Showing posts with label political. Show all posts
Showing posts with label political. Show all posts

Wednesday, September 14, 2016

thumbnail

யுத்தம் தொடர்பில் நானும் புத்தகம் எழுதுவேன் – சரத் பொன்சேகா


யுத்தம் தொடர்பில் தாமும் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புத்தகங்களை எழுதி யுத்தம் பற்றிய இரகசியங்களை கசிய விடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் எவ்வாறு மூண்டது, அதன் வரலாறு, காலத்துடன் எவ்வாறு மாற்றங்கள் ஏற்பட்டன, எவ்வாறு யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது என்பது குறித்து விளக்கி புத்தகம் எழுதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் இந்த புத்தகத்தை வெளியிட உத்தேசித்துள்ளதாகவும், ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Read More»

thumbnail

மூன் வோக் நடனம் ஆடுகிறாரா பான் கீ மூன்?



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது யுத்த அனுபவத்தைப் பதிந்துள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்கின்ற நூலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் நந்திக்கடலுக்கான பாதையானது புலிகள் அமைப்பானது சிறிலங்கா இராணுவத்தால் வெற்றி கொள்ளப்பட்டது தொடர்பாகக் குறிப்பிடும் அதேவேளையில், இலங்கைத் தீவு முழுமையையும் பாதித்த மூன்று பத்தாண்டு கால யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ வீரர் ஒருவரின் உணர்வுகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்ற ஒரு நூலாக இது நோக்கப்படுகிறது.

நந்திக்கடலுக்கான பாதை என்கின்ற நூலின் ஆசிரியர் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு இளம் அதிகாரியாக சிறிலங்கா இராணுவத்தில் இணைந்துகொண்டார். இராணுவத்தில் இணைந்த ஆரம்ப காலம் தொடக்கம் 2009ல் முடிவிற்கு வரும்வரை போரில் பங்குகொண்டதன் மூலம் இவர் மேஜர் ஜெனரல் பதவி நிலையைப் பெற்றுக்கொண்டார்.

1987ல் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவத் தாக்குதலான ‘வடமராட்சி நடவடிக்கை’ தொடக்கம் 2009 வரை புலிகளுக்கு எதிராகப் பல்வேறு யுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மறைந்த ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ, விஜய விமலரட்ன மற்றும் இராணுவத்தின் மூத்த கட்டளைத் தளபதிகள் போன்றவர்களின் தலைமையின் கீழ் ஒப்பரேசன் லிபரேசன் எனப்படும் வடமராட்சி இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற போது மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஒரு இளம் இராணுவ அதிகாரியாகச் செயற்பட்டிருந்தார்.

இவர் தற்போது எழுதியுள்ள தனது நூலில் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையில் இந்தியாவின் தலையீடு மற்றும் சிறிலங்கா இராணுவ நடவடிக்கையிலிருந்து புலிகள் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை இந்தியா வழங்கியமை தொடர்பில் தான் கோபங்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பரேசன் லிபரேசனின் போது இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொதிகளை வீசியமை தொடர்பில் தான் எரிச்சலுற்றிருந்தாகவும் இந்திய விமானங்களைச் சுட்டுவீழ்த்த வேண்டும் என்கின்ற உணர்வு தன்னுள் மேலோங்கியிருந்தாகவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘வடமராட்சி நடவடிக்கையின்’ போது இந்தியர்கள் இதில் தலையீடு செய்யாதிருந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்னரேயே புலிகள் அமைப்பை சிறிலங்காப் படையினர் ஒழித்திருப்பார்கள் என சில இராணுவ ஆய்வாளர்கள் தற்போதும் நம்புகின்றனர். அரசியல் தலையீடு காரணமாக வடமராட்சி நடவடிக்கை தோல்வியுற்ற போது அப்போது இளம் இராணுவ அதிகாரியாக இருந்த குணரத்ன மற்றும் அவரது சக வீரர்கள் ஆத்திரமடைந்தனர் என்பதற்கான ஒரு சாட்சியமாக நந்திக்கடலுக்கான பாதை காணப்படுகிறது.

எனினும் இளம் இராணுவ அதிகாரியாக இருந்த இவர்கள் பல ஆண்டுகள் போர்க் கள அனுபவங்களின் பின்னர் அனுபவம் மிக்க தளபதிகளாக வரும்வரை புலிகள் அமைப்பைத் தோற்கடிப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். இதுவே நந்திக்கடலுக்கான பாதை கூறும் கதையாகும்.

சிறிலங்கா இராணுவத்தின் வளர்ச்சி குறிப்பாக சில மேஜர் ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்கள் உருவாகியமையானது புலிகள் அமைப்பைத் தோற்கடித்துப் போரை வெற்றி கொள்வதற்கான ஒரு பலமாக அமைந்தது. போரின் ஆரம்ப கட்டத்தில், சிறிலங்கா இராணுவத்தின் அதியுயர் இராணுவ நிலையானது மேஜர் ஜெனரலாகும். எனினும் போரின் இறுதியில் பல மேஜர் ஜெனரல்கள் உருவாகியிருந்ததுடன், சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு லெப். ஜெனரல் என்கின்ற பதவி வழங்கப்பட்டதுடன் இந்த நாடானது முதலாவது பீல்ட் மார்சலையும் உருவாக்கியிருந்தது.

சிறிலங்கா இராணுவத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பல்வேறு யுத்த களங்களுக்கான மையமாக வடக்கு மற்றும் கிழக்கு விளங்கியது. தரையில் மட்டுமல்லாது கடல் மற்றும் வானிலும் பாரிய யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

யுத்த கள அனுபவங்கள் தொடர்பாக மட்டுமல்லாது, புலிகள் அமைப்பு மீதான குறிப்பாக அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான தனது அவதானிப்புக்களை குணரத்ன தனது நூலில் பதிவு செய்ததன் மூலம் தனது துறைசார் சிறப்பை மேலும் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் படிக்காதவராக இருந்திருக்கலாம், ஆனால் இவர் தனது அமைப்பில் அதியுயர் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பியிருந்தார் என குணரத்ன குறிப்பிட்டுள்ளார். ‘இவர் மிகவும் நேசத்திற்குரிய குடும்பத் தலைவர். சிறிலங்கா இராணுவத்தினர்இ பிரபாகரனினதும் அவரது குடும்பத்தினரதும் விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும் 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள். அவர் ஒரு இந்துவாக இருந்தாலும் கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது’ என ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் நல்லதொரு இராணுவத் தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருந்த போதிலும், இவர் ஒருபோதும் பொருத்தமான அரசியல் சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவானதாகும். அதாவது இவர் தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்காகவே காலஅவகாசத்தைப் பெற்றிருந்தார். அத்துடன் அரசியற் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான எந்தவொரு அரசியல் நோக்கையும் இவர் கொண்டிருக்கவில்லை.

நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற போது பிரபாகரனின் நிலைப்பாடு தொடர்பாக புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கம் அதிருப்தியுற்றிருந்தார். இவர் இந்தக் கருத்தை தனது மறைவிற்கு முன்னர் தனக்கு நெருக்கமான சிலரிடம் குறிப்பிட்டிருந்தார்.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் கடந்தவாரம் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் இரண்டாவது தடவையாக சிறிலங்காவிற்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலான நந்திக்கடலுக்கான பாதையை வெளியிட்டிருந்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய 3,000,000 வரையான தமிழ்ப் பொதுமக்கள் இடைத்தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா பூந்தோட்டம் முகாமையும் ஐ.நா செயலாளர் நாயகம் நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த வாரம் பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த போது காணாமற் போனோரின் குடும்பங்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமையானது யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும், போருக்குப் பின்னான மனிதாபிமானப் பிரச்சினைகள் தீர்வு காணப்படாத நிலையிலும் உள்ளதையே கோடிட்டுக் காண்பித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகக் கையாள்வதில் ஐக்கிய நாடுகள் சபையானது தோல்வியுற்றதை பான்கீ மூன் சிறிலங்காவிற்கான தனது பயணத்திற்கு முன்னர் ஒப்புக்கொண்டிருந்தார்.

போருடன் தொடர்புபட்ட பல்வேறு மனிதாபிமான விவகாரங்களை முதன்மைப்படுத்துவதில் ஐ.நா தோல்வியுற்றதை பான்கீ மூன் ஒப்புக்கொண்ட நிலையில், தமக்கு நீதி வழங்கக் கூடிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது நிறைவேற்றப்படும் என்கின்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் வாழும் நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ்ப்பாணத்திற்கான பயணமானது ‘மூன் வோக்’ – Moonwalk (நடனவகை) எனக் கருதப்பட முடியும்.

மூன்வோக் என்பது நடனமாடுபவர் தனது முன்புறமாக அசைவது போன்று தோன்றும் அதேவேளையில் அவர் தனக்குப் பின்புறமாக நகரும் நடன வகையாகும். இவ்வாறானதொரு மூன்வோக் நடனத்தை பான்கீ மூனும் ஆடுகிறாரா என்கின்ற சந்தேகம் தோன்றியுள்ளது.

ஆங்கிலத்தில் – Manekshaw
வழிமூலம் – Ceylon today
மொழியாக்கம் – நித்தியபாரதி
Read More»

thumbnail

தமிழினிக்கு புற்றுநோய் ஏற்படவில்லை!! நடந்தது என்ன?




