Showing posts with label slider. Show all posts

ஆக்கம்..
எம்.எச்.எம் இப்ராஹிம்
கல்முனை....

கல்முனையின் முன்னால் மேயராக இருந்த நிஸாம் காரியப்பர் அவர்களின் அரசியல் விடயத்தோடு ஒன்றிய சில கருத்துக்களை கூறுவதற்காக இந்த விடயத்தை எழுதுகின்றேன்.

நிசாம் காரியப்பர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் ஓரம்கட்டப்படுகின்றாரா?
அப்படி என்றால் எதனால் அவர் ஒரம்கட்டப்படுகின்றார்
என்பதைனையும், அதனை அறிந்தும் நிசாம் காரியப்பர் அவர்கள் அதற்கு பழியாகி கொண்டுள்ளாரா?,என்பதையும் நாம் நடுநிலைமையாக சிந்திக்கும் போது சில உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

அஸ்ரப்புடைய மரணத்துக்கு பிறகு தலைமை பதவியை பல போராட்டத்துக்கு மத்தியில் ஏற்றுக்கொண்டுள்ள ஹக்கிம்  அவர்கள். பல சவால்களை எதிர்கொண்டார்.

அந்த சவால்கள் எல்லாம் மூத்த போராளிகள் என்று கூறிக்கொள்பவர்களிடமிருந்துதான் வந்தது என்பதையும் நாம் அறிவோம்.

கட்சியை ஹக்கிம் ஏற்றுக்கொண்ட காலப்பகுதியில்  அதாவுல்லா, தொடக்கம் பல உறுப்பினர்கள் ஹக்கிமுக்கு எதிராக செயல்பட்ட விடயங்கள் நமக்கு தெரியும்.

அதில்  நிசாம், ஹரீஸ், அன்வர் இஸ்மாயில் போன்றவர்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதும் நமக்குத் தெரியும்.

அந்த பிரச்சினைகள் எல்லாம் ஹக்கிமின் ஆளுமையை உரசிப்பார்க்கும் விடயமாகவே பட்டது. அஸ்ரப் அவர்களிடம் பணிந்து பேசியவர்கள் எல்லாம் ஹக்கிமிடம் தலைநிமிர்ந்து கேள்விகேட்க தயங்காத ஒரு மனோநிலையும் காணப்பட்டது.

அதனால் ஹக்கிம்  பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வந்தது என்பதும் தெரிந்த விடயமே.

கட்சியை தொடர்ந்து வழிநடத்துவது என்றால், இப்படியான விடயங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். 

அதற்காக தலைவர் ஹக்கிம்  அவர்கள் எடுத்த முடிவுதான்,
கட்சியில்  தன்னை மீறி யாரும் நடக்கக்கூடாது என்ற என்னத்தில் கட்சியின் யாப்பை கூட மாற்றி தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டார்.

அதே நேரம் தன்னை தட்டிக்கேட்க்கும் எந்த நபரும் இந்த கட்சியில் இருக்கக்கூடாது என்றும், அதுமட்டுமல்ல தனக்கு சவால் விடும் அறிவாளிகளும் இந்த கட்சியில் இருக்கக்கூடாது என்ற என்னத்தையும்  உள்மனதில் வைத்துக்கொண்டுதான், அவர் காய்நகர்த்திக் கொண்டு வருகின்றார் என்பதையும், விடயத்தை உண்ணிப்பாக கவணிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.

அதே நேரம் முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில்  தேர்தல் கேட்டால்தான் நாம் எந்த தேர்தலிலும் வெற்றிபெறலாம் என்ற நினைப்பில் உள்ளவர்கள், ஹக்கிமின் என்னத்தை அறிந்து, ஹக்கிமுக்கு கூஜா தூக்கிகலாக மாறி,அவருடைய மனம் புண்படாத வண்ணம் நடந்து கொண்டு தனது பட்டம் பதவிகளை காப்பாத்திக் கொண்டிருப்பதையும் அறிந்த புத்திசாலிகளுக்கு புரிந்து கொள்ள நேரம் எடுக்காது என்று நினைக்கின்றேன்.

இப்போது நிசாம் காரியப்பரின் விடயத்துக்கு வருவோம்.

நிசாம் காரியப்பர் அவர்கள் இந்த விடயங்களுக்காகத்தான், தலைவரின் என்னம் அறிந்து தலைகுனிந்து நடந்தாலும், தலைவர் ஹக்கிம்  இதனை நம்புவதாக தெரியவில்லை.
அவர் பலருடை விடயத்தில். (சூடு கண்ட பூனையின் நிலைக்கு) தள்ளப்பட்டதே,
இதற்கு காரணம் எனலாம்.

நிசாம் காரியப்பரை பொருத்தவரையில் அவர் ஒரு படித்தவர், பிரபல சட்டத்தரணி, அஸ்ரப்பின் சொந்தக்காரர், அது மட்டுமல்ல, கல்முனையை பிறப்பிடமாக கொண்டவர்.

 இவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து அழகு பார்த்தால், தனக்கு இது பேராபத்தாக வந்து முடியும் என்பது தலைவர் கக்கீமின் என்னமாக இருக்கலாம்.
இதனால் நிசாம் காரியப்பர்  விடயத்தில் ஹக்கிம்  மிகக் கவனமாக காய் நகர்த்துகின்றார் என்பதே உண்மையாகும்.

நிசாம் காரியப்பர் அவர்களுக்கு மேயர் பதவியை விட, பாராளுமன்றம் செல்லக்கூடிய சகல தகுதியும் கொண்டவர் என்பது மட்டுமல்ல, மாகாணசபைக்கும்  செல்வதற்கும் தகுதியானவர். 

அப்படி பட்டவரை இந்த மேயர் தேர்தலில் போட்டியிட வைத்து கழுத்தருத்த விடயங்களும் நடந்ததை எல்லோரும் அறிவர்.

இந்த நிலை ஏற்பட காரணம் என்ன?
நிசாம் காரியப்பர் மேல் கொண்ட பொறாமையா? 

என்பதை விட அவர்மீது
தலைவர் ஹக்கிம் கொண்ட பயமே இதற்கு  காரணமாகும்.

இதனால்தான்
சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிசாமை மக்கள் மத்தியில்  செல்லாக்காசாக மாற்றவும், கல்முனையில் உள்ள அவரின் அரசியல் எதிரிகளைக் கொண்டே அவரின் செல்வாக்கை உடைக்கவும், 
காலநேரம் பார்த்திருந்தார் என்பதே யதார்த்தமாகும்.

 நிசாம் காரியப்பர் அவர்கள் இவ்வளவு விடயங்களையும் அறிந்து கொண்டே, அவருடைய திட்டத்துக்கு பழியாகி கொண்டு வருகின்றார், என்பதை பின் வரும் விடயங்கள் உறுதிப்படுத்தும்.

உதாரணமாக ஒரு விடயம்.

சென்ற மாநகர சபை தேர்தலில் நிசாம் காரியப்பரை முதன்மை வேட்பாளராக அறிவித்து, அவருக்கு எல்லோரும் வாக்களியுங்கள் என்று மு.காங் கூறியிருந்தால், நிச்சயமாக சாய்ந்தமருது மக்கள் உள்ளடங்களாக எல்லா ஊர்மக்களும் வாக்களித்து அவரை மேயராக தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.

