Showing posts with label sports. Show all posts


விளையாட்டுத்துறை அமைச்சர், தயாசிறி ஜெயசேகரவை குரங்குக்கு ஒப்பிட்டமை தொடர்பில் கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளின் போது இலங்கை அணியின் வீரர்கள் தோல்வியடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இலங்கை வீரர்கள், கொளுத்த உடலமைப்பை கொண்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்திருந்தார்.

எனவே, அவர்கள் உரிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் கருத்தை விமர்சித்த மாலிங்க, குரங்குக்கு கிளியின் கூடு பற்றி தெரியுமா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அமைச்சரின் கருத்து, ஒரு குரங்கு கிளியின் கூட்டுக்குள் புகுந்து அது தொடர்பாக பேசுவது போன்று உள்ளது என்றும் மாலிங்க குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மாலிங்கவின் கருத்து, கிரிக்கட் சபையின் உடன்படிக்கையை மீறும் செயல் என்று அமைச்சர் ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.

தாம் வீரர்களின் உடல்வலுவை பற்றி பேசியபோதும் மாலிங்கவை குறிப்பிட்டு கூறவில்லை.

எனினும் மாலிங்க தொப்பியை தாமே போட்டுக்கொண்டு தம்மை பகிரங்கமாக விமர்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பியன் கிண்ணப்போட்டியில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியின் தலைவரின் பிடியை மாலிங்க தவறிவிட்டமையே ஆட்டத்தில் இருந்து இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கான காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017.05.22 "அக்கரைபற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் "29வது" விளையாட்டு விழாவும்
பரிசளிப்பு நிகழ்வும்" இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சி.நிப்றாஸ் தலைமையில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில்
பிரதம அதிதியாக  "நஸார் ஹாஜியார்" கலந்து கொண்டார்.! பிரதம அதிதி தன் உரையில் அக்கரைபற்றில் இருக்கும் "28"விளையாட்டு கழகங்களும் ஒரு சம்மேளனத்தின் குடையின் கீழ் ஒற்றுமையாக இயங்கும் இவ் நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! மேலும் இன்றைய இளைஞர்கள் நாளை எம் சமுகத்திற்கான தலைமைத்துவத்தை உருவாக்கும் சக்திகொண்டவர்கள் எனவே எமது எண்ணங்கள் எப்போதும் எமது மண்ணையும், எம் சமூகத்தையும் நேசிக்கும் சிந்தனை இருக்க வேண்டும்! பதவி, அதிகாரம் இறைவன் தருபவன் எனவே நாம் நம் சிந்தனைகளை சரியாக செயல் படுத்த வேண்டும்!
இவ் மைதானம் பற்றி ஒரு வரலாறு இருக்கு  அந்த வகையில் இந்த மைதானத்தை உருவாக்கி இதற்கு இன்னும் உயிர் கொடுக்க நினைக்கும் முன்னால் அமைச்சர் அதாஉல்லாஹ் வையும் நாம் மறக்க முடியாது என்று தனதுரையில் குறிப்பிட்டார்.


எம்.ஜே.எம்.சஜீத்

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் ஷம்சியா இல்லம் அதிக புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினை தனதாக்கிக் கொண்டது.

ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகளும், பரிசளிப்பு விழாவும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்று (4) கோலாகலமாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.ஏ ஜசாகீர் (நழீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் கௌரவ அதிதியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எம். றகுமத்துல்லா, கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஜெமீல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஜெமீல் காரியப்பர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் ஷம்சியா (பச்சை), கமரியா (மஞ்சள்) ஆகிய இரண்டு இல்லங்கள் பங்குபற்றின. இதில் ஷம்சியா இல்லம் அதிக புள்ளியாக 481 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், கமரியா இல்லம் 477 புள்ளிகளைப் பெற்று இரண்டமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதன்போது வெற்றியீட்டிய இல்லங்களுக்கும், வீரர்களுக்கும் அதிதிகளினால் ஞாபச்சின்னங்கள், பரிசுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் என பெருந்திரலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டி தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்திற்கு குமார் சங்கக்காரவின் தலைமையிலான கராச்சி கிங்ஸ் தெரிவாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற இஸ்லாமாபாத் யுனைடட் அணியுடானான போட்டியில் 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலமே இவ்வணி அரையிறுதியிற்கு தெரிவாகியது.