புலிகள் இயக்கத்துடன் இருக்கும் போது தமிழ்க்கவிக்கு புற்றுநோய் ஏற்படவில்லை!! தாயார் கூறுகின்றார் தமிழினிக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் இருக்கவில்லை உண்மைக்குப் புறம்பானது என்கிறார் தாயார் .விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளாராக இருந்த தமிழினி அவர்களின் தாயார் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் இருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் நடைபெற்ற நல்லிணக்கப் போறி முறைக்கான சாட்சியம் அளிக்கும் நிகழ்வில் சாட்சியம் அளித்ததனை காணொளிகள் மூலமாகப் பார்த்தேன் அத்துடன் வடக்குமாகாண சபை அமைச்சர் ஒருவர் கூறியதனையும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்வையிட்டேன் அவ்வாறு எனது மகளிற்கு புற்றுநோய் இருக்கவில்லை என நான் கூறுகின்றேன் அதனை அவர்களால் நிரூபிக்க முடியுமா என கேள்வியினைத் தொடுத்த அவர் அவ்வாறு ஏற்கனவே அவரிற்கு புற்றுநோய் இருந்த விடையம் இதனைத் தெரிவித்த அவர்களுக்கு தெரியும் என்றால் ஏன் அதனை எனக்கு முதலே கூறவில்லை என்ற பல கேள்விகளைத் தொடுத்திருந்தார்

அதனை தொடர்ந்து அதற்கு நீங்கள் உங்கள் மகள் தமிழினி விச ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தார் என கூறுகிறீர்களா என எமது செய்தியாளர் தொடுத்த கேள்விக்குப் பதிலளித்த அவர்

நான் எனதுமகள் விச ஊசி ஏற்றப்பட்டு இறந்தாரா அல்லது யுத்தத்தின் பின்னர் புற்றுநோய் வந்துதான் இறந்தாரா என நான் வாதிட வரவில்லை ஆனால் எனது மகள் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்பதனை ஏற்றுக்கொள்ள என்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது ஏன் எனில் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்ற கருத்தைப் பார்த்தால் 2006 ம் ஆண்டிற்கு முற்பகுதியில் இருந்திருக்க வேண்டும் அவர் இறந்தது 2015 ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பூரண சிகிச்சை உரிய முறையில் பெற்றால் மாத்திரமே அக் கொடிய நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் சில வேளைகளில் அதுவும் பயனளிப்பதில்லை சிகிச்சை எதனையும் பெற்றுக் கொள்ளாத தமிழினி ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தால் எவ்வாறு இவளவு வருடக்கணக்கில் உயிருடன் இருந்தார் என சிந்திக்க வைக்கும் கேள்வி ஒன்றினையும் எழுப்பி இருந்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் இலாபங்களுக்காக எங்களைப் பாவிக்காதீர்கள் எனது மகள் இறந்து விட்டாள் அதனை அப்படியே விட்டுவிடுங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார் அத்துடன் எனது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளை வைத்திய சாலை சென்று பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் உதவி கேட்டிருந்தேன் எங்களுக்கு அவர் உதவ வேண்டும் என்ற உரிமையுடன் கேட்டிருந்தேன் அவர் இரண்டு மூன்று தரம் மகளைப் பார்வையிடச் செல்ல சிறியளவு பண உதவியினைச் செய்தார்.

அது அவ் வேளைகளில் பெரிய உதவியாக இருந்தது அத்துடன் வைத்திய சாலையிலும் சென்று பார்வையிட்டிருந்தார் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் சில சிறிய உதவிகளைச் செய்திருந்தார்.

நான் எதனையும் மறக்கவில்லை இப்பொழுது நான் எங்கும் செல்வதில்லை செல்ல வேண்டிய தேவையும் இல்லை ஏன் எனில் நான் ஒரு சிறிய கடை ஒன்றினை அமைத்து அதில் வரும் வருமானத்தில் நானும் எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டு எமது வாழ்க்கை என வாழ்ந்து வருகின்றோம் எம்மை பொய்யான தகவல்களை வெளியிட்டு உடைந்து போயுள்ள மனங்களை மீண்டும் மீண்டும் உடைக்காதீர்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.
Read More»

thumbnail

துமிந்த சில்வா சிறைக்குள்ளிருந்து பேஸ்புக் பாவனையில் ஈடுபட்டுள்ளாரா…?



குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பேஸ்புக்கானது செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் துமிந்தவால் இது பயன்படுத்தப்பட்டுள்ளனவா, என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பேஸ்புக்கில் பாரத லக்ஸ்மன் கொலை சம்பவத்தில் துமிந்த சில்வா காயமடைந்துள்ள புகைப்படம், அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற போது பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பன நேற்று  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பேஸ்புக் ஆனது துமிந்த சில்வாவால் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தனது தந்தை கொலை செய்யப்பட்ட போது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் ஏற்பட்ட காயத்துடன் அவருடைய தந்தை இருக்கும் புகைப்படத்தை இணையங்களில் வெளியிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
Read More»

thumbnail

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் சிறு­பான்­மை­யி­னரின் பங்­க­ளிப்பு அவ­சியம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்துகின்றார்


புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்தில் இரு­ பெ­ரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் சிறு­பான்மைக் கட்­சி­களும் இணைந்து செயற்­படும் பட்­சத்­தி­லேயே, அனைத்து மக்­களும் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்க முடியும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
திரு­கோ­ண­மலை மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழு­க்
கூட்டம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மாவட்ட செய­ல­கத்தில் நடை­
பெற்­ற­போது அதில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,மாவட்­டங்­களில் வாழு­கின்ற மக்­களின் மத்­தியில் சமா­தா­னத்­தையும்
நல்­லி­ணக்­கத்­தையும் கொண்­டு­வர வேண்­டு­மாயின் அவர்கள் சுதந்­தி­ர­மாக வாழும் உரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு வழங்­கு­வதன் மூலமே, தேசத்தில் ஒற்­று­மை­யையும் புரிந்­து­ணர்­வையும் கொண்­டு­வர முடியும். தேசத்தின் அடிப்­ப­டையில் பிராந்­திய, மாகாண மாவட்ட அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது நாம் எல்­லோரும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள். இந்த மாவட்­டத்தில் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இத்­திட்­டங்கள் அனைத்­தையும் எந்த சமூ­கத்­தையும் பாதிக்­காத வகையில் நாம் மேற்­கொள்ள வேண்டும்.
இச்­செ­யற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுக்­க­வேண்­டு­மாயின் நல்­லி­ணக்­கத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் ஒற்­று­மை­யு­டனும் செயற்­ப­ட­வேண்­டி­யது எங்கள் எல்­லோ­ரு­டைய கட­மை­யாகும்.
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஆரம்ப காலத்தில் தமிழ் மக்கள் கூடு­த­லாக வாழ்ந்­தாலும் கூட, நாடு சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின் ஒரு சில மாற்­றங்கள் கார­ண­மாக இந்த மாவட்­டத்தில் மூவின மக்­களும் கணி­ச­மான அளவில் வாழும் நிலை காணப்­ப­டு­கி­றது. இவர்கள் எல்­லோரும் ஒற்­று­மை­யுடன் இந்த நாட்டின் பிர­ஜை­க­ளாக சந்­தோ­ஷ­மாக வாழ்­வ­தற்கு உரித்­து­டை­ய­வர்கள். இவர்­க­ளுக்குள் கருத்து வேறு­பா­டில்­லாமல் எவ்­வி­த­மான மோதல்­களோ முரண்­பா­டு­களோ இல்­லாமல் சமத்­து­வத்தின் அடிப்­ப­டையில் நியாயம் மற்றும் நீதியின் அடிப்­ப­டையில் தமது வாழ்க்­கையை நடத்­து­வ­தற்கு இய­லு­மா­ன­வ­ரையும் சகல விட­யங்­க­ளையும் கையா­ள­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்பு.
அது எமது கட­மை­யாகும். , இன்று இந்­நாடு பல்­வேறு மாற்­றங்­களை அடைந்­தி­ருக்­கின்­றது. 2015 ஆம் ஆண்டு தை மாதத்­துக்கு முன்பு இருந்த நிலை­மை­க­ளுக்கும் தற்­போ­தைய நிலை­மை­க­ளுக்­கு­மி­டையில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் போது பாரா­ளு­மன்ற ஆட்­சியை யார் கைப்­பற்­று­வது என்­பது சம்­மந்­த­மா­கவும் முடிவு காணப்­பட்­டது. இந்த நாட்­டி­லுள்ள இரு பெரும்­பான்மைக் கட்­சி­களும் ஒன்­றாக இணைந்து ஆட்­சியை நடாத்தி வரு­கின்­றன. இரு கட்­சி­களும் அர­சியல் வர­லாற்றில் முதல் முறை­யாக ஒன்­றாக இணைந்­துள்­ளன. ஒன்­றாக சிந்­திக்­கின்­றன. நாட்­டுக்குத் தேவை­யான கொள்­கை­களை ஒன்­றாக வகுக்­கின்­றன. நாட்டின் எதிர்­காலம் எவ்­விதம் அமைய வேண்­டு­மென சிந்­தித்துச் செயற்­ப­டு­கின்­றன.
நடை­மு­றை­யி­லுள்ள அர­சியல் சாச­ன­மா­னது 1978 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அவ்­வ­ர­சியல் சாச­னத்­துக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியோ அல்­லது தமிழ் மக்­களோ தமது சம்­ம­தத்தைத் தெரி­விக்­க­வில்லை. 1972 ஆம் ஆண்டு சுதந்­திரக் கட்­சி­யினால் கொண்டு வரப்­பட்ட சாச­னத்­துக்கும் இவ்­வா­றா­ன­தொரு நிலையே காணப்­பட்­டது.
நாட்­டுக்கு புதிய சாச­ன­மொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற கருத்து நீண்ட கால­மாக நிலவி வரு­கி­றது. இதன் கார­ண­மா­கவே இன்று இலங்கைப் பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் சாசன சபை­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. அர­சியல் சாச­னத்தை உரு­வாக்கும் கைங்­க­ரி­யத்­திற்­கென, ஒரு நட­வ­டிக்­கைக்­குழு உரு­வாக்­கப்­பட்டு பல உப குழுக்­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வதில் மேற்­படி குழுக்கள் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றன.
இரு­பெ­ரும்­பான்மைக் கட்­சி­களும் இலங்­கை­யி­லுள்ள ஏனைய சிறு­பான்மைக் கட்­சி­களும் அர­சியல் சாசன உரு­வாக்­கத்­துக்கு பங்­க­ளிப்பு செய்து கொண்­டி­ருக்­கின்ற கார­ணத்­தினால் திருப்­தி­க­ர­மாக பூர்த்­தி­ய­டையக் கூடிய வாய்ப்­புக்­க­ளு­முண்டு.
உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சியல் சாச­னத்தில் உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்ற மூன்று முக்­கி­ய­மான விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­டு­கின்­றது.
நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­முறை தொடர்ந்து இருக்­க­வேண்­டுமா அல்­லது அதில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டுமா? தேர்தல் முறையில் எவ்­வித மாற்­றங்கள் கொண்­டு­வ­ருதல் மூன்­றா­வ­தாக ஆட்­சி­மு­றையில் என்ன மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும், மத்­திய அர­சுக்கும் பிராந்­தி­யங்கள் அல்­லது மாகாண சபை­க­ளுக்­கு­மி­டையில் எவ்­வித அதி­கா­ரப்­ப­கிர்வு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பது பற்றி தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.
என­வேதான் இந்தக் கரு­மங்­களை சக­லரும் உணர்ந்து நாட்டின் சுபீட்­சத்­துக்­கா­கவும், சகல மக்­களும் ஒற்­று­மை­யாக, மனத்­தி­ருப்­தி­யு­டனும் வாழக் கூடி­ய­வ­கையில் புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென நாங்கள் கோரிக்கை விடுக்­கின்றோம்.
நாட்­டிலும் மாவட்­டங்­க­ளிலும் பல அபி­வி­ருத்தி திட்­டங்கள் இடம் பெற­வுள்­ளன. குறிப்­பாக திரு­கோ­ண­ம­லையில் பல அபி­வி­ருத்தித் திட்­டங்கள் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த மாவட்­டத்தில் வாழக்­கூ­டிய மக்­க­ளுக்கு அத்­திட்­டங்கள் உதவக் கூடி­ய­வ­கையில் நாம் எல்­லோரும் இணைந்து செயற்­பட வேண்டும்.
எனக்கு முன் பேசிய இணைத்­த­லை­வ­ரான அப்­துல்லா மஹ்றூப் குச்­ச­வெ­ளிப்­பி­ர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள காணிப்­பி­ரச்­சி­னைகள் சம்மந்தமாக எடுத்துக் கூறினார். அவ்விடயங்களை நான் நன்றாக அறிவேன். முன்னைய அரசாங்கத்தில் காணிகள் அப்பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விடம் எனது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தேன். தமிழ் முஸ்லிம் மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக பயன்படுத்தி வந்த காணிகளை குறிப்பாக பெரிய கரைச்சைக் காணி உப்பளமாக மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது கடும் ஆட்சேபனை காரணமாக அம்முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன. எந்த ஒரு விடயத்தையும் நாம் கையாளுகின்ற போது நீதியின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் செயற்படுவதன் மூலமே நல்லதொரு தலைவர்களாக இருக்கமுடியுமென என்றார்.