ஆனால் அதனை மு.காங் கடைசிவரையும் செய்யவில்லை. காரணம் கட்சிக்கு புதிதாக சேர்ந்த சிராஸ் மீராசாஹிபு அவர்களை இவருக்கு போட்டியாக ஆக்கி, அதன் மூலம் நிசாம் காரியப்பரை பந்தாடினார்கள் என்பதை நிசாமும் அறியாதவரல்ல,

இதில் ஒரு கல்லில் இரு மாங்காய்களை தலைவர் ஹக்கிம்  பெற்றுக்கொண்டார்.

(நிசாமையும் தோற்கடித்தார்,அதேநேரம் கட்சிக்கு எந்த அற்சுறுத்தலையும் செய்யதுணியாத புதிய வரவான,சிராஸையும் மேயர் ஆக்கிவிட்டார்)

அதன் பிற்பாடு மேயராக வந்த சிராஸ் மீராசாய்வுக்கு,
தலைவர், நிசாம் காரியப்பர் மேல் கொண்ட பயத்தின் காரணமாகத்தான் இந்த விளையாட்டு நடந்தது..அதனால்தான் தான் மேயராவதற்கு தலைமை ஒத்துழைத்தது, என்று கூட தெறியாமல்.
கல்முனையில் தான் பேசும்பொருளாக மாறவேண்டும் என்ற நினைப்பில் ஓடி,ஓடி சில சேவைகளை செய்தார்.
இந்த சேவைகளையும்,அதனூடாக தனக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கையும் தலைவர் ஹக்கிம் அவர்கள் ரசிப்பார் என்று, அரசியலை ஆழமாக அறியாத சிராஸ் மீராசாஹிப் அவர்கள்  இந்த இடத்தில் தவறிழைத்து விட்டார்.

இதுதான் அவருக்கு பிற்காலத்தில் ஆப்பாக அமையும் என்று, அன்று தெறியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சிராஸ் மீராசாய்வுவின் இந்த செயல்பாடு, தூண்டிலை போட்டுவிட்டு மப்பிலில் கண்ணாய் இருந்த ஹக்கிமுக்கு பிடிக்கவில்லை, 
காரணம், குளிக்கப் போய் சேற்றை அள்ளி பூசிக்கொண்ட கதையாக மாறிவிடுமோ! 
என்று தலைவர் பயந்ததன் காரணமாகவும், மேயர் சிராஸின் நடவடிக்கை தனக்கு எதிராக வந்துவிடுமோ!
என்ற பயத்தின் காரணமாகவும் இவருடை பதவியை பறிப்பதற்கான சந்தர்ப்பத்தை பார்த்து கொண்டிருந்தார் தலைவர் ஹக்கிம்  அவர்கள்.

உண்மையிலேயே சிராஸ் இங்கே ஒரு வேலையும் செய்யாமல்,அபிவிருத்தியும் செய்யாமல் (ஹரீஸ்,பைசால் காசிம் போல) பத்தோடு பதினொன்றாக இருந்திருப்பாரேயானால், இரண்டு வருடத்தால் அவருடைய பதவியை தலைவர் பறித்திருக்க மாட்டார்.
மாறாக அவைரேயே தொடர்ந்தும் மேயராக இருக்க விட்டிருப்பார்.

சிராஸின் நடவடிக்கை கல்முனையில் நமக்கு சவாலாக வந்துவிடும் என்ற காரணத்தினால்,எந்த விடயத்திலும் சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றாத தலைவர் ஹக்கிம், இந்த விடயத்தில் சொல்வாக்குபடி நடப்பவன் நான் என்று காட்டிக்கொண்டது மட்டுமல்ல,அதனை பறித்து நிசாம் காரியப்பருக்கு கொடுத்தார்.

இந்த இடத்திலும் ஒரு கல்லில் இரு மாங்காய்களை பறித்துக்கொண்டார் தலைவர்.

ஒன்று, சிராஸின் மேயர் பதவியை துடிக்க,துடிக்க, பதவியை பறித்தது.
மற்றது,
சாய்ந்தமருது மக்களின் அரசியல் எதிரியாக நிசாம் காரியப்பரை மாற்றியது.

நிசாம் காரியப்பர் இந்த இடத்தில்.
இப்படி பறித்துத்தறும் பதவி எனக்கு வேண்டாம், இதனால் சாய்ந்தமருது மக்கள் என்னைத்தான் பிழையாக நினைப்பார்கள், அதனால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று மறுத்திருந்தால்,இன்று கல்முனை மக்களின் மனதில் ஒரு ஜென்டில் மேன் என்ற பட்டத்தை பெற்றிருப்பார்.

எதிர்காலத்தில் அவரின் தனிப்பட்ட அரசியலுக்கும் அது பயன் பட்டிருக்கும். 
ஆனால் அவர் அந்த இடத்தில் ஹக்கிமின் திட்டத்துக்கு பழியானார் என்பதே உண்மையாகும்.

அந்த மேயர் பதவியை பாரமெடுத்தவர், அதையாவது அவருடை இரண்டுவருட காலத்துக்குள் ஒழுங்காக சேவைகள் செய்து பேர்வாங்கினாரா என்றால் அதுவும் இல்லை என்றே கூறவேண்டும்.

*குறிப்பு:(அப்படி இவரும் ஓடி ஓடி சேவை செய்தால் சிராஸிக்கு நடந்ததுதான் நமக்கும் நடக்கும் என்று நினைத்தாரோ என்னவோ.)

கல்முனை மக்கள் சிராசோடு இவரை ஒப்பிட்டு பார்த்தது மட்டுமல்ல, இவர் அரசியலுக்கு லாயக்கற்றவர் என்றும் மக்கள் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதைத்தான் தலைவர் ஹக்கிம்  எதிர்பார்த்தார்.
இப்போது கல்முனையில் இருந்த, அவருக்கு எதிரான சவால் ஒன்று இல்லாமல் போய்விட்டது.

மற்றது,அவரை கட்சியையும் விட்டு ஓரம் கட்டிவிட்டால்,பல்லு கலட்டிய பாம்பாக நிசாம் காரியப்பர் ஒதுங்கவேண்டியதுதான் மிச்சம்.

இதே நிலைமை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்றுதான் கல்முனை அரசியல் வாதிகள் எந்த சேவையும் செய்யாமல் தூங்கிகொண்டு உள்ளார்கள் என்பது.
இதைபற்றி அறிந்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

ஆக மொத்தத்துக்கு கல்முனையின் அரசியல், ஒருவறின் தனிப்பட்ட பயத்துக்கு பழியாகிக்கொண்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஒரு காலத்தில் சுதந்திரமான நேரடி ஏஜண்டுகளின் கைகளிலே இருந்த கல்முனை தொகுதி, இப்போது சப் ஏஜண்டுகளின் கைகளுக்கு மாறியுள்ளது.
கல்முனையில் எது செய்ய நினைத்தாலும் ஹக்கிம்  நினைத்தால்தான் முடியும்..