நாளை நடைபெறும் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஸாவர் ஸல்மி இடையிலான போட்டியில் வெற்றி பெரும் அணியானது 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதியாட்டத்தல் கோடா கிளடியேடர்ஸ் அணியை சந்திக்கும்
 பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி. 36 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக அப்ரிடி செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். அத்துடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்ரிடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளையாட விரும்பினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

விரைவில் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய அணிக்கெதிராக டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. அதன்பின் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்தான் டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் அப்ரிடி அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

இதற்காகத்தான் மேற்கிந்திய அணிக்கெதிரான தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் அப்ரிடி இடம்பெறாத நிலையில் 16-வது வீரராக அப்ரிடியை அணியில் சேர்த்துள்ளது.

ஆனால், அப்ரிடி பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், தேசிய அணியில் இடம்பிடிக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழு அப்ரிடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும், அப்ரிடி நல்ல மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறது. அதே வேளையில் வெளிநாட்டு லீக் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்க இருக்கிறது. ஓய்வு?

 பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி. 36 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக அப்ரிடி செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். அத்துடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்ரிடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளையாட விரும்பினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

விரைவில் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய அணிக்கெதிராக டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. அதன்பின் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்தான் டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் அப்ரிடி அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

இதற்காகத்தான் மேற்கிந்திய அணிக்கெதிரான தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் அப்ரிடி இடம்பெறாத நிலையில் 16-வது வீரராக அப்ரிடியை அணியில் சேர்த்துள்ளது.

ஆனால், அப்ரிடி பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், தேசிய அணியில் இடம்பிடிக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழு அப்ரிடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும், அப்ரிடி நல்ல மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறது. அதே வேளையில் வெளிநாட்டு லீக் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்க இருக்கிறது.இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழத்தி, தொடரை 2-0 என கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிஇரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்று விளையாடியது.

இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி பல்லேகலயில் இடம்பெற்றது.

இதில் 85 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி, சாதனை வெற்றியை பதிவு செய்து தொடரில்  1-0 என முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் 2 ஆவது இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக டில்ஷான், குஷால் பெரேரா களமிறங்கினர். தனது இறுதிப் போட்டியில் ஆடிய டில்ஷான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

நிதானமாக ஆடிய குஷால் பெரேரா 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த இலங்கை அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அணித்தலைவர் சந்திமால் 4 ஓட்டங்களுடனும் மெண்டிஸ் 5 ஓட்டங்களுடனும் கபுகெதர 7 ஓட்டங்களுடனும் திசர பெரேரா ஓட்டமெதனையுமு் பெறது ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதிவரை  பொறுமையாக விளையாடிய தனஞ்ஜய டி சில்வா  கன்னி அரைசதம் ( 62 )அடித்து ஆட்டமிழந்தார்.

இவரது நிதான நின்று ஆடியதால் இலங்கை 20 ஓவர்களில்  9 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களைப்பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 129 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், போல்க்னர், அடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 129 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 17.5 ஓவர்களில் 130 ஓட்டங்களைப்பெற்று 4 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழ்த்தி 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், மெக்ஸ்வெல் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

இலங்கை அணி சார்பில் பத்திரண, டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2-0 என அவுஸ்திரேலிய கைப்பற்ற, இருபதுக்கு 20 கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்த டில்ஷானை இலங்கை அணி தோல்வியுடன் வழியனுப்பி வைத்தது.சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் டில்ஷான் தனது இறுதிப் போட்டியில் பல்வேறு உண்மைத் தகவல்களை வெளியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.


இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது.

இந்தப் போட்டியோடு இலங்கை அணியின் சீனியர் வீரரான டில்ஷான் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெறுகிறார்.

இந்த நிலையில் அவர் ஓய்வு பெறும் போது தனக்கு நடந்த அவலங்களைப் பற்றி வெளிப்படையாக கூற இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதில் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியா பற்றிய தகவலும் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் பிரச்சனையை தவிர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டது.

கடைசி டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரிதாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர, டில்ஷான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இதனால் அவர் தனது பல அனுபவங்களை பற்றி வெளிப்படையாக பேசலாம். இது அவருடைய விருப்பம். அவருடைய தனிப்பட்ட பிரச்சனையில் நான் தலையிட மாட்டேன்.

அதேபோல் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. டில்ஷானாக இருந்தாலும் சரி, சனத் ஜெயசூரியாவாக இருந்தாலும் சரி எனக்கு ஒன்று தான் என்று கூறியுள்ளார்.அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 85 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இது இருபதுக்கு இருபது போட்டிகளில் அணியொன்று பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும்.

இதற்கு முன்னர் இலங்கை அணி 260 ஓட்டங்களை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

இதில் , அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிக பட்ச ஓட்டங்களாக கிளேன் மெக்ஸ்வெல் 65 பந்துகளுக்கு முகங்கொடுத்து 14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 145 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

அவர் 49 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் , டேவிட் வோர்னர் 28 ஓட்டங்களையும் , கவாஜா 36 ஓட்டங்களையும் , ட்ரவிஸ் ஹெட் 45 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக தினேஸ் சந்திமால் 57 ஓட்டங்களையும் சாமர கபுகெதர 43 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணியின் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கட்டுக்களையும் ஸ்கொட் பொலன்ட் 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது தொடரில் அவுஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 16 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

34-வது டெஸ்டில் விளையாடும் அஸ்வின் ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 18-வது முறையாகும். இன்னும் 12 விக்கெட்டுகள் எடுத்தால் அவர் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் தொடர்ச்சியாக 4 டெஸ்டுகளில் ஒரு இன்னிங்சில் ஐந்தோ அல்லது அதற்கு மேலோ விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த சாதனையை செய்த 3-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார். ஏற்கனவே பி.சந்திரசேகர், அனில் கும்பிளே ஆகியோர் இச்சாதனையை செய்திருக்கிறார்கள். அதை அஸ்வின் சமன் செய்தார்.
ஒலிம்பிக் வரலாற்றில் முக்காடு அணிந்து களம் காணும் முதல் அமேரிக்க முஸ்லிம் பெண் இப்திஹாஜ் முஹம்மத்.


மாஷா அல்லாஹ்
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ-KPL T20 இறுதி நாள் நிகழ்வு:- கல்குடா பிரதேசத்தில் கிறிக்கட விளையாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தேசிய, சர்வதேச மட்டங்களை ஒத்த வகையிலே பெரும் தொகை பணம் செலவிடப்பட்டுஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கல்குடா பிரீமியர் லீக் (KPL T20) கிறிக்கட் சுற்று போட்டியினை இவ்வருடமும் ஐந்தாவது தடவையாக வாழைச்சேனை நியூஸ்டார் விலையாட்டு கழகம் வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.


17.08.2016 அன்று ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இறுதி போட்டியில் றேன்சர்ஸ் விளையாட்டு கழகமும் அல்-இஹ்சான் விளையாட்டு கழகமும் பலப்பரீட்ச்சை நடாத்தியதில் அல்-இஹ்சான் விளையாட்டு கழகம் ஐந்தாவது KPL T20 கிண்ணத்தினை சுவீகரித்து கொண்டது.