Read More»

thumbnail

விமல் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில்



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று (14) காலை அவர் இவ்வாறு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கை பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வாகன பயன்பாட்டில் முறைகேடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக ரத்வத்தவும் இன்று நிதி மோசடி விசாரணை பிரவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சி.எஸ்.என். நிறுவனத்தில் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்வில் விசாரணை மேற்கொள்ள இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Read More»

thumbnail

கட்சியினை பிளவடையச் செய்ய சந்திரிகா சதி



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிளவடையச் செய்யும் முகவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க திகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்றமை நல்லிணக்கத்தை வெளிப்படுத்தகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாக பிளவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சந்திரிகா பங்கேற்றதன் மூலம் சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவடையச் செய்யும் முகவராக சந்திரிக்கா செயற்பட்டு வருகின்றமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More»

thumbnail

துமிந்த சில்வாவின் நலம் விசாரிக்க சிறை சென்ற நாமல்



மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More»

thumbnail

ஏகாதிபத்திய அரசின் நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள கொள்கைப்பிரகடனம் வெளியிடுகிறது ஐ.தே.க-வாசுதேவ கிண்டல்


மேற்குலக நாடுகளின் அடிவருடியாக செயற்பட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சி இறுதியில் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம் என கொள்கைப் பிரகடனம் வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றதன் மூலம் சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்து ள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இந்தக் கருத்துக்க ளை முன்வைத்திருக்கின்றார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

“வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாமல், அவர்களின் தலையீடுகளுக்கு எதிராக ஒன்றி ணைவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. காரணம் வெளி நாடுகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அவர்களுக்கு காணப்படுகின்றது. அதில் சந்தேகம் இல்லை.

உண்மையில் அவர்களது ஏகாதிபத்திய அரசின் நிர்வாணத்தை மறைத்துக்கொள்வதற்கான ஒரு சால்வையே இந்த கொள்கைப் பிரகடனம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான நல்லிணக்கம் வெளிப்பட்டுள்ளது. இது சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.“

அத்துடன்  வரி விதிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட வாசுதேவ நாணயக்கார,ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக கடந்த 1953ஆம் ஆண்டு மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மறந்துபோய் விட்டதாகவும் குறிப்பிட்டார்.

 “வரலாற்றில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாட்டில் சீனி விலை, புகையிரத கட்டணங்கள், தபால் கட்டணங்களை அதிகரித்து பாடசாலை மாணவர்களுக்கான சலுகைகளை இல்லாமல் செய்து சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டம் அவர்களுக்கு மறந்துபோயுள்ளது.

1953ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜயவர்தனவிற்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்ட விடயம் மறந்துவிட்டதா? முதன்முறையாக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி அந்த சந்தர்ப்பத்தில் 8 பேரை படுகொலை செய்ததும் மறந்துபோய்விட்டதா? ஆயிரக்கணக்கானவர்களை தாக்கியதோடு, அவர்களை சிறையில் அடைத்தது மறந்தவிட்டதா? அது தொடர்பில் நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள்? அன்று  மக்கள் ஒன்றுதிரண்டது வரி விதிப்பிற்கு எதிராகவே இன்றும் அந்த நிலை தோன்றியுள்ளது.

வரிச்சுமையை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக்கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்துள்ளது.“எனத் தெரிவித்தார்.
Read More»

thumbnail

புலிகளுக்கு பணம் கொடுத்தேனா? இல்லியா? ரகசியம் வெளியாகும்.


2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுக்கு நிதி வழங்கினார் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனத்தில் உரையாற்றிய பிரதமரும், ஐ.தே.கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை தொடர்பில் உரையாற்றியிருந்தார்.

அதேபோல் பல அரசியல் மேடைகளிலும், ஊடகச் சந்திப்புக்களிலும் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்.

அத்துடன், நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது மூடி மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளியிட போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருந்தார்.

இவ்வாறான ஒரு அரசியல் நிலைமையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முக்கியமான ஒரு அறிவிப்பை இன்று (புதன்கிழமை) வெளியிட உள்ளதாக அவரது பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.

Read More»

thumbnail

தென்கிழக்கு அலகும்,முஸ்லிம் காங்கிரஸும்



முன்பு விடுதலை News இணையத்தளத்தில் என்னால்  எழுதப்பட்ட கட்டுரையின் தொடர்ச்சி...

ஆக்கம்
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...

1988ம்ஆண்டு நடந்த மாகாணசபை தேர்தலுக்கு பிறகு முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு பிரிப்பை பற்றி பேசுவதை தவிர்த்தே வந்தது.

அதன் பிற்பாடு சில கோரிக்கைகளை மேடைகளில் கோசங்களாக வைத்ததே தவிர இதுதான் எங்கள் கோரிக்கை என்று திட்டவட்டமாக எங்கும் அந்த கட்சி அறிவிக்கவில்லை.

இருந்தாலும், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் இன்றுவரை தென்கிழக்குஅலகு,நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணசபை என்ற விடயங்களை அந்த கட்சியின் தலைவர் அஸ்ரப் அவர்கள் முன்னெடுத்தார் என்று கூறிவருகின்றனர்.

இதன் உண்மைத்தண்மை என்னவென்று நாம் பார்ப்போம்.

1988 வடகிழக்கு தேர்தலில் போட்டியிட்டதன் பின் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பேசமுடியாத நிலை வந்தபோதும்,இனிமேல் வடகிழக்கு பிரிக்கப்படமாட்டாது என்ற என்னத்தினாலும்,முஸ்லிம்களாகிய நாம் வடகிழக்கை பிரிக்க முயற்சித்தால் தமிழர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் தீராப்பழி ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினாலும்,பிரிப்பு என்ற கோசத்தை மு.காங். கைவிட்டதாகவே கருதப்பட்டது.

இருந்தாலும் அஸ்ரப் அவர்களின் உள்மனதில், ஏதோ ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கிழக்கு மாகாணத்தை தனியே பிரித்து விடவேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார் என்பது,பிற் காலத்தில் அவர் பங்கெடுத்த தீர்வு திட்டங்களை கவணித்தால் புரிந்து கொள்ளமுடியும்.

கிழக்கு மாகாணம் பிரிந்திருந்தால்,தென்கிழக்கும் தேவையில்லை,தனி முஸ்லிம் மாகாணசபையும் தேவையில்லை என்பதே அவரது என்னமாக இருந்தது என்பது பின்னால் கூறும் விடயங்களை வைத்தே நாம் தீர்மானிக்க முடியும்.

அந்த நேரத்தில் அஸ்ரப் அவர்கள் தென்கிழக்கு விடயத்திலும்,முஸ்லிம் மாகாணசபை விடயத்திலும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாதவராகவே இருந்தார் என்பதே உண்மையாகும்.

தென்கிழக்கு அலகு என்ற கோரிக்கை கூட தன்னால் வைக்கப்படவில்லை, சந்திரிக்கா அம்மையாரினால்தான் வைக்கப்பட்டது என்று,அஸ்ரப் அவர்கள் சந்திரிக்காவுக்கு எழுதிய நாற்பத்தெட்டு பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் இப்படி அவர் எழுதியுள்ளார்.