அதனால் ஹக்கிமுக்கு தெறியாமல் இ்ங்கே யாரும் அபிவிருத்தி செய்து மக்கள் மத்தியில் கதாநாயகன் ஆகுவதை தலைவருக்கு பிடிக்காது. 
பிடிக்காத ஒன்றை செய்து தலைவரிடம் சீட்டு கிழிக்கப்படுவதை விட பேசாமல் இருப்பதே மேல் என்று, கல்முனை அரசியல் வாதிகளை போல் அம்பாரை மாவட்ட மு.காங்.அரசியல் வாதிகளும் நடந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

தாம் சேவை செய்யாது விட்டாலும்,மரச்சின்னத்தில் வந்தால் நாம் வெற்றியடைந்து விடலாம் என்ற என்னமே அவர்களுக்கு மேலோங்கி நிற்கின்றது.
அதற்கு மு.காங் ஆதரவாளர்கள் தயார் நிலையில் இருப்பதும் ரஹுப் ஹக்கிம்  அவர்களுக்கு கூடுதல் அனுகூலமே!

Viduthalai news


எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் அறிகுறி தென்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமையில் கூட்டாக போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

இதில் எதிர்பார்க்கப்படாத பல கட்சிகள் அங்கம் வகிக்கவுள்ளன.

இதன் ஒரு கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதுடன், இணைந்து செயற்பட தமது விருப்பத்தையும் வெளியிட்டதாக, இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது ஒரு முன்னேற்றக்கரமானதும், நடைபெற வேண்டியதுமான செயற்பாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.அம்பாந்தோட்டையில் பொலிஸ் தடுப்பில் இருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகள்  நடைபெறுகின்றன.  இந்த விடயத்தில் பொலிஸார் தவறிழைத்தமை தெரிகின்றது.  அது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று  பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸார் செயற்படுவதற்கென ஒரு முறைமை காணப்படுகின்றது. ஒருவரை கைது செய்யும் போது தாம் பொலிஸார்  என்பதை நிரூபித்து விட்டே  கைது செய்யவேண்டும்.  ஆனால் பொலிஸாரின் வாகனத்தை தவிர்த்து வேறு வாகனங்களில்   சந்தேக நபர்களை அழைத்து செல்வதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  வராந்த அமைச்சரவை  முடிவுகளை அறிவிக்கும்   செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த  பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அம்பாந்தோட்டையில் நெல் திருட்டு  குற்றச்சாட்டில்  மூவர்  அம்பாந்தோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன் போது  மூன்றாவது சந்தேக நபர்  காணாமல் போயிருக்கிறார்.  ஆனால் பொலிஸார்  ஆரம்பத்தில் இருவரையே கைது செய்ததாக தெரிவித்தனர். எனினும்  கைது செய்யப்பட்டோரின் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.  நாம் மேற்கொண்ட விசாரணையில் மூவர் கைது செய்யப்பட்டமை தெளிவாகிறது. எனவே  இந்த விவகாரத்தில்  பொலிஸாரின் பக்கத்தில் பொலிஸ் சட்டதிட்டங்களுக்கு அமைய தவறிழைக்கப்பட்டுள்ளமை  தெளிவாகிறது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடைபெறுகின்றன. இரண்டு தினங்களில் விசாரணை முடிவை    நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.  விசாரணையில் பொலிஸார்   தவறிழைத்துள்ளமை  நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும்.


சர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு  எதிர்வரும்  28 மற்றும் 29 ஆம் திகதிகளில்  கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச மாநாடொன்று நடைபெறவுள்ளது.

ஊடகத்துறை அமைச்சு மற்றும்   அரசாங்கத் தகவல் திணைக்களம்     ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு    தகவல் அறிதல், மற்றும்  ஊடக மறுசீரமைப்பு  என்ற தொனிப்பொருளில்   நடைபெறவுள்ளது.

கொழும்பு  ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச மாநாட்டில்  பிராந்திய மற்றும் சர்வதேச துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

குறிப்பாக தகவல் அறியும் செயற்பாட்டில் பிராந்திய  அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளுதல், தொழில்நுட்ப  பரிமாற்றுதல் ஆகியன இந்த   மாநாட்டின் நோக்கமாகும்.  குறிப்பாக   இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின்  அனுபவங்கள் இதன்போது பகிரப்படும்.போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நான் அல்ல என மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரட்ன போர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஊடாக எந்தவொரு போர் இரகசியங்களும் அம்பலப்படுத்தப்படவில்லை.

நான் போர் இரகசியங்ளை வெளியிடும் படைவீரனல்ல. போர் இரகசியங்கள் இருந்தால் அது நாம் சாகும் போது எம்முடனேயே புதைந்துவிடுமே தவிர, அவற்றை வெளியிடும் பெறுமதியற்ற மனிதனல்ல நான்.

எனது நூலில் எந்தவொரு போர் இரகசியங்களையும் வெளியிட்டதில்லை.

பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்களையே நான் நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

எனது பெருமையை பிரச்சாரம் செய்யும் நோக்கில் நூலை எழுதவில்லை.

வறிய பெற்றோரே தமது பிள்ளைகளை படையில் இணைத்தனர். அவர்கள் போர் பற்றி அறிந்து கொள்ளவே இந்த நூலை சிங்களத்தில் எழுதினேன்

நாம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தும் புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ள இந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

நான் எனது உயிர் இருக்கும் வரையில் அரசியலுக்கு வர மாட்டேன் என்பதனையே வலியுறுத்துகின்றேன என அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு நாட்களில் 5000 நூல்கள் விற்பனை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் பற்றி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய “ரன மக ஒஸ்ஸே நந்திக்கடால்” என்னும் நூலின் முதல் பதிப்பு 7 நாட்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.

முதல் பதிப்பில் சுமார் ஐயாயிரம் நூல்கள் பிரதியிடப்பட்டுள்ளன. இந்த அனைத்து நூல்களும் முதல் ஏழு நாட்களில் விற்றுத் தீர்ந்துள்ளதாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு புத்தகக் கண்காட்சியில் இந்த நூலின் மற்றுமொரு பதிப்பு வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட பதிப்பில் சுமார் எழாயிரம் நூல்கள் பதிப்பிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கை போக்குவரத்து சபையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் ஒரு அசாதாரண அமைச்சராக மாறியதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்து ள்ளார்.

போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் எவரையும் தான் இணைத்து கொள்ளாததே இதற்கு காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நாரஹென்பிட்டி சாலிகா மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் செய்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையை எப்போதும் அதற்கான வளமாக பயன்படுத்த போவதில்லை.

எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாக செயற்பட போவதில்லை. எந்த அரசியல் கட்சிக்கு இ வச மாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை வழங்கவில்லை.