குறித்த இறுதி நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைமுன்னாள் உறுப்பினர் அஸ்மி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜனாப் தெளபீக் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள் ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய மன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே பிரதமர் சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். 

இதன்பிரகாரம் சிங் கப்பூர் ஷென்கிலா ஹோட்டலில் நாளை நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட் டின் ஆரம்ப நிகழ்வில் அவர் விசேட உரையற்றவுள்ளார்.

இந்த மாநாட்டிற்கு இந்து சமுத்திர வல யகத்தின் பிரதான நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிப்பதா இல்லை என கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவில் இருந்து, குமார வெல்கமவை மஹிந்த ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் குமார வெல்கமவும் அதில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை தொடர்ந்தும் நம்புவது ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த மக்களின் எண்ணிகையை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என உறுதியாகியுள்ளதாக மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஐ நா செய‌லாள‌ர் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் த‌லைமைக‌ளை த‌னியாக‌ ச‌ந்திப்ப‌த‌ற்கு ஐ தே க அர‌சு ஏற்பாடு செய்யாத‌த‌ன் மூல‌ம் இந்த‌ ஆட்சி முஸ்லிம்க‌ளுக்கு துரோக‌மிழைத்துள்ள‌து.


இந்த‌ நாட்டில் ஆயுத‌ம் தாங்கி போராட‌ம‌லேயே பாரிய‌ உயிர், உட‌மை இழ‌ப்புக்க‌ளுக்கு முக‌ம் கொடுத்த‌ ஒரேயொரு இன‌ம் முஸ்லிம்க‌ளாகும். அவ‌ர்க‌ள் த‌னியாக‌ பிரித்துப்பார்த்து கொல்ல‌ப்ப‌ட்ட‌தோடு வ‌ட‌க்கிலிருந்து அனைத்தும் உறிஞ்ச‌ப்ப‌ட்ட‌த‌ன் பின் வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள். அப்ப‌டியிருந்தும் முஸ்லிம் அர‌சிய‌ல் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளின் த‌னித்த‌ர‌ப்பொன்றை பாங்கி மூனுட‌ன் த‌னியாக‌ ச‌ந்திக்க‌ வைக்க‌ முடியாம‌ல் இந்த‌ அர‌சு முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு முதுகில் குத்திய‌மைக்கு கார‌ண‌ம் அர‌சாங்க‌ம் த‌ தே கூட்ட‌மைப்பின் நிக‌ழ்ச்சி நிர‌லுக்கு அடிப‌ணிந்துள்ள‌தா என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி கேட்கிற‌து.

பாங்கிமூனை முஸ்லிம் க‌ட்சிக‌ளின் த‌னித்த‌ர‌ப்பு ச‌ந்தித்தால் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளுக்கு த‌ தே கூட்ட‌மைப்பின‌ர் செய்யும் துரோக‌ங்கள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும் என்ற‌ அச்ச‌த்தின் கார‌ண‌மாக‌ அர‌சாங்க‌ம் முஸ்லிம் த‌ர‌ப்பை ஓர‌ம் க‌ட்டியுள்ள‌தாக‌வே நாம் பார்க்கிறோம்.