மேடம் தென்கிழக்குக்கான தனிப்பட்ட நிர்வாகஅலகு ஒன்றை ஸ்ரீ.மு.காங்.எந்த காலத்திலும் கோரவில்லை என்பது தங்களுக்கு வெகு நன்றாகவே தெறியும்.
அதையே ஒரு கோரிக்கையாக வலியுறுத்தி முன்னுறிமை படுத்தவுமில்லை.

வடமாகாணத்திலும்,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களினதும்,சிறுபாண்மை முஸ்லிம்களின் உறிமைகளுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தும்,ஒரு விட்டுக்கொடுக்கும் அம்சமாகவே தென் கிழக்கு என்ற அலகை நீங்கள் சமர்ப்பித்தீர்கள்.

இந்த தென்கிழக்கு அலகுடன் கூடவே,வடமாகாணத்துடன்,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்ட மக்கள் இணைய விரும்புகிறார்களா?அல்லது பிரிய விரும்புகின்றார்களா?என்பதை அறியவும்,அப்படியாயின் அதற்கான அதிகாரத்தை அந்த மக்களுக்கு வழங்கும் பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தவும் தாங்களே உத்தேசித்தீர்கள் மேடம்.

இவ்விரு மாவட்ட மக்களும் வடக்குடன் இணையலாம் என்று தீர்மானித்தால் மட்டுமே தென்கிழக்கு அலகு உருவாகும் என்றீர்கள்.
முஸ்லிம்களின் பிரச்சினை தீர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் நாமும் அதற்கான அம்சங்களை கொண்டிருந்தபோதிலும்,உங்களது பிரேரணையாக அமைச்சரவைக்கு இது வந்த போது நான் அதை ஏற்றுக்கொண்டேன் மேடம்.....
என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


இதிலிருந்து  விளங்குவது என்னனெ்றால்,தென்கிழக்கு அலகு என்பது அஸ்ரப்பினாலோ,ஸ்ரீ.ல.மு.கா.யினாலோ முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல என்பது தெளிவாகும்.
எது எப்படியிருந்தாலும்,
முஸ்லிம்களின் தீர்வு பற்றிய தெளிவில்லாமலேயே,தடைதாண்டல் ஓட்டப்போட்டியாக ஸ்ரீ.மு.கா.தனது அரசியலை முன்னெடுத்து வந்திருந்தது.

அரசின் 'தென்கிழக்கு'அலகை ஏற்றுக்கொள்ளும் அஷ்ரஃப், முஸ்லிம்களின் தீர்வுக்கான விடயத்தில் தங்களிடம் உள்ள தீர்வை பற்றி ஜனாதிபதிக்கான மடலில் குறிப்பிடவில்லை.

ஆரம்ப காலங்களில் 'முஸ்லிம் மாகாணசபையாக'முன்னெடுக்கப்பட்டு வந்த கோரிக்கை,அது ஒரு இனவாதப் போக்காக கருதப்படுகின்றது என்ற காரணத்தினால்தான் அதனை கைவிட்டு,தென்கிழக்கு அலகு என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் என்பதே உண்மையாகும்.

முஸ்லிம் மாகாண சபை என்பது.மு.காங்கிரசின்.ஒரு முரண்பட்ட கோரிக்கையாகவே பார்க்கப்பட்டது.
அதே நேரம், அஸ்ரப்பினால் முன்வைக்கப்பட்ட கரையோரமாவட்டம் கூட 1978களில் மாவட்டங்களை பரவலாக்கும் "மொறகொட"ஆணைக்குழு வைத்த தீர்வேயாகும்.

இப்படியான நிலையில்....

1997ம் ஆண்டு சந்திரிக்கா வைத்த தீர்வின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும்,திருகோணமலை மாவட்ட மக்களும் வடக்கோடு இணையமாட்டோம் என்று வாக்களித்தால்,தென்கிழக்கு தேவையில்லை,கிழக்கு பிரிந்தாலே போதும் என்றே இங்கே கூறப்பட்டுள்ளது, என்பதை நாம் இங்கே கவனிக்கவேண்டும்..

அந்த தீர்வு யுஎன்பி யின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தது.

அதன் பிற்பாடு 2000ம்ஆண்டு அஸ்ரப் அவர்களின் துணையோடு,சந்திரிக்காவினால் வைக்கப்பட்ட இடைக்கால தீர்வு திட்டத்தில்,
வடகிழக்கு சம்பந்தமாக இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்வுதிட்ட நாளிலிருந்து தற்காலிகமாக பத்து வருடங்களுக்கு வடகிழக்கு இணைந்திருப்பதாகவும்,பத்துவருடம் முடிவதற்கு மூன்று மாதத்துக்கு முன் கிழக்கு மாகாண மக்களிடம் சர்வஜன வக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும்,அப்படி ஏதோ ஒரு காரணத்தால் வாக்கெடுப்பு நடத்த முடியாது போனால்,இயல்பாகவே வடக்கும் கிழக்கும் பிரிந்ததாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்வ திட்டத்தின் கதாநாயகனே அஸ்ரப்தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம்.
அந்த இரண்டு தீர்வு திட்டத்திலும் அவர் கிழக்கு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த படவேண்டும் என்றே கூறியுள்ளார்.

அந்த இரண்டு தீர்வுதிட்டத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும்,முஸ்லிம் மாகாணசபை பற்றியோ,தென்கிழக்கு பற்றியோ அவர் கவணம் செலுத்தவில்லை.
மாறாக,கிழக்குமக்களின் அபிப்பிராயம்தான் முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மக்களின் அபிப்பிராயம் இந்த விடயத்தில் எப்படி அமையும் என்பது அஸ்ரப் அவர்களுக்கு தெறியாத ஒன்றல்ல.

இப்படியான விடயங்களை மூடி மறைத்து இப்போதுள்ள மு.காங்கிரஸ் தலைமை ஏதோ ஒன்றை சாதிக்க முற்படுகின்றதா?என்ற ஐயமும் தோன்றுகின்றது.

இந்த தீர்வின் படி ஏதோ ஒரு வகையில் வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதையே அஸ்ரப் அவர்கள் உள்மனதில் என்னியுள்ளார் என்பது தெளிவாகின்றது.

இதனை அறிந்தோ அறியாமலோ இப்போது அந்த கட்சியை வழிநடத்துபவர்கள்,
அஸ்ரப் அதை கேட்டார்,இதை கேட்டார் என்று உலருவது எதனை காட்டுகிறது...என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்

இன்னும் வரும்...

கடந்த வாரம் வெளிவந்த கட்டுரையின் link வடிவம்

http://viduthalainews1st.blogspot.com/2016/09/1987.html?m=1
Read More»

Tuesday, September 13, 2016

thumbnail

மஹிந்த மற்றும் விக்கினேஸ்வரனின் இனவாதமே தேசிய பிரச்சினைக்கு முட்டுக்கட்டை!!


மஹிந்த ராஜபக்ஷவின் சிங்கள இனவாதமும் விக்கினேஸ்வரனின் தமிழ் இனவாதமும் சர்வதேசத்தின் தலையீடுகளும் இலங்கையின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு “முட்டுக்கட்டையாகவுள்ளது” எனக் குற்றம்சாட்டும் ஜே.வி.பி. ஐ.நா.வும் அதனோடிணைந்த அமைப்புகளும் எமது விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதாகவும் அக்கட்சி தெரிவித்தது.



இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவும் அதனோடு தொடர்புபட்ட அமைப்புகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி இலங்கை விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.

இவ்வாறு உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அரசாங்கம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கால தாமதம் காட்டுவதே இவ்வாறான தலையீடுகளுக்கு ஏதுவாக அமைகிறது.

அண்மையில் காணாமல் போனோர் தொடர்பாக கண்டறியும் அலுவலகம் ஒன்று நாட்டில் ஸ்தாபிப்பதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதுவரையில் அவ் அலுவலகத்தின் நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்கவில்லை. இவ்வாறு சட்ட மூலங்களை நிறைவேற்றிவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் காலந் தாழ்த்துவதனாலேயே ஐ.நா.வும் வேறுநாடுகளும் அமைப்புகளும் எமது விடயத்தில் தலையிடுகின்றன.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவும் சர்வதேசமும் புலம்பெயர் புலிகளினதும் பிரிவினைவாதிகளினதும் தேவையை நிறைவேற்றுகிறது.

மறுபுறம் இலங்கைக்குள் மஹிந்த ராஜபக் ஷ இதனைப் பயன்படுத்தி சிங்கள இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றார். விக்னேஸ்வரன் தமிழினவாதத்தைத் தூண்டிவிடுகிறார்.
Read More»

thumbnail

பௌத்த மதத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளது



பௌத்த மதத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேரவாத பௌத்த மதத்தின் மத்திய நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மத கொள்கைகளின் ஊடாக மட்டுமே தற்போது அழிவடைந்து செல்லும் சமூகத்தை சீர்ப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டில் இலங்கையில் சர்வதேச வெசாக் நிகழ்வு நடத்தப்பட உள்ளதாகவும் அதன் போது உலகின் பல பௌத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Read More»

thumbnail

நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும்..!! அப்துல்கலாம் ஐயாவின் கனவு நனவாக வேண்டும்..!!



காற்று,நீர் இவைகளுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனாலும் கூட காலத்தின் கோலம் காற்றையும், நீரையும் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

காற்றை விற்பனை செய்யும் நிலை இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. ஆனாலும் அந்த நிலை வருவதற்கு வெகு நாளாகிவிடாது என்றே தோன்றுகிறது.

தமிழகத்தை பொருத்தவரை அதன் அமைவிடம், நமக்கு அமைந்துள்ள நீராதார வழிகள் போன்றவைகளை கவனிக்கும்போது, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்கள் வழியாக பாயும் ஆறுகளை நம்பியே நமது நீராதாரம் அமைந்துள்ளது.

இருப்பினும் நதிகளில் பாயும் தண்ணீரை யாருக்கும் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது. தண்ணீர் என்பது ஒரு பொதுச்சொத்து.