சபையின் முன்னேற்றத்திற்காக திரைக்கு பின்னால் இருந்து செயற்படுவேன் என நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நடந்த முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால்  இன்று அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச அங்கு செல்லும் முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு சந்தித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க நேற்றிரவு முதல் கடும் முயற்சிகளை மேற்கொண்ட வீரவங்ச இன்று காலை அவரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய விமல் வீரவன்சவை இன்று கைது செய்யாது, வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க செல்வது என்பது திரும்பி வர முடியாத இடத்திற்கு செல்வது போன்றது என வீரவன்ச  இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு செல்வோர் எவரும் கைது செய்யப்படாமல் வெளியில் திரும்புவதில்லை என்ற அர்த்தத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அரச வாகனத்தை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக சென்ற வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச , தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு வீரவன்ச  இன்று கைதுசெய்யப்படுவதை தடுத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.


சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுடன் சற்று நேரத்துக்கு முன்னர் தொலைபேசியில் நட்பு ரீதியாக உரையாடினேன். அதன் போது “இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைக்கு நிரந்தரமான ஒரு பணிப்பாளரை நியமித்து தருவதாக நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நீங்கள் பகிரங்கமாக தெரிவித்திருந்தீர்கள். ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லையே” என்று நான் அவரிடம் ஆதங்கப்பட்டேன்.  அதற்கு அவர் அளித்த பதிலை பகிரங்கமாக இங்கு பதிவு செய்கிறேன். .

“அஹ்மத் முனவ்வர் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவின் போது இந்த விடயம் தொடர்பில் பலரும் தெரிவித்தனர். முஸ்லிம் சேவைக்கு நிரந்தரமான ஒரு பணிப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதன் போது சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில் இந்த விடயம் தொடர்பில் நான் உரிய நடவடிக்கைளை மேற்கொள்வதாக தெரிவித்தேன். அத்துடன் இந்த விவகாரம் குறித்த அனைத்து தகவல்களையும் என்னிடம் தரும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால், இதுவரை எவருமே என்னை வந்து சந்திக்கவும் இல்லை. தகவல்களைத் தரவும் இல்லை தொலைபேசியில் கூட உரையாடவும் இல்லை.. இந்த நிலையில் என்னால் எதனைச் செய்ய முடியும்? ஆகக் குறைந்ததது இது சம்பந்தமான தகவல்களையேனும் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு தந்திருக்கலாம் அல்லவா? முஸ்லிம் சேவை பிரச்சினைகளை நான் பெரிதாக அறிந்திருக்கவும் நியாயமில்லைதானே என்றார்.

அவர் கூறுவது நூறு வீதம் உண்மையே கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சராக அவர் இருந்தாலும் முஸ்லிம் சேவையில் உள்ள பிரச்சினைகள், குறைபாடுகள் தொடர்பில் அவர். அறியாதும் இருக்கலாம்தானே?

முஸ்லிம் சேவை தொடர்பில் அந்தக் கூட்டத்தின் போது நண்பர் என்.எம். அமீன் அவர்களும் தனது மன ஆதங்கத்தை  அதிகளவில் வெளியிட்டிருந்தார். அமைச்சர் வழங்கிய உறுதி மொழியின் பின்னர் இந்த விவகாரத்தை அமீன் அவர்களாவது முன்னெடுத்துச் சென்று அமைச்சர் மனோ கணேசன் மூலம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம்  அல்லவா என்பது எனது இன்றைய மனவேதனையும் ஆதங்கமும்.

எவராயினும் சரி மேடைகளில் மடடும் தங்களது சமூக அக்கறையை வெளிக்காட்டுவதில் அர்த்தமில்லை. அது தொடர்பில் செயற்படவும் வேண்டும். காற்றடிக்கும் போதே சரியான முறையில் தூற்றிக் கொள்வது சிறந்தது.  

மேலும் நண்பர் மனோ கணேசன் அவர்கள் ஒரு விடயத்தை முன்னெடுத்தால் அல்லது வாக்குறுதி ஒன்றினை வழங்கினால் அதனை அடையாமல் ஓய்ந்து விடாத மனிதர். இறுதியில் வெற்றி பெற்று விடுவார். அப்படிப்பட்ட ஒரு தமிழ் அமைச்சர், அதுவும் இந்த அரசாங்கத்தில் மிகச் சக்திவாய்ந்த மனிதரான மனோ கணேசன் எமது பிரச்சினையைத் தீர்க்க முன்வந்துள்ள போதும் நம்மவர் அதனைக் கணக்கில் எடுக்காது உள்ளமை யார் குற்றம்?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களை தூண்டி வரும் விமல் வீரவன்ச மகாநாயக்க தேரரின் பதிலால் மூக்குடைக்கப்பட்டுள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் சம்மேளனத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளதால் அரசாங்கத்துக்கு விரோதமாக செயற்படும் மஹிந்த அணியினர் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் தற்போது அமைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஓர் அங்கமாக விமல் வீரவன்ச மல்வத்த மகாநாயக்க தேரரை சந்தித்து இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். ஆனால் மகாநாயக்க தேரர் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பாக அறிந்துள்ளமையால் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்கள் அவரிடம் எடுபடவில்லை.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளதாகவும் அரசியலமைப்பு மூலம் ஒருபோதும் நாட்டை பிரிக்க இடமளிக்க மாட்டோம் என இரண்டுபேறும் உறுதியளித்துள்ளதாகவும் தேரர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியலமைப்பை வைத்து சிங்கள மக்களை குழப்புவதற்கே இவர்கள் மகாநாயக்க தேரரிடம் சென்றுள்ளனர். ஆனால் மகாநாயக்க தேரரின் பதில் மூலம் விமல் வீரவன்ச மூக்குடைக்கப்பட்டுள்ளார்.