ஆக‌வே உட‌ன‌டியாக‌ பிர‌த‌ம‌ர் இது விட‌ய‌த்தில் த‌லையிட்டு பாராளும‌ன்ற‌த்திலும் அத‌ற்கு வெளியிலும் அர‌சிய‌லில் செய‌ற்ப‌டும் முஸ்லிம் க‌ட்சிக‌ளைச்சேர்ந்த‌ "அனைத்து முஸ்லிம் கூட்ட‌மைப்பை" ஐ நா செய‌லாள‌ரை த‌னியாக‌ ச‌ந்தித்து முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ளையும் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்காத‌ அர‌சிய‌ல் தீர்வு குறித்தும் கூறுவ‌த‌ற்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி பிர‌த‌ம‌ர் ர‌ணிலை கேட்டுக்கொள்கிற‌து.அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபியா அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்ட   விவகாரம்” பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விக்கு மேல் கேள்வியாக எழுப்பும் பணி தொடர்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம் சல்மான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இவ் விடயமாக  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.
ஏற்கனவே அவர்  பாராளுமன்றத்தில் வீடமைப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது வீடமைப்பு அமைச்சுக்கு நுரைச்சோலை விவகாரம் தொடர்பில்லை எனவும் மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கண்காணிப்பில் தான் அவ்வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதாக அன்று பதிலளிக்கப்பட்டது.
அதனை தொடந்து சட்டத்தரணி சல்மான் எம்.பி அவர்கள் உள்நாட்டு விவகார அமைச்சரிடம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வீடுகளை பகிர்ந்தளிக்க அரசாங்க  அதிபருக்கு  உத்தரவிடும் வகையிலேயே கேள்வி எழுப்பவுள்ளார்.

நன்றி - SLMCவெளிச்சம் பலவந்தமான முறையில் 260 பயணிகளை அழைத்து செல்ல ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானி முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


கடந்த வாரம் ஜேர்மன் பிராங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக சென்றடைந்தது.


குறித்த விமானத்தை செலுத்த தயாராக இருந்த விமானி கடும் குடிபோதையில் இருந்தமையால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


குடிபோதையில் இருந்த விமானி 260 பயணிகளின் உயிரை பயணம் வைத்து விமானத்தை ஓட்டுவதறகு முயற்சித்துள்ளார். UL554 என்ற விமானம் அன்றையதினம் மதியம் 1 மணியளவில் இலங்கை நோக்கி பயணிக்க ஆயத்தமாகியிருந்தது.


அது வரையில் விமானத்தின் பிரதான விமானியாக இருந்த குறித்த விமானி விமானத்தை ஓட்டுவதற்கு முடியாத அளவு மது போதையில் இருந்தமையால், விமானத்தின் துணை விமானிகளும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.


சூழ்நிலையை புரிந்து கொண்ட துணை விமானிகள்? சுகயீன விடுமுறை என கூறி விமானம் ஒட்டுவதனை புறக்கணிக்குமாறு பிரதான விமானியிடம் கோரியுள்ளனர். எனினும் 260 பயணிகளுடன் விமானத்தை பலவந்தமான ஓட்டுவதற்கு பிரதான விமானி முயற்சித்துள்ளார்.


அதற்கமைய அவர் துணை விமானிகளின் கோரிக்கையை கண்டுக் கொள்ளாமல் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி சென்றுள்ளார்.


இதனையடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் கொழும்பு அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு இருவரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயற்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர் அதிகாரி, ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் உயிரை பாதுகாத்து விமானியை சோதனைக்குட்படுத்தினார்.


அங்கு அவர் சாதாரண அளவைவிடவும் அதிகமாக மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளதுடன் அவரால் விமானத்தை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.


எனினும் விமான சேவை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக குறித்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ரிசாட்டுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு, சொப்பிங் பேக்கோடு வந்தவருக்கு இவ்வளவு பணமா? என்றல்லாம் அவருடை எதிரிகள் பேசுவதை கேட்கின்றோம்.

இதே போன்று இதைவிட வீரியம் கொண்ட பிரச்சினைகள் ஹக்கீமுக்கு எதிராக வந்த போதல்லாம் யாரும் அதை பெரிது படுத்துவதில்லை.
காரணம் அவருக்கு அரசியல் எதிரி என்று யாரையும் அவர் சம்பாதித்து கொள்வதில்லை.

எல்லா அரசியல் வாதிகளும் அவருக்கு பிரியானி கொடுத்து ஆதரிப்பார்கள்.
அதே நேரம் எந்த அரசாங்கம் வந்தாலும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்,
காரணம் அவர் எந்த அரசியல் வாதிகளிடமும் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் முட்டி மோதுவது இல்லை அதனால் அவர் எல்லோருக்கும் நல்லவர்.