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. இதனால் பல உயிர்களை இழந்துள்ளோம். பல கோடிக்கணக்கான பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலை தொடருமேயானால் தமிழக -கர்நாடக மக்களிடையே நிரந்த பகைமையும், பிளவும் ஏற்படும் நிலை உருவாகும்.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நிரந்தர தீர்வை முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறிச்சென்றுள்ளார்.

அதுவே நதிகள் தேசிய மயமாக்கல். அது அவரது கனவு. நாட்டின் ஒற்றுமையை நிலை நாட்ட அவர் இந்த திட்டத்தை ஒரு முன்னோடி திட்டமாக கருதினார்.

இதனால் அனைத்து மாநில மக்களுக்கும் ஒரு பொதுவுடமை கொள்கை ஏற்படும். எனக்கானது என்ற கோஷம், நமக்கானது என்று மாறும்.

அந்த நிலை ஏற்பட மத்திய அரசும்,மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும். அப்துல்கலாம் ஐயாவின் கனவும் நிறைவேறும்.நாட்டின் பிரிவினைவாத கொள்கைகளுக்கும் ஒரு முடிவு ஏற்படும்.
Read More»

thumbnail

சர்வதேச சட்டங்களை மீறி போரிட அரச படைகளுக்கு அனுமதியுள்ளது



(லியோ நிரோஷ தர்ஷன்)

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த சட்ட மீறல்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரயோகிக்க அரச படைகளுக்கு அனுமதியுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.



அதனடிப்படையில் இலங்கை இராணுவம் பனைய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மக்களை மீட்கும் நோக்கில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரிட்டமையானது எந்தவொரு விதத்திலும் சர்வதேச சட்டங்களை மீறும் செயலாக அமையாது. அதே போன்று இராணுவத்திற்கு எதிரான குற்றங்களை சர்வதேச சட்டத்தின் பிரகாரமே தோல்வியடைய செய்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஐக்கிய நாடுகள் விவகாரத்தில் அரசாங்கம் செயற்பட்ட வித்தினாலேயே பாரிய நெருக்கடி நிலை உள்ளது. விடுதலை புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள்  தொடர்பில் யாரும் எதுவும் பேசுவதில்லை. ஆனால் இராணுவம்  குற்றங்கள் செய்ததாக போலியான சாட்சி ஆதாரங்களை முன் வைத்து அனைத்தும் நடைப்பெறுகின்றது. பொது மக்களை பனைய கைதிகளாக வைத்துக் கொண்டு இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகள் மோசமான முறையில் போரிட்டனர்.

அது முழு உலகிற்கும் தெரியும் ஆனால் இந்த மக்களை மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்து இராணுவம் செயற்பட்டது. இதன் பிரகாரம் பல இலட்சம் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் பனைய கைதிகளாக உள்ள மக்களை மீட்பதற்கு எந்தவொரு விதி முறையையும் மீற முடியும். இதுவே தர்மமுமாகும். நாம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த விதிவிளக்கை மையமாக வைத்து இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்கியிருப்போம்.

ஆனால் தற்போது என்ன நடந்துள்ளது. பாரதூரமான மனித உரிமை மீறல்களை இராணுவம் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டு அதனை விசாரணை செய்வதாக கூறி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதனால் பல்வேறு நெருக்கடியான நிலையே எமக்கு ஏற்பட்டுள்ளது. புலி பயங்கரவாதியை கொலை செய்ததற்காக 20 இலட்சம் ரூபாவை இராணுவ வீரரால் வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் புலிகளால் கொலை செய்யப்பட்ட இராணுவ குடும்பங்களுக்கு ஒன்றும் இல்லாத நிலையே காணப்படுகின்றது என குறிப்பிட்டார்.
Read More»

thumbnail

மரண தண்டனை கைதி துமிந்தவை பார்வையிட வந்தவரை விரட்டியடித்த சிறைச்சாலை அதிகாரிகள்


மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை பார்வையிடுவதற்கு உறவினர் அல்லது நண்பருக்கு வாரத்திற்கு ஒரு முறையே சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை, பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்த பலர் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் துமிந்தவை பார்ப்பதற்கு அவருக்கு நெருக்கமான ஒருவர் கடந்த வாரம் வந்துள்ள நிலையில் அவரை திருப்பி அனுப்புவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துமிந்த சில்வாவை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளமையினால் சிறைச்சாலையின் வாயில்களில் பாதுகாப்பு அதிகரிப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Read More»

thumbnail

அஷ்ரப்பின் ஆலமரக்கனவும், ஹக்கிமின் மாமரக்கனவும்



(முகம்மது தம்பி மரைக்கார்)

ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக, பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிரே, வேறொரு அரசியல் பாசறையை நோக்கி அழைத்துச் செல்வதென்பது அத்துணை சுலபமல்ல. இலங்கையில் சிறுபான்மையிலும், சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன், ஓர் ஆட்சியை அமைத்துக் காட்டுவதற்கான அரசியல் இறுமாப்பு எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

ஆனால், முஹம்மது ஹுசைன் முஹம்மது அஷ்ரப் என்கிற, அந்த மனிதனுக்கு மேலே சொன்னவையெல்லாம் சாத்தியமானது. ஏராளமானோரின் முடியாமைகள், அவரால் முடிந்தது. அஷ்ரப் ஒன்றும் அதிசயப் பிறவியல்ல. ஆனால், அவரின் அரசியல் என்னவோ, அதிசயமானதாகவே இருந்தது – இன்னும் இருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மறைந்து, எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன. பிரதிநிதித்துவ அரசியலில் உயர உயரப் பயணித்துக் கொண்டிருந்தவர், உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் தனது கடைசி மூச்சை இழந்தார். வழிகாட்டுவதற்கு யாருமற்ற மந்தை போல், அரசியலில் இலக்குகளற்றுப் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் மேய்ப்பராக அவர் இருந்தார். எதிர்பாராத ஒரு நாளில், ஆடுகள் திடீரென மேய்ப்பரை இழந்தன.

மேய்ப்பரற்ற ஆடுகள் பாவப்பட்டவை. கொடிய மிருகங்கள், வேட்டைக்காரர்கள், திருடர்களென்று – திரும்பும் திசையெல்லாம் ஆடுகளுக்கு ஆபத்துக்கள்தான். அஷ்ரப்பை இழந்த முஸ்லிம் சமூகமும், அரசியலில் அவ்வாறான ஆபத்துக்களை அனுபவித்துக் கொண்டுதான் வருகின்றது. போதாக்குறைக்கு, இப்போது ஏராளமான மேய்ப்பர்கள் களத்தில் குதித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு மேய்ப்பரும், அஷ்ரப்பின் ஆத்மா – தனக்குள் மட்டுமே குடியிருப்பதாகக் கூறிக் கொள்கின்றனர்.

முஸ்லிம் சமூக்தை ஓர் இலக்கு நோக்கி மேய்ப்பதற்காக, அரசியல் என்கிற தடியை அஷ்ரப் கையிலெடுத்தார். ஆனால், இப்போது துரதிஷ்டவசமாக தடியெடுத்தவர்களெல்லோரும், முஸ்லிம் சமூகத்தின் மேய்ப்பர்களாகத் தொடங்கி விட்டனர்.

அஷ்ரப்பின் தடி அசைவுக்குக் கட்டுப்பட்ட ஆடுகளை, அவரின் மரணத்தின் பின் வந்த மேய்பர்கள், பங்கு போட்டுக் கொண்டு பிரித்தெடுத்துச் சென்றனர். முஸ்லிம் அரசியல் – போகின்ற போக்கைப் பார்த்தால், ஆடுகளை விடவும் மேய்ப்பர்கள் அதிகமாகி விடுவார்களோ என்று அஞ்சத் தோன்றுகிறது. ஆடுகளின் நலன்களுக்காக அஷ்ரப் அரசியல் சண்டை போட்டார். இப்போது, ஆடுகளைப் பங்கு போடுவதிலேயே மேய்ப்பர்களின் சண்டைகள் முடிந்து விடுகின்றன.

முஸ்லிம்களை அரசியல் ரீதியாகக் காப்பாற்ற வேண்டுமென்று, அஷ்ரப் கட்சியமைத்தார். இப்போது கட்சியைக் காப்பாற்றுவதென்பதே கஷ்டமாகப் போயுள்ளது. அஷ்ரப்பின் பலவீனங்கள் கூட, அவரின் பலமாகத் தெரிந்தன. அப்படியொரு ஆளுமை அவருக்கு இருந்தது. ஆனால், பின்னர் வந்த மேய்ப்பர்களின் பலங்கள் கூட, பலவீனங்களாகின.

உண்டியல் குலுக்கி, அதன் மூலம் பெற்றுக் கொண்ட நிதிகளைக் கொண்டு, முஸ்லிம்களுக்கான கட்சியினை வளர்த்தெடுத்தார் அஷ்ரப். தனது சொத்துக்களை கட்சிக்காக அஷ்ரப் எழுதி வைத்தார். இன முரண்பாடுகளுக்கான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் போது, முஸ்லிம்கள் சார்பில் எதையெல்லாம் கோரவேண்டும் என்கிற திட்டம் அஷ்ரப்பிடம் இருந்தது. முஸ்லிம்களுக்கென்று ஓர் அலகு, அவரின் கனவாக இருந்தது. ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபரைக் கூட, அமர்த்த முடியாத இழிநிலையில்தான், பின்னர் வந்த மேய்ப்பர்களின் அரசியல் உள்ளது.

எந்த ஆட்சியிலெல்லாம் அஷ்ரப் இணைந்திருந்தாரோ, அந்த ஆட்சியாளர்களையெல்லாம் அஷ்ரப் ஆட்டுவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரின் வாரிசுகளாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள், ஆட்சியாளர்களின் பொம்மைகளாக மாறினார்கள். சில – பேசும் பொம்மைகள். சில – பேசா பொம்மைகள்.