சிறையில் அடைத்தாலும் தான் உள்ளிட்ட தமது தரப்பினரை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தவோ, தமது வேலைகளை மழுங்கடிக்கவோ முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்துக்கொண்டிருந்த போது 2007 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை கவிழ்க்க மக்கள் விடுதலை முன்னணி முயற்சித்தது.
புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தை கவிழ்ப்பது தேசத்துரோக செயல் என்ற நிலைப்பாட்டை கட்சிக்குள் ஏற்படுத்த முடியாது போனதால், விமல் வீரவன்ச உள்ளிட்டோர் அன்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.
அன்று விமல் விரவங்ச எதிர்நோக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவரது பாவனைக்காக ஜனாதிபதி செயலகம் மேலதிகமாக வாகனம் ஒன்றை வழங்கியிருந்தது.
2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட வீரவன்ச வாகனத்தை திருப்பி கொடுக்க ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றார்.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விமல் வீரவங்சவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டால், பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய இந்த வாகனத்தை வைத்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இது குறித்து நான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டேன். அவரும் அதனை உறுதிப்படுத்தினார். உறுதிப்படுத்தி சத்தியக்கடித்தை வேண்டுமானாலும் தருவதாகவும் அவர் கூறினார்.
இந்த வாகனம் தொடர்பாக விசாரணை நடத்த விமல் வீரவங்ச இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பாதுகாப்புச் சபை எடுத்த தீர்மானத்திற்கு அமைய மேலதிகமாக வாகனம் ஒன்றை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியே முடிவு செய்துள்ளார்.
அந்த வாகனம் சட்டரீதியாக வழங்கப்பட்டது. தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற காரணங்கள் இல்லாவிட்டாலும் அமைச்சர்கள் பல வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு எமது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே அதிகமான வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
வழங்கப்பட்ட எண்ணிக்கையை விட ஒரு வாகனத்தை அதிகமாக பயன்படுத்துவது குற்றம் என நிதி மோசடி விசாரணைப் பிரிவு கருதி விசாரிக்குமாயின் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.குறித்த பணிப்பகிஷ்கரிப்பு கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 200 பேர் வரையில் கல்வியமைச்சரை சந்திப்பதற்காக இன்று  கல்வியமைச்சின் தலைமைகத்திற்குள் பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அம்மாவட்டங்களில் உள்ள சகல கள உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு விரிவான இணைந்த செயற்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் அலுவலகங்களை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் அந்த நிகழ்ச்சித்திட்டம் அடுத்த ஜனவரி மாதம் பொலன்னறுவை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுமென்றும் அதன் பின்னர் அது நாடளாவிய ரீதியில் விரிவாக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற பொலன்னறுவை மாவட்ட கள உத்தியோகத்தர்களுடனான ஒரு சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு இந்த நாட்டை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு சகல கள உத்தியோகத்தர்களினதும் உதவி அரசாங்கத்திற்கு அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளும் நியாயமான, சமநிலையான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரதேச செயலாளர் மட்டத்தில் சரியான தகவல்களைப் பெற்று ஒரு வெற்றிகரமானதும் மக்களுக்குத் தேவையானதுமான அபிவிருத்தி செயற்திட்டத்தை நாட்டில் முன்னெடுப்பதற்கு இந்த புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் முடியுமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்றபோது அபிவிருத்தியில் மிகவும் குறைந்த தரத்தில் உள்ள பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்து அங்கு மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கு “எழுச்சிபெறும் பொலன்னறுவை“ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எதிர்வரும் வருடங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதற்கு அடுத்த ஜனவரி மாதம் முதல் தாம் மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சங்கைக்குரிய அத்துரலியே ரத்தன தேரர், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, மாகாண சபை உறுப்பினர் சம்பத் ஸ்ரீ நிலந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் பொலன்னறுவை மாவட்ட நீதிமன்ற கட்டிடத்திற்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, அங்கு பணிக்குழாத்தினருடனும் சுமுகமாக கலந்துரையாடினார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே வற் வரி அமுலில் இருக்கும் எனவும் ஒன்பது மாதங்களின் பின்னர் மக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாது எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 1.3 ட்ரில்லியன் ரூபா கடன் தொகையை செலுத்துவதற்காகவே இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் கடன்களை உரிய முறையில் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும் நாட்டை பாரிய கடன் பொறியில் சிக்க வைத்துள்ளதாகவும் அதிலிருந்து மீட்டு எடுக்கும் நோக்கில் வற் வரி விதிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக அடிப்படையில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒன்பது மாதங்களின் பின்னர் மக்களுக்கு சுமையற்ற வகையில் வெற் வரியில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருந்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண அந்த சந்தர்ப்பத்திலேயே நிதி அமைச்சருக்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.இது வரையில் நிதியமைச்சரினால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் எதுவுமே அவர் ஏற்கனவே உறுதியளித்த விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை அதுபோன்றே அரசாங்கத்தினால் மீண்டும் கொண்டுவரப்படவுள்ள வற் வரி திருத்த சட்டமூலமும் அமைந்துவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் இச்சட்டமூலத்துக்கும் எங்களது எதிர்ப்பையே தெரிவிப்போம் எனவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் நாடகங்களில் ஒன்றாகவே குறித்த சட்டமூலத்தின் தற்போதைய தொனியும் தென்படுவதாகவும் எனவே இச்சட்டமூலம் தொடர்பிலும் ஆராய்ந்து மீளாய்வுக்கு உட்படுத்துவோம் என கூட்டு எதிரணியினரின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன் தெரிவித்தார்.

என்.எம் பெரேரா மண்டபத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கடந்த காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி மாத்திரமே வற் வரி தொடர்பில் தங்களது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தது. அதனடிப்படையிலேயே அரசாங்கமும் தங்களது பிழைகளை திருத்திக்கொள்வதாகவும் நீதிமன்ற பணிப்புரையின் பின்னர் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் குறித்த சட்டமூலம் தொடர்பில் பாரதூரமான பலவிடயங்கள் மக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய வகையில் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கான அடிப்படை வாழ்வாதார பொருட்களுக்கு வரி உயர்த்துதல் என்பது மிகவும் வேதனையான விடயமாகும். பிரதமர் இன்னும் 9 மாதங்களில் கடன்சுமை நீங்கிவிடுமென கூறுகின்றார். கடந்த ஆட்சியில் வாங்கிய கடனை அடைப்பதற்காகவே வற் வரியை அதிகரிக்கின்றோம் என்கின்றனர். இவை மிகவும் கேளிக்கையான விடயங்களாகும்.

மேலும் வற் வரி தொடர்பில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் முழு பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே கொண்டு வரப்பட்டது என்றார்கள். இந்த நாடகம் இறுதியில் வெளிச்சத்துக்கு வந்ததும் சட்டமூலத்தை திருத்துவதற்கு தயாராகவுள்ளோம் என்கின்றனர். ஏனவே நிதியமைச்சரையோ அல்லது அரசாங்க தரப்பினரையோ மீண்டும் நம்புவதற்கு நாம் தயாராகவில்லை.

தற்போது அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் திருத்த சட்டமூலத்திலும் ஒவ்வாரு உறுப்புரைகளையும் ஆராய்ந்து மக்களை எவ்வாறு ஏமாற்ற போகின்றார்கள் என்பதை கண்டறிய நாம் தயாராகவே உள்ளோம். அதற்காகவே இச்சட்டமூலத்தை கொண்டு வந்தாலும் மீண்டும் மீளாய்வுக்கு உட்படுத்துவோம்.

நாம் தற்போதைய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் எத்தனையோ நாடகங்களை பார்த்தவர்கள். அதனைப்போன்ற நாடகமாக இந்த சட்டமூலத்தையும் மாற்றிவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றார்.


யுத்தம் தொடர்பில் தாமும் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புத்தகங்களை எழுதி யுத்தம் பற்றிய இரகசியங்களை கசிய விடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் எவ்வாறு மூண்டது, அதன் வரலாறு, காலத்துடன் எவ்வாறு மாற்றங்கள் ஏற்பட்டன, எவ்வாறு யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது என்பது குறித்து விளக்கி புத்தகம் எழுதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் இந்த புத்தகத்தை வெளியிட உத்தேசித்துள்ளதாகவும், ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது யுத்த அனுபவத்தைப் பதிந்துள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்கின்ற நூலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் நந்திக்கடலுக்கான பாதையானது புலிகள் அமைப்பானது சிறிலங்கா இராணுவத்தால் வெற்றி கொள்ளப்பட்டது தொடர்பாகக் குறிப்பிடும் அதேவேளையில், இலங்கைத் தீவு முழுமையையும் பாதித்த மூன்று பத்தாண்டு கால யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ வீரர் ஒருவரின் உணர்வுகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்ற ஒரு நூலாக இது நோக்கப்படுகிறது.

