானது இலங்கையின் முக்கிய புள்ளிகளே பொது பல சேனாவின் பின்னால் உள்ளார்கள் என்பதை மேலும் உறுதி செய்வதோடு அவரது குற்றச்சாட்டில் உண்மைகள் இல்லாமலுமில்லை என்ற விடயத்தையும் கூறிச் செல்கிறது.

அண்மையில் அசாத்சாலி ஞானசார தேரரை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவே கைது செய்யாமல் தடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். தற்போது அவர் மீது எழும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அதனை மேலும் உறுதி செய்வதோடு குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.

அ.அஹமட்


மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக சிரேஸ்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் போத்தல ஜயந்த வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போத்தல ஜயந்த முறைப்பாடு செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு இன்று சென்றிருந்த போது அவருடன் ஊடக அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்போரும் இணைந்து கொண்டிருந்தனர்.

2009ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை வானில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதனைத் தொடர்ந்து போத்தல ஜயந்த நாட்டை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி தனது வீட்டில் நடத்திய ஊடக சந்திப்பில் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் விரோத உணர்வை துண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் பேச்சு அடங்கிய காணொளியை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் பிரிவிடம் இந்த காணொளியை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான், மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதுன்கொடை பிரதேசத்தை சேர்ந்த டப்ளியூ.ஏ. சாலிய ரணவக்க என்பவர் செய்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த காணொளி தேவை என பொலிஸார் விடுத்த கோரிக்கை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

MARI themes

Powered by Blogger.