அஷ்ரபின் மரணம் மர்மமானது என்கிறார்கள். அவரின் கட்சிக்காரர்களுக்கும் அந்தச் சந்தேகம் இன்னுமுள்ளது. ஆனால், அவரின் பின்வந்த மேய்ப்பர்கள் எவரும், அதுகுறித்து வாய் திறக்க வேண்டிய இடத்தில், திறந்ததாக வரலாறு இல்லை. கட்சியை – ஓர் ஆல மரமாய் அஷ்ரப் வளத்தெடுத்தார். ஆனால், அவரின் மரணத்தின் பின்வந்தவர்கள், கட்சியை வளப்பதற்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ‘நான் எனும் நீ’ என்று, அஷ்ரப் யாரையோ கூறினார். (‘நான் எனும் நீ’ என்பது அஷ்ரப் எழுதிய கவிதையொன்றின் தலைப்பு. பின்னர், அவர் வெளியிட்ட கவிதை நூலுக்கும், அதுவே – தலைப்பாக இடப்பட்டது) அவரின் மரணத்தின் பின்னர்தான் அறிய முடிந்தது. நானும் – நீயும் அவராகவே இருந்தார்.

1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சம்மாந்துறையில் அஷ்ரப் பிறந்தார். தாய் சம்மாந்துறை, தந்தையின் ஊர் கல்முனை. அஷ்ரப் இப்போதும் உயிருடன் இருந்தால், 68 வயதுதான் அவருக்கு ஆகியிருக்கும். ஆனால், 52 வயதிலேயே மரணத்தின் இரக்கமற்ற விரல்கள், அவரைப் பறித்தெடுக்துக் கொண்டன. முஸ்லிம் சமூகத்தின் அரசியலை, உயரத்துக்குக் கொண்டு சென்றவர் அஷ்ரப். அவருடைய நாகரிக அரசியலால் முஸ்லிம் சமூகம் கௌரவம் பெற்றது. நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பினரும் அவரின் உரையை இரசித்தார்கள். ஆனால், அவரின் ஆத்மாவினைச் சுமந்து வந்ததாகச் சொல்லிக் கொண்டவர்களின் அரசியலால், முஸ்லிம் சமூகம் வெட்கித்து நிற்கிறது. அரசியல் தெருக்களில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இப்போதின் முஸ்லிம் தலைவர்கள்.

அஷ்ரப்பின் சிஷ்யர்களாகச் சொல்லிக் கொள்கின்றவர்களிடம், அஷ்ரப்பின் பாடங்கள் எவையுமில்லை. அஷ்ரப் எவற்றையெல்லாம் கற்றுக்கொடுக்கவில்லையோ, அவற்றினைத்தான் சிஷ்யர்கள் கற்றுக் கொண்டனர். அஷ்ரப்பின் சிஷ்யர்களுக்கு, அவரின் பெயரும், உருவமும் வியாபார முத்திரைகளாக உள்ளன. அஷ்ரப் என்கிற முத்திரை குத்தப்பட்ட ‘பொருட்களுக்கு’ முஸ்லிம் அரசியல் அரங்கில் நல்ல விலை. அதனால், தரமற்ற பொருட்களுக்கும் ‘அஷ்ரப்’ என்கிற முத்திரையைக் குத்தி விடுகின்றனர். தட்டிக் கேட்கத்தான் எவருமில்லை.

அஷ்ரப்பின் மரணத்தின்போது முஸ்லிம் சமூகம் வடித்த கண்ணீரின் ஈரம், இன்னும் காயவில்லை. இழந்திருக்கக் கூடாததொரு காலத்தில், அஷ்ரப்பை முஸ்லிம் சமூகம் இழந்தது. ஆனால், அவரின் ஆத்மாவைச் சுமந்து கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பலருக்கு, அஷ்ரப்பின் மரணம் – அதிஷ்டமானது. அவர்களின் ‘நப்சு’களுக்கு அந்த மரணம் தீனியிட்டது. (நப்சு என்கிற அரபுச் சொல்லுக்கு, தமிழில் மனம் என்று அர்த்தமாகும்). அதனால்தான், அஷ்ரப்பின் மரணத்திலுள்ள மர்மங்களை அகற்றிப் பார்ப்பதற்கும், அவர்கள் அக்கறைப்படவில்லை –

முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்கிற இலட்சியத்தோடு பயணித்த அஷ்ரப்பின் சிஷ்யர்கள், ஆளாளுக்குப் பிரிந்து நிற்கின்றார்கள். இது, காலத்தின் முரண்நகையாகும். அரசியல் ரீதியாக தனது சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு தலைவரின் நினைவு நாளில், அவருடைய சிஷ்யர்களாகச் சொல்லிக் கொள்கின்றவர்கள் பிரிந்து நின்று, அவருக்காகப் பிரார்த்திக்கப் போகிறார்கள். இவர்கள் தொடர்பில், அஷ்ரப்பின் ஆத்மா சாந்தியடையப் போவதில்லை. அஷ்ரப்பின் கனவை, அவரின் சிஷ்யர்களே வேட்டையாடி விட்டனர்.

அஷ்ரப், இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் தலைவனாக இருந்தார். கிழக்கு முஸ்லிம்களுக்கு அரசியல் தந்தையாக இருந்தார். தந்தையின் இழப்புத் துயரை, பிள்ளைகளே ஆழமாக அறிவர். முஸ்லிம் சமூகம் தொடர்பில் அஷ்ரப் கண்ட கனவு இன்னும் பலிக்கவில்லை. வேட்டையாடப்பட்ட அந்தக் கனவு, குற்றுயிராக எங்கோ ஒளிந்து விட்டது. அந்தக் கனவைக் காப்பாற்ற வேண்டிய தேவை, ‘தந்தை’யின் பிள்ளைகளுக்குள்ளது.

அஷ்ரப் என்கிற நாமமும், அவரின் உருவமும் மட்டுமே, முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்குத் தேவையாக இருக்கிறது. கொஞ்சக் காலத்துக்கு, முஸ்லிம் சமூகம் தன்னைத் தானே மேய்த்துக் கொள்ள வேண்டியதொரு கட்டாயத்தில் உள்ளது. இன்னுமொரு அஷ்ரப் வருவதற்கு நாளாகும். அஷ்ரப்பின் ஆத்மாவை உண்மையாகவே சுமந்து கொண்டிருக்கும், ஓர் அரசியல் தலைமையினையாவது அடையாளம் கண்டுகொள்ளும் வரை, மந்தையாகவும், மேய்ப்பராகவும் முஸ்லிம் சமூகம் இருந்தே ஆகவேண்டும். வழி தவறுபவரே, வழி காட்டுகின்றவராகவும் இருப்பது அத்துணை இலகுவானதல்ல.
Read More»

thumbnail

இந்திய காவிரி பிரச்சினை இலங்கை சிறுபான்மை சமூகம் பாடம் கற்க வேண்டும்!




காவிரி நீர்ப்பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ க‌ர்நாட‌காவில் த‌மிழ‌ர்க‌ள் மீதான‌ தாக்குத‌ல்க‌ள் வ‌ன்மையாக‌ க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டியதோடு இப்பிர‌ச்சினையிலிருந்து இல‌ங்கை சிறுபான்மை இன‌ங்க‌ளும் பாட‌ம் ப‌டிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி குறிப்பிட்டார்.

க‌ட்சித்த‌லைமைய‌க‌த்தில் ந‌டை பெற்ற‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளுட‌னான‌ ச‌ந்திப்பின் போது அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

இந்தியாவில் ப‌ல‌ ம‌த‌ங்க‌ள், ப‌ல  மொழிக‌ள்  இருந்தும் இந்தியா என்ற‌ வ‌கையில் அனைத்து இந்திய‌ர்க‌ளும் ஒன்று ப‌டுவார்க‌ள் என்ற‌ க‌ருத்து ம‌னித‌ அத்தியாவ‌சிய‌ தேவையான‌ த‌ண்ணீருக்காக‌ ஒரே நாட்டு ம‌க்க‌ள்  தாக்க‌ப்ப‌ட்ட‌த‌ன் மூல‌ம் பொய்யாகியுள்ள‌து.  ஒரே நாடு மொழி ரீதியாக‌ பிரிந்தும் மாநில‌ங்க‌ளுக்கு ம‌த்தியிலான‌ பொதுத்தேவைக‌ள் மீதான‌ த‌டைக்கு இம்மாநில‌ பிரிப்பு கார‌ண‌மாகியுள்ள‌தை காண‌லாம்.

 இப்பிர‌ச்சினையில் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ள் மீது தாக்குத‌ல் மேற்கொண்டுள்ள‌மை க‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து ம‌ட்டும‌ல்ல‌ மிருக‌த்த‌ன‌மான‌ இத்த‌கைய‌ செய‌ல்க‌ள் மோடியின் அர‌சில் தொட‌ர்வ‌து நிறுத்த‌ப்ப‌ட‌ வேண்டும்.

அதே போல்  இல‌ங்கையின் வ‌ட‌
 மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்னேஸ்வ‌ர‌ன் முன் வைத்த‌ க‌ருத்துக்கிண‌ங்க‌ இல‌ங்கையை சிங்க‌ள‌ மாநில‌ம், த‌மிழ் மாநில‌ம் என‌ பிரிக்கும் ப‌ட்ச‌த்தில் இல‌ங்கை‌யிலும் இவ்வாறான‌ த‌ண்ணீர் பிர‌ச்சினை ஏற்ப‌டுவ‌த‌ற்கும் சாத்திய‌ம் உள்ள‌து. கார‌ண‌ம் இல‌ங்கையின் நீர் ஊற்றுக்க‌ள் சிங்க‌ள‌ மாநில‌த்திலேயே உள்ள‌ன‌. அதே போல் கிழ‌க்கின் விவ‌சாய‌மும் ம‌காவ‌லி க‌ங்கை, இங்கினியாக‌லை நீர்த்தேக்க‌ம் என்ப‌ன‌வ‌ற்றையே ந‌ம்பியிருக்கும் ய‌தார்த்த‌ம்  உள்ள‌து. இவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் இன‌வாதிக‌ள் த‌ண்ணீரை த‌டை செய்தால் இந்தியாவின் மோடி அர‌சாங்க‌ம் புதின‌ம் பார்த்துக்கொண்டிருப்ப‌து போல் இல‌ங்கையின் ம‌த்திய‌ அர‌சும் இருந்தால் சிறுபான்மை ம‌க்க‌ள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற‌ நிலைக்குள் த‌ள்ள‌ப்ப‌டுவார்க‌ள்.
அதே போல் வ‌ட‌க்குட‌ன் கிழ‌க்கு இணைக்க‌ப்ப‌ட்டாலும் இதுவே சிங்க‌ள பெரும்பான்மையின் ஆத்திர‌த்துக்குள்ளாகி க‌ர்நாட‌க‌ நிலைமை  இங்கும் ஏற்ப‌டும் சாத்திய‌மும் உள்ள‌து.