நந்திக்கடலுக்கான பாதை என்கின்ற நூலின் ஆசிரியர் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு இளம் அதிகாரியாக சிறிலங்கா இராணுவத்தில் இணைந்துகொண்டார். இராணுவத்தில் இணைந்த ஆரம்ப காலம் தொடக்கம் 2009ல் முடிவிற்கு வரும்வரை போரில் பங்குகொண்டதன் மூலம் இவர் மேஜர் ஜெனரல் பதவி நிலையைப் பெற்றுக்கொண்டார்.

1987ல் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவத் தாக்குதலான ‘வடமராட்சி நடவடிக்கை’ தொடக்கம் 2009 வரை புலிகளுக்கு எதிராகப் பல்வேறு யுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மறைந்த ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ, விஜய விமலரட்ன மற்றும் இராணுவத்தின் மூத்த கட்டளைத் தளபதிகள் போன்றவர்களின் தலைமையின் கீழ் ஒப்பரேசன் லிபரேசன் எனப்படும் வடமராட்சி இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற போது மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஒரு இளம் இராணுவ அதிகாரியாகச் செயற்பட்டிருந்தார்.

இவர் தற்போது எழுதியுள்ள தனது நூலில் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையில் இந்தியாவின் தலையீடு மற்றும் சிறிலங்கா இராணுவ நடவடிக்கையிலிருந்து புலிகள் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை இந்தியா வழங்கியமை தொடர்பில் தான் கோபங்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பரேசன் லிபரேசனின் போது இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொதிகளை வீசியமை தொடர்பில் தான் எரிச்சலுற்றிருந்தாகவும் இந்திய விமானங்களைச் சுட்டுவீழ்த்த வேண்டும் என்கின்ற உணர்வு தன்னுள் மேலோங்கியிருந்தாகவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘வடமராட்சி நடவடிக்கையின்’ போது இந்தியர்கள் இதில் தலையீடு செய்யாதிருந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்னரேயே புலிகள் அமைப்பை சிறிலங்காப் படையினர் ஒழித்திருப்பார்கள் என சில இராணுவ ஆய்வாளர்கள் தற்போதும் நம்புகின்றனர். அரசியல் தலையீடு காரணமாக வடமராட்சி நடவடிக்கை தோல்வியுற்ற போது அப்போது இளம் இராணுவ அதிகாரியாக இருந்த குணரத்ன மற்றும் அவரது சக வீரர்கள் ஆத்திரமடைந்தனர் என்பதற்கான ஒரு சாட்சியமாக நந்திக்கடலுக்கான பாதை காணப்படுகிறது.

எனினும் இளம் இராணுவ அதிகாரியாக இருந்த இவர்கள் பல ஆண்டுகள் போர்க் கள அனுபவங்களின் பின்னர் அனுபவம் மிக்க தளபதிகளாக வரும்வரை புலிகள் அமைப்பைத் தோற்கடிப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். இதுவே நந்திக்கடலுக்கான பாதை கூறும் கதையாகும்.

சிறிலங்கா இராணுவத்தின் வளர்ச்சி குறிப்பாக சில மேஜர் ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்கள் உருவாகியமையானது புலிகள் அமைப்பைத் தோற்கடித்துப் போரை வெற்றி கொள்வதற்கான ஒரு பலமாக அமைந்தது. போரின் ஆரம்ப கட்டத்தில், சிறிலங்கா இராணுவத்தின் அதியுயர் இராணுவ நிலையானது மேஜர் ஜெனரலாகும். எனினும் போரின் இறுதியில் பல மேஜர் ஜெனரல்கள் உருவாகியிருந்ததுடன், சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு லெப். ஜெனரல் என்கின்ற பதவி வழங்கப்பட்டதுடன் இந்த நாடானது முதலாவது பீல்ட் மார்சலையும் உருவாக்கியிருந்தது.

சிறிலங்கா இராணுவத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பல்வேறு யுத்த களங்களுக்கான மையமாக வடக்கு மற்றும் கிழக்கு விளங்கியது. தரையில் மட்டுமல்லாது கடல் மற்றும் வானிலும் பாரிய யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

யுத்த கள அனுபவங்கள் தொடர்பாக மட்டுமல்லாது, புலிகள் அமைப்பு மீதான குறிப்பாக அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான தனது அவதானிப்புக்களை குணரத்ன தனது நூலில் பதிவு செய்ததன் மூலம் தனது துறைசார் சிறப்பை மேலும் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் படிக்காதவராக இருந்திருக்கலாம், ஆனால் இவர் தனது அமைப்பில் அதியுயர் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பியிருந்தார் என குணரத்ன குறிப்பிட்டுள்ளார். ‘இவர் மிகவும் நேசத்திற்குரிய குடும்பத் தலைவர். சிறிலங்கா இராணுவத்தினர்இ பிரபாகரனினதும் அவரது குடும்பத்தினரதும் விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும் 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள். அவர் ஒரு இந்துவாக இருந்தாலும் கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது’ என ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் நல்லதொரு இராணுவத் தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருந்த போதிலும், இவர் ஒருபோதும் பொருத்தமான அரசியல் சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவானதாகும். அதாவது இவர் தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்காகவே காலஅவகாசத்தைப் பெற்றிருந்தார். அத்துடன் அரசியற் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான எந்தவொரு அரசியல் நோக்கையும் இவர் கொண்டிருக்கவில்லை.

நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற போது பிரபாகரனின் நிலைப்பாடு தொடர்பாக புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கம் அதிருப்தியுற்றிருந்தார். இவர் இந்தக் கருத்தை தனது மறைவிற்கு முன்னர் தனக்கு நெருக்கமான சிலரிடம் குறிப்பிட்டிருந்தார்.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் கடந்தவாரம் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் இரண்டாவது தடவையாக சிறிலங்காவிற்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலான நந்திக்கடலுக்கான பாதையை வெளியிட்டிருந்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய 3,000,000 வரையான தமிழ்ப் பொதுமக்கள் இடைத்தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா பூந்தோட்டம் முகாமையும் ஐ.நா செயலாளர் நாயகம் நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த வாரம் பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த போது காணாமற் போனோரின் குடும்பங்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமையானது யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும், போருக்குப் பின்னான மனிதாபிமானப் பிரச்சினைகள் தீர்வு காணப்படாத நிலையிலும் உள்ளதையே கோடிட்டுக் காண்பித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகக் கையாள்வதில் ஐக்கிய நாடுகள் சபையானது தோல்வியுற்றதை பான்கீ மூன் சிறிலங்காவிற்கான தனது பயணத்திற்கு முன்னர் ஒப்புக்கொண்டிருந்தார்.