மறைந்த தலைவர் எல்லா அரசியல் வாதிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார்.

அதனால் அவர் பல இன்னல்களை சந்தித்தார்.

கல்முனையிலிருந்து வெரும் கையோடு வந்த அஸ்ரப்புக்கு இவ்வளவு பணமும் அந்தஸ்த்தும் எப்படி கிடைத்தது என்று கேட்டு கூத்தடித்தார்கள்...
பிறகு காலி டென்டர் விடயத்தில் கொள்ளையடித்து விட்டாய் என்று கூக்குரல் இட்டார்கள்,அனுரா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் அஸ்ரப்பின் கையை இஸ்லாமிய சட்டப்படி வெட்டவேண்டும் என்றார்.
அந்த அளவுக்கு அரசாங்க பணத்தை கொள்ளை அடித்துள்ளார். என்று ரிச்சட் பத்திரன கூறியது மட்டுமல்ல செருப்பால் பாரளமன்றத்துக்குள் அஸ்ரப் அவர்களுக்கு எறிந்தார்.

சந்திரிக்கா பௌசி அவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர் மூலமாக அஸ்ரப்பை ஆட்டிபடைத்தார் என்பதல்லாம் வரலாறு...
மறுபக்கம் தமிழ் தரப்பினர் சொல்லொன்னா துயரங்களை செய்தது மற்றுமன்றி அவரை கொலையும் செய்தனர்.

அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் கடைசிவரையும் அழைத்திருக்கமாட்டார்.

அஷ்ரப் வழிந்து சென்று பிரியாணி சாப்பிட்டு இருக்கவும் மாட்டார்.
ஏனன்றால் பிரபாகரன் எப்படி நானயமானவர் என்று அஸ்ரப்புக்கு தெறியும்.

இப்போது விடயத்துக்கு வருவோம்.ஹக்கிமை போல் அஸரப்பும் அரசியல் செய்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காது.
அதே போன்றுதான் ரிசாட்டுக்கும் பல எதிர்ப்புக்கள் வந்த வன்னம் உள்ளது.

ஒன்று அரசியலை விட்டு ரிசாட் ஒதுங்க வேண்டும்.
அல்லது கொல்லப்படவேண்டும்.

அல்லது ஹக்கீமைபோல் அரசியல் செய்ய வேண்டும்.
இதுதான் தீர்வாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்....
தங்கம் தான் கஸ்டப்படும்..
மண்னு மன்றியிட்டு கிடக்கும்..
இந்த விடயங்களை புரிந்து கொண்டால் சரிதான்....
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவருமான கௌரவ றிசாத் பதுர்தீன் அவர்கள் மற்றும் பாராளுமன்ற உருப்பினர் கௌரவ நவவி ,குருநாகல் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் டொக்டர் சாபி ஷிஹாப்தீன்,முன்னால் மாகான சபை உருப்பினர் மற்றும் சதோச பிரதித்தலைவர் எம்.என்.நஸீர்,முன்னால் குளியாப்பிடிய பிரதேச சபை உருப்பினர் எம்.சி.இர்பான் STC இணைப்பாளர் அஸார்தீன் இன்னும் முக்கிய பிரமுகர்கள் நேற்றைய தினம் மும்மன்ன பாடசாலை அதிபர் மற்றும் மும்மன்ன பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று மும்மன்ன பள்ளிவாயலில் இடம்பெற்றது.இச்சந்திப்பின் போது மும்மன்ன பாடசாலை மைதான பிரச்சினை சம்மந்தமாக  வெகு விரைவில் நல்லதீர்வு மும்மானை மக்களுக்குக் கிடைக்கும் என்று கூரியதுடன் மேலும் பல விடையங்கள்    பேசப்பட்டு அமைச்சரினால் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


MARI themes

Powered by Blogger.