என‌வே இந்தியாவின் க‌ர்நாட‌க நீர்ப்பிர‌ச்சினை இல‌ங்கை அரசிய‌லில் ஒரு பாட‌மாக‌ பார்க்க‌ப்ப‌டுவ‌துட‌ன் இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள் மீதான‌ தாக்குத‌ல்க‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு ம‌னிதாபிமான‌ம் நிலை நாட்ட‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் உல‌மா க‌ட்சி  இந்திய‌ அர‌சை
கேட்டுக்கொள்கிற‌து.
-

-மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்.
Read More»

thumbnail

மகிந்த அணியினருக்கு சென்ற ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பு



தன்னுடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டுஎதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுஎதிர்கட்சி உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, ரஞ்சித்த சொய்சா , மஹிந்தாநந்த அளுத்கமகே , குமார வெல்கம மற்றும் கெஹலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன, பியல் நிசாந்த, ஜானக வாக்கும்பர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர்களுடன் பிரத்தியேகமாக தொலைபேசியில் உரையாடி தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து மற்றுமொரு கட்சி உருவாக்குவதற்கு எதிரானவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்பரவின் வெற்றிடத்திற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More»

thumbnail

எமது பொறுமை பலவீனம் அல்ல ஒற்றுமையான அழுத்தம் அவசியம்




எமது மக்கள் சுமார் 80 சத­வீ­த­ம­ள­விற்­குமேல் நம்­பிக்­கை­யு­டனும் எதிர்­பார்ப்­பு­டனும் ஒரு மாற்­றத்­திற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வாக்­க­ளித்­துள்­ளார்கள். ஆனால், மாற்றம் ஏற்­படவில்லை. அத்­த­கைய சூழலில் மிக மெது­வா­கவே ஓரு சில நட­வ­டிக்­கைகள் நகர்ந்­து­கொண்டு செல்­கின்­றது.
குறிப்­பாக காணி­வி­டு­விப்பு, சிறைச்­சாலையில் உள்ள தமிழ் இளை­ஞர்­களின் விடு­விப்பு, காணாமல் போன­வர்கள் தொடர்­பான விட­யங்கள் மற்றும் அன்­றா­டப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் மெது­வாகவே நட­வ­டிக்­கைகள் நகர்ந்­து ­வ­ரு­கி­றது. இவை தொடர்பில் துரி­தப்­ப­டுத்த வேண்டும். மக்­களின் வாழ்க்கை நிலைகள் மீண்டும் சக­ஜ­மான நிலைக்கு அல்­லது முன்­னேற்­ற­மான நிலைக்கு வர­வேண்டும் என்ற நிலைப்­பாடு இருந்து கொண்­டி­ருக்­கின்­றது.
போராட்டம் என்ன கார­ணத்­திற்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டதோ அந்த அடிப்­படைக் கார­ணங்கள் தீர்க்­கப்­ப­டாமல் நியா­ய­மான அர­சியல் தீர்வு ஓன்றை பெற்றுக்கொள்­ளாமல் எங்­க­ளு­டைய முழு­மை­யான பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வது கடினம் என்­பதை நாம் அனை­வரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்­க­ளு­டைய பகு­தி­களில் இருக்கக்கூடிய பிரச்­சி­னை­களை நாங்­களே தீர்த்துக் கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான ஒரு அர­சியல் தீர்­வொன்று வழங்­கப்­பட்டு அத்­தீர்வு சரி­யான முறையில் நடைமுறைப்­ப­டுத்­தப்படுவதன் மூலம் தான் எங்­க­ளு­டைய மக்­க­ளு­டைய வாழ்க்கை முன்­னேற்றம் அடையும்.
மாகாண சபை இருக்­கி­றது. அதனால் ஓன்றும் கிடைக்­க­வில்லை என நினைக்­கலாம். ஆனால், மாகா­ண­ச­பைக்கு குறிப்­பிட்ட அள­வுதான் நிதி கிடைக்­கி­றது. அதுவும் எதற்­காக செலவு செய்­ய­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தான் அவை கிடைக்­கி­றது. மிக சொற்­ப­மான நிதியை வைத்­துக்­கொண்­டுதான் சில விட­யங்­களை செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.
அதே­நே­ரத்தில், மாகா­ண­சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­பெற்­றது. முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­கி­னேஸ்­வரன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்டும் மாகா­ண­ச­பைக்குள் பல குழப்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன. சபை அமர்­வுகள் கூட ஆக்­க­பூர்­வ­மாக நடை­பெறு­வ­தில்லை என்­பதை பத்­தி­ரி­கை­யூடாக பார்க்­கின்­றீர்கள். இத்­த­கைய நிலை­மைகள் ஆரோக்­கி­ய­மான சூழ்­நி­லைகள் அல்ல.
நாங்கள் அழி­வி­லி­ருந்து மீள முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற இனம். அத்­த­கைய ஒரு இனத்­தினைச் சேர்ந்த மக்கள் ஒற்­று­மை­யாக இருக்­கின்­றனர் என்­பதை நடை­பெற்று நிறை­வ­டைந்த தேர்தல் பெறு­பே­று­களின்
ஊடாக மக்கள் தெளிவாக காட்­டி­யுள்­ளார்கள்.
அவ்­வா­றி­ருக்­கையில், தற்­போது கட்­சிகள், தலை­மைகள், ஒற்­று­மை­யா­கவும் அங்­கத்­த­வர்கள் ஒற்­று­மை­யாக செயற்­ப­டு­வதன் மூலம்தான் எங்­க­ளு­டைய மக்­க­ளு­டைய வாழ்க்­கையை வாழ்க்­கைத் ­த­ரங்­களை உயர்த்த முடியும். எமக்­கான உரி­மை­களை பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். இதன் முலம் தான் எமக்கு அடுத்­து­வரும் சந்­த­திகள் வள­மான வாழ்வை வாழ்­வ­தற்­கான சிறப்­பான எதிர்­காலம் உரு­வாகும்.
பூர­ண­மான விடு­தலை எது­வெ­னக்­ கூறு­வ­தா­க­வி­ருந்தால் முத­லா­வ­தாக தேசிய விடு­தலை. மற்­றை­யது மக்­க­ளு­டைய வாழ்க்­கைத்­த­ரங்கள் உய­ர­வேண்டும். இவை இரண்­டிலும் நாங்கள் பின் தள்­ளித்தான் தற்­போதும் இருக்­கின்றோம். இவற்றை முன்­னோக்கிச் செல்­வ­தற்கு மக்­க­ளு­டைய அழுத்தம் கட்­டாயம் இருத்தல் வேண்டும்.
அர­சி­ய­ல­மைப்பு மாற்றம்
தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்பில் நீண்­ட­கா­ல­மாக பேசப்­பட்டு வந்­தாலும் தற்­போ­துள்ள புதிய அர­சாங்கம் பத­விக்­கு ­வந்த பின்னர் நிச்­ச­ய­மாக அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் வரும். அதில் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு நியா­ய­மான தீர்­வு­வரும் என்ற நம்­பிக்கை மக்கள் மத்­தியில் இருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தலைவர் சம்­பந்தன் மிக நம்­பிக்­கை­யுடன் 2016ஆம் ஆண்­டுக்குள் தீர்வு வந்து விடும் என்று பல தடவை கூறி­வ­ரு­கின்றார். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் அதற்­கான உந்­து­தல்­களை பல வழி­களில் செய்து வரு­கின்­றது.
அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­திற்கு ஒரு தேசிய பேரவை அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு வழி­ந­டத்தல் குழு ஒன்றும் உள்­ளது. இந்த வழி­ந­டத்தல் குழு­விற்கு தலை­வ­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருக்­கின்றார். வழி­ந­டத்தல் குழு­வுக்கு அடுத்­த­தாக மூன்று முக்­கிய குழுக்கள் காணப்­ப­டு­கின்­றன. தேர்தல் முறை மாற்றம், ஜனா­தி­பதி அதிகா­ரங்­களை குறைப்­பது, மற்­றை­யது தமிழ் மக்­க­ளு­டைய தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு ஆகிய விட­யங்­களை ஆராய்­வ­தற்­கா கவே அக்­கு­ழுக்கள் காணப்­ப­டு­கின்­றன.
தேர்தல் முறை மாற்றம்
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நீண்ட உரை­யா­டல்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­ன்றன. அதில் சில இணக்­கப்­பாடுகள் வந்­த­போதும் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் மற்றம் ஹக்கீம் போன்­ற­வர்கள் தங்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­துவம் வெகு­வாகக் குறைக்­கப்­படும் என்ற கார­ணத்தால் சில விட­யங்­களை எதிர்த்­துள்­ளார்கள்.