போருடன் தொடர்புபட்ட பல்வேறு மனிதாபிமான விவகாரங்களை முதன்மைப்படுத்துவதில் ஐ.நா தோல்வியுற்றதை பான்கீ மூன் ஒப்புக்கொண்ட நிலையில், தமக்கு நீதி வழங்கக் கூடிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது நிறைவேற்றப்படும் என்கின்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் வாழும் நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ்ப்பாணத்திற்கான பயணமானது ‘மூன் வோக்’ – Moonwalk (நடனவகை) எனக் கருதப்பட முடியும்.

மூன்வோக் என்பது நடனமாடுபவர் தனது முன்புறமாக அசைவது போன்று தோன்றும் அதேவேளையில் அவர் தனக்குப் பின்புறமாக நகரும் நடன வகையாகும். இவ்வாறானதொரு மூன்வோக் நடனத்தை பான்கீ மூனும் ஆடுகிறாரா என்கின்ற சந்தேகம் தோன்றியுள்ளது.

ஆங்கிலத்தில் – Manekshaw
வழிமூலம் – Ceylon today
மொழியாக்கம் – நித்தியபாரதி
புலிகள் இயக்கத்துடன் இருக்கும் போது தமிழ்க்கவிக்கு புற்றுநோய் ஏற்படவில்லை!! தாயார் கூறுகின்றார் தமிழினிக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் இருக்கவில்லை உண்மைக்குப் புறம்பானது என்கிறார் தாயார் .விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளாராக இருந்த தமிழினி அவர்களின் தாயார் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் இருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் நடைபெற்ற நல்லிணக்கப் போறி முறைக்கான சாட்சியம் அளிக்கும் நிகழ்வில் சாட்சியம் அளித்ததனை காணொளிகள் மூலமாகப் பார்த்தேன் அத்துடன் வடக்குமாகாண சபை அமைச்சர் ஒருவர் கூறியதனையும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்வையிட்டேன் அவ்வாறு எனது மகளிற்கு புற்றுநோய் இருக்கவில்லை என நான் கூறுகின்றேன் அதனை அவர்களால் நிரூபிக்க முடியுமா என கேள்வியினைத் தொடுத்த அவர் அவ்வாறு ஏற்கனவே அவரிற்கு புற்றுநோய் இருந்த விடையம் இதனைத் தெரிவித்த அவர்களுக்கு தெரியும் என்றால் ஏன் அதனை எனக்கு முதலே கூறவில்லை என்ற பல கேள்விகளைத் தொடுத்திருந்தார்

அதனை தொடர்ந்து அதற்கு நீங்கள் உங்கள் மகள் தமிழினி விச ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தார் என கூறுகிறீர்களா என எமது செய்தியாளர் தொடுத்த கேள்விக்குப் பதிலளித்த அவர்

நான் எனதுமகள் விச ஊசி ஏற்றப்பட்டு இறந்தாரா அல்லது யுத்தத்தின் பின்னர் புற்றுநோய் வந்துதான் இறந்தாரா என நான் வாதிட வரவில்லை ஆனால் எனது மகள் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்பதனை ஏற்றுக்கொள்ள என்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது ஏன் எனில் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்ற கருத்தைப் பார்த்தால் 2006 ம் ஆண்டிற்கு முற்பகுதியில் இருந்திருக்க வேண்டும் அவர் இறந்தது 2015 ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பூரண சிகிச்சை உரிய முறையில் பெற்றால் மாத்திரமே அக் கொடிய நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் சில வேளைகளில் அதுவும் பயனளிப்பதில்லை சிகிச்சை எதனையும் பெற்றுக் கொள்ளாத தமிழினி ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தால் எவ்வாறு இவளவு வருடக்கணக்கில் உயிருடன் இருந்தார் என சிந்திக்க வைக்கும் கேள்வி ஒன்றினையும் எழுப்பி இருந்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் இலாபங்களுக்காக எங்களைப் பாவிக்காதீர்கள் எனது மகள் இறந்து விட்டாள் அதனை அப்படியே விட்டுவிடுங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார் அத்துடன் எனது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளை வைத்திய சாலை சென்று பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் உதவி கேட்டிருந்தேன் எங்களுக்கு அவர் உதவ வேண்டும் என்ற உரிமையுடன் கேட்டிருந்தேன் அவர் இரண்டு மூன்று தரம் மகளைப் பார்வையிடச் செல்ல சிறியளவு பண உதவியினைச் செய்தார்.

அது அவ் வேளைகளில் பெரிய உதவியாக இருந்தது அத்துடன் வைத்திய சாலையிலும் சென்று பார்வையிட்டிருந்தார் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் சில சிறிய உதவிகளைச் செய்திருந்தார்.

நான் எதனையும் மறக்கவில்லை இப்பொழுது நான் எங்கும் செல்வதில்லை செல்ல வேண்டிய தேவையும் இல்லை ஏன் எனில் நான் ஒரு சிறிய கடை ஒன்றினை அமைத்து அதில் வரும் வருமானத்தில் நானும் எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டு எமது வாழ்க்கை என வாழ்ந்து வருகின்றோம் எம்மை பொய்யான தகவல்களை வெளியிட்டு உடைந்து போயுள்ள மனங்களை மீண்டும் மீண்டும் உடைக்காதீர்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பேஸ்புக்கானது செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் துமிந்தவால் இது பயன்படுத்தப்பட்டுள்ளனவா, என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பேஸ்புக்கில் பாரத லக்ஸ்மன் கொலை சம்பவத்தில் துமிந்த சில்வா காயமடைந்துள்ள புகைப்படம், அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற போது பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பன நேற்று  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பேஸ்புக் ஆனது துமிந்த சில்வாவால் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தனது தந்தை கொலை செய்யப்பட்ட போது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் ஏற்பட்ட காயத்துடன் அவருடைய தந்தை இருக்கும் புகைப்படத்தை இணையங்களில் வெளியிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்தில் இரு­ பெ­ரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் சிறு­பான்மைக் கட்­சி­களும் இணைந்து செயற்­படும் பட்­சத்­தி­லேயே, அனைத்து மக்­களும் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்க முடியும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
திரு­கோ­ண­மலை மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழு­க்
கூட்டம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மாவட்ட செய­ல­கத்தில் நடை­
பெற்­ற­போது அதில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,மாவட்­டங்­களில் வாழு­கின்ற மக்­களின் மத்­தியில் சமா­தா­னத்­தையும்
நல்­லி­ணக்­கத்­தையும் கொண்­டு­வர வேண்­டு­மாயின் அவர்கள் சுதந்­தி­ர­மாக வாழும் உரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு வழங்­கு­வதன் மூலமே, தேசத்தில் ஒற்­று­மை­யையும் புரிந்­து­ணர்­வையும் கொண்­டு­வர முடியும். தேசத்தின் அடிப்­ப­டையில் பிராந்­திய, மாகாண மாவட்ட அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது நாம் எல்­லோரும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள். இந்த மாவட்­டத்தில் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இத்­திட்­டங்கள் அனைத்­தையும் எந்த சமூ­கத்­தையும் பாதிக்­காத வகையில் நாம் மேற்­கொள்ள வேண்டும்.
இச்­செ­யற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுக்­க­வேண்­டு­மாயின் நல்­லி­ணக்­கத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் ஒற்­று­மை­யு­டனும் செயற்­ப­ட­வேண்­டி­யது எங்கள் எல்­லோ­ரு­டைய கட­மை­யாகும்.
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஆரம்ப காலத்தில் தமிழ் மக்கள் கூடு­த­லாக வாழ்ந்­தாலும் கூட, நாடு சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின் ஒரு சில மாற்­றங்கள் கார­ண­மாக இந்த மாவட்­டத்தில் மூவின மக்­களும் கணி­ச­மான அளவில் வாழும் நிலை காணப்­ப­டு­கி­றது. இவர்கள் எல்­லோரும் ஒற்­று­மை­யுடன் இந்த நாட்டின் பிர­ஜை­க­ளாக சந்­தோ­ஷ­மாக வாழ்­வ­தற்கு உரித்­து­டை­ய­வர்கள். இவர்­க­ளுக்குள் கருத்து வேறு­பா­டில்­லாமல் எவ்­வி­த­மான மோதல்­களோ முரண்­பா­டு­களோ இல்­லாமல் சமத்­து­வத்தின் அடிப்­ப­டையில் நியாயம் மற்றும் நீதியின் அடிப்­ப­டையில் தமது வாழ்க்­கையை நடத்­து­வ­தற்கு இய­லு­மா­ன­வ­ரையும் சகல விட­யங்­க­ளையும் கையா­ள­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்பு.
அது எமது கட­மை­யாகும். , இன்று இந்­நாடு பல்­வேறு மாற்­றங்­களை அடைந்­தி­ருக்­கின்­றது. 2015 ஆம் ஆண்டு தை மாதத்­துக்கு முன்பு இருந்த நிலை­மை­க­ளுக்கும் தற்­போ­தைய நிலை­மை­க­ளுக்­கு­மி­டையில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் போது பாரா­ளு­மன்ற ஆட்­சியை யார் கைப்­பற்­று­வது என்­பது சம்­மந்­த­மா­கவும் முடிவு காணப்­பட்­டது. இந்த நாட்­டி­லுள்ள இரு பெரும்­பான்மைக் கட்­சி­களும் ஒன்­றாக இணைந்து ஆட்­சியை நடாத்தி வரு­கின்­றன. இரு கட்­சி­களும் அர­சியல் வர­லாற்றில் முதல் முறை­யாக ஒன்­றாக இணைந்­துள்­ளன. ஒன்­றாக சிந்­திக்­கின்­றன. நாட்­டுக்குத் தேவை­யான கொள்­கை­களை ஒன்­றாக வகுக்­கின்­றன. நாட்டின் எதிர்­காலம் எவ்­விதம் அமைய வேண்­டு­மென சிந்­தித்துச் செயற்­ப­டு­கின்­றன.
நடை­மு­றை­யி­லுள்ள அர­சியல் சாச­ன­மா­னது 1978 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அவ்­வ­ர­சியல் சாச­னத்­துக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியோ அல்­லது தமிழ் மக்­களோ தமது சம்­ம­தத்தைத் தெரி­விக்­க­வில்லை. 1972 ஆம் ஆண்டு சுதந்­திரக் கட்­சி­யினால் கொண்டு வரப்­பட்ட சாச­னத்­துக்கும் இவ்­வா­றா­ன­தொரு நிலையே காணப்­பட்­டது.
நாட்­டுக்கு புதிய சாச­ன­மொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற கருத்து நீண்ட கால­மாக நிலவி வரு­கி­றது. இதன் கார­ண­மா­கவே இன்று இலங்கைப் பாரா­ளு­மன்றம் ஒரு அர­சியல் சாசன சபை­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. அர­சியல் சாச­னத்தை உரு­வாக்கும் கைங்­க­ரி­யத்­திற்­கென, ஒரு நட­வ­டிக்­கைக்­குழு உரு­வாக்­கப்­பட்டு பல உப குழுக்­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வதில் மேற்­படி குழுக்கள் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றன.
இரு­பெ­ரும்­பான்மைக் கட்­சி­களும் இலங்­கை­யி­லுள்ள ஏனைய சிறு­பான்மைக் கட்­சி­களும் அர­சியல் சாசன உரு­வாக்­கத்­துக்கு பங்­க­ளிப்பு செய்து கொண்­டி­ருக்­கின்ற கார­ணத்­தினால் திருப்­தி­க­ர­மாக பூர்த்­தி­ய­டையக் கூடிய வாய்ப்­புக்­க­ளு­முண்டு.
உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சியல் சாச­னத்தில் உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்ற மூன்று முக்­கி­ய­மான விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­டு­கின்­றது.
நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­முறை தொடர்ந்து இருக்­க­வேண்­டுமா அல்­லது அதில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டுமா? தேர்தல் முறையில் எவ்­வித மாற்­றங்கள் கொண்­டு­வ­ருதல் மூன்­றா­வ­தாக ஆட்­சி­மு­றையில் என்ன மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும், மத்­திய அர­சுக்கும் பிராந்­தி­யங்கள் அல்­லது மாகாண சபை­க­ளுக்­கு­மி­டையில் எவ்­வித அதி­கா­ரப்­ப­கிர்வு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பது பற்றி தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.
என­வேதான் இந்தக் கரு­மங்­களை சக­லரும் உணர்ந்து நாட்டின் சுபீட்­சத்­துக்­கா­கவும், சகல மக்­களும் ஒற்­று­மை­யாக, மனத்­தி­ருப்­தி­யு­டனும் வாழக் கூடி­ய­வ­கையில் புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென நாங்கள் கோரிக்கை விடுக்­கின்றோம்.
நாட்­டிலும் மாவட்­டங்­க­ளிலும் பல அபி­வி­ருத்தி திட்­டங்கள் இடம் பெற­வுள்­ளன. குறிப்­பாக திரு­கோ­ண­ம­லையில் பல அபி­வி­ருத்தித் திட்­டங்கள் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த மாவட்­டத்தில் வாழக்­கூ­டிய மக்­க­ளுக்கு அத்­திட்­டங்கள் உதவக் கூடி­ய­வ­கையில் நாம் எல்­லோரும் இணைந்து செயற்­பட வேண்டும்.
எனக்கு முன் பேசிய இணைத்­த­லை­வ­ரான அப்­துல்லா மஹ்றூப் குச்­ச­வெ­ளிப்­பி­ர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள காணிப்­பி­ரச்­சி­னைகள் சம்மந்தமாக எடுத்துக் கூறினார். அவ்விடயங்களை நான் நன்றாக அறிவேன். முன்னைய அரசாங்கத்தில் காணிகள் அப்பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விடம் எனது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தேன். தமிழ் முஸ்லிம் மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக பயன்படுத்தி வந்த காணிகளை குறிப்பாக பெரிய கரைச்சைக் காணி உப்பளமாக மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது கடும் ஆட்சேபனை காரணமாக அம்முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன. எந்த ஒரு விடயத்தையும் நாம் கையாளுகின்ற போது நீதியின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் செயற்படுவதன் மூலமே நல்லதொரு தலைவர்களாக இருக்கமுடியுமென என்றார்.


MARI themes

Powered by Blogger.