தேர்தல் முறைமை தொடர்­பாக தற்­போதைய இணக்­கப்­பாட்டில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை 240 பேராக அதி­க­ரிப்­ப­தென்றும் அதில் 60 சத­வீத­மான பிர­தி­நிதிகள் நேர­டி­யாக தேர்தல் மூலம் தொகுதி வாரி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். அடுத்து 40 சத­வீ­த­மான பிர­தி­நி­திகள் விகி­தா­சார தேர்தல் முறை மூல­மாக தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். இவ்­வா­றான தெரி­வு­களில் தொகு­திகள் அதி­க­மாக வரு­கின்றபோது வடக்கு, கிழக்கில் பிரச்­சினை ஏற்­ப­டாது. ஆனால் வடக்கு, கிழக்­கிற்கு வெளியே பர­வி­வாழும் முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு பாரிய பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுக்க நேரிடும். அவர்­க­ளுக்­கான தொகுதி நிர்­ண­யிப்­பது மிக கடி­ன­மா­னது. ஒரு தொகு­தியைக் கூட நிலை­யாக வைக்க முடி­யாது. இத்­த­கைய பிரச்­சி­னை­களால் தான் அந்த இரண்டு அமைச்­சர்­களும் வட­கி­ழக்­கிற்கு வெளியே­வாழும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்­காக கடு­மையாக எதிர்க்­கின்­றார்கள்.
இத்­த­கைய விட­யங்­களில் இணக்கம் காணப்­ப­டாத நிலையில் முக்­கி­ய­மாக எமது விட­யங்கள் தொடர்பில் ஆராய முற்­ப­டு­கின்ற போது வேக­மாக முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை உரு­வா­கின்­றது. எனினும் அது­தொ­டர்பில் விரைவில் ஒரு இணக்­கப்­பாட்டு ரீதி­யான தீர்­மா­ன­மொன்றை எடுப்­ப­தற்­கு­ரிய நிலை­மைகள் பேச்­சு­வார்த்­தை­களின் ஊடாக எடுக்­கப்­படும் என்ற அதீத நம்­பிக்கை உள்­ளது.
சமஷ்­டிக்­கான அவ­சியம்
அண்­மையில் ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உரையில், ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒற்­று­மைக்கு வந்­தி­ருக்­கின்றன. ஒற்­றை­யாட்­சிக்குள் தான் தீர்வு என்­பதை தெளிவாக கூறி­யுள்ளார். எம்­மைப் ­பொறுத்­த­வரை ஒற்­றை­யாட்­சிக்குள் நியா­ய­மான தீர்வு வர முடி­யாது. தீர்வு வந்­தாலும் ஒற்­றை­யாட்சி முறை­மை­யிலே முழு­மை­யான அதி­கா­ரங்கள் மத்­திய அர­சாங்­கத்­திற்­குத்தான் உள்­ளது.
இது தான் மாகாண சபை முறை­மைக்கும் நடந்­தது. மத்­திய அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் பின்­க­தவால் வந்து அதி­கா­ரங்­களை பிடுங்­கு­வார்கள். ஆகவே தான் அதனை ஏற்­க­ மு­டி­யாது என நாம் உறு­தி­யாக கூறு­வ­தோடு சமஷ்­டியைப் பற்றி கதைக்­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கையில் சமஷ்டி என்­பது பிரி­வி­னைக்­கு­ரி­யது என்று கூறு­வதை எம்மால் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அது ­வெ­று­மனே அர­சி­ய­லுக்­கான பிர­சா­ர­மா­கவே கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது.
அழுத்­தங்கள் தொடரும்
வழி நடத்தும் குழுவின் கீழ் ஏழு உப­கு­ழுக்கள் உள்­ளன. அதில் ஒரு குழு­விற்கு நான் தலை­வ­ராக இருந்­து­ வ­ரு­கின்றேன். அதிலே என்­னு­டைய குழு மத்­திக்கும் மாகாணம் மற்றும் உள்­ளூராட்சி மன்­றங்கள் போன்­ற­வற்­றுக்­கான அதி­கா­ரங்கள், அவை எவ்­வாறு இணைந்து செயற்­படலாம் என்­பது தொடர்­பாக ஆராய்­கின்­றது. வழி­ந­டத்தும் குழு விவா­தத்தின் பின்­னரே பாரா­ளு­மன்­றத்­திற்கு இவ்­வி­டயம் கொண்­டு­வ­ரப்­படும். அந்தச் செயற்­பாடு எப்­போ­தென்­பதே கேள்விக் குறி­யா­க­வுள்­ளது. இருப்­பினும் நாம் அதற்­கு­ரிய பிர­யோக ரீதி­யான முயற்­சி­களை படிப்­ப­டி­யாக மேற்­கொண்டு வரு­கின்றோம்.
தற்­போ­தைய நிலையில் இந்­த ­வ­ருடம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு வழங்கும் செயற்­பாடு நிறைவு பெறாது, அடுத்த வருடம் தான் அதில் முன்­னேற்றம் ஏற்­படும் என்றும் பிரதர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார். இந்த வருடம் நிறை­வ­டை­வ­தற்கு இன்­னும் மூன்று மாதங்­களே உள்­ளன. அந்­நி­லையில் அடுத்­த­வ­ரு­டத்­திற்­கான வர­வு–­செ­ல­வு­த் திட்டம் தயார்­படுத்த வேண்­டி­யுள்­ளது. ஆகவே, இக்­கா­லப்­ப­கு­தியில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விடயம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான பொருத்­த­மான கால­மாக இருக்­காது எனக்­கருதி தான் அவர் அவ்­வாறு கூறு­கின்றார் என நினைக்­கின்றேன்.
எவ்­வா­றா­யினும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான விட­யத்தில் அனைத்துக் கட்­சி­க­ளு­டைய ஒற்­று­மைப்­பாட்­டையும் பெற­வேண்­டி­யுள்­ளது. இக்­க­டி­ன­மான விட­யத்தை நிறை­வேற்­றி­யே­யாக வேண்டும். அதற்­காக நாம் உரிய உந்­து­தல்­களை முறை­யாக மேற்­கொள்வோம். அதி­லி­ருந்து நாம் ஒரு­போதும் பின்­வாங்­கப்­போ­வ­தில்லை.
இக்­கட்­டான சூழல்
தற்­போ­தைய சூழல் இக்­கட்­டான நிலையில் தான் உள்­ளது. மிக கவ­ன­மாக பக்­கு­வ­மாக காரி­யங்­களை நகர்த்­தா­விட்டால் அனைத்தும் தவ­றா­கி­விடும். மீண்­டு­மொரு அழி­வுப்­பா­தைக்கு மக்­களை கொண்டு போகக்­கூ­டாது. அதனைச் செய்­யவும் மாட்டோம். அதில் நாம் தெளிவா­க­ வி­ருக்­கின்றோம். இவ்­வி­ட­யத்தில் நாங்கள் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். சில விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. சில விட­யங்கள் எமக்குத் தெரி­யா­மலே நடை­பெ­று­கின்­றன. நாமும் பொறு­மை­யுடன் இருக்­கின்றோம். அதனால் எம்மை மற்­ற­வர்கள் பல­வீ­ன­மா­ன­வர்கள் என்று கரு­தக்­கூ­டாது.
நாங்கள் நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுக்­க­வேண்­டி­யுள்­ளது அண்­மை­யிலே ஐ.நா செய­லாளர் பான் கீ மூன் வருகை தந்த போது பல விடயங்­களை அழுத்தம் திருத்­த­மாக எடுத்துக் கூறி­யுள்ளோம். எங்­க­ளுக்கு ஒரு நியா­ய­மான தீர்வு வழங்­கப்­ப­டாது விட்டால் எங்­க­ளு­டைய பகு­தி­களில் இந்த அர­சாங்­கங்­களை செயற்­பட அனு­ம­திக்க மாட்டோம் என்­பதை ஐ.நா.செய­லா­ள­ரிடம் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கூறி­யுள்ளார்.
நாங்கள் பல முயற்­சி­களை எடுப்போம். எமது விட­யத்தில் சர்­வ­தேச தலை­யீடு இருக்­கி­றது. அவர்கள் என்ன செய்­யப்­போ­கி­றார்கள் எவ்­வ­ளவு துரம் அழுத்தம் பிர­யோ­கிப்­பார்கள் என்­பதைப் பற்றிச் சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது. சர்­வ­தே­சத்தைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­க­ளுக்­காக அர­சாங்­கத்­திற்கு தான் ஆத­ரவு வழங்­கு­வார்கள்.
தமக்குச் சார்­பான அர­சாங்கம் கவிழ்ந்து விடக்­கூ­டாது என்பதற்காகவே எங்கள் விடயத்தில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, எங்களுக்காக அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. இவ்விடயங்களை மனதில் கொண்டு பல விடயங்களை சாணக்கியமான முறையில் கையாள வேண்டியுள்ளது.
பாரிய மக்கள் எழுச்சி
மீண்டுமொரு அழிவை சந்திக்க முடியாது. நடந்து முடிந்தவையே போதும். ஒரு ஜனநாயக முறையில் நியாயமான வகையில் நாங்களே எங்கள் பகுதியில் உள்ள விடயங்களை கையாளக் கூடிய தீர்வை வென்றெடுக்க வேண்டும். அதற்கு நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல கருத்துக்கள் இருந்தாலும் அந்த விடயத்தில் ஒற்றுமை உள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி பெரும் பேரணி நடைபெறவுள்ளது. இது தமிழ் மக்கள் பேரவை, இலங்கை தழிழரசு கட்சியில் உள்ள ஒரு சிலர், ஏனைய கட்சிகள் இணைந்து கொண்ட பாரிய மக்கள் எழுச்சியாக வரவேண்டும் என்பதே எனது நீண்டகால எண்ணமாக உள்ளது.
இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவருக்கும் தெளிவு படுத்திக் கூறியுள்ளேன். இப்படி­யான அழுத்தங்கள் கொடுப்பதன் மூலம் தான் அரசாங்கத்தினை சிந்திக்கச் செய்ய முடியும். தமிழ் மக்களுடைய கோரிக்கையை எற்றுக்கொள்ள வைக்க முடியும். அதே நேரம் இந்த அரசாங்கம் மெதுவாகவே பயணம் செய்கிறது. இருப்பினும் தீர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எமது விடயங்களை கவனமாக கையாள்வோம். அதற்கான பாதையில் பயணிப்போம்.


Read More»

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2016 VIDUTHALAI NEWS All Rights Reserved.
